Tamil News | Online Tamil News |
- தாவூத்தை பார்த்து பயப்படவில்லை: சோட்டா ராஜன் ஆவேசம்
- பா.ஜ., கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள்களையெடுப்பு பீஹார் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை உறுதி
- பாசுமதிக்கு 'புவிசார் குறியீடு' கிடைக்குமா?
- மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லை: கருணாநிதி
- கோவையில் எம்.எல்.ஏ., தனியரசு ஆட்கள் அராஜகம்: அரிவாள், தடிகளுடன் வாகனங்களை நொறுக்கினர்
- தீபாவளி அன்று பட்டாசுகள்... வெடிக்கலாம்:தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
- 'தமிழக பாணி'யில் கேரள வாக்காளர்களுக்கு பணம், சேலை பறிமுதல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது
- 'பயங்கரவாதிகளை ஆதரித்தோம்' : பாக்., 'மாஜி' அதிபர் முஷாரப் ஒப்புதல்
- பூமிக்கு 'பறந்து வரும்' ஆபத்து: நவ., 13ல் உலகம் அழியுமா
- கலாம் வசித்த பங்களா மத்திய அமைச்சருக்கு ஒதுக்கீடு: சர்ச்சையை கிளப்புது
| தாவூத்தை பார்த்து பயப்படவில்லை: சோட்டா ராஜன் ஆவேசம் Posted: 'தாவூத் இப்ராகிம் கும்பல் உட்பட, எந்த எதிரி கும்பலையும் பார்த்து, நான் பயப்படவில்லை' என, இந்தோனேஷியாவில் பிடிபட்ட, மும்பை தாதா சோட்டா ராஜன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை கலக்கிய பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவன் சோட்டா ராஜன். கருத்து வேறுபாடு காரணமாக, தாவூத் கும்பலில் இருந்து பிரிந்து, தனியாக, ஆள், ஆயுதம், போதை மருந்து கடத்தலில், சோட்டா ராஜன் ஈடுபட்டான். இந்தியாவில் மட்டும், அவன் மீது, 20 கொலை வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப் பட்டதால், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். சமீபத்தில், ... |
| பா.ஜ., கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள்களையெடுப்பு பீஹார் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை உறுதி Posted: புதுடில்லி:கட்சியின் மேலிட தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அதிருப்தியாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, கடந்தாண்டு பதவியேற்றதும், ஆட்சியிலும், பா.ஜ., கட்சியிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட, மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். கடும் விமர்சனங்கள்அத்வானிக்கு, கட்சியின் வழிகாட்டும் குழுவில் இடமளிக்கப்பட்டது. ... |
| பாசுமதிக்கு 'புவிசார் குறியீடு' கிடைக்குமா? Posted: புதுடில்லி,:பாசுமதி அரிசிக்கு, 'புவிசார் குறியீடு' பெறுவதில் உள்ள சிக்கலுக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரியாணி அரிசி எனப்படும் பாசுமதி அரிசியின் பூர்வீகம், பஞ்சாப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் இரண்டாகப் பிரிந்தது. தற்போது, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் உள்ள பஞ்சாப் மாநிலங்களில், பாசுமதி அரிசி விளைகிறது. இதுதவிர, ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், டில்லி ஆகிய இடங்களிலும், பாசுமதி அரிசி விளைகிறது. பாசுமதியின் விளைச்சல், ... |
| மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லை: கருணாநிதி Posted: சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை கடற்படையினரால், ஒரே நாளில், 34 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, பல பிரச்னைகளுக்கு, தமிழக மீனவர்கள் உட்படுத்தப்பட்டு, துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்வோர், பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வருவரா என்பதே, கேள்விக்குறியாக உள்ளது.முடிவின்றித் தொடரும், தமிழக மீனவர்களின் இந்த துயர நிலை குறித்து, உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை தவிர்த்து, மத்திய, மாநில அரசுகள், இயந்திரத்தனமாக, கடிதங்கள் மூலமாகவே சமாதானப்படுத்தி வருகின்றனர். ... |
| கோவையில் எம்.எல்.ஏ., தனியரசு ஆட்கள் அராஜகம்: அரிவாள், தடிகளுடன் வாகனங்களை நொறுக்கினர் Posted: கோவை,:கோவையில், எம்.எல்.ஏ., தனியரசுவின் ஆதரவாளர்கள், பட்டப்பகலில் நடுரோட்டில், அரிவாள், தடிகளுடன், வாகனங்களை அடித்து நொறுக்கி, அராஜகம் செய்தனர். போலீசார் கண்முன், இந்த அட்டூழியங்களை செய்தனர்.கோவை, ராம்நகர், சென்குப்தா தெருவில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின், மாநகர் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ., தனியரசுவுக்கு சொந்தமான இந்த அலுவலகத்துக்கு அருகிலுள்ள கட்டடத்தில், மருந்து ஏஜன்சி நிறுவனம் இயங்கி வருகிறது.அங்கு, மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு, வாரம் ஒரு நாள் கூட்டம் நடக்கும். அப்போது, அலுவலகத்தின் முன்புறம், சாலையோரத்தில், ... |
| தீபாவளி அன்று பட்டாசுகள்... வெடிக்கலாம்:தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Posted: புதுடில்லி: தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில், விரிவாக விளம்பரங்கள் வெளியிடுமாறு, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை சமயத்தில், பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மற்றும் சுவாசிக்கும் காற்று மாசுபடுவதாகக் கூறி, மூன்று குழந்தைகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு விவரம்: மாசு இல்லாத, ... |
| 'தமிழக பாணி'யில் கேரள வாக்காளர்களுக்கு பணம், சேலை பறிமுதல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது Posted: மூணாறு:கேரளஉள்ளாட்சி தேர்தலில் 'தமிழக பாணி'யில் இடுக்கி மாவட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் மற்றும் சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூணாறைச் சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வரும் நவ., 2 ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் மூணாறு, தேவிகுளம், மறையூர், வண்டிபெரியார் ஊராட்சிகளில் தலா ஒரு வார்டுகளில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. இந்த வார்டுகளை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க.,வினர் செயல்படுகின்றனர். இவ்வேட்பாளர்களை ஆதரித்து தமிழக ... |
| 'பயங்கரவாதிகளை ஆதரித்தோம்' : பாக்., 'மாஜி' அதிபர் முஷாரப் ஒப்புதல் Posted: லாகூர்:'காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ஆதரவளித்தது உண்மை' என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், 'துனியா நியூஸ்' என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:கடந்த, 1990ல், காஷ்மீர் விடுதலை போராட்டம் துவங்கியது. அப்போது, லஷ்கர் - இ - தொய்பா, எல்.இ.டி., போன்ற, 11 அல்லது 12 அமைப்புகள் உருவாயின. அவற்றின், தலைவர்களான, ஹபீஸ் சயீத், ஜாகிர் ரகுமான் லக்வி போன்றோர், காஷ்மீர் விடுதலைக்காகப் போராடினர். அதனால், அவர்கள் எங்களுக்கு, 'ஹீரோ'க்களாகத் தெரிந்தார்கள். எனவே, அவர்களை ஆதரித்து பயிற்சி ... |
| பூமிக்கு 'பறந்து வரும்' ஆபத்து: நவ., 13ல் உலகம் அழியுமா Posted: விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள், பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது, நவ., 13ம் தேதி இலங்கைக்கு அருகே விழப் போகிறதாம். இதனால் உலகம் அழியும் என்ற பீதி மீண்டும் கிளம்பியுள்ளது.விண்வெளியில் இருந்து அடையாளம் தெரியாத 'டபிள்யு.டி.1190எப்' என பெயரிடப்பட்ட ஒரு மர்மப் பொருள் பூமியின் மேற்பரப்பை நோக்கி பறந்து வருவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 7 அடி நீளமுள்ள வளையும்தன்மையுடைய அந்த பொருள் விண்வெளியில் உள்ளகுப்பை, விண்கற்கள் அல்லது அப்பல்லோ விண்கலத்தின் ஒரு பாகமாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ... |
| கலாம் வசித்த பங்களா மத்திய அமைச்சருக்கு ஒதுக்கீடு: சர்ச்சையை கிளப்புது Posted: புதுடில்லி: டில்லியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் வசித்த பங்களா, மத்திய அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2007ல் இருந்து, டில்லி, லுாட்டீன்ஸ் பகுதியில் உள்ள, 10 ராஜாஜி மார்க் என்ற அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவர் மறைந்ததை அடுத்து, 'அந்த பங்களாவை, அறிவுசார் மையமாக மாற்ற வேண்டும்' என, பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். சமீபத்தில் அந்த பங்களா காலி செய்யப்பட்டது. அப்துல் கலாம் வைத்திருந்த வீணை, புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், அவர் சொந்த ஊரான, ராமேஸ்வரத்துக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 29,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |