Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கார் இல்லா தினம்: அரசு போக்குவரத்தை பயன்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Posted: 21 Oct 2015 11:06 PM PDT

உலக கார் இல்லா நாள் (கார் ஃபிரீ தினம்) ஆண்டுதோறும் அக்டோபர் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் விதத்தில் பொது போக்குவரத்தை ஊக்குவித்தல், உடல்நலத்தைப் பேணும் வகையில் மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர் ராவிடம் சி.பி.ஐ. விசாரணை

Posted: 21 Oct 2015 10:57 PM PDT

தெலுங்கானா முதல்– மந்திரி கே.சந்திரசேகர் ராவ். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டி.ஆர்.எஸ்) தலைவராக இருக்கும் அவர் கடந்த 2006–ம் ஆண்டு காங்கிரஸ் மந்திரிசபையில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பணியாற்றினார். சந்திரசேகர் ராவ் மத்திய மந்திரியாக இருந்தபோது இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதில் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது.

ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்திய 55 தமிழர்கள் கைது

Posted: 21 Oct 2015 10:52 PM PDT

ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, கடப்பா வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் வெட்டி கடத்துவதை தடுக்கும் முயற்சியில் அதிரடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடப்பா மாவட்டம் எருக்கம்பாடு வனப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி வேனில் கடத்த

மேரி மாதா உருவத்தில் சரிதா நாயர் படம்: பேஸ்புக்கில் வெளியானதால் பரபரப்பு

Posted: 21 Oct 2015 10:05 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் சரிதா நாயர். கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர்களும் இம்மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் சோலார் பேனல் மோசடி வழக்கு மற்றும் காங்கிரசாருடன் சரிதா நாயருக்கு உள்ள தொடர்பு

கன்னட எழுத்தாளர் கொலை எதிரொலி: டெல்லியில் எழுத்தாளர்கள் நவம்பர் 1-ந் தேதி போராட்டம்

Posted: 21 Oct 2015 08:35 PM PDT

கன்னட எழுத்தாளர் எம்.எம். கலபுரகி, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து வலதுசாரி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறியும்

கர்நாடக சட்டசபை நவம்பர் 16-ந் தேதி கூடுகிறது: மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி

Posted: 21 Oct 2015 08:21 PM PDT

கர்நாடக மந்திரி சபை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் வீடு, வர்த்தக கட்டிடங்களுக்கான சொத்து வரி உயர்வு: 2016-2017-ம் நிதி ஆண்டு முதல் அமல்

Posted: 21 Oct 2015 08:13 PM PDT

'சிலிக்கான் சிட்டி' என புனைபெயர் பெற்றுள்ள பெங்களூருவில் வானளவு உயர்ந்து நிற்கும் அடுக்குமாடி கட்டிடங்களும், சிறிய அளவிலான கட்டிடங்களும் அதிகளவில் உள்ளன. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த தகுதியானவை என 16 லட்சம் கட்டிடங்கள், வீட்டு மனைகள் இருப்பதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள்

போலீசாரின் குடும்பநல திட்டத்திற்கு ரூ.10 கோடி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Posted: 21 Oct 2015 08:12 PM PDT

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு போலீஸ் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதவாது:-

பொதுமக்களுடன் நல்லுறவு வளர்த்துக்கொள்ள வேண்டும்: போலீசாருக்கு சித்தராமையா அறிவுரை

Posted: 21 Oct 2015 07:14 PM PDT

பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள ஆயுதப்படை அணிவகுப்பு மைதானத்தில், போலீஸ் துறை பணியாற்றி கொண்டிருந்த போதே உயிர்நீத்தவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் பேசியதாவது:-

அன்புமணி மீதான வழக்குகள் தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

Posted: 21 Oct 2015 07:04 PM PDT

மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது, உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோகில் காண்ட் மருத்துவ கல்லூரி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டக்ஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, பா.ம.க.

சிவசேனாவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் நடிகர்கள்

Posted: 21 Oct 2015 04:37 PM PDT

சிவசேனாவின் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியின் புத்தக வெளியீட்டுக்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் விழாவை ரத்து

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 36 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் - பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: அருண் ஜெட்லி

Posted: 21 Oct 2015 12:52 PM PDT

துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை அதிகரித்து வரும் சூழலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 36 ஆயிரம் டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துவரம் பருப்பு விலை கிலோ 210-ஐ கடந்து விற்கப்படும் நிலையில் பதுக்கலுக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை

ஷீனா போரா கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணையின் கீழ் இந்திராணி கூட்டாளி

Posted: 21 Oct 2015 09:10 AM PDT

ஷீனா போரா கொலை வழக்கினை விசாரித்து வரும் சி.பி.ஐ அமைப்பினர் இந்திராணி முகர்ஜியின் கூட்டாளி ஒருவரை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்திராணியிடம் நடந்த விசாரணையின்போது அவர் கூறிய தகவலையடுத்து சி.பி.ஐ குழுவினர் சமீபத்தில் அந்த குற்றவாளியை தேட தொடங்கினர். கொல்கத்தா பகுதியை சேர்ந்தவரான அவர் இந்திராணியின் கணவர்

இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கிய பா.ஜ.க தலைவர்: தீயாய் பரவும் வீடியோ

Posted: 21 Oct 2015 06:35 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் டமான் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர் நவீன் படேல் ஒரு இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் தாக்குதலுக்கு

பா.ஜ.க-சிவசேனா பேனர் யுத்தம்: மோடியை ஏமாற்றுக்காரர் என்று குறிப்பிட்டதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

Posted: 21 Oct 2015 05:49 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியை ஏமாற்றுக்காரர் என்று குறிப்பிட்டு சிவசேனா கட்சியினர் பேனர் வைத்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த போதிலும் பாஜகவை சிவசேனா தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறது. அண்மையில் பா.ஜ.க-வை சேர்ந்த குல்கர்னி மீது கருப்பு மை வீசியது,

உ.பி., அரசு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையை வாங்க அமிதாப் பச்சன் மறுப்பு

Posted: 21 Oct 2015 05:41 AM PDT

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு மாதம் தலா, 50 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, தனக்கு தர உள்ள பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள் என்று அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 1994ம் ஆண்டு முதல் சிறந்த கலைஞர்களுக்கு யாஷ் பாரதி சம்மான் என்ற விருது வழங்கப்பட்டு

2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு

Posted: 21 Oct 2015 05:26 AM PDT

அரியானா மாநிலத்தில் 2 தலித் குழந்தைகள் உயர் சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியான சோன்பேட் கிராமத்தில் உள்ள ஜிதேந்தரின் வீட்டில் நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீரென பெட்ரோல் வாசனை

அரியானாவில் 2 தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல்

Posted: 21 Oct 2015 04:48 AM PDT

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 2 தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள சோன்பேட்டில், உயர்ஜாதி பிரிவினர் தலித் பிரிவினரது வீட்டின் மீது, நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த தாக்குதலில், வைபவ் என்ற இரண்டரை வயது

மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்

Posted: 21 Oct 2015 03:58 AM PDT

இந்திய விமானப்படையைச் சேர்ந்த Mi-17 ஹெலிகாப்டர் சற்று முன் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஹெலிகாப்டரை பார்த்து செல்கின்றனர். வழக்கம் போல் இன்றும் பயிற்சி மேற்கொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 2.20 மணியளவில்

எம்.எல்.ஏ வீட்டுக்கருகில் குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு

Posted: 21 Oct 2015 03:32 AM PDT

மணிப்பூர் மாநிலத்தின் கியம்கேய் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ.. கரம் தரம்ஜத் சிங் வீட்டின் அருகில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™