Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாகனத்தால் மோதுண்ட மாணவி உயிரிழப்பு

Posted: 11 Oct 2015 09:13 PM PDT

yh

yhவிபத்தொன்றில் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளாகியிருந்த ஸ்காபரோவைச் சேர்ந்த 18 வயது மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை University Drive இற்கு அருகில் Lambton Drive பகுதியில் இரவு 11.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குறித்த 18 வயது மாணவி மோசமாக காயமடைந்திருந்தார்.

காயமடைந்த அவர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் (London Health Sciences Centre)உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.yh

உயிரிழந்தவர் 18 வயதான Andrea Christidis என்ற மாணவி எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்குத் தடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந் மாணவியை மோதித் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவியை மோதித்தள்ளிய அந்த வாகனத்தின் சாரதியான 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

The post வாகனத்தால் மோதுண்ட மாணவி உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துருக்கி குண்டு வெடிப்பைக் கண்டித்து டவுண்ரவுனில் பேரணி

Posted: 11 Oct 2015 08:44 PM PDT

o

oதுருக்கிக் குண்டு வெடிப்பைக் கண்டித்து ரொரன்ரோவின் டவுண்ரவுனில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.Bloor மற்றும் Yonge வீதிகளில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பெரறி நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நிறைவடைந்திருந்தது.

துருக்கியின் தலைநகரில் நடாத்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆகவும், மேலும் பலர் காயடைந்துள்ளதுடன், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோரச் சம்பவத்தைக் கண்டித்தே கனடாவில் குர்திய சமூகத்தினரால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அளவில் முன்னெடுக்கப்பட்டது.o

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டதுடன், சர்வதேசம் துருக்கியில் அமைதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் குர்திய மக்களுக்காக கனேடிய அரசாங்கம் குரல்கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக துருக்கி அரசாங்கத்துடன் பேச்சு நடாத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அமைதியையும், மனித உரிமையும் நிலைநாட்ட பல வருடங்காளாக குர்திய மக்கள் எதிர்கொண்டுவரும் சமூக, அரசியல் இராணுவ அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

The post துருக்கி குண்டு வெடிப்பைக் கண்டித்து டவுண்ரவுனில் பேரணி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வோன் பகுதி விபத்தில் பெண் ஒருவர் பலி

Posted: 11 Oct 2015 08:39 PM PDT

uy

uyவோன் (Vaughan) பகுதியில் நெடுஞ்சாலை 400 இல் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுஞ்சாலையின் தெற்குத் தடத்தில், நெடுஞ்சாலை 407 இற்கான வளைவில் இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நான்கு பேர் பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்றை அதன் பின்னால் வந்த கார் மோதித் தள்ளியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததுடன், அவர்களில் மூவர் உள்ளூர் மருத்துவ மனைக்கும், மற்றைய ஒருவர் மத்திய மருதுவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.uy

எனினும் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நான்குபோர் பயணம் செய்த அந்த காரின் சாரதியான 25 வயது இளைஞன் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

விபத்தை அடுத்து காலை 8 மணிவரையில் நெடுஞ்சாலை 400 இன் தெற்கு தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தன.

The post வோன் பகுதி விபத்தில் பெண் ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்?

Posted: 11 Oct 2015 04:35 PM PDT

g

gஉடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும்.

அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை கொண்டு வாய் அல்சருக்கு வலியில்லாத நிவாரணத்தை பெறலாம்.

u

இஞ்சிப்பொடி

இஞ்சி பொடியை வீங்கிய ஈறுகளின் மீது தடவினால் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பி பொருட்கள் அடங்கியுள்ளதால், ஈறு வலியை போக்கி நிவாரணத்தை அளிக்கும்.t

பிரியாணி இலை எதற்காக?

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.g

The post உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியப் பொதுத் தேர்தல் 2015 – முற்கூட்டிய வாக்குப் பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 11 Oct 2015 12:46 PM PDT

Elections_Canada_-_10112015

Elections_Canada_-_10112015கனேடியப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் எதிர்வரும் 19ஆம் திகதிநடைபெறவுள்ளது.

அந்த பொதுத் தேர்தலின் முற்கூட்டிய வாக்குப் பதிவுகளில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை இந்த முறை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்த தகவலை கனேடிய தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முற்கூட்டிய வாக்குப் பதிவுகள் ஆரம்பித்த நிலையில், அந்த முதல் நாளிலேயே சுமார் 8,50,000 பேர் தமது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 2011ஆம் ஆண்டு தேர்தலை விட 26 சதவீதமும், 2008ஆம் ஆண்டு தேர்தலை விட 90 சதவீதமும் அதிகமாகும். அதனை தேர்தல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாக்குப்பதிவுகளின் போது வாக்களிப்பு நிலையங்களில் வழக்கத்தினை விடவும் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்ததைக் காண முடிந்தது.Elections_Canada_-_10112015
பழமைவாதக் கட்சி அரசாங்கத்தின் தேர்தல் சட்ட மாற்றங்கள், குறிப்பாக அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் வாக்காளர் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் வாக்குப் பதிவு எண்ணிக்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்ற சந்தேகம் நிலவி வந்திருந்த நிலையிலெயே முற்கூட்டிய வாக்கப் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்த அனைவரும் வாக்களிப்பதனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post கனேடியப் பொதுத் தேர்தல் 2015 – முற்கூட்டிய வாக்குப் பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

influenza எனப்படும் சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போடுமாறு அறிவுறுத்தல்

Posted: 11 Oct 2015 12:37 PM PDT

nfluenza_-_10112015

nfluenza_-_10112015influenza எனப்படும் சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பனிக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், influenza எனப்படும் சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட்டுக்கொள்வதனை தவறவிட்டுவிட வேண்டாம் என வலியுறுத்தி சுகாதாரத் துறையினரே அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக நவம்பர் மாதத்தில ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரையில் தொடரும் இந்த நோய்த் தாக்கம் காரணமாக ஆண்டு தோறும் சராசரியாக 12,500 கனேடியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்ப்படுகின்றனர்.nfluenza_-_10112015

இதேவேளை முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் நோய்த் தாக்கத்தின் அளவு வழமைக்கு மாறான ஒன்றாக அமைந்திருந்தது.

எனினும் கடந்த ஆண்டில் சளிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதனை தவிர்த்துவிட வேண்டாம் என மருத்துவ நிபுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டின் நிலவரம் இந்த ஆண்டுக்கான நிலவரத்தினை எந்தவிதத்திலும் முன்னுரைக்கும் விதத்தில் அமைந்து விடாது எனவும் மருத்துவ நிபுனர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

The post influenza எனப்படும் சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போடுமாறு அறிவுறுத்தல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காவல்த்துறை அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு –

Posted: 11 Oct 2015 09:50 AM PDT

police_officers_wounded_-_10112015

police_officers_wounded_-_10112015நயாகரா பிராந்திய காவல்த்துறை அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்க இலக்கான சம்பவம் ஒன்று நேற்று இரவு ஒன்ராறியோவின் Welland பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு எட்டு மணியளவில் Pelham பிராந்தியத்தில், 704 Canboro வீதிக்கு வரவழைக்கப்பட்ட காவல்த்துறையினர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதாக கிடைத்த தகவலை அடுத்தே குறித்த அந்த இடத்திற்கு காவல்த்துறையினர் விரைந்திருந்தனர்.

அப்போது காயமடைந்த காவல்த்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் மீது மூன்று முறையும், மற்றொருவர் மீது ஒரு முறையும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.police_officers_wounded_-_10112015

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள காவல்த்துறையினர் இருவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் ஒருவரைகைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

காவல்த்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் வரழைக்கப்பட்டுள்ளனர்.

The post காவல்த்துறை அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு – appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளா? கண்டிப்பாக சாப்பிடாதீர்கள்!

Posted: 11 Oct 2015 07:55 AM PDT

hjh

hjhஉணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க உதவுவது குளிர்சாதனப்பெட்டி.

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவாறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீண்ட நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும்.hjh

அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்.

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் ஆகும்.

The post குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளா? கண்டிப்பாக சாப்பிடாதீர்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™