Tamil Star |
- வீடற்றோர் பொது இடங்களில் கூடாரமிட்டனர் – நீதிமன்றமும் ஆதரவு
- Downsview பகுதியில் விபத்துக்குள்ளான ஒற்றை வாகனம்
- கொலை முயற்சி, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடை இருவரின் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
- பல்வேறு மொழிகளை பேசும் மக்களால் தான் கனடா கட்டமைக்கப்பட்டுள்ளது! புதிய கனடியப் பிரதமர்
- கனடாவின் புதிய அரசாங்கத்துடனும் உறவுகள் கூடுதல் வலுப்பெறும் – அமெரிக்கா
- கனேடிய போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும் – ஜஸ்டின் ரூடோ
| வீடற்றோர் பொது இடங்களில் கூடாரமிட்டனர் – நீதிமன்றமும் ஆதரவு Posted: 21 Oct 2015 07:29 PM PDT
அவ்வாறு தங்கி போராட்டம் நடாத்தி வருபவர்களை அங்கிருந்து வெளியேற்ற அந்த நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வாறான நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை வித்துள்ளது. நேற்றைய தினம் இந்த தடை அறிவிப்பினை வெளியிட்ட பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றம், வீடற்றவர்கள் அந்த நகரில் தங்குவதற்கு ஏற்ற இடங்கள் எவையும் நகரில் இல்லாத காரணத்தினால், அவ்வாறான மக்கள் இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணி வரையில் தற்காலிக குடில்களை அமைத்து தங்குவதற்க அனுமதிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான தீர்வினைக் காணவேண்டிய பொறுப்பு நகர நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை முழு நாடும் பார்த்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். The post வீடற்றோர் பொது இடங்களில் கூடாரமிட்டனர் – நீதிமன்றமும் ஆதரவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Downsview பகுதியில் விபத்துக்குள்ளான ஒற்றை வாகனம் Posted: 21 Oct 2015 07:23 PM PDT
Keele வீதி வடக்கு Wilson அவனியூ பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி வாகனம் கவிழ்ந்து உருண்டதாகவும்,பின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மேல் சென்று விழுந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்தாகவும், அவர் வாகனத்தில் இருந்து மீட்டு வெளியில் கொண்டுவரப்பட்டு பின்னர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். விபத்தை அடுத்து Wilson அவனியூவிற்கும் Calvington பகுதிக்கும் இடைப்பட்ட வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டு பின்னர் இரவு 9 மணிக்கு சற்று முன்னராகவே போக்குவரத்திற்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது. The post Downsview பகுதியில் விபத்துக்குள்ளான ஒற்றை வாகனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொலை முயற்சி, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடை இருவரின் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன Posted: 21 Oct 2015 07:13 PM PDT
இந்த இரு சம்பவங்களும் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த இந்த தினத்தில் காலை 4.30 மணியளவில் Bathurst மற்றும் Richmond வீதிகளில் உள்ள தமது குடியிருப்பில் உள்ள தமது பகுதிக்கு மின்தூக்கியில் நபர் ஒருவர் திரும்பிக்கொண்டிருந்த போது, மின்தூக்கியினது கதவு திறபட்டு அதில் இரண்டு நபர்கள் நுளைந்துகொண்டதுடன், அவர்கள் இருவரும் அந்த நபரை மோசமான முறைகளில் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை அவரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று அந்த நபரின் உடமைகளை கொள்ளையிட முயற்சித்தள்ளனர்.இந்த நிலையில் அயலவர் ஒருவரால் இவர்கள் விரப்பட்டதாகவும், அதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கு கொள்ளையிட்ட சில பொருட்களுடன் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த நிலையிலேயே தற்போது இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு ஒளிப்படக் கருவியில் பதிவான ஒளிப்பட ஆதாரங்களை காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அந்த ஆதாரங்களில் கொள்ளையவர்கள் இருவரும் யூன் மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.47 மணிக்கும் மாறுநாள் 26 ஆம் திகதி அதிகாலை 1.49 மணிக்கும் இடையில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகள் வந்து சென்றுள்ளனர். அதனால் அவர்கள் இருவரும் இந்த நபரை இலக்கு வைத்து செயற்பட்டுள்ளனர் என்றும், குறித்த இந்த நபர் வருவதற்காக கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் இரு கொள்ளையர்களும் காத்திருந்துள்ளனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post கொலை முயற்சி, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடை இருவரின் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பல்வேறு மொழிகளை பேசும் மக்களால் தான் கனடா கட்டமைக்கப்பட்டுள்ளது! புதிய கனடியப் பிரதமர் Posted: 21 Oct 2015 04:08 PM PDT
அவர் தனது உரையில், கனடியச் சமூதாயம் ஒரு விபத்தினால் அமைந்ததல்ல. மேலும் தீவிர முயற்சிகள் இல்லாமல் நாம் முன் செல்லமுடியாது. இதை நான் என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். கனடியர்களும் கூட இது தெரியும். எனவே உங்கள் சக குடிமக்கள் மீது நம்பிக்கை வையுங்கள், அவர்கள் மிகவும் பாசமானவர்கள் மற்றும் பண்பானவர்கள். அவர்கள் வெளிப்படையானவர்கள் மற்றும் நம்பிக்கையுடைவர்கள். இன்றிரவு நான் வரலாறு படைக்கவில்லை, ஆனால் நீங்கள் படைத்திருக்கின்றீர்கள். வேறுபட்ட எதையும் சொல்ல எவரையும் அனுமதிக்காதீர். இன்றிரவு உங்கள் முன் மேடையேற காரணம் என்னவென்று நான் அறிவேன், ஆம் நீங்கள்தான் என்னை மேடையேற்றினீர்கள். நீங்கள் எனக்கு முழுமையான அதிகாரத்தை அளித்துள்ளீர்கள். உங்களைப் போன்று கடுமையாக உழைக்கும் ஒரு அரசு உங்களுக்கு வேண்டும், நாள்தோறும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார வளர்ச்சி குறித்தே கவனம் செலுத்தும் ஒரு அரசு, வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்து நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்தவும், ஆதரவற்ற கனடிய குடும்பத்தினருக்காக அர்ப்பணித்ததுடன் உதவி செய்து அவர்களை நடுத்தர வர்க்கமாக உயர்த்தவும் தகுதி வாய்ந்த ஒரு அரசு வேண்டுமென்பதை தான் அறிவேன். வேற்றுமைகளை களைந்து, பிரிவுகளின் மூலம் ஆதாயம் தேடாமல், கனேடியர்களை பிரித்தாள, ஏற்படுகின்ற வாய்ப்புகள் அனைத்திலும் கனேடியர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தும் ஒரு பிரதமர் உங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கின்றீர்கள். கனேடியர்கள் அவர்களை ஆளும் அரசை நம்புகின்றனர் என புரிந்து கொண்ட ஒரு பிரதமர் உங்களுக்கு வேண்டும், அவர்களது அரசும் கனேடியர்களை நம்ப வேண்டும், சிறந்த முடிவுகள் மேற்கொள்ள வெளிப்படைத்தனமையே சிறந்தது என புரிந்துகொண்ட ஒரு பிரதமர் வேண்டும், நாடுகளுடனான புதுப்பிக்கப்பட்ட உறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் ஒப்பந்தங்களை புரிந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னேறும் ஒரு பிரதமர் உங்களுக்கு வேண்டும் என்ற செய்தியைச் சொல்லியிருக்கின்றீர்கள். நம்பிக்கை, லட்சியம் மற்றும் உறுதியான திட்டங்கள், தெளிவான பார்வை கொண்ட ஒரு அரசு உங்களுக்கு வேண்டும். நண்பர்களே, இன்றிரவு நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், அது மாதிரியான அரசை நான் வழி நடத்துவேன், அந்த தொலை நோக்கு பார்வைகளை நிஜமாக்குவேன், அப்படியான ஒரு பிரதமராக நான் செயற்படுவேன். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி உங்களிடம் கூற ஆயிரம் கதைகள் உண்டு. எனினும் நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கடந்த வாரம் ஒண்றாரியோவின் செயிண்ட் கத்தரின்ஸ் பகுதியில் ஒரு இளம் இஸ்லாமிய தாயை பார்த்தேன். பர்தா அணிந்திருந்த அவர் கூட்டத்திடையே நுழைந்து என்னருகில் வந்து அவரது கைக்குழந்தையை எனது கையில் கொடுத்தார். அப்படிக் கொடுத்தவர் என்னிடம், "எனது பெண் குழந்தை அவள் விருப்பப்படி வாழ்வதற்கு, அவளுக்கு விரும்பியதை அவளே தேர்ந்தேடுக்கும் உரிமை வேண்டும்" அந்த உரிமையை உங்களது ஆட்சி வழக்கும் என்ற நம்பிக்கையில் தான் உங்களிற்கு வாக்களிக்கிறேன் என்றார். அந்த இளம்தாய் கூறிய அந்த வார்த்தையை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அப்பெண்மணிக்காக நான் இதை கூறுகிறேன், "நம் நாட்டின் பன்முகத்தன்மை மீது ஆழமான நம்பிக்கை வைத்துள்ள ஒரு புதிய அரசாங்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். வெவ்வேறு கடவுள்களை வழிபடும், வெவ்வேறு கலாசாரங்களை பின்பற்றும், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களால் தான் கனடா கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். கனடாவின் தனிப்பட்ட பன்முகத்தன்மை என்பது கடந்த காலங்களில் வாழ்ந்த கனடியர்கள் நமக்கு வழங்கிய கொடை" என்று நாங்கள் மனதார நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இவரது உரை மாத்திரமல்ல, இவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட அடுத்த நாள் எந்தவித பந்தாவுமில்லாமல் தனது தொகுதியிலுள்ள நிலக்கீழ்ப் புகையிரத நிலையத்திற்கு தனியாகச் சென்று தனது தொகுதி மக்களுடன் நடந்த கொண்ட விதம் கூடச் சிலாகித்துச் சொல்லப்படுகின்றது. The post பல்வேறு மொழிகளை பேசும் மக்களால் தான் கனடா கட்டமைக்கப்பட்டுள்ளது! புதிய கனடியப் பிரதமர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் புதிய அரசாங்கத்துடனும் உறவுகள் கூடுதல் வலுப்பெறும் – அமெரிக்கா Posted: 21 Oct 2015 11:23 AM PDT
கனடா தொடர்ந்தும் அமெரிக்காவுடன் இணக்கமாக பணியாற்றும் என நம்புவதாகவும், குறிப்பாக ஈராக்கில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பசுபிக் வலய பங்காளித்துவ உடன்பாடு போன்ற விடயங்களில கனடா தொடர்ந்து அமெரிக்காவுடன் இணக்கமான போக்கினை கடைப்பிடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாதாரணமான ஒருசில விடயங்களால் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு குறைவடையுமானனால் அது குறுந்தூர பார்வையுடைய ஒரு நடவடிக்கையாகவே அமையும் எனவும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பருவநிலை மாற்றம் தொடர்பிலான விவகாரங்ளில் முன்னேற்றம் காணப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டு நாடுகளின் முன்னேற்றத்தினையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா கனடா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு விடயங்களில் காத்திரமான முறையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். The post கனடாவின் புதிய அரசாங்கத்துடனும் உறவுகள் கூடுதல் வலுப்பெறும் – அமெரிக்கா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும் – ஜஸ்டின் ரூடோ Posted: 21 Oct 2015 09:44 AM PDT
நடைபெற்று முடிந்த கனேடியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதனை அடுத்து தனது முதலாவது அறிவிப்பாக ஜஸ்டின் ரூடோ இதனை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இந்த விடயம் குறித்து தான் ஏற்கனவே பேசியுள்ளதாகவும்,தற்போது அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில் கலந்துகொண்டுள்ள ஆறு கனேடிய போர் விமானங்களும் மீட்டுக்கொள்ளப்படும் என்ற தகவலை அமெரிக்க அதிபருக்கு தெரிவித்துவிட்டதாகவும் ஜஸ்டின் ரூடோ தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவித்தலை ஒட்டாவாவில் இடம்பெற்ற பேரணி ஒன்றின் போது விடுத்துள்ள ஜஸ்டின் ரூடோ, கனடாவை சூழவுள்ள நட்பு நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்ல விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது கடந்த பத்து ஆண்டுகளாக கனடா உலக அரங்கில் தனது குரலை இழந்துள்ளதாக கவலையுற்றுள்ள அனைவருக்கும 35 மில்லியன் கனேடியர்கள் சார்பில தாம் வழங்கும் செய்தி, கனடா மீண்டும் வந்துவிட்டது என்பதேயாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்து வந்த ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைளில் இருந்து பல வித மாறுபாடுகளைக் கொண்ட கொள்கைகளை லிபரல் கட்சி தனது தேர்தல் பரப்புரைகளின் போதே வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அதனால், பருவநிலை மாற்றம் தொடர்பிலான நடவடிக்கைகள், குடிவரவாளர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளிலும் புதிய நடைமுறைகளை ஜஸ்டின் ரூடோ விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. The post கனேடிய போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும் – ஜஸ்டின் ரூடோ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Fraser Valley பிராந்தியத்தில் உள்ள வீடற்ற மக்கள், தமது இந்த நிலை தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தமது இந்த துன்பத்தினை போக்கும் வகையிலான அதிகாரிகளின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குமாக, பொது பூங்காக்களில் தற்காலிக குடில்களை அமைத்து தங்கியுள்ளனர்.
Downsview பகுதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரொரன்ரோவின் Niagara பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டத் தொகுதியில் கொலை முயற்சி, மற்றும் கொள்ளைச் சம்பவம் என்பவற்றில் தொடர்பு பட்டவர்கள் என இருவரின் ஆதாரங்களை ரொரன்ரோ காவல்த்துறையினர் வெளியிட்டுள்ள்ளனர். இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

