மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- விலை மலிவான, அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய நவீனவகை கோழியினம் கண்டுபிடிப்பு
- டெல்லியில் குப்பைகள் தேக்கத்துக்கு மத்திய அரசே காரணம்: முதல்–மந்திரி கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- திருமணம் செய்துகொள்ளும்படி கள்ளக்காதலி தொடர்ந்து நச்சரித்ததால் வங்கி துணை மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை
- நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: சித்தராமைய்யா
- 101 முறை என்னை விசாரித்தாலும் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்: மந்திரி மாணி பேட்டி
- வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது
- நாடு முழுவதும் 1 முதல் 6–ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி: மத்திய அரசு முடிவு
- தாய்லாந்து செல்ல அரசு கலைக்குழுவுக்கு அளித்த ரூ.8 லட்சம் நிதியை நடனக்குழுவினர் திருப்பி அளித்தனர்
- சிவசேனாவினரால் மைவீசி அலங்கோலப்படுத்தப்பட்ட குல்கர்னி பாகிஸ்தான் செல்கிறார்
- நடிகர் ராஜ்குமாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு புத்தகம்: சித்தராமையா வெளியிட்டார்
- பீகார் தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பட்டாசுகள் வெடிக்கும்: மா.கம்யூனிஸ்ட்
- பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது
- அப்துல் கலாம் வசித்த பங்களாவை மத்திய மந்திரிக்கு ஒதுக்கியதில் தவறு இல்லை: வெங்கையா நாயுடு விளக்கம்
- அமித் ஷா பொதுக்கூட்ட மைதானத்தில் விபத்து: சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம்
- கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: 4 மந்திரிகள் பதவி ஏற்பு
- இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கும்: அமித் ஷாவின் சர்ச்சைப்பேச்சுக்கு பிருந்தா காரத் கண்டனம்
- மாட்டிறைச்சி விவகாரம்: மோடிக்கு இரண்டாவது கடிதமெழுதிய உம்மன்சாண்டி
- 1.20 லட்சம் டன் பதுக்கல் பருப்பு: நாடு முழுவதும் பறிமுதல்
- 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ
- பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் வெடிகள் வெடிக்கும்: அமித்ஷா
| விலை மலிவான, அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய நவீனவகை கோழியினம் கண்டுபிடிப்பு Posted: 29 Oct 2015 10:57 PM PDT ஆண்டுக்கு 181 முட்டைகளை இடக்கூடிய விலை மலிவான, அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய நவீனவகை கோழியினத்தை மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கால்நடை அறிவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றத்தின் வாயிலாக உருவாக்கியுள்ளனர். |
| டெல்லியில் குப்பைகள் தேக்கத்துக்கு மத்திய அரசே காரணம்: முதல்–மந்திரி கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted: 29 Oct 2015 10:51 PM PDT டெல்லியில் குப்பைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். தலைநகர் டெல்லியில் சமீபகாலமாக குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. |
| திருமணம் செய்துகொள்ளும்படி கள்ளக்காதலி தொடர்ந்து நச்சரித்ததால் வங்கி துணை மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை Posted: 29 Oct 2015 10:29 PM PDT அரியானா மாநிலத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கள்ளக்காதலி தொடர்ந்து நச்சரித்ததால் வங்கி துணை மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பரிதாபாத் நகரின் டபுவா காலனி பகுதியில் வசித்து வந்தவர் |
| நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: சித்தராமைய்யா Posted: 29 Oct 2015 10:26 PM PDT மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பான விவகாரம் நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்–மந்திரி சித்தராமைய்யா நேற்று பெங்களூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:– |
| 101 முறை என்னை விசாரித்தாலும் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்: மந்திரி மாணி பேட்டி Posted: 29 Oct 2015 10:20 PM PDT கேரளாவில் முதல் மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. உம்மன்சாண்டி மந்திரி சபையில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவர் கே.எம்.மாணி நிதி மந்திரியாக உள்ளார். கேரளாவில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த போவதாக |
| வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது Posted: 29 Oct 2015 10:12 PM PDT ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவந்த 14 வயது சிறுமி இங்குள்ள ஹுமாயூன் நகர் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் திடுக்கிடும் புகார் அளித்தார். நானும் எனது 13 வயது தங்கையும், மற்றொரு 9 வயது தங்கையும் |
| நாடு முழுவதும் 1 முதல் 6–ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி: மத்திய அரசு முடிவு Posted: 29 Oct 2015 10:06 PM PDT பள்ளிகளில் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், 1–ம் வகுப்பு முதல் 6–ம் வகுப்பு வரை கட்டாயம் தாய் மொழி கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. குறிப்பாக கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தாய்மொழி கல்வியை வலியுறுத்தி வந்தன. கர்நாடகத்தில் கன்னட மொழிக்காக அம்மாநில அரசு 21 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. |
| தாய்லாந்து செல்ல அரசு கலைக்குழுவுக்கு அளித்த ரூ.8 லட்சம் நிதியை நடனக்குழுவினர் திருப்பி அளித்தனர் Posted: 29 Oct 2015 09:46 PM PDT தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள ஐந்தாவது கலாச்சார ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக மராட்டிய மாநில அரசுப் பணியாளர்கள் அடங்கிய நடனக்குழுவுக்கு முதல் மந்திரி நிவாரண நிதியில் வழங்கப்பட்ட எட்டு லட்சம் ரூபாயை திருப்பி அளித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. |
| சிவசேனாவினரால் மைவீசி அலங்கோலப்படுத்தப்பட்ட குல்கர்னி பாகிஸ்தான் செல்கிறார் Posted: 29 Oct 2015 09:32 PM PDT பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷித் முகமது கசூரி எழுதிய 'பருந்தாகவோ, புறாவாகவோ இல்லாமல் பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் எனது பார்வை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தபோது, இதற்கான ஏற்பாடுகளை செய்த பா.ஜனதா |
| நடிகர் ராஜ்குமாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு புத்தகம்: சித்தராமையா வெளியிட்டார் Posted: 29 Oct 2015 08:59 PM PDT கன்னட திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய நடிகர் ராஜ்குமாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் உள்ள குவெம்பு கலாஷேத்ராவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:- ராஜ்குமார் சிறந்த நடிகர். அவர் சினிமாவில் நடிக்காத பாத்திரமே இல்லை என்றே சொல்லலாம். அவர் நடித்த "பங்காரத மனுஷ்ய" "கஸ்தூரி நிவாச" ஆகிய படங்களை நான் 4 முறை பார்த்தேன். அவர் உண்மையிலேயே தங்க கு |
| Posted: 29 Oct 2015 08:58 PM PDT பீகாரில் சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித் ஷா, தப்பித்தவறி பீகார் தேர்தலில் பா.ஜ.க., தோற்றுப் போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார். |
| பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது Posted: 29 Oct 2015 08:43 PM PDT மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள பர்த்வான் மாவட்டத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து |
| அப்துல் கலாம் வசித்த பங்களாவை மத்திய மந்திரிக்கு ஒதுக்கியதில் தவறு இல்லை: வெங்கையா நாயுடு விளக்கம் Posted: 29 Oct 2015 03:36 PM PDT டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வசித்த பங்களா, மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுபற்றி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:- |
| அமித் ஷா பொதுக்கூட்ட மைதானத்தில் விபத்து: சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் Posted: 29 Oct 2015 03:20 PM PDT பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாகா நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர், மைதானத்தில் தரை இறங்குவதை பார்ப்பதற்காக, அங்கிருந்த ஒரு சுவரில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் ஒரே சமயத்தில் ஏறினர். திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: 4 மந்திரிகள் பதவி ஏற்பு Posted: 29 Oct 2015 02:58 PM PDT கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரிசபையில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்கு காங்கிரஸ் கட்சி மேலிடம் அவருக்கு ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று தனது மந்திரி சபையை 4-வது முறையாக விரிவாக்கம் செய்தார். |
| இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கும்: அமித் ஷாவின் சர்ச்சைப்பேச்சுக்கு பிருந்தா காரத் கண்டனம் Posted: 29 Oct 2015 01:37 PM PDT பீகாரில் பாரதீய ஜனதா கட்சி தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் 3 கட்டங்களுக்கான வாக்குபதிவு முடிந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கும் |
| மாட்டிறைச்சி விவகாரம்: மோடிக்கு இரண்டாவது கடிதமெழுதிய உம்மன்சாண்டி Posted: 29 Oct 2015 12:13 PM PDT நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள பவன் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, கடந்த 26-ந்தேதி டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து கேரள |
| 1.20 லட்சம் டன் பதுக்கல் பருப்பு: நாடு முழுவதும் பறிமுதல் Posted: 29 Oct 2015 10:44 AM PDT நாடு முழுவதும் 9 ஆயிரத்து 304 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.20 லட்சம் டன் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பதுக்கல் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளதையடுத்து பருப்பு வகைகளின் விலை குறைந்து வருகின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, துவரம் பருப்பு கிலோ 210 ரூபாய் வரை உயர்ந்து மக்களை திக்குமுக்காட வைத்தது. இதையடுத்து, |
| 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ Posted: 29 Oct 2015 09:29 AM PDT அரியானா மாநிலத்தில் 2 தலித் குழந்தைகள் உயர் சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது சி.பி.ஐ. கடந்த 20-ம் தேதி டெல்லியின் புறநகர் பகுதியான சோன்பேட் கிராமத்தில் உள்ள ஜிதேந்தரின் வீட்டில் தீவைக்கப்பட்டதில், தூங்கிக் |
| பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் வெடிகள் வெடிக்கும்: அமித்ஷா Posted: 29 Oct 2015 08:10 AM PDT சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மொத்தமாக 5 கட்டங்களாக நடைபெற்று வரும் பீகார் தேர்தலில் 3 கட்டங்களுக்கான வாக்குபதிவு முடிந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |