Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மீனவர்கள் பிரச்சினை: சுஷ்மா சுவராஜுடன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு

Posted: 25 Oct 2015 10:53 PM PDT

தமிழக மீனவர்கள் பாக் வளைகுடா, மன்னார் வளைகுடாவில் உள்ள தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படை வீரர்களால் அடிக்கடி தாக்கப்படுகிறார்கள். எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்வதும் தொடர் கதையாக உள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 4–வது நாளாக அத்துமீறல்: குண்டு வீச்சில் 5 பேர் காயம்

Posted: 25 Oct 2015 10:41 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் காஷ்மீர் எல்லையில் வாலாட்ட தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக ஜம்மு மாவட்டத்தில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் வீரர்கள் கடும் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதில் எல்லையோர கிராமத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்கள்.

இந்திய பெண் கீதா டெல்லி திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Posted: 25 Oct 2015 10:35 PM PDT

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற வாய் பேச முடியாத, காது கேளாத பெண் 7 வயது சிறுமியாக இருந்தபோது தன் பெற்றோருடன் சம்ஜ வுத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். எதிர்பாராதவிதமாக பெற்றோரிடம் இருந்து பிரிந்த அவர் வழி தவறி அதே ரெயிலில் பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலையத்துக்கு சென்று விட்டார்.

ஆந்திராவில் மது விலை ரூ.20 குறைப்பு - சுங்கம் மற்றும் வாட் வரிகள் நீக்கம்

Posted: 25 Oct 2015 09:59 PM PDT

ஆந்திராவில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்காக குறைந்த விலையில் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 180 மில்லி லிட்டர் மதுபானம் ரூ.55 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் குறைந்த விலை மதுபான வகைகள் மீதான சுங்க வரி மற்றும் வாட் வரியில் ஆந்திர மாநில அரசு திடீரென திருத்தம் செய்தது.

பிரதமர் மோடி மவுன சாமி ஆகிவிட்டார்: நிதிஷ்குமார், லல்லு பிரசாத் கடும்தாக்கு

Posted: 25 Oct 2015 09:46 PM PDT

பீகாரில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்து வரும் 28–ந்தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீகாரில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர், ''பீகார்

பீகார் செல்லும் ரெயிலில் மோடிக்கு எதிராக பிரசாரம்: ஆந்திர காங். தலைவர்கள் கைது

Posted: 25 Oct 2015 09:45 PM PDT

பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் 2 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் 3–வது கட்ட தேர்தல் வருகிற 28–ந்தேதி நடக்கிறது. நிதிஷ்குமார் தலைமையில் காங்கிரஸ், லல்லுபிரசாத் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்பட அன்பும், சகிப்புத்தன்மையும், நட்புணர்வும் அவசியம்: மலாலா வலியுறுத்தல்

Posted: 25 Oct 2015 09:24 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விரிசல் நீங்கி நல்லுறவுகள் மேம்பட இருதரப்பினரிடையே அன்பும், சகிப்புத்தன்மையும், நட்புணர்வும் ஏற்பட வேண்டியது அவசியம் என சர்வதேச பெண்கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார்.

பசுக்களுக்கு தனி இடுகாடுகள்: உ.பி. மந்திரி அசாம் கான் கோரிக்கை

Posted: 25 Oct 2015 08:50 PM PDT

பசுக்களை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து சமீபகாலமாக குரல் கொடுத்துவரும் உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி அசாம் கான், பசுக்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவற்றுக்கென தனியாக இடுகாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என தற்போது வலியுறுத்தியுள்ளார்.

மரண தண்டனை மீதான விவாதம் தேவை: முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்

Posted: 25 Oct 2015 08:30 PM PDT

மராட்டியம்-கோவா மாநில பார் கவுன்சில் சார்பில் மும்பையில் நடத்தப்பட்ட வக்கீல்கள் மாநாட்டின்போது, 'மரண தண்டனை' தொடர்பான விவாதத்தின் மீது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்டுமான அதிபர்கள்-கவுன்சிலர்கள்-அதிகாரிகளின் முறைகேடான பிணைப்பு ஏற்க முடியாதது: தேவேந்திர பட்னாவிஸ்

Posted: 25 Oct 2015 08:24 PM PDT

தானேயை சேர்ந்த பிரபல கட்டுமான அதிபர் சூரஜ் பர்மர் சமீபத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய ஒப்பந்தங்களின் மீது முடிவு எடுக்க அரசுக்கு காலதாமதம் ஆனதாகவும், உள்ளூர் அரசியல்வாதிகள் தன்னை சந்தித்து லஞ்சம் கேட்டு

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி மாளிகையில் கொள்ளை

Posted: 25 Oct 2015 08:03 PM PDT

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மாளிகை வீடு சரகான் என்ற இடத்தில் உள்ளது. இந்த மாளிகையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம மனிதர்கள் சிலர் வீட்டில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

பாக். பிரதமர் பதவிக்கும் ஆசைப்படுவார் கெஜ்ரிவால்: மத்திய மந்திரி தாக்கு

Posted: 25 Oct 2015 07:54 PM PDT

டெல்லியில், 'கருத்து பரிமாற்றம்' என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு, டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவாலை நான் பலமுறை சந்தித்துள்ளேன். அவர் எளிமையானவர், மென்மையாக பேசுபவர், அறிவாளி. அவரை பார்த்த பிறகு, அவருக்கு எதிராக எதுவும் பேசத் தோன்றாது. ஆனால், அவர் தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பே

சரக்கு மற்றும் சேவைவரி மசோதா: டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் மாநில நிதி மந்திரிகள் கூட்டம்

Posted: 25 Oct 2015 07:54 PM PDT

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு சேவை வரியை கொண்டுவருவதற்கான சட்டமசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் மேல்-சபையில் பெரும்பான்மை இல்லாததால் இது நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே இதுதொடர்பாக அனைத்து

நேர்முகத்தேர்வுகள் ரத்து அறிவிப்பு: மோடி மீது ஐக்கிய ஜனதாதளம் குற்றச்சாட்டு

Posted: 25 Oct 2015 07:47 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் 'மன்கிபாத்' நிகழ்ச்சி வழியாக நேற்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டுக்கு செல்லப்போவது குறித்தும், மத்திய அரசின் கீழ்கட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வுகளை

சத்தீஷ்காரில் 37 வாகனங்களுக்கு தீவைப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

Posted: 25 Oct 2015 07:31 PM PDT

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பூபாலபட்டினம், பன்டரகாலி, தர்லகுடா ஆகிய இடங்களில் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைப்பணிகள் நடைபெறுவதால் தனியார் கட்டுமான கழகத்தின் கனரக வாகனங்கள், ராட்சத எந்திரங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வாடகைத்தாய் முறைக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு புதிய மசோதா

Posted: 25 Oct 2015 07:31 PM PDT

குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதியர், வறுமையில் வாடும் இந்தியப் பெண்களுக்கு பணம் கொடுத்து வாடகைத் தாயாக்கி குழந்தை பெற்றுச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், வாடகைத்தாய் முறையை ஊக்குவித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்துமாறு தேசிய பெண்கள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

மேலும் ஒரு லஞ்ச வீடியோ ரிலீஸ்: முதல்வரை நொறுக்கும் நெருக்கடிகள்

Posted: 25 Oct 2015 05:16 PM PDT

பீகார் மாநில சுங்கவரித் துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஒரு வீடியோ வெளியானதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு லஞ்ச வீடியோ பீகாரில் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் இந்தியா திரும்புகிறார்

Posted: 25 Oct 2015 04:48 PM PDT

இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கீதா (வயது 23). இவர் வாய் பேசாத, காது கேளாத பெண் ஆவார். 15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 7-வது வயதில், இவர் இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவறுதலாக ஏறி, பாகிஸ்தானை அடைந்தார்.

மதம் மாறிவிடுவோம்: குஜராத் அரசை மிரட்டும் படேல் சமூகத்தினர்

Posted: 25 Oct 2015 04:12 PM PDT

குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள், எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது இளைஞரான ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார்.

நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி அறிவிப்பு

Posted: 25 Oct 2015 03:41 PM PDT

டெல்லியில் ஆங்கில பத்திரிகை ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வில் ஒரு சில தலைவர்களும், சங் பரிவார் அமைப்புகளும் தொடர்ந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™