Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு

Posted: 26 Oct 2015 10:12 PM PDT

i

iபதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.i

அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

The post பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

14 வயது மாணவன் மீது கத்திக்குத்து

Posted: 26 Oct 2015 09:37 PM PDT

o

oரொரன்ரோவில் Bendale பகுதியில் வைத்து 14 வயது மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் மீதான இந்த கத்திக்குத்துச் சம்பவம் பாடசாலை வளாகத்திற்கு புறம்பான இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

Treewood வீதி மற்றும் Midland அவனியூ,வடக்கு Lawrence அவனியூப் பகுதியில் உள்ள தொடர்மாடி கட்டத்தின் வெளியில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தம்மை ஒருவர் தாக்கியதாகவும், மற்றொருவர் தனது தோள்பட்டையில் கத்தியால் குத்தியதாகவும் காவல்த்துறையிடம் கத்திக்குத்துக்கு இலக்கான அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.o

மோசமான கத்திக்குத்துக்க இலக்கான நிலையில் மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்க உட்படுத்தப்பட்டார் என்றும், எனினும் அவரின் காயம் உயிராபத்தானது இல்லை என்றும் காவல்த்துறையினர் தகவல் கூறியுள்ளனர்

கத்திக்குத்துக்கு ஆளானவர் Bendale Business and Technical Institute இல் பயிலும் 14 வயது மாணவன் என்பதை ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் பாடசாலை வளாகத்திற்கு வெளியில் நடந்த தகராற்றின் போதே இந்த கத்திக்குத்து சம்பம் இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை, இதனை அந்த மாணவனின் பெற்றோர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post 14 வயது மாணவன் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காவல்த்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் வெடிப்பொருட்கள், துப்பாக்கி, போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Posted: 26 Oct 2015 09:32 PM PDT

i

iரொரன்ரோ காவல்த்துறையினர் அதிரடி நடவடிக்கையாக வீடு ஒன்றை சோதனை செய்ததில் அங்கிருந்து துப்பாக்கிகள், போதைப் பொருட்கள், டைனமற் வெடிப்பொருட்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ரொரன்ரோ டவுண்ரவுன் பகுதியில் அமைந்த குறித்த வீட்டைச் சோதனை செய்வதற்கான அனுமதி (search warrant) சனிக்கிழமை பெறப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வீட்டில் துப்பாக்கிகள், போதைப் பொருட்கள், டைனமற் வெடிப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.i

கைது செய்யப்பட்ட 39 வயதான Wing Wayne Woo என்பவா 35 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாகவும், அவற்றில் பெரும்பாலனாவை துப்பாக்கிச் சூடு தொடர்புடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான முறையில் வெடிப்பொருள் கையாண்டமை, மற்றும் சட்டத்திற்கு புறம்மான முறையில் போதைப் பொருள் வைத்திருந்தமை என்பன அவர் மீதான ஏனைய குற்றச்சாட்டுக்களாகும்.

இந்த தகவலை வெளியிட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்திருந்தனர்.

The post காவல்த்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் வெடிப்பொருட்கள், துப்பாக்கி, போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவில் சளிக்காய்சல் தடுப்பு மருத்து வழங்கப்படுகிறது

Posted: 26 Oct 2015 09:28 PM PDT

u

uஇந்த ஆண்டுக்கான சளிக்காய்சல் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது
ஒன்ராறியோவில் நடைபெற்று வருகின்றன.

ஒன்ராறியோவில்வாழும், வேலைசெய்யும் அல்லது பாடசாலைக்கு செல்லும் எவரும், தங்களுக்கான சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை மருத்துவரின் அலுவலகத்தில்,சுகாதார மருத்துவ நிலையங்களில், குறிப்பிட்ட சில மருந்தகங்களில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று ஒன்ராறியோ மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை இரண்டுக்கும் 17 இற்கும் இடைப்பட்ட வயதுடைய பிள்ளைகள் தமது தடுப்பு மருந்தை இந்த ஆண்டு நாசி வழியாகவும் (nasal spray) பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அதனை விரும்பாதவர்கள் வழமையான ஊசிஏற்றும் முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்ப்டுள்ளனர். இதற்கான தீர்மானத்தை பிள்ளைகளின் பெற்றோர்கள் எடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.u

பெரியவர்களுக்கான தடுப்பு மருத்து மூன்று வகையான காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்காக வழங்கப்படும் அதேநேரம், குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து நான்கு வகையான காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் வகையில் வழங்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த தடுப்பு மருந்துக்களை விரைவில் எடுத்துக்கொள்ளுமாறும் ரொரன்ரோ வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஒன்ராறியோவில் சளிக்காய்சல் தடுப்பு மருத்து வழங்கப்படுகிறது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய கனடாவின் முன்னாள் பிரதமர்

Posted: 26 Oct 2015 05:09 PM PDT

i

iகனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் கெர்ட்டியன்(Jean Chretien), ரஸ்ய சனாதிபதி விலாடிமிர் புட்டின் உட்பட அனைத்துவிதமான பன்னாட்டு தலைவர்களுடனும் பேச்சுக்களில் ஈடுபடுமாறு ஜஸ்டின் ரூடோவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜஸ்டின் ரூடோ கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமராக தேர்வாகியுள்ள நிலையில், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் கெர்ட்டியன்(Jean Chretien) ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.i

ஜஸ்டின் ரூடோவின் தந்தை பிரதமராக இருந்த காலங்களில், அவர் அவ்வாறான வெளிப்படையான போக்கினையே கடைப்பிடித்ததாக நினைவுபடுத்திய ஜோன் கெர்ட்டியன்(Jean Chretien), அவர் அனைத்துலக நாடுகளின் தலைவர்கள் பலருடனும் சிறந்த உறவைப் பேணி வந்ததாகவும், கியூபாவின் பிடல் காஸ்ரோ உள்ளிட்ட தலைவர்களுடன் உரையாடும்போது கூட அவர் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்ததாகவும் ஜோன் கெர்ட்டியன்(Jean Chretien) விபரித்துள்ளார்.

தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் ரூடோவும் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றார் என்றும் தந்தையைப் போலவே அவரும் அனைவருடனும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பார் என்ற எதிர்பார்ப்பையும் அவர் கூறியுள்ளார்.

நாணயத்தின் இரு பக்கம் போல அனைத்து விவகாரங்களிலும் இருதரப்பு கருத்துக்களையும் அறிந்து கொள்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறான நிலையினை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.

கனேடிய உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

The post புதிய பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய கனடாவின் முன்னாள் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேருந்து தரிப்பிடத்தை மோதித்தள்ளிய கார் (ஸ்காபரோ)

Posted: 26 Oct 2015 10:18 AM PDT

k

kஸ்காபரோவில் பேருந்து தரிப்பிடத்தை கார் ஒன்று மோதித்தள்ளியதில் மோசமாக காயமடைந்த இரண்டு நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் 40 வயது மதிக்கத் தக்கவர் என்றும், மற்றையவர் பதின்மயதினர் என்றும் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களை விட காயமடைந்த மேலும் இருவருக்கு சம்பவ இடத்திலேயே மருத்தவ உதவிகள் வழக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஃபார்மசி அவனியூ மற்றும் விக்டோரியா பார்க் அவனியூ பகுதிக்கு இடையில் லோறன்ஸ் அவனியூவில் அமைந்துள்ள அந்த பேரூந்து தரிப்பிடத்தை கார் மோதித் தள்ளிய இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.k

சம்பவத்தை அடுத்து ஃபார்மசி அவனியூ மற்றும் விக்டோரியா பார்க் அவனியூ பகுதிக்கு இடையிலான லோறன்ஸ் அவனியூ போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு பின்னர் வளமைக்குத் திரும்பியிருந்தது.

இந்த விபத்து சம்பவித்தமைக்கான காரணம் இன்னமும் தெரிவியவில்லை என தெரிவித்துள்ள ரொரன்ரோ காவல்த்துறையினர், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேருந்து தரிப்பிடத்தை மோதித்தள்ளிய கார் (ஸ்காபரோ) appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

Posted: 26 Oct 2015 09:23 AM PDT

jk

jkதனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும்.

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.jk

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

* தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும், வீக்கம் குறையும்.

The post தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வன்கூவரில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்து – ஐவர் உயிரிழப்பு

Posted: 26 Oct 2015 08:57 AM PDT

yy

yyவன்கூவரில் சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

திமிங்கிலங்களை நேரில் பார்வையிடுவதற்கு மிகவும் பிரசித்தமான இடமாக அந்த பகுதி விளங்கும் நிலையில், திமிலங்களைப் பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் 27 பேர் படகொன்றில் பயணித்திருந்த போது அந்த படகு விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்கூவர் தீவுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், ஒருவரை இன்னமும் காணவில்லை என்றும், ஏனைய 21 பேரும் மீட்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் படகில் இருந்து அபாய அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், அதனை அடுத்து உடனடியாகவே கனேடிய கடற்படை மற்றும் கரையோர காவல்படை உள்ளிட்டோர் தேடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.yy

இதுவரையில் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று விபத்து இடம்பெற்றிருந்த வேளையில் அந்த பகுதியில் இயற்கை சீற்றம் எவையும் காணப்படவில்லை எனவும், வானம் அமைதியாகவும், தெளிவாகவும், வெயிலுடனும் காணப்பட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ கூட்டு நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலான மேலாதிக விசாரணைகள் கனேடிய மத்திய காவல்த்துறையினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் கனேடிய கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வன்கூவரில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்து – ஐவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™