மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆக்ராவில் தூக்கிட்டு சாவதை வீடியோவாக்கிய இளம்பெண்: ஆதாரமாக ஏற்க போலீசார் மறுப்பு
- திருப்பதி கோவிலில் 70 டன் வெளிநாட்டு பணம் எண்ண முடியாமல் தேக்கம்
- பீகாரில் 3–வது கட்ட தேர்தல்: 50 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
- உ.பி. கவர்னர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போல் செயல்படுகிறார்: சமாஜ்வாடி
- கர்நாடக பள்ளிகளில் 48 சதவீதம் பேர் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்: ஆய்வில் திடுக்கிடும் தகவல்
- தாவூத் இப்ராகிமால் உயிருக்கு ஆபத்து என்பதால் சோட்டா ராஜன் சரண் அடைந்தாரா?: புதிய தகவல்
- காங்கிரசும், கம்யூனிஸ்டும் ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு
- குடும்பத்தினரை அடையாளம் காட்டமுடியாமல் கீதா திணறல்: டி.என்.ஏ. முடிவுக்காக காத்திருக்கும் உறவினர்கள்
- கோழிக்கோட்டில் அமலாக்க அதிகாரிகள் போல் நடித்து 1½ கிலோ தங்கம் கொள்ளை
- பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாக். எல்லையருகே ரூ.110 கோடி ஹெராயின் சிக்கியது
- ஏ.ஆர். ரகுமானுக்கு ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது: மும்பை விழாவில் சுபாஷ் கய் வழங்கினார்
- பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருந்து தாய்நாடு திரும்பிய கீதாவுடன் சந்திப்பு
- கட்டிட தொழிலாளி போல் நடித்து கேரளாவில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு கைது
- பசுக்கள் கொல்லப்படுவதை தடை செய்ய நாடு முழுவதும் பொதுசட்டம் தேவை: மோடிக்கு பாபா ராம்தேவ் கோரிக்கை
- சோட்டா ராஜன் பெயர் வந்தது எப்படி?
- உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக ஏழை நோயாளிகளுக்கான நிதி உதவி ரூ.5 லட்சமாக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
- சத்தீஷ்காரில், நக்சலைட்டுகளுடன் மோதல்: மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சுட்டுக் கொலை
- மந்திர, தந்திரம் வேண்டுமா? ஜனநாயகம் வேண்டுமா? பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி
- டெல்லியில் இந்திய-ஆப்பிரிக்க உச்சி மாநாடு தொடங்கியது
- கல்யாண மாப்பிள்ளையின் கலக்கல் என்ட்ரி: வைரல் வீடியோ
| ஆக்ராவில் தூக்கிட்டு சாவதை வீடியோவாக்கிய இளம்பெண்: ஆதாரமாக ஏற்க போலீசார் மறுப்பு Posted: 26 Oct 2015 11:07 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளம்பெண், தனது கைபேசியில் மரண வாக்குமூலத்தை பதிவுசெய்து, தூக்குக் கயிற்றில் துடிதுடித்துச் சாகும் காட்சியையும் வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா நகரில் வசித்துவந்த நேஹா யாதவ் என்ற அந்தப்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவருக்கு போன்செய்து, நீங்கள் இனிமேல் |
| திருப்பதி கோவிலில் 70 டன் வெளிநாட்டு பணம் எண்ண முடியாமல் தேக்கம் Posted: 26 Oct 2015 11:04 PM PDT திருப்பதி ஏழுமலை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இந்த வகையில் பெறப்பட்ட பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் |
| பீகாரில் 3–வது கட்ட தேர்தல்: 50 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு Posted: 26 Oct 2015 10:58 PM PDT பீகாரில் 3–வது கட்டமாக 50 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக 5 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் 49 தொகுதிகளுக்கு கடந்த 12–ந் தேதியும், 2–வது கட்டமாக 6 மாவட்டங்களில் 32 தொகுதிகளுக்கு 16–ந் |
| உ.பி. கவர்னர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போல் செயல்படுகிறார்: சமாஜ்வாடி Posted: 26 Oct 2015 10:38 PM PDT உத்தர பிரதேச கவர்னராக முன்னாள் மத்திய மந்திரி ராம்நாயக் இருந்து வருகிறார். இவர் வாஜ்பாய் ஆட்சியில் பெட்ரோலியத் துறை மந்திரியாக இருந்தார். ராம்நாயக் கவர்னர் பதவியில் இருந்து கொண்டு அகிலேஷ் யாதவ் அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறார். |
| கர்நாடக பள்ளிகளில் 48 சதவீதம் பேர் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்: ஆய்வில் திடுக்கிடும் தகவல் Posted: 26 Oct 2015 10:32 PM PDT தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூர் நகரம் முன்னேறி வருகிறது. அதே சமயம் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தின் மற்ற பகுதி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. அதே போல் பள்ளிகளில் தகுதியில்லாதவர்களும், பயிற்சி பெறாதவர்களும் 48 சதவீதம் பேர் வரை ஆசிரியர்களாக பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| தாவூத் இப்ராகிமால் உயிருக்கு ஆபத்து என்பதால் சோட்டா ராஜன் சரண் அடைந்தாரா?: புதிய தகவல் Posted: 26 Oct 2015 10:29 PM PDT பிரபல கடத்தல் கும்பல் தலைவனும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியுமான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித்தீவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இது குறித்து மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது |
| காங்கிரசும், கம்யூனிஸ்டும் ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு Posted: 26 Oct 2015 10:12 PM PDT கேரளாவில் வருகிற 2–ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. |
| குடும்பத்தினரை அடையாளம் காட்டமுடியாமல் கீதா திணறல்: டி.என்.ஏ. முடிவுக்காக காத்திருக்கும் உறவினர்கள் Posted: 26 Oct 2015 10:08 PM PDT பாகிஸ்தானில் இருந்தபோது, பீகாரைச் சேர்ந்த தம்பதியர்தான் தனது பெற்றோர் என தெரிவித்துவந்த பேச்சுத்திறனற்ற பெண்ணான கீதா, தற்போது இந்தியா வந்து சேர்ந்த பின்னர், குடும்பத்தினரை அடையாளம் காட்டமுடியாமல் திணறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழிமாறி, பாகிஸ்தானுக்கு தவறுதலாக சென்ற இந்தியப் பெண்ணான கீதா, 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை இந்தியாவுக்கு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் கீதாவை வரவேற்க அவரது குடும்பத்தினர் |
| கோழிக்கோட்டில் அமலாக்க அதிகாரிகள் போல் நடித்து 1½ கிலோ தங்கம் கொள்ளை Posted: 26 Oct 2015 09:51 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரபல நகைக்கடைக்கு தேவையான நகைகளை அதன் ஊழியர் பட்டறையில் இருந்து எடுத்துச் சென்றார். எம்.எம். அலி சாலையில் சென்றபோது காரில் வந்த 4 பேர் ஊழியரை வழி மறித்தனர். அமலாக்கத்துறையில் இருந்து வந்திருப்பதாகவும், அவரிடமிருந்த நகைகள் குறித்த ஆவணங்களை பரிசோதிக்க வேண்டுமென்றும் கூறினர். |
| பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாக். எல்லையருகே ரூ.110 கோடி ஹெராயின் சிக்கியது Posted: 26 Oct 2015 09:17 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையருகே இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
| ஏ.ஆர். ரகுமானுக்கு ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது: மும்பை விழாவில் சுபாஷ் கய் வழங்கினார் Posted: 26 Oct 2015 09:00 PM PDT ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்(48). |
| பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருந்து தாய்நாடு திரும்பிய கீதாவுடன் சந்திப்பு Posted: 26 Oct 2015 08:40 PM PDT பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கீதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ''மீண்டும் வீடு திரும்பியிருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது உண்மையாகவே அற்புதமான தருணம். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள அனைவரும் உங்கள் மீது அக்கறை செலுத்துவோம்'' என்றார். |
| கட்டிட தொழிலாளி போல் நடித்து கேரளாவில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு கைது Posted: 26 Oct 2015 08:31 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அங்கமாலி பகுதியில் மாவோயிஸ்டு கும்பலை சேர்ந்த ஒருவர் பதுங்கி இருப்பதாக மத்திய புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க ஆலுவா போலீசாருக்கு புலனாய்வு துறை உத்தரவிட்டது. அதன்படி போலீசார் அங்கமாலி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். |
| பசுக்கள் கொல்லப்படுவதை தடை செய்ய நாடு முழுவதும் பொதுசட்டம் தேவை: மோடிக்கு பாபா ராம்தேவ் கோரிக்கை Posted: 26 Oct 2015 08:24 PM PDT இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடை செய்ய நாடு முழுவதும் பொதுசட்டம் தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபல யோகாசன குருவான பாபா ராம்தேவ் இதுதொடர்பாக கூறுகையில், |
| சோட்டா ராஜன் பெயர் வந்தது எப்படி? Posted: 26 Oct 2015 07:57 PM PDT சோட்டா ராஜன் மும்பை செம்பூரில் உள்ள திலக்நகர் பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய உண்மையான பெயர் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜே. 1980களில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி பிளாக்கில் விற்பனை செய்பவராக தனது சட்டவிரோத தொழிலைத் தொடங்கினார். பின்னர் சிறு சிறு குற்றச் செயல்களிலும், கள்ளத்தனமாக மதுபானம் தயாரிப்பதிலும் ஈடுப |
| Posted: 26 Oct 2015 07:31 PM PDT கடந்த 1997-ம் ஆண்டு, ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதயம், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக, தலா |
| சத்தீஷ்காரில், நக்சலைட்டுகளுடன் மோதல்: மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சுட்டுக் கொலை Posted: 26 Oct 2015 07:19 PM PDT சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள மறைகுடா என்ற பகுதிக்கு அருகே நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் அந்த பகுதியில் சாலைகளை தோண்டிக் கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய ரிசர்வ் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| மந்திர, தந்திரம் வேண்டுமா? ஜனநாயகம் வேண்டுமா? பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி Posted: 26 Oct 2015 07:13 PM PDT பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பக்சார் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- சந்தர்ப்பவாத கூட்டணியினர், இட ஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழி நடத்தி வருகிறார்கள். தலித்கள், மகாதலித்கள், பிற்படுத்தப்பட்டோர், |
| டெல்லியில் இந்திய-ஆப்பிரிக்க உச்சி மாநாடு தொடங்கியது Posted: 26 Oct 2015 06:51 PM PDT இந்திய-ஆப்பிரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாடு, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் நேற்று தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும். மாநாட்டில், 40 நாட்டு தலைவர்கள், 54 ஆப்பிரிக்க நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். |
| கல்யாண மாப்பிள்ளையின் கலக்கல் என்ட்ரி: வைரல் வீடியோ Posted: 26 Oct 2015 05:32 PM PDT பிரபல ஹாலிவுட் ஹீரோ பேட்மேன், எப்போலேந்து கல்யாண மாப்பிள்ளைக்கு கார் ஓட்டும் பார்ட் டைம் வேலையை பார்க்க ஆரம்பித்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. தன் வருங்கால மனைவியைக் கவர நினைத்த பஞ்சாப் சிங் தான் இந்த புதுமையான(!!!) காரியத்தை செய்திருக்கிறார். இவர் செய்த காரியத்தால் மணமகள் அசந்து போனாரோ இல்லையோ, இந்த ரகளையை ஒருவர் வீடியோவாக எடுத்து யூ-டியூபில் போட..... அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நீங்களே பாருங்கள்...... |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |