மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரியானாவில் மீண்டும் அராஜகம்: புறா திருடியதாக தலித் சிறுவன் அடித்துக் கொலை- உறவினர்கள் சாலை மறியல்
- ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மோடியின் உருவ பொம்மையை எரிப்போம்: காங். கம்யூனிஸ்டு அறிவிப்பு
- பாகிஸ்தானுக்கு எதிரான சிவசேனாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது - உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
- பீகார் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி: நிதீஷ்குமார் பேட்டி
- கேரளாவில் 1½ ஆண்டுகளில் ரூ.10 கோடி, 1000 பவுன் நகை கொள்ளையடித்த டிரைவர் கைது
- குஜராத்தில் பழமைவாய்ந்த கோவிலில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை
- சோனியா, ராகுல் பெற்ற ரூ.1 கோடி கடனில் சர்ச்சை: பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு
- எழுத்தாளர்கள் போராட்டம் எதிரொலி: இன்று சாகித்ய அகாடமி அவசர கூட்டம்
- சீதையை சிறைபிடித்த ராவணனனையே சிறைபிடித்த குஜராத் போலீசார்
- திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது
- விவசாயிகளிடம் இருந்து பருப்பை நேரடி கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு
- தாத்ரி சம்பவம் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே
- மும்பைக்கு 11-வது இடம்: காலை உணவுடன் ஒரு இரவு தங்குவதற்கு ஏற்ற இடம்
- இஸ்ரோ முன்னாள் தலைவரிடம் சி.பி.ஐ. விசாரணை
- மன்னிப்பு கோரினார் மத்திய மந்திரி வி.கே.சிங்
- தலித் குழந்தைகள் கொலை தொடர்பான வி.கே. சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
- காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி, உமர் பரூக் வீட்டுக்காவலில் வைப்பு
- டெல்லி செங்கோட்டையில் தசரா கொண்டாட்டங்கள்: காங்கிரஸ், பா.ஜ.க., தலைவர்கள் பங்கேற்பு
- திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி
- ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை
| அரியானாவில் மீண்டும் அராஜகம்: புறா திருடியதாக தலித் சிறுவன் அடித்துக் கொலை- உறவினர்கள் சாலை மறியல் Posted: 22 Oct 2015 10:48 PM PDT அரியானா மாநிலம் சோன்பாட் மாவட்டத்தில் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 15 வயது தலித் சிறுவன் மர்மமான முறையில் தூக்கிலிட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோஹனா என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோவிந்த் என்ற அந்த சிறுவன், புறா ஒன்றினை திருடியதாக கூறப்படுகிறது. |
| Posted: 22 Oct 2015 10:28 PM PDT மாநில பிரிவினையின் போது உறுதி அளித்தபடி ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணா விரதம் இருந்தார். 6 நாட்களாக நீடித்த போராட்டத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்ததையொட்டி போலீசார் |
| Posted: 22 Oct 2015 10:16 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான சிவசேனாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இன்னிசை நிகழ்ச்சி, பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமது கசூரியின் புத்தக வெளியீட்டு விழா, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றிற்கு எதிராக சிவசேனா போராட்டம் நடத்தியதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக |
| பீகார் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி: நிதீஷ்குமார் பேட்டி Posted: 22 Oct 2015 10:16 PM PDT பீகார் முதல்–மந்திரி நிதீஷ்குமார் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:– பீகாரில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. பீகாரில் பா.ஜ.க.வுக்கு தொண்டர்கள் கிடையாது. இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி எடுபடாது. |
| கேரளாவில் 1½ ஆண்டுகளில் ரூ.10 கோடி, 1000 பவுன் நகை கொள்ளையடித்த டிரைவர் கைது Posted: 22 Oct 2015 10:02 PM PDT கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மங்கலாபுரம் மாவட்டங்களில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த 3 |
| குஜராத்தில் பழமைவாய்ந்த கோவிலில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை Posted: 22 Oct 2015 09:02 PM PDT குஜராத் மாநிலம் ஜுனகாத் அருகே மிகவும் கிரிநார் மலையடிவாரத்தில் மிகவும் பழமைவாய்ந்த வாகேஸ்வரி சக்தி பீடம் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஏராளமான கோவில்களும், ஆசிரமங்களும் உள்ளன. மேலும் இங்கு நூற்றுக்கணக்கான சாதுக்களும் தங்கி உள்ளனர். இந்த கோவிலுக்கு அந்த பகுதியை ஆண்ட நவாப் அரசர் ஏராளமான நகைகளை காணிக்கையாக அளித்து உள்ளார். |
| சோனியா, ராகுல் பெற்ற ரூ.1 கோடி கடனில் சர்ச்சை: பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு Posted: 22 Oct 2015 08:48 PM PDT கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் நிறுவனத்திடம் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரின் கம்பெனி ரூ.1 கோடி கடன் பெற்றதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| எழுத்தாளர்கள் போராட்டம் எதிரொலி: இன்று சாகித்ய அகாடமி அவசர கூட்டம் Posted: 22 Oct 2015 08:21 PM PDT கன்னட எழுத்தாளர் கல்பர்கி படுகொலை மற்றும் தாத்ரி சம்பவத்தினை கண்டித்து இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதினை திருப்பி அளித்து வருகின்றனர். மேலும் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு அமைதி போராட்டம் நடத்தவும் எழுத்தாளர்கள் முடிவு |
| சீதையை சிறைபிடித்த ராவணனனையே சிறைபிடித்த குஜராத் போலீசார் Posted: 22 Oct 2015 08:13 PM PDT குஜராத் மாநிலத்தில் போலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் ராவணனின் கொடும்பாவியை எரிக்க முயன்ற சிலரை விரட்டியடித்த போலீசார், அவர்கள் கொண்டுவந்த ராவணனின் கொடும்பாவியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சிறைவைத்துள்ளனர். |
| திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது Posted: 22 Oct 2015 07:33 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வந்தது. விழாவின் 8-வது நாளான நேற்று முன்தினம் காலை தங்கத்தேரோட்டமும், இரவு தங்க குதிரை வாகன வீதிஉலா நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து 9-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு மற்றும் திருச்சி வாகன உற்சவம் நடந்தது. அதில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ம |
| விவசாயிகளிடம் இருந்து பருப்பை நேரடி கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு Posted: 22 Oct 2015 06:28 PM PDT அடுத்த மாதம் முதல், விவசாயிகளிடம் இருந்து பருப்பை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் மழை பெய்யாமல்போனதாலும், பருவம் தப்பி பெய்த மழையாலும் நாட்டில் பருப்பு உற்பத்தி 2014-15 ஆண்டில் 20 லட்சம் டன் |
| தாத்ரி சம்பவம் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே Posted: 22 Oct 2015 05:16 PM PDT சிவசேனா ஒவ்வொரு ஆண்டும் தாதர் சிவாஜி பார்க்கில் தசரா தினத்தன்று பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நடத்த சிவசேனாவிற்கு கோர்ட் அனுமதி வழங்கியது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் |
| மும்பைக்கு 11-வது இடம்: காலை உணவுடன் ஒரு இரவு தங்குவதற்கு ஏற்ற இடம் Posted: 22 Oct 2015 02:35 PM PDT உலக அளவில், காலை உணவுடன் ஒரு இரவு தங்குவதற்கு ஏற்ற இடங்களின் பட்டியலில் மும்பை 11-வது இடத்தை பிடித்துள்ளது. 4 ஸ்டார் ஹொட்டல்களில் ஓர் இரவு மட்டும் தங்கி செல்ல ஏற்ற நகரங்களின் பட்டியலை பிரபல சுற்றுலா இணையதளமான டிரிப் |
| இஸ்ரோ முன்னாள் தலைவரிடம் சி.பி.ஐ. விசாரணை Posted: 22 Oct 2015 01:50 PM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ'வின் வர்த்தக அமைப்பு 'ஆன்ட்ரிக்ஸ்'. ஸ்பெக்ட்ரமை பயன்படுத்தி, செல்போனில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மல்டிமீடியா சேவைகளை வழங்குவதற்காக தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துடன், ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தால், தேவாஸ் நிறுவனம், |
| மன்னிப்பு கோரினார் மத்திய மந்திரி வி.கே.சிங் Posted: 22 Oct 2015 10:45 AM PDT அரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை நாய் மீது கல் எறிவதையும் சம்பந்தப்படுத்திய பேசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய மந்திரி வி.கே.சிங் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னதாக மத்திய இணை மந்திரி வி.கே.சிங், "தலித் சிறுமிகள் |
| தலித் குழந்தைகள் கொலை தொடர்பான வி.கே. சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு Posted: 22 Oct 2015 08:14 AM PDT ஹரியானாவில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நாய் மீது கல் எறிந்தால்கூட அரசை குற்றம் கூறக்கூடாது என்று கூறியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. |
| காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி, உமர் பரூக் வீட்டுக்காவலில் வைப்பு Posted: 22 Oct 2015 07:39 AM PDT காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சினானி பகுதியில் 3 பசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை கண்டித்து உதாம்பூர், கதுவா மற்றும் ரியாசி மாவட்டங்களில் கடந்த 9–ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது உதாம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷிவ்நகர் பகுதியில் டிராக்டர் மீது ஒரு கும்பல் வழி மறித்து பெட்ரோல் குண்டு வீசியது. இதனால் டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த டிரைவர் சவுகத் மற்றும் கிளீனர் ஷாகித் அகமது ஆகிய இருவரும் ஜம்மு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். |
| டெல்லி செங்கோட்டையில் தசரா கொண்டாட்டங்கள்: காங்கிரஸ், பா.ஜ.க., தலைவர்கள் பங்கேற்பு Posted: 22 Oct 2015 07:19 AM PDT டெல்லி செங்கோட்டையில் நவராத்தி விழாவையொட்டி தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பா.ஜ.க., தலைவர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி Posted: 22 Oct 2015 07:13 AM PDT ஆந்திர பிரதேசம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தில் இன்று மாலை தரிசனம் செய்தார். அவருடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது தேவஸ்தானம் சார்பில் மோடிக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. |
| ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை Posted: 22 Oct 2015 06:11 AM PDT ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரிலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள மன்சிம்போரா கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |