Tamil Star |
- புதிதாக பிறந்த ஃபண்டா கரடிக் குட்டிகள்: படங்களை வெளியிட்டது ரொரன்ரோ மிருகக்காட்சிச்சாலை
- மனைவி உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் கணவர் கைது
- ஒட்டாவாவில் பையில் கட்டிய நிலையில் மனித உடல்
- சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் – கனடிய அமைச்சர்
- லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு Justin Trudeau வேண்டுகோள்
- எதிர்வரும் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றி பெறும் – தேசிய பாதுகாப்பு அமைச்சர்
- இரத்தக் கொதிப்பா? உணவில் கவனம் தேவை!
- இல்லந்தோறும் இருக்க வேண்டிய இனிய உணவு!
| புதிதாக பிறந்த ஃபண்டா கரடிக் குட்டிகள்: படங்களை வெளியிட்டது ரொரன்ரோ மிருகக்காட்சிச்சாலை Posted: 15 Oct 2015 07:26 PM PDT
தாய்க் கரடியும் குட்டிகளும் நலமாக உள்ளதாகவும், அவற்றினை மிருகக்காட்சிச்சாலை ஊழியர்க்ள தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஃபண்டா கரடிகளுக்கு இரண்டு குட்டிகள் பிறந்தால், தாய் கரடி ஒரு குட்டிக்கே பால் கொடுத்து அதிகம் கவனிக்கும் நிலையில் மற்றையது வழக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிலை காணப்பட்டால், அல்லது குட்டிகள் தாயிடமிருந்து பால் அருந்த ஆரம்பிக்காது விட்டால், தாயிடமிருந்து பெறப்படும் பாலை புட்டிகள் மூலம் குட்டிகளுக்கு புகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. The post புதிதாக பிறந்த ஃபண்டா கரடிக் குட்டிகள்: படங்களை வெளியிட்டது ரொரன்ரோ மிருகக்காட்சிச்சாலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனைவி உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் கணவர் கைது Posted: 15 Oct 2015 07:19 PM PDT
New Westminster Drive மற்றும் Steeles அவனியூவின் Gilmore Crescent பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் அளவில் அந்த வீட்டிற்கு வருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு காவல்த்துறையினர் சென்றிருந்த போது 36வயது பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாகவும்,அந்த பெண்ணின் இறப்பு ஒரு மனிதப் படுகொலை எனவும் காவல்த்துறையினர் புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் கணவரான 43 வயது நபரை கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது இரண்டாம் தரக் கொலை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். எனினும் இந்த கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை எதுவும் இன்றி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த தகவலை புதன்கிழமை இரவு வெளியிட்டிருந்த போது, கைது செய்து வைத்துள்ள அந்த நபரை வியாழக்கிழமை காலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் போவதாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர். The post மனைவி உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் கணவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒட்டாவாவில் பையில் கட்டிய நிலையில் மனித உடல் Posted: 15 Oct 2015 07:09 PM PDT
ஒட்டாவாவில் இருந்து தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Grenville எனும் இடத்தின் வடபகுதியில் இந்த பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. Kemptville பகுதி குடியிருப்பில் இந்த மனித உடற்பாகங்கள் காணப்பட்டதாக புதன்கிழமை மாலை 6.30 அளவில் தமக்கு தகவல் கிடைத்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தின் பயன்பாட்டினை உடனடியாக தடை செயத அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post ஒட்டாவாவில் பையில் கட்டிய நிலையில் மனித உடல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் – கனடிய அமைச்சர் Posted: 15 Oct 2015 04:09 PM PDT
எதிர்வரும் 19ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அஜெக்ஸ் பகுதியில் கொன்சர்வேடிவ் கட்சி்யில் போட்டியிடும் கிரிஸ் அலெக்ஸ்சாண்டர் மேலும் தெரிவிக்கையில். இந்த தேர்தலில் ஒட்டு மொத்த கனடியர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொண்ட எதிர்காலம். கடுமையாக உழைப்பதால் மட்டுமே வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டவே கன்செர்வெடிவ் கட்சி முயற்சிகள் மேற்கொள்ளும். தொழில், சிறந்த வாழ்க்கை தரம், சிறப்பான வங்கிச் சேவை என்பன மட்டுமல்ல வரிச்சுமையை குறைப்பது போன்றவற்றில் கன்செர்வேடிவ் அரசு கவனம் செலுத்தும். கன்செர்வேடிவ் கட்சியால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். 2. சி.24 மற்றும் சி.51 சட்டங்கள் குறித்து இங்கு பரவலாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன, இது குறித்து மேலும் பல தகவல்களை விளக்க முடியுமா? கனடிய குடிமக்கள் அனைவரும் ஒரே ஒரு வகுப்பை சார்ந்தவர்கள்தான். கனடாவின் குற்றவியல் குறியீடுகளை பலப்படுத்தவும், சர்வதேச அளவில் கனடாவின் இடத்தை தக்கவைத்து கொள்ளவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து கனடா குடிமக்களை பாதுகாக்கும் பொருட்டும் கன்செர்வேடிவ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். 2014-ம் ஆண்டு மட்டும் கனடாவில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் கனடாவில் புதிதாய் குடியேறியுள்ளனர். கனடாவில் குடியுரிமை பெறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளதே இதற்கு காரணம். கடந்த லிபரல் அரசின் ஆட்சியில் கனடாவில் பிறந்தவர்களுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையே பாகுபாடு ஏற்படுவது போன்ற நிலை உருவானது, ஆனால் இனிமேல் அது இருக்காது. கனடிய குடிமக்களுக்கு பாதுகாப்பும், சர்வதேச அளவில் கனடா பாதுகாப்பான நாடு என்பதை உறுதி செய்யவே சி.24 மற்றும் சி.51 மசோதாக்கள். 3. உண்மை கண்டறியும் குழுவில் அங்கமாக நீங்கள் இலங்கையின் வட பகுதிக்கு சென்றிருந்தீர்கள். அங்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பின்னர் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க முடியுமா? 4. கன்செர்வேடிவ் அரசை மீண்டும் தெரிவு செய்வதால், குறிப்பாக தமிழர்களின் எதிகாலம் கருத்தில் கொண்டு, இலங்கை பிரச்சனையை எப்படி எதிர்கொள்ளும்? 5. கனடா மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கனடியர்கள் புதிதாய் தெரிவு செய்யவிருக்கும் கன்செர்வேடிவ் அரசு எப்படி உதவிகரமாக இருக்கும்? The post சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் – கனடிய அமைச்சர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு Justin Trudeau வேண்டுகோள் Posted: 15 Oct 2015 03:50 PM PDT
இந்த நிலையில், நேற்றைய நாள் தேர்தல் பரப்புரை ஒன்றில் உரையாற்றிய லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau, தமது கட்சிக்கு அதி உச்சபட்ச ஆணையினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமக்கே வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும்,பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றினை வழங்குவதற்கான ஆணையினை வழங்குமாறு நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் கேட்பதாகவும் லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau தெரிவித்துள்ளார். சிறுபான்மை அரசாங்கத்தினை அமைப்பதனால் நிலையான அரசாங்கத்தினை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை தோன்றும் என்பதனை மக்கள் அறிந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், பலமான பெரும்பான்மை அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்றே கனேடியர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கனேடியர்கள் மிகவும் சரியான தெரிவினை மேற்கொள்வார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளது எனவும் அவா குறிப்பிட்டுள்ளார். 338 ஆசனங்களை கொண்டிருக்கப் போகும் புதிய நாடாளுமன்றில், அறுதிப் பெரும்பான்மை அரசாங்கதினை அமைப்பதற்கு குறைந்தது 170 ஆசனங்களையாவது பெற வேண்டும் என்ற நிலையில் அவர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு Justin Trudeau வேண்டுகோள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்வரும் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றி பெறும் – தேசிய பாதுகாப்பு அமைச்சர் Posted: 15 Oct 2015 03:46 PM PDT
நேற்று இரவு Blue Jays அணியின் வெற்றி அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டிருந்ததுடன்,baseball குழுவான ரொரன்ரோ Blue Jays அணி நேற்று இரவு ஈட்டிய வெற்றியைப் தமது தேர்தல் வெற்றியுடன் இணைத்தும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். நீல வர்ணத்தை உடைய Blue Jays அணியைப் போன்றே, நீல வர்ணத்தை கொண்ட பழமைவாதக் கட்சியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். Blue Jays அணியின் வெற்றியில் நம்பிக்கை, மனவுறுதி, கொள்கையில் பற்று, சீரிய செயற்பாடு ஆகிய படிப்பினைகள் காணப்படுவதாகவும், அதே மாதிரியான படிப்பினைகளின் வெற்றியை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தேர்தலிலும் கனடா காணவுள்ளதாகவும் அவர் மேலும் விபரித்திருந்தார்.
நேற்று இடம்பெற்ற அமெரிக்க கழக அணிகளுக்கு இடையேயான அடிப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் 22 வருடங்களின் பின்னர் ரொரன்ரோ Blue Jays அணி வெற்றி பெற்று வாகையர் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அந்த அணி, இறுதி மூன்று போட்டிகளிலும் முன்னணி பெற்று இறுதி வெற்றியை Blue Jays அணி தனதாக்கிக் கொண்டிருந்தது. The post எதிர்வரும் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றி பெறும் – தேசிய பாதுகாப்பு அமைச்சர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரத்தக் கொதிப்பா? உணவில் கவனம் தேவை! Posted: 15 Oct 2015 07:42 AM PDT
* இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே. * சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது. * தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும். * அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். *உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். * மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. *பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள். * இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்யும். இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும். * இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. *பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும். *கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளையை பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாக இருங்கள். The post இரத்தக் கொதிப்பா? உணவில் கவனம் தேவை! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இல்லந்தோறும் இருக்க வேண்டிய இனிய உணவு! Posted: 15 Oct 2015 07:17 AM PDT
100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்: நீர் - 23% மாவுச்சத்து 76% புரதம் - 4% கால்சியம் - 5% இரும்பு - 0.4 % விட்டமின் - பி2, சி நியாசின் - 0.2 யூனிட் மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் ஆகியவை உள்ளன. மருத்துவ குணங்கள் தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதேனும் பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது. பாலுடன் தேன் பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும். சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியா, உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். The post இல்லந்தோறும் இருக்க வேண்டிய இனிய உணவு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரொரன்ரோ மிருகக்காட்சிச்சாலையில் புதிதாக பிறந்துள்ள இரட்டை ஃபண்டா கரடிக் குட்டிகளின் புதிய படங்களை மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Thornhill பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மனைவி கொலை செய்யப்பட்டுக் காணப்பட்டமை தொடர்பில் கணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பை ஒன்றில் போட்டு கட்டப்படடிருந்த மனித உடற்பாகங்களை ஒட்டாவாவின் தென்பகுதியில் காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.


லிபரல் கட்சிக்கான ஆதரவு நிலைப்பாடு இறுதி நேரத்தில் அதிகரித்துள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றி பெறும் என தேசிய பாதுகாப்பு அமைச்சர் Jason Kenney தெரிவித்துள்ளார்.
இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு,