Tamil Star |
- பூலர் மேற்கில் காவல்த்துறை உத்தியோகத்தரை மோதிய வாகனம்
- மிசிசாகாவில் தாயைக் கொன்றதாக 20 வயது மகன் கைது
- வோன் பகுதியில் வாகன விபத்து: 2 சிறுவர்கள் பலி
- பயங்கரவாத முறியடிப்பு பாவனைப் பயிற்சி – 300 அதிகமான படையினர் பங்குபற்றல்
- கனடா பொதுத் தேர்தலில் 19 ஆசனங்களை வென்றுள்ள இந்திய வம்சாவளியினர்
- கனடாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
- இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும்
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்!
| பூலர் மேற்கில் காவல்த்துறை உத்தியோகத்தரை மோதிய வாகனம் Posted: 25 Oct 2015 09:25 PM PDT
Bloor Streetஇல் பேரணி ஒன்றுக்கான தற்காலிகமாக மூடப்பட்டுக்கொண்டிருந்த வீதிப் பகுதிக்குள் நின்றிருந்த காவல்த்துறை உத்தியோகத்தர் மீதே வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடனேயே காவல்த்துறை உத்தியோகத்தர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதனை ரொரன்ரோ காவல்த்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தினை அடுத்து அந்த வீதிப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தற்காலிகமான நிறுத்தி வைக்கப்பட்டன. The post பூலர் மேற்கில் காவல்த்துறை உத்தியோகத்தரை மோதிய வாகனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகாவில் தாயைக் கொன்றதாக 20 வயது மகன் கைது Posted: 25 Oct 2015 07:33 PM PDT
நேற்று இரவு மிசிசாகா பகுதியில் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்ட பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதனை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு ஒன்று தொடர்பில் தகவல் அறிந்து Southfork Drive பகுதிக்கு நேற்று மாலை 5.45 அளவில் சென்றதாகவும், அங்கு 41 வயதான பெண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், விஷாலி பட்டேல் எனப்படும் அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த அந்த பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகனான 20 வயது குனால் பவான் என்பவரை கைது செய்து, அவர் மீது இரண்டாம்தர கொலைக் குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ள காவல்த்துறையினர், அவரை இன்று நீதிமன்றில் நிறுத்துவதாக தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை (905) 453-2121, ext. 3205 என்ற இலக்கதில் தொடர்புகொள்ளுமாறு படுகொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post மிசிசாகாவில் தாயைக் கொன்றதாக 20 வயது மகன் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வோன் பகுதியில் வாகன விபத்து: 2 சிறுவர்கள் பலி Posted: 25 Oct 2015 07:29 PM PDT
Teston வீதி மற்றும் Pine Valley Drive பகுதியில் சனிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது, வீதியை விட்டு விலகிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்டதாகவம், வாகனத்தினுள் ஆறு பேர் சிக்குண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், ஏனைய ஐந்து பேரும் மோசமான காயங்களுடன் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 16 வயது சிறுவன் ஒருவர் சிகிச்சைககள் பலனின்றி சிறிது நேரத்தின் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவித்த இடம் வோன் பகுதியின் மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமப்புறம் எனவும், விபத்துக்குள்ளான வாகனம் வீதியில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில், மரங்களுக்க இடையே பலத்த சேதத்துடன் காணப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணங்களை கண்டறிவது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், வானத்தில் இருந்த அனைவருமே 18 வயதுக்கு குறைவானவர்கள் என நம்பப்படுவதாகவும் காவல்த்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். The post வோன் பகுதியில் வாகன விபத்து: 2 சிறுவர்கள் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாத முறியடிப்பு பாவனைப் பயிற்சி – 300 அதிகமான படையினர் பங்குபற்றல் Posted: 25 Oct 2015 04:59 PM PDT
"மொன்றியல் 360" எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பாவனைப் பயிற்சி நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானமை போன்ற ஏற்பாட்டில், அதனை எவ்வாறு முறியடிப்பது என்பதற்கான நடவடிக்கையை அதில் பங்குபற்றியவர்கள் முன்னெடுத்திருந்தனர்.உண்மையிலேயே இவ்வாறானதொரு பயங்கரவாத தாக்குதல் அசம்பாவிதம் ஒன்று ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பல், அதிகாரிகளுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கும பொருட்டே இவ்வாறான பாவனைப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான நிலைமை ஏற்படும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதனையும், அதனை அதிகாரிகள் எவ்வாறு கையாள்கின்றனர் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை தங்களுக்கு உள்ளதாக மொன்றியல் காவல்த்தறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பயிற்சி நடவடிக்கையின் போது ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் எவ்வாறு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய இந்த பாவனைப் பயிற்சி நடவடிக்கைக்காக நகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு வீதிகளும் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. The post பயங்கரவாத முறியடிப்பு பாவனைப் பயிற்சி – 300 அதிகமான படையினர் பங்குபற்றல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா பொதுத் தேர்தலில் 19 ஆசனங்களை வென்றுள்ள இந்திய வம்சாவளியினர் Posted: 25 Oct 2015 04:53 PM PDT
வெற்றி பெற்ற 19 இந்திய வம்சாவளிக் கனேடியர்களில் 15 பேர் லிபரல் கட்சியையும், மூன்று பேர் பழமைவாதக் கட்சியையும், ஒருவர் புதிய சனநாயகக் கட்சியையும் சேர்ந்தவர்கள் முன்னைய பொதுத் தேர்தலில் 8 இந்திய வம்சாவளியினர் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை வெற்றிபெற்ற இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை இருமடங்கை விட அதிகமானது.வெற்றிபெற்ற இந்திய வம்சாவளியினரில் ஐவர் பெண்கள். அத்துடன் வெற்றிபெற்ற 19 இந்திய வம்சாவழியினரில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோவிலேயே இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர் என்பதனால் ஒன்ராறியோவின் தொகுதிகளில் இருந்தே பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரெஞ்ச் மக்கள் குடியிருக்கும் கியூபெக் மாகாணத்தில் உள்ள போர்வல்–லச்சின்–லா–சல்லே தொகுதியில் விபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அஞ்சு தில்லான் என்ற பெண் வழக்கறிஞரும் வெற்றி பெற்றுள்ளார்.அவரே அந்த மாநில்தில் இருந்து தேர்வான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடியராவர். The post கனடா பொதுத் தேர்தலில் 19 ஆசனங்களை வென்றுள்ள இந்திய வம்சாவளியினர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் Posted: 25 Oct 2015 04:23 PM PDT
மோசமான இந்த புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனை அடுத்து மெக்சிக்கோவின் Puerto Vallarta விமான நிலையத்திலிருந்து கனடாவுக்கு பயணிக்கவிருந்த விமானப் பயணங்கள் தடைப்பட்டிருந்தது. நேற்று சனிக்கிழமையும் ஐந்து விமானப் பயணங்கள் இரத்தாகியிருந்தன. புயலின் தாக்கம் ஓய்ததனை அடுத்து விமானப் பயணங்கள் மீண்டும் இன்று ஆரம்பமாகின. விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை WestJet பயணிகள் விமான நிறுவனத்தின் பேச்சாளர் அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இருந்து மெக்சிக்கோவின் Puerto Vallarta விமான நிலையத்திற்கு ஆறு விமானச் சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும், அவற்றில் சுமார் 700பேர் பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார். இதேவேளை எயர் கனடா நிறுவனம் இந்த புயல் தாக்கம் காரணமாக தமது விமானச் சேவைகள் எவையும் பாதிப்படையவில்லை என தெரிவித்துள்ளது. கனடாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான தமது விமானச் சேவைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெறும் எனவும் அது அறிவித்துள்ளது. The post கனடாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும் Posted: 25 Oct 2015 08:36 AM PDT
புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள விட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன. காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது. ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது. காலை,இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை. முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். மேலும் போதிய உடற்பயிற்சியும் செய்யும்போது கொழுப்பு காணாமலே போய் விடும். The post இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்! Posted: 25 Oct 2015 08:32 AM PDT
ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை சாப்பிட வேண்டும். வாழைப்பழம் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க உதவுகிறது. தர்பூசணி கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன் (Lycopene), வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆரஞ்சு ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். பசலைக்கீரை பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும். திராட்சை ஜூஸ் தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும். கேரட் தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
The post இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Bloor West Villageஇல் இன்று மாலை வாகனம் ஒன்று மோதியதால் காயமுற்ற காவல்த்துறை உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிசிசாகாவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது 20 வயது மகனைக் கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது இரண்டாம்தர கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
வோன் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மொன்றியலின் மத்திய பகுதியில் பாரிய பயங்கரவாத முறியடிப்பு பாவனைப் பயிற்சி நடவடிக்கை ஒன்று நேற்று நடாத்தப்பட்டது.கனேடிய மத்திய காவல்த்துறையினர், தீயணைப்பு படையினர், அவசர மருத்துப் பிரிவினர் என 300ற்கும் அதிகமானவர்கள் இந்த பயங்கரவாத முறியடிப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இம்முறை நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் 19 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கனடாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான பயணிகள் விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.மெக்சிக்கோவை பற்றீசியா எனப் பெயரிடப்பட்ட மிக மோசமான புயல் தாக்கியதன் காரணமாக இந்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம்.
அதிகமான வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது.




