Tamil News | Online Tamil News |
- வீடுகளில் 500 யூனிட் மேல் மின்சாரம் வாரியத்திற்கு ரூ.2,566 கோடி வருவாய்
- சர்வே முடிவால் ஸ்டாலின் உற்சாகம்
- கைதிகளின் அருவருக்கத்தக்க செயல்கள்: பெண் போலீசாருக்கு நேர்ந்திடும் துயரம்
- காந்தியின் கொள்கை: மோடி புகழாரம்
- இந்திய ராணுவ நிலைகள் மீது பாக்., தாக்குதல்: வழக்கமான பதில் தருகிறார் காஷ்மீர் முதல்வர்
- கையிழந்த தமிழக பெண்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
- அ.தி.மு.க.,வை வீழ்த்துவேன்: தர்மபுரியில் விஜயகாந்த் சபதம்
- ராகுலுக்கு கோபம் ஏன்?
- துவரம் பருப்பு வாங்க முன்பதிவு அவசியம்: கூட்டுறவு கடைகளில் கிலோ ரூ.110க்கு விற்பனை
- மந்திரவாதியிடம் நிதிஷ் ஆசி: வீடியோவால் பரபரப்பு
- 'தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது': சித்தராமையா
| வீடுகளில் 500 யூனிட் மேல் மின்சாரம் வாரியத்திற்கு ரூ.2,566 கோடி வருவாய் Posted: ஐநுாறு யூனிட்டுக்கும் மேல், மின்சாரம் பயன்படுத்திய வீடுகளுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டணம் மூலம், மின் வாரியத்திற்கு, 2,566 கோடி ரூபாய், வருவாய் கிடைத்துள்ளது. வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட் மேல் என, நான்கு பிரிவாக, மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில், 500 யூனிட் வரை, ஒரு யூனிட், 3 ரூபாய் முதல், 4.60 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பிரிவில், கட்டணம் செலுத்துவோருக்கு, குறிப்பிட்ட தொகையை தமிழக அரசு, மானியமாக வழங்குகிறது. ... |
| சர்வே முடிவால் ஸ்டாலின் உற்சாகம் Posted: சட்டசபை தேர்தலில், தனித்துப் போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு, 70 - 80, 'சீட்' கிடைக்கும்' என, சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளதால், அக்கட்சியினர் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்காக பிரத்யேகமாக செயல்படும் சமூக வலைதளம், தொகுதி மக்களின் கேள்வி கேட்கும் கூட்டம், 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டம், வேட்பாளர் தேர்வு பணி, 234 தொகுதிகளில் வெற்றி, தோல்வி பற்றிய சர்வே உள்ளிட்ட, முக்கிய பணிகளை, 'ஒன் மேன் குரூப் - ஓ.எம்.ஜி.,: ஸ்டாலின் பார் சி.எம்.,' என்ற குழு, மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சார்பில், ஸ்டாலின் ... |
| கைதிகளின் அருவருக்கத்தக்க செயல்கள்: பெண் போலீசாருக்கு நேர்ந்திடும் துயரம் Posted: மதுரை: தமிழக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்காக கைதிகளை அழைத்து செல்லும், பெண் போலீசார் படும்பாடு சொல்லி மாளாது. 'சொன்னால் வெட்கம்; சொல்லா விட்டால் துக்கம்' என நொந்து கொள்கின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை, அவர்களின் வழக்கு விசாரணைக்காக, பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். இப்பணிக்கு ஆயுதப்படை மற்றும் சிறப்புகாவல்படை பெண் போலீசார் நியமிக்கப்படுகின்றனர். |
| காந்தியின் கொள்கை: மோடி புகழாரம் Posted: புதுடில்லி,:''இன்றைய சூழலுக்கு, காந்திஜி கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் இன்றியமையாதவையாக உள்ளன,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின், 70ம் ஆண்டு விழா, ஐ.நா., தினமாக, நேற்று, உலகளவில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி:ஐ.நா., நாளில் அனைவருக்கும் என் வாழ்த்துகள். உலகில், அமைதி தழைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் ஐ.நா., சபை, மனிதநேய சேவையில், 70 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. காந்திஜியின் கொள்கைகளும், அவரது வழிகாட்டுதல்களும் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமாக உள்ளன. அவை, ஐ.நா., சபையின் ... |
| இந்திய ராணுவ நிலைகள் மீது பாக்., தாக்குதல்: வழக்கமான பதில் தருகிறார் காஷ்மீர் முதல்வர் Posted: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இரு நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில், ஒருவர் பலியானார்; இருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக, அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீது முதல்வராக உள்ளார்.இங்குள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ராணுவத்தினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப் ... |
| கையிழந்த தமிழக பெண்: பிரதமருக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை:'சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள, வேலுாரைச் சேர்ந்த கஸ்துாரியை, பாதுகாப்புடன் தமிழகம் அழைத்து வர வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று கடிதம் எழுதி உள்ளார்.கடித விவரம்:வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி முனிரத்னம். வறுமையில் உள்ள குடும்பத்தை காப்பாற்ற, வீட்டு வேலைக்காக, சவுதி அரேபியா சென்றார். அங்கு, வீட்டு முதலாளிகளால், அவர் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து, வெளியுறவுத் துறையின் கவனத்துக்கு, தமிழக அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். 'கஸ்துாரி மனநலம் சரியில்லாதவர்' என, சவுதி அரேபிய போலீசார் வழக்கு பதிவு ... |
| அ.தி.மு.க.,வை வீழ்த்துவேன்: தர்மபுரியில் விஜயகாந்த் சபதம் Posted: தர்மபுரி: ''அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், எப்பாடு பட்டாவது அ.தி.மு.க,வை வீழ்த்துவேன்,'' என, விஜயகாந்த் பேசினார். தர்மபுரியில், நேற்று இரவு தே.மு.தி.க., சார்பாக, மக்களுக்காக, மக்கள் பணி விழா, மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தமிழகத்தில் பருப்பு விலை உயர்வால், இட்லி, சாம்பார் என்பதை மக்கள் மறந்து விட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் பருப்பு கடத்தும் நிலையும், இதனால் கைது செய்யப்படும் சம்பவமும் நடக்கிறது. தமிழகத்தில் ... |
| Posted: புதுடில்லி: டில்லிக்கு அருகே உள்ள அரியானாவின் ஒரு கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில், தலித் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அரியானாவில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. உடனே, எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்த தலித் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, அந்த கிராமத்திற்குச் சென்றனர்; ராகுலும் சென்றார். 'பத்திரிகையில் போட்டோ வரும் என்பதற்காக இங்கு வந்தீர்களா?' என, ஒரு பத்திரிகையாளர் கேட்க, சூடாகி விட்டார் ராகுல். 'மோடி ஆட்சியில் மக்கள் கொல்லப்படுகின்றனர்; என்னைப் பார்த்து போட்டோ எடுத்துக் கொள்ள வந்தீர்களா என கேட்கிறீர்களே?' என, பொரிந்து தள்ளி விட்டார் ராகுல். இந்த ... |
| துவரம் பருப்பு வாங்க முன்பதிவு அவசியம்: கூட்டுறவு கடைகளில் கிலோ ரூ.110க்கு விற்பனை Posted: தமிழக அரசு சார்பில், கிலோ, 110 ரூபாய் என, நவ., 1 முதல் விற்பனை செய்யப்பட உள்ள துவரம் பருப்புக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ' ஒருவருக்கு அதிகபட்சமாக, இரண்டு கிலோ மட்டும் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது; இதனால், பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. தமிழக அரசு விடுத்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு, தமிழகத்திற்கு, 500 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பருப்பு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, அரைகிலோ, 55 ரூபாய்; ஒரு கிலோ, 110 ... |
| மந்திரவாதியிடம் நிதிஷ் ஆசி: வீடியோவால் பரபரப்பு Posted: பாட்னா: மந்திரவாதியிடம், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், ஆசி பெறும், வீடியோ காட்சி, இணையதளங்களில் வெளியானதால்,பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.பீஹார் சட்டசபைக்கு, ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்டம் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாம் கட்ட ஓட்டுப் பதிவு, ௨8ல், நடக்கிறது. இந்நிலையில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், மந்திரவாதி ஒருவரிடம், ஆசிபெறும் காட்சி பதிவான வீடியோவை, சமூக இணையதளங்களில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச்சேர்ந்தவருமான கிரிராஜ் சிங் வெளியிட்டுள்ளார்.வீடியோவில், நிதிஷை கட்டியணைத்து ஆசிர்வதிக்கிறார் ... |
| 'தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது': சித்தராமையா Posted: பெங்களூரு: "தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது. இந்த விஷயத்தில், சட்டப் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்," என, கர்நாடகா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறினார். காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டுமென்று தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, மைசூருவில், முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகா அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. வறட்சி நிலவுகிறது. ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் திறந்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 25,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |