Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அரசு பணிக்கு தேர்வெழுத காத்திருப்போர் உற்சாகம்: ஜன., 1 முதல் நேர்முக தேர்வு இல்லை என மோடி அறிவிப்பு

Posted:

புதுடில்லி: 'வரும் ஜன., 1 முதல், மத்திய அரசின், கீழ் நிலை ஊழியர் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்படாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை, வானொலியில் ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார். இனி, அரசு தேர்வெழுதக் காத்திருப்போர், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும்; அதைத் தொடர்ந்து நடத்தப்படும், நேர்முகத் தேர்வு,இனி கிடையாது. இதனால், மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று, வானொலியில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம், பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று அவர் பேசியதாவது:சுதந்திர தின ...

உடல் உறுப்பு தானம்: தமிழகத்துக்கு பாராட்டு

Posted:

புதுடில்லி: தமிழகத்தில் உடல் உறுப்பு தானங்கள் அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று, வானொலியில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம், பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று அவர் பேசியதாவது: நாடு முழுவதும், 2.5 லட்சம் சிறுநீரகங்கள், இதயங்கள் போன்ற உடல் உறுப்புகள், நோயாளிகளுக்கு தேவைப்படுகின்றன. இதை கருத்தில் வைத்து, உடல் உறுப்பு தானத்துக்கு, மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும். உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் சிறந்து விளங்குவது பாராட்டுக்குரியது. 2008ல், தமிழகத்தில், உடல் ...

பீஹாரில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் நிதிஷ், லாலு தான் காரணம்: பிரதமர் மோடி விளாசல்

Posted:

பாட்னா: பீஹார் மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியை, நேற்று, கடுமையாக விமர்சித்தார். நிதிஷ், இதற்கு பதிலடி தரும் வகையில், மோடி அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 243 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இரு கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல், வரும், 28ல், 50 தொகுதிகளுக்கு நடக்கிறது. மூன்றாம் கட்ட ...

ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்தை தடுக்க நவீன கருவி

Posted:

புதுடில்லி: ஆளில்லா ரயில்வே, 'லெவல் கிராசிங்'குகளில், விபத்தை தடுக்க, இந்திய ரயில்வே உருவாக்கிய, நவீன எச்சரிக்கை கருவி, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 30,348 ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. இவற்றில், 11,563ல், கண்காணிப்பு ஊழியர்கள் இல்லை. ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில், விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ரயில்வேயை சேர்ந்த, ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனம், நவீன எச்சரிக்கை கருவியை உருவாக்கி உள்ளது. இந்த கருவி, தற்போது, தமிழகத்தில், கோவை - மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ...

காங்கிரஸ் தலைவர் ஆக ராகுலுக்கு தகுதியில்லை: எம்.எல்.பொதேதர்

Posted:

புதுடில்லி: 'காங்கிரஸ் தலைவர் ஆக ராகுலுக்கு தகுதியில்லை' என, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆலோசகர், எம்.எல்.பொதேதர், தன், 'தி சினார் லீவ்ஸ்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வெளிவர உள்ள இந்த நுாலில், அவர் ஆட்சேபகரமான கருத்துக்களை கூறி, சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார். அந்த நுாலில் உள்ள சில பகுதிகள்:கடந்த, 1998ல், காங்கிரஸ் பிளவுபடும் சூழல் உருவானது. அப்போது, காங்கிரஸ் தலைவராக சோனியா பொறுப்பேற்று, கட்சி பிளவுபடாமல் காப்பாற்றினார். அவரிடம் பல திறமைகள் உள்ளன; ஆனால், அரசியல் செய்யும் திறமை இல்லை. அதனால், அவர் ராகுலை உயர்த்த விரும்பிய போது, ...

'சுழற்சி முறையில் 2016 நமக்கு தான்': கணக்கு போட்டு ஸ்டாலின் பேச்சு

Posted:

சேலம்: ''சுழற்சி முறையில் பார்த்தால், வரும், 2016ல், தி.மு.க., தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்,'' என, கணக்கு போட்டு, சேலம் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். சேலம், குரங்குசாவடி, சுப்ரமணிய கவுண்டர் திருமண மண்டபத்தில், ம.தி.மு.க., முன்னாள் சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான கட்சியினர், ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. அப்போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:ம.தி.மு.க.,வில் இருந்த நண்பர்கள் சிலர், தங்களது, 22 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை தொலைத்து விட்டதாக வருத்தப்பட்டு பேசினர். நீங்கள், மீண்டும் தாய் கழகத்துக்கு ...

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம்

Posted:

கொழும்பு: ''எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, இலங்கை மீன்வளத் துறை அதிகாரி பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.இலங்கை மீன்வளத் துறை டைரக்டர் ஜெனரல், பெர்னாண்டோ கூறியதாவது:இந்திய எல்லைக்குள் ஊடுருவி, மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில், சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.இதுபோல், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கும், கடுமையான அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்லை தாண்டி மீன் ...

உதவியாளர்களை நம்பி 100 சார்-பதிவகங்கள்: நில மோசடி அதிகரிக்கும் அபாயம்

Posted:

தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில், முறையாக தேர்ச்சி பெறாத உதவியாளர்கள், தற்காலிக அடிப்படையில், சார்-பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, நில மோசடிக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒரு பதிவாளர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உதவியாளர்கள், எழுத்தர், இரண்டு அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், அன்றாட பணிகள் முடங்கும் ...

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு: குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை

Posted:

சென்னை: குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார். டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ...

ஈராக் போர்: மன்னிப்பு கோரினார் பிளேர்

Posted:

லண்டன்:''உளவு அமைப்புகளின் தவறால், ஈராக் மீது போர் தொடுக்க நேர்ந்தது; அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தெரிவித்துள்ளார்.

போர் தொடுத்து...
இதுகுறித்து அவர், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி:ஈராக்கில், அபாயகரமான அணு ஆயுதங்கள் உள்ளதாக, உளவுதகவல்கள் தெரிவித்தன. அதன் பேரில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப் படைகள், ஈராக்கில் போர் தொடுத்து, சதாம் உசேன் ஆட்சியை அகற்றின. அதன்பின் தான், அங்கு, அணு ஆயுதங்கள் இல்லை என்பது தெரியவந்தது. உளவு துறையின் தவறான தகவலால், ஈராக் மீது போர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™