Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நவம்பர், டிசம்பர் மாதங்களில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்துக்கு மோடி திட்டம்

Posted: 15 Oct 2015 11:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பதவியேற்றதில் இருந்து இதுவரை 27 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அமெரிக்கா உள்பட சில நாடுகளுக்கு அவர் குறுகிய கால இடைவெளியில் 2 தடவை சென்று வந்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மராட்டிய மாநிலத்தின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி: சிவசேனா கடும் தாக்கு

Posted: 15 Oct 2015 11:00 PM PDT

மராட்டிய மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணிக்கு இடையில் சமீபகாலமாக பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில ஆட்சியில் சிவசேனா நீடிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பா.ஜ.க.,வையும் சிவசேனாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சிவசேனாவுக்கு பதவிப்பசி அதிகம். எனவே, அது ஆட்சியில் இருந்து விலகாது. அதிகாரம் என்பது வெல்லக்கட்டியைப் போன்றது, அதில் இருக்கும்

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 15 Oct 2015 10:52 PM PDT

ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்வு செய்ய 'கொலீஜியம்' முறை இருந்து வந்தது. இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். கொலீஜியம் முறையில் நீதிபதிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ஜனதா அரசு கொலீஜியம் முறையை ரத்து செய்து விட்டு "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்" என்ற அமைப்பை உருவாக்கியது. புதிய

2ஜி வழக்கில் முன்னாள் செயலாளர் மீது வழக்கு: சி.பி.ஐ.யை கபில்சிபல் மறைமுகமாக இயக்கினார்- அருண்ஜெட்லி

Posted: 15 Oct 2015 10:48 PM PDT

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனுடன் சேர்த்து வாஜ்பாய் ஆட்சியின் போது நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றியும் சி.பி.ஐ. தனியாக விசாரித்தது. அப்போது 3 நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 840 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆந்திராவில் வெங்காயம் விலை 3 ரூபாய்க்கு வீழ்ச்சி: விவசாயிகள் ரோட்டில் கொட்டி போராட்டம்

Posted: 15 Oct 2015 10:15 PM PDT

வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. மராட்டிம், ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது.

பீகாரில் இரண்டாம்கட்ட தேர்தல் விறுவிறு: இரண்டே மணி நேரத்தில் 10.76 சதவீத வாக்குப்பதிவு

Posted: 15 Oct 2015 10:10 PM PDT

பீகாரில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் செல்வாக்கை

ஆந்திராவில் சென்னை ரெயிலில் தமிழக பயணிகளிடம் நகை கொள்ளை

Posted: 15 Oct 2015 09:45 PM PDT

சென்னையை சேர்ந்தவர் ரமாகாந்த். இவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சென்னை வந்த அவர் மனைவியுடன் நேற்று முன்தினம் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். நள்ளிரவில் கணவன்–மனைவி இருவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். அதிகாலையில் கண் விழித்த போது அவரது பையை காணவில்லை. அதில்

பீகார் சட்டசபைக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல்: நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Posted: 15 Oct 2015 08:20 PM PDT

பீகார் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்பட 32 தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் செல்வாக்கை நிர்ணயிக்கவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆறு

9 வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.557 கோடி அனுப்பியவர் கைது

Posted: 15 Oct 2015 07:50 PM PDT

பாங்க் ஆப் பரோடா வங்கிக்கிளை மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அனுப்பப்பட்டது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடியை அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. பரோடா வங்கி வழக்கில் கைதான சஞ்சய் அகர்வால் என்பவர் அளித்த தகவலின்பேரில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த மணீஷ்

நவராத்திரி பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

Posted: 15 Oct 2015 07:40 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சின்னசேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில், உற்சவர் மலையப்பசாமியை தாங்கியிருப்பது 5 தலைகளை கொண்ட, 'வாசுகி' என்ற நாகமாகும். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்பார். அதனை விளக்கும் வகையில் புல்லாங்குழலுடன் வேணுகோபால

மாவோயிஸ்டுகள் கடத்தி சென்ற தெலுங்கு தேச தலைவர்கள் விடுதலை

Posted: 15 Oct 2015 07:27 PM PDT

தெலுங்கு தேசம் கட்சியின் விசாகப்பட்டணம் மாவட்டத்துக்கு உட்பட்ட மண்டலக்குழு தலைவர் மமிதி பாலையா பாதல், மூத்த தலைவர் வண்டாளம் பாலையா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் முக்காலா மகேஷ் ஆகியோர் கடந்த 5-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் இந்தியா திரும்ப ஏற்பாடு: சுஷ்மா சுவராஜ் தகவல்

Posted: 15 Oct 2015 07:16 PM PDT

இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமி கீதா 15 வருடத்திற்கு முன்பு ரெயிலில் வழிதவறி தனியாக லாகூர் சென்றார். அங்கு தவித்த அவரை அங்குள்ள எத்தி அறக்கட்டளையினர் மீட்டு கராச்சிக்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். தற்போது 22 வயதுள்ள மாற்றுத்திறனாளி பெண் கீதா பாகிஸ்தானில் இருப்பது இந்திய வெளியுறவு துறைக்கு தெரியவந்தது.

எல்லை பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி வழங்கும் பாபா ராம்தேவ்

Posted: 15 Oct 2015 05:32 PM PDT

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரபல யோகாகுரு பாபா ராம்தேவ் யோகா பயிற்சியை வழங்க உள்ளார். இந்த யோகப்பயிற்சி நாளை டெல்லியில் துவங்குகிறது. இந்த பயிற்சியின் முதல் பகுதி டெல்லியின் சாவ்லா பகுதியில் காலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில், டெல்லிவாசிகளுக்கு ஏற்ற வகையில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக மோடி வாக்களித்திருக்கிறார்: அப்படி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்

Posted: 15 Oct 2015 05:09 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக வாக்களித்திருப்பதாகவும், அவர் அப்படி செய்யாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் அகில பாரத திகம்பர அகரா என்ற இந்து அமைப்பின் தலைவர் சுரேஷ் தாஸ் கூறியுள்ளார்.

அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

Posted: 15 Oct 2015 04:13 PM PDT

தமிழக காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டி.ஜி.பி.யாக அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றி வந்தார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவுகளில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

டெல்லியில் சோனியா காந்தியுடன் வசந்தகுமார் சந்திப்பு

Posted: 15 Oct 2015 04:08 PM PDT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வசந்தகுமார் 2 நாள் பயணமாக டெல்லி சென்று உள்ளார். அவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்.

17 வயது மாணவி உள்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினர்

Posted: 15 Oct 2015 03:53 PM PDT

கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை மற்றும் தாத்ரி சம்பவத்தை கண்டித்து 17 வயது மாணவி உள்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப அனுப்பியுள்ளனர். பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கால்புர்கி கடந்த ஆகஸ்டு மாதம் சுட்டுக்

பா.ஜ.க வை தோற்கடியுங்கள்: பீகாரில் ராம்ஜெத்மலானி ஆவேசம்

Posted: 15 Oct 2015 02:56 PM PDT

கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று சொல்லி, மக்களை நம்பிக்கை மோசடி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தண்டனையாக பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

காதலுக்கு மரியாதை- மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சென்னை என்ஜினீயர்

Posted: 15 Oct 2015 02:45 PM PDT

சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் டாக்டர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (23). இருவரும் பள்ளியில் படித்த போது காதல் மலர்ந்துள்ளது. பிரசாத் வேறு சாதியை

ஆந்திர தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கமாட்டேன்: சந்திரபாபுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Posted: 15 Oct 2015 01:06 PM PDT

இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு அமராவதியில் ரூ.1,850 கோடியில் தலைநகரம் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா வருகிற 22-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தீவிரமாக செய்து வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™