Tamil Star |
- சிரியா, ஈராக் அகதிகளுக்கு கனடாவில் இடம் அளிக்கப்படும் – ஜஸ்டின் ரூடோ
- ரொரன்ரோவின் மத்திய பகுதியில் தீ சம்பவம்
- கட்சியை மீள் ஒழுங்கமைப்பு செய்யும் நடவடிக்கையில் பழமைவாதக் கட்சி
| சிரியா, ஈராக் அகதிகளுக்கு கனடாவில் இடம் அளிக்கப்படும் – ஜஸ்டின் ரூடோ Posted: 22 Oct 2015 09:47 AM PDT
மனிதாபிமான அடிப்படையை கருத்தில் கொண்டு முதலில் சிரியா மற்றும் ஈராக் நாட்டில் அல்லலுறும் அகதிகள் கனடிய நாட்டிற்கு வரவேற்கப்படுகிறார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.25,000 சிரிய அகதிகளுக்கு தேவையான 250 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும அவர் தெரிவித்துள்ளார். அகதிகள் நெருக்கடி மட்டுமின்றி,வேறும் பல விடயங்களையும் தாம் வேறுபட்ட முறையில் கையாளப் போவதாகவும், குறிப்பாக முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவற்றை புதிதாக பொறுப்பேற்றுள்ள தனது அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளியுறவுக் கொள்கைகளிலும் புதிய அணுகுமறையை பின்பற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.ஸ்டிபன் ஹார்ப்பர் அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக கடுமையான அணுகுமுறைகள் திருத்தியமைக்கப்படும் எனவும், மக்கள் எதி்ர்நோக்கி வந்த வரிப் பிரச்சினைகளுக்க தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்களில் பங்கேற்றுள்ள கனேடிய போர் விமானங்கள் மீளப்பெற்படும் என ஜஸ்டின் ரூடோ ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post சிரியா, ஈராக் அகதிகளுக்கு கனடாவில் இடம் அளிக்கப்படும் – ஜஸ்டின் ரூடோ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவின் மத்திய பகுதியில் தீ சம்பவம் Posted: 22 Oct 2015 09:33 AM PDT
அந்த வர்த்தக நிலையம் 3030 Dundas Westஇல் அமைந்துள்ளதாகவும், அந்த வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியிலேயே இன்று அதிகாலை 1.10 அளவில் இந்த தீப் பரவல் ஆரம்பித்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், விரைவாக தீப் பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து விட்டதாகவும்,சம்பவத்தில் யாரும் காயமடைந்ததான முறைப்பாடுகள் எனவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த தீப் பரவல் ஏற்பட்தற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கக் கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதாகவும், தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை இடம்பெற்ற இந்த தீ சம்பவத்தை அடுத்து Dundas Street Westஇன் McMurray அவனியூவிற்கும் Pacific அவனியூவுக்கும் இடைப்பட்ட பகுதி ஊடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்ததாகவும், பின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் அது வழமைக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. The post ரொரன்ரோவின் மத்திய பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்சியை மீள் ஒழுங்கமைப்பு செய்யும் நடவடிக்கையில் பழமைவாதக் கட்சி Posted: 22 Oct 2015 09:29 AM PDT
தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளதுடன், அந்த அறிவித்தலை அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான விதிமுறைகளை அமைப்பது தொடர்பிலான குழு ஒன்றையும் அந்த கட்சி அமைத்துள்ளது.குறித்த இந்த குழு சுயாதீனமான முறையில் இயங்கும் எனவும், கட்சியின் புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் போட்டியின் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகளை இந்த குழு வரையும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த குழுவுக்காக பழமைவாதக் கட்சியின் மூத்த நிறைவேற்று உறுப்பினர்கள் மூவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் பிராந்திய ரீதியிலும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையிலும் ஏனைய உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியின் போது குறித்த இந்த குழுவின் உறுப்பினர்கள் நடுநிலையினை பேண வேண்டும் எனவும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்ககூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. The post கட்சியை மீள் ஒழுங்கமைப்பு செய்யும் நடவடிக்கையில் பழமைவாதக் கட்சி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிரியா மற்றும் ஈராக் அகதிகளுக்கு கனடாவில் இடம் அளிக்கப்படும் என புதிய பிரதமராக வெற்றிபெற்றுள்ள ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார். நடைபெற்ற கனேடியத் தேர்தலில் அடுத்து அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ரொரன்ரோவின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதுவரையில் ஆட்சியில் இருந்து வந்த பழமைவாதக் கட்சி நடைபெற்று முடிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிக்கொகண்டுள்ளது.இந்த தோல்வியை அடுத்தே தேர்தலுக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையிலான கட்சி மீள் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.