Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தனக்கு ஏற்பட்டுள்ளது 99% புற்றுநோய்க்கட்டியே: ரொப் ஃபோர்ட்

Posted: 29 Oct 2015 09:22 PM PDT

u

uதற்போது தனக்கு இரண்டாவது தடவையாக அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள கட்டி புற்றுநோய்க் கடசியாகவே இருக்கும் என தான் 99 சதவீதம் நம்புவதாக ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி புற்றுநோய் என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்த வாரமளவில் தான் மீண்டும் கீமோ தெரபிக்கு செல்லவேண்டியிருக்கும எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு ஏற்பட்டிருந்த சுமார் 12 சென்ரிமீட்டர் நீள அகலம் கொண்ட புற்றுநோய்க் கட்டி பல்வேறு சிகிச்சைகளின் பின்னர், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு இந்த புதிய கட்டி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இன்று மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கு வெளியே ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்ட், தற்போது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.u

இது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடாது என்பதே அனைவரது விருப்பமாக உள்ள போதிலும், அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கும் என்றே தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு அது புற்றுநோய்க் கடசி என்பது நிரூபனமாகும் பட்சத்தில் மீண்டும் அனைத்து சிகிச்சைகளுக்கும் உட்பட வேண்டியிருக்கும் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இரண்டு தடவைகள் கீமோ தெரபிக்கு உட்பட வேண்டியிருக்கும எனவும், அதனைத் தொடர்ந்து நத்தார் காலப் பகுதியில் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு கட்டியினை அகற்றிவிடலாம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், அது தனக்கு நத்தார் பரிசாக அமையக்கூடும எனவும் தெரிவித்துள்ளார்.

The post தனக்கு ஏற்பட்டுள்ளது 99% புற்றுநோய்க்கட்டியே: ரொப் ஃபோர்ட் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டன் பகுதியில் போதைப்பொருள் தயாரிப்பிடம் முற்றுகை – அயலவர்கள் வெளியேற்றம்

Posted: 29 Oct 2015 08:13 PM PDT

ghj

ghjபிரம்டன் பகுதியில் அமைந்திருந்த போதைப் பொருள் தயாரிப்பு இரசாயன கூடம் ஒன்று காவல்த்துறையினரால் முற்றுகையிடப்பட்டு, சோதனைகள் நடைபெற்றதன் காரணமாக, அருகில் இருந்த சில வீடுகளில் வசித்தோர் தற்காலிகமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று மாலை 5.30 அளவில பீல் மற்றும் ஹல்ட்டன் பிராந்திய காவல்த்துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போதே Midsummer Drive இல் அமைந்துள்ள சில வீடுகளின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த வீட்டின் ஒரு பகுதியில், போதைப் பொருள் தயாரிப்பு இரசாயன கூடம் இயங்கிவந்ததாகவும், தயாரித்து முடிக்கப்பட்டிருந்த சில போதைப் பொருட்களை தாம் அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.ghj

"crystal meth" எனப்படும் இரசாயனப் போதைப் பொருட்கள் ஐந்திலிருந்து ஆறு கிலோ வரையில் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் மூவர் பிரம்டனிலும், ஏனைய இருவர் ரொரன்ரோ மற்றும் வோன் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post பிரம்டன் பகுதியில் போதைப்பொருள் தயாரிப்பிடம் முற்றுகை – அயலவர்கள் வெளியேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோட்டிற்கு மேலும் ஒரு கட்டி

Posted: 29 Oct 2015 04:45 PM PDT

yi

yiரொரன்ரோவின் முன்னாள் நகரபிதாவாக இருந்து ரொப் ஃபோட்டின் அடிவயிற்றுப் பகுதியில் மேலும் ஒரு கட்டி இருப்பதனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை Mount Sinai மருத்துவமனைக்கு வெளியில் வைத்து தகவல் தெரிவித்த ரொப் ஃபோட்டின் சகோதரர் டக் ஃபோர்ட்,

ஏற்கனவே அவருக்கு ஏற்பட்டிருந்த சுமார் 12 சென்றிமீட்டர் நீள அகலம் கொண்ட புற்றுநோய்க் கட்டி ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது புதிதாக இந்த கட்டி ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரொப் ஃபோட்டுக்கு புதிதாக வயிற்றுவலி ஏற்பட்டதனை அடுத்து, அது தொடர்பிலான பரிசோதனைக்கு சென்ற போதே அவருக்கு புதிதாக மேலும் ஒரு கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

yi

தற்போது ரொப் ஃபோர்ட் புதிதாக மேலதிக சிகிச்சைகளுக்க செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் அனைத்தையும் எதிர்கொள்ளும் திடமான மனம் கொண்ட அவருக்கு அனைத்தும் நல்லபடியே நடக்கும்.

கடந்த வாரமே ரொப் ஃபோட்டுக்கு புதிய கட்டி உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் நான்கு ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்றார் ஃபோர்ட்

The post ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோட்டிற்கு மேலும் ஒரு கட்டி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காவல்த்துறைக்கு புதிய விதிமுறைகளை பரிந்துரைக்கின்றது ஒன்ராறியோ மாகாண அரசு

Posted: 29 Oct 2015 02:39 PM PDT

h

hஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தனது மாகாண காவல்த்துறையினருக்கு புதிய விதிமுறைகளை பரிந்துரைத்துள்ளது.

பொதுமக்களை எழுந்தமானமாக தடுத்து காவல்த்துறையினர் சோதனை செய்வது தொடர்பிலேயே ஒன்ராறியோ மாகாண அரசு அந்த புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

ஒன்ராறியோவில் காவல்த்துறையினர் எந்தவித காரணங்களும் இன்றி ஒருவரை தடுத்து விசாரிப்பதனை தடுக்கும் வகையிலேயே இந்த புதிய விதிமுறைகள் வரையப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் சமூக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ அரசின் அந்த புதிய பரிந்துரைகள் அடங்கிய விதிமுறை வரைபு பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 45 நாட்களுக்கு இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

காவல்த்துறையினரின் எழுந்தமானமான சோதனை நடவடிக்கைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் பொதுச் சுதந்திரத்தினை பாதுகாக்கும் வகையிலும் இந்த புதிய விதிமுறைகள் வரையப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

வேறு எந்தவித காரணங்களும் இன்றி ஒருவருடைய தோலின் நிறத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து அவரிடம் விபரங்களை கோருவது முறைகேடானது என்பதுடன், மரியாதைக் குறைவான ஒரு செயலாகவே தாம் கருதுவதாகவும், அவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு தமது சமூகத்தில் இடமிருக்க முடியாது எனவும் அவர் விபரித்துள்ளார்.

கனேடியர்களை கண்டகண்ட இடங்களில் எழுந்தமானமாக சோதனையிடுவதனை தடுக்கும் வகையில் ஒன்ராறியோ மாகாண அரசு முன்வைத்துள்ள இந்த பரிந்துரையில்,அவ்வாறு யாரையாவது பரிசோதனை செய்யவேண்டியிருப்பின் அதற்கான எழுத்துமூலமான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post காவல்த்துறைக்கு புதிய விதிமுறைகளை பரிந்துரைக்கின்றது ஒன்ராறியோ மாகாண அரசு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக பதவிவிலகவுள்ளார் ஸ்டீபன் ஹார்ப்பர்

Posted: 29 Oct 2015 12:18 PM PDT

Stephen_Harper_-_10292015

Stephen_Harper_-_10292015கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ தெரிவான நிலையில், இதுவரைகாலம் பிரதமராக இருந்து வந்த ஸ்டீபன் ஹார்ப்பர் எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக பதவிவிலகவுள்ளார்.

ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாக, எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி ஸ்டீபன் ஹார்ப்பர் உத்தியோகபூர்வமாக பதவிவிலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டனிடம் சென்ற ஹார்ப்பர், பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவினை அவருக்கு அறிவித்துவிட்டதாக ஸ்டீபன் ஹார்ப்பரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.Stephen_Harper_-_10292015

இதேவேளை ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கமும் அதே நவம்பர் நான்காம் திகதியே சத்தியப்பிரமானங்களை மேற்கொண்டு பதவியேற்பினையும் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் பிரதமராக பதவி வகித்துவந்த ஸ்டீபன் ஹார்ப்பர் தற்போது பதவி விலகி கல்கரிக்கு செல்லவுள்ள நிலையில், அவரது உத்தியோகபூர்வ இல்லததிலிருந்து பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

The post எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக பதவிவிலகவுள்ளார் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!

Posted: 29 Oct 2015 09:19 AM PDT

tyt

tytஇன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்.

அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது.

இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இந்த முறையில் தான் நீரிழிவு நோய் வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடும்போது நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி பயன்படுத்தலாம்.

2. அரிசி சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.tyt

4. பாகற்காயை வாரம் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும்.

6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்கு வகைகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

8. கண்டிப்பாக நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

9. கொழுப்பு உணவுகளைத் அறவே தவிர்க்க வேண்டும்.

10. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

The post இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா?

Posted: 29 Oct 2015 09:14 AM PDT

nh

nhசோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே இது பெண்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த உணவாகும்.

சத்துக்கள்

தயாமின் (Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் உள்ளது.

100 கிராமில் 20 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் சோயாவில் 30 கிராம் கார்போஹைட்ரேட் (Carbohydrate) உள்ளது, மக்னீஷியம் (magnesium) 280 மி.கி, கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

மேலும் அனைத்துவகை விட்டமின்களும் உள்ளது.

மருத்துவ பயன்கள்

1. சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

2. மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது.

3. இதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், விட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

5. சோயா எண்ணெய்யில் இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

6, மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்கள் சோயாபீன்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகம் பெரிதாகும், ஏனெனில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் தன்னை சோயாபீன்ஸ்க்கு உள்ளது.nh

குறிப்பு

வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின்(Tripsin) என்கிற என்ஸைமின் (Enzyme) வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும்.

மேலும், உடலில் இரும்புச்சத்து உற்பத்தியை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க விட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

சோயா பீன்ஸ் குழம்பு

முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!

பயன்கள்

சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள்.

எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.nnnnn

The post சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™