Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


டி.வி. பார்க்காம இருக்க முடியுமா..!

Posted: 24 Oct 2015 12:28 PM PDT

டி.வி. பார்க்காம இருக்க முடியுமா..!

பணியின்போது உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா

Posted: 24 Oct 2015 12:23 PM PDT

பணியின் போது உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜெயக்குமாரின் சகோதரர் திமுகவில் இணைந்தார்

Posted: 24 Oct 2015 12:22 PM PDT

அதிமுக எம்எல்ஏவும், சட்டப் பேரவை முன்னாள் தலைவருமான டி.ஜெயக்குமாரின் இளைய சகோதரர் சாந்தகுமார் தனது குடும்பத்தினருடன் திமுகவில் இணைந்தார்.

சட்டப் பேரவைத் தேர்தல் பணி திமுக பொறுப்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted: 24 Oct 2015 12:21 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, திமுகவில் நியமிக்கப்பட்டுள்ள 32 மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கவிக்கோவின் இரு நாள் பவள விழா: சென்னையில் நாளை தொடக்கம்:கருணாநிதி, ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

Posted: 24 Oct 2015 12:20 PM PDT

கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா ஆகியன சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (அக். 26) தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன.

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 12:19 PM PDT

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

லாரி கவிழ்ந்து விபத்து :ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் சேதம்

Posted: 24 Oct 2015 12:19 PM PDT

விழுப்புரம் மாவட்டம், செங்குறிச்சி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மோடி இரட்டை வேடம்:நாராயணசாமி குற்றச்சாட்டு

Posted: 24 Oct 2015 12:18 PM PDT

இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் வி.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

பருப்பு பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை தேவை:மார்க்சிஸ்ட்- த.மா.கா. வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 12:17 PM PDT

பருப்பு பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட், த.மா.கா. ஆகிய கட்சிகள் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளன.

லாரிகளில் திருட்டைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட்டுக் குழு: லாரி உரிமையாளர்களிடம் விவரம் கோரும் கர்நாடக அரசு

Posted: 24 Oct 2015 12:16 PM PDT

லாரிகளில் திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கூட்டுக் குழு, கர்நாடக மாநிலத்தில் லாரிகளில் தொடர் திருட்டு நடைபெறும் பகுதிகள் குறித்த விவரங்களைக் கோரியுள்ளது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி தெரிவித்தார்.

திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயிலில் பழுது:5 ரயில்கள் தாமதம்

Posted: 24 Oct 2015 12:16 PM PDT

திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு நடு வழியில் நிறுத்தப்பட்டதால், சனிக்கிழமை நெல்லை, பாண்டியன் உள்பட 5 விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சந்தன மரக் கடத்தல் கும்பல் தலைமறைவு:தனிப்படை போலீஸார் கேரளம் சென்றனர்

Posted: 24 Oct 2015 12:15 PM PDT

கோவையில் கைது செய்யப்பட்ட சந்தன மரக் கடத்தல் கும்பலின் தலைவனைத் தேடி தனிப்படை போலீஸார் கேரளத்துக்குச் சென்றுள்ளனர்.

திருமூலரின் அறிவியல் சிந்தனை!

Posted: 24 Oct 2015 12:15 PM PDT

திருமூலரின் பாடல்களில் அறிவியல் கருத்துகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றிரண்டைக் காண்போம். மனித உயிர், கருவில் தோன்றுகிறது. இதற்குக் குரோமோசோம்கள் காரணம் என்று இன்றைய அறிவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

"தமிழ்' காட்டும் உணர்வு!

Posted: 24 Oct 2015 12:14 PM PDT

"தமிழ்' என்ற சொல்லின் பொருள் அடியாகவும், அதையொட்டிப் பிறந்த சொற்கள் அடியாகவும் புலப்படும் உணர்வு அறியத் தகுந்தது.

இம்மை அருளும் அரங்கத் தமிழ்!

Posted: 24 Oct 2015 12:13 PM PDT

திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமிழில் ஆயிரமாயிரமாகப் பாடல்கள் பாடிய பெருமைக்குரியவர். ஞாயிறு ஆயிரம், கணபதி ஆயிரம், திருவரங்கத் திருவாயிரம், தில்லைத் திருவாயிரம், பழநித் திருவாயிரம் எனப் பாடிய ஆயிரத் தொகுப்பில் திருவரங்கத் திருவாயிரத்தில் உள்ள ஒரு பாடலைக் காண்போம்.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 24 Oct 2015 12:13 PM PDT

பவளவிழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் 67, 68, 70 ஆகிய மூன்று குறள்களும் நினைவுக்கு வரும். இரண்டு மாதங்களுக்கு முன்னால் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த

சொல் தேடல் - 31

Posted: 24 Oct 2015 12:12 PM PDT

அரும்பு மலராகிக் காயாகிக் கனியாகி உதிர்வது இயற்கையின் நியதி. அதுபோல மனிதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முதிர்ந்து விழுவது அடுக்கும். ஆனால், அரும்புகள் சிதைவது சரியா? செங்காய்கள் அடிபட்டு வீழ்வது முறையா?

சவூதியில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் நாடு திரும்ப நடவடிக்கை வேண்டும்:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Posted: 24 Oct 2015 12:05 PM PDT

சவூதியில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

காந்திய சித்தாந்தங்கள் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானவை

Posted: 24 Oct 2015 12:04 PM PDT

காந்திய சித்தாந்தங்களும், மகாத்மா காந்தி காட்டிய பாதையும் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினத்தையொட்டி, வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராமர் பாலத்துக்கு பாதிப்பின்றி சேது சமுத்திரத் திட்டம்:மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 24 Oct 2015 12:04 PM PDT

நீதிமன்றத்தில் உள்ள சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டவுடன் ராமர் பாலத்துக்கு எந்தவித பாதிப்புமின்றி சேது சமுத்திரத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

மருது பாண்டியர் சகோதரர்களின் தியாகத்தைப் புறம் தள்ளக் கூடாது:தருண் விஜய் எம்.பி. வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 12:03 PM PDT

நம் நாட்டுக்காக போராடிய மருது பாண்டியர் சகோதரர்களின் தியாகத்தைப் புறம் தள்ளக் கூடாது என்று உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில் புதிய நடைமுறை:தகவல் ஆணையம் நடவடிக்கை

Posted: 24 Oct 2015 12:02 PM PDT

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது.

போர்க்குற்றம் குறித்து முற்றிலும் உள்நாட்டு விசாரணை:இலங்கை அரசு தகவல்

Posted: 24 Oct 2015 12:01 PM PDT

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முற்றிலும் உள்நாட்டு அமைப்பு மூலமே விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பில் பாகுபாடு வேண்டாம்:நவாஸ் ஷெரீஃபிடம் ஒபாமா வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 12:01 PM PDT

பயங்கரவாத இயக்கங்களை எதிர்ப்பதில் பாகுபாடு காட்ட வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உடனடி சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 12:01 PM PDT

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சீக்கியர் புனித நூல் அவமதிப்பு விவகாரம்:போலீஸாரின் தாக்குதலுக்கு கேஜரிவால் கண்டனம்

Posted: 24 Oct 2015 12:00 PM PDT

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது அண்மையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்தார்.

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 11:59 AM PDT

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும், அகிம்சை கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

ஹரியாணா: தலித் இளைஞர் சாவு குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைப்பு

Posted: 24 Oct 2015 11:58 AM PDT

ஹரியாணா மாநிலம், கோஹானாவில் போலீஸ் காவலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

முசாஃபர்நகர் கலவரம்:மத்திய அமைச்சருக்கு எதிராக வாரண்ட்

Posted: 24 Oct 2015 11:58 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியான், பாஜக எம்.பி. பார்தேந்து சிங், எம்எல்ஏ சுரேஷ் ராணா, சாத்வி பிராச்சி உள்ளிட்டோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணையை உள்ளூர்

காஷ்மீர்: ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் குண்டுவீச்சு:இந்தியா பதிலடி

Posted: 24 Oct 2015 11:58 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 9 நிலைகள், கிராமப் பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

பிகார்: மூன்றாவது அணியில் மீண்டும் பிளவு

Posted: 24 Oct 2015 11:57 AM PDT

பிகார் மாநிலத்தில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்த சமரச சமாஜ் கட்சி (எஸ்.எஸ்.பி.) அதிலிருந்து விலகுவதாகவும், பிகார் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு இனிமேல் ஆதரவளிப்பதாகவும் அக் கட்சியின் தலைவர் நாகமணி தெரிவித்தார்.

மோடியின் புகழால்தான் பாஜக இயங்குகிறது:சிவசேனை விமர்சனம்

Posted: 24 Oct 2015 11:56 AM PDT

"பாஜகவுக்கு நரேந்திர மோடியின் மூலம் ஆட்சி-அதிகாரம் என்ற பிராணவாயு கிடைத்திருக்கிறது; மக்களிடையே செல்வாக்கு நீடிக்கும் வரையில் அந்த பிராணவாயு நிலைத்திருக்கும்' என்று கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.

முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நடனக் குழுவுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு

Posted: 24 Oct 2015 11:56 AM PDT

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக அரசு ஊழியர்கள் அடங்கிய நடனக் குழுவுக்கு மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டது குறித்து வெளியாகியுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.

மாந்திரீகரைச் சந்தித்த நிதீஷ் குமார்:விடியோவால் புதிய சர்ச்சை

Posted: 24 Oct 2015 11:55 AM PDT

மாந்திரீகருடன் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவருமான நிதீஷ் குமார் இருக்கும் விடியோ வெளியாகியிருப்பதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்?இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று இறுதி மோதல்

Posted: 24 Oct 2015 11:54 AM PDT

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசிப் போட்டி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து:புணேவை வீழ்த்தியது சென்னை

Posted: 24 Oct 2015 11:54 AM PDT

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் புணே அணியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.

மதுரையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி:250 வீரர்கள் பங்கேற்பு

Posted: 24 Oct 2015 11:53 AM PDT

மதுரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

9, 000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர்:டெஸ்ட் கிரிக்கெட்டில் யூனிஸ்கான் புதிய சாதனை

Posted: 24 Oct 2015 11:52 AM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை யூனிஸ்கான் நிகழ்த்தியுள்ளார்.

ரஞ்சி: கம்பீர் - திவாரி வாக்குவாதம்

Posted: 24 Oct 2015 11:52 AM PDT

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கௌதம் கம்பீரும், மனோஜ் திவாரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் மீதான தடை நீக்கம்

Posted: 24 Oct 2015 11:51 AM PDT

இந்திய ஹாக்கி அணியில் சக வீரர்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றதாக கூறி குர்பஜ் சிங் மீது விதிக்கப்பட்ட தடையை ஹாக்கி இந்திய அமைப்பு நீக்கியுள்ளது.

மேற்கிந்தியத் தீவில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்

Posted: 24 Oct 2015 11:50 AM PDT

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

மே.இ.தீவுகளுக்கு 224 ரன்கள் இலக்கு

Posted: 24 Oct 2015 11:50 AM PDT

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலத் தீவு துணை அதிபர் கைது: அதிபரைக் கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு

Posted: 24 Oct 2015 11:49 AM PDT

மாலத்தீவின் அதிபரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு துணை அதிபர் அகமது அதீப் (33)

ஐ.நா.வில் ஆங்கில உரையாற்றியநவாஸ் ஷெரீஃப் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Posted: 24 Oct 2015 11:48 AM PDT

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் விவாத நிகழ்ச்சியை புறக்கணிக்கிறார் பாபி ஜிண்டால்?

Posted: 24 Oct 2015 11:48 AM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்த பாபி ஜிண்டால், அக்கட்சியின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் மோதல்: துப்பாக்கிச் சூடில் 90 பேர் காயம்

Posted: 24 Oct 2015 11:47 AM PDT

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துடன் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடில் 90 பேர் காயமடைந்தனர்.

திருமணம் செய்ய மறுத்த பெண் தீவைத்து எரிப்பு

Posted: 24 Oct 2015 11:46 AM PDT

பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தீவைத்து எரித்தார். அந்தப் பெண் தீக்காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யேமன் நகரை கைப்பற்ற கடும் சண்டை

Posted: 24 Oct 2015 11:46 AM PDT

யேமனில் முக்கியத்துவம் வாய்ந்த தயீஸ் நகரைக் கைப்பற்ற கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் கடும் சண்டையில் 76 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

வங்கதேசம்: வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி

Posted: 24 Oct 2015 11:46 AM PDT

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய மொஹரம் ஊர்வலத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லாபம் 65 சதவீதம் உயர்வு

Posted: 24 Oct 2015 11:45 AM PDT

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 65 சதவீதம் அதிகரித்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

கன்சாய் நெரோலாக் லாபம் 33 சதவீதம் உயர்வு

Posted: 24 Oct 2015 11:45 AM PDT

பெயின்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கன்சாய் நெரோலாக் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ. 96.88 கோடியை ஈட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஏசியன் பெயின்ட்ஸ் லாபம் ரூ.399 கோடி

Posted: 24 Oct 2015 11:44 AM PDT

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 399 கோடி ஈட்டியிருப்பதாகத் தெரிவித்தது.

சோழமண்டலம் ஃபைனான்ஸ் லாபம் 27% உயர்வு

Posted: 24 Oct 2015 11:44 AM PDT

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 120 கோடி பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

பங்குச் சந்தையில் 4-ஆவது வாரமாக முன்னேற்றம்

Posted: 24 Oct 2015 11:44 AM PDT

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது வாரமாக முன்னேற்ற நிலை காணப்பட்டது.

மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி

Posted: 24 Oct 2015 11:42 AM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 214}ஆவது நினைவு நாள் விழா அரசு சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில்,தமிழக அமைச்சர்கள், அனைத்துக்கட்சியினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்:சென்னையில் இன்று நடக்கிறது

Posted: 24 Oct 2015 11:42 AM PDT

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

Posted: 24 Oct 2015 11:41 AM PDT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

அக்.27-இல் பலத்த காற்று:மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted: 24 Oct 2015 11:41 AM PDT

கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 27-இல் பலத்த காற்று வீசக் கூடும். இதனால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகுதி 16 – திருப்பொன்னூசல் -1

Posted: 24 Oct 2015 11:30 AM PDT

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

பகுதி - 39

Posted: 24 Oct 2015 11:30 AM PDT

ஆதி சேடனுடைய ஆயிரம் தலைகளில் பொருந்தியுள்ள மகுடங்க(ளின் மேல்),

இந்த நாளில் அன்று - (25.10.1970) - நாட்டில் நல்லாட்சி நிலவ நாடு முழுவதும் ராஷ்டிரபதி ஆட்சி ஏற்படுத்த வேண்டும் - ஜெனரல் கரியப்பா யோசனை

Posted: 24 Oct 2015 11:30 AM PDT

நாடு முழுவதும் ராஷ்டிரபதி ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்; சட்டச் சீர்குலைவும் அராஜகமும் நிலவும் ராஜ்ஜியங்களில் ராணுவ சட்டத்தை அமல் நடத்த வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் சேனாதிபதி ஜெனரல் கரியப்பா தெரிவித்தார்.

4. மாசில் வீணையும் - பாடல் 1

Posted: 24 Oct 2015 11:30 AM PDT

அப்பர் பிரானின் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த சூலை நோயினை அவருக்கு அளித்து சிவபெருமான் அவரை ஆட்கொண்டதையும்,

நல்ல சேவைத் திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மனதில் முதல்வர் இடம் பிடித்துள்ளார்: ஓ.பன்னீர் செல்வம்

Posted: 24 Oct 2015 10:31 AM PDT

நல்ல சேவைகள் திட்டங்கள் மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதால், 2016 -ல்  நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் கோட்டையைப் பிடிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்தியாவில் நடக்கும் மத வன்முறைகள் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது: கவிஞர் குல்சார்

Posted: 24 Oct 2015 09:27 AM PDT

நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது என்று மத வன்முறைகள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் குல்சார் வருத்தம் தெரிவித்துள்ளளார்.

13 மாநிலங்களில் பதுக்கி வைத்திருந்த 75 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல்

Posted: 24 Oct 2015 09:21 AM PDT

13 மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வி.கே. சிங் மீது வழக்கு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

Posted: 24 Oct 2015 08:26 AM PDT

ஹரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் 2 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் மீது

வங்கதேச குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Posted: 24 Oct 2015 08:20 AM PDT

வங்கதேசத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தில்லி மாநகராட்சிகளுக்கு கூடுதல் நிதி: மணீஷ் சிசோடியா பெருமிதம்

Posted: 24 Oct 2015 08:12 AM PDT

தில்லி மாநகராட்சி நிர்வாகங்களுக்கு, மத்திய அரசைவிட மாநில அரசு கூடுதல் நிதியை அளித்துள்ளது என்று தில்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வி.கே. சிங்கைக் கண்டித்து போராட்டம்: இளைஞர் இயக்கத்தினர் கைது

Posted: 24 Oct 2015 08:09 AM PDT

தலித்களுக்கு எதிராக கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மின்சார வாரிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 24 Oct 2015 08:06 AM PDT

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Posted: 24 Oct 2015 08:02 AM PDT

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் மீதான தடை நீக்கம்

Posted: 24 Oct 2015 08:00 AM PDT

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் மீதான தடையை ஹாக்கி இந்தியா அமைப்பு நீக்கிக் கொண்டுள்ளது.

திருத்தணி பகுதியில் மர்மக் காய்ச்சல்: 200 மருத்துவமனையில் அனுமதி

Posted: 24 Oct 2015 07:56 AM PDT

திருத்தணி, சுற்றுப்புற கிராமங்களில் மர்ம காய்ச்சலால் பாதிகப்பட்ட 200 க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வி.கே. சிங் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted: 24 Oct 2015 07:54 AM PDT

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விகே சிங் பேச்சுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாகாத்மா காந்தியின் கொள்கைகளை ஐநா செயல்படுத்துகிறது: மோடி புகழாரம்

Posted: 24 Oct 2015 07:39 AM PDT

ஐக்கிய நாடுகள் சபை தனது 70 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 24 Oct 2015 07:19 AM PDT

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் தமிழக பெண் கைவெட்டப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 24 Oct 2015 07:09 AM PDT

சவூதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் கை வெட்டப்பட்ட விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் சாந்தகுமார்

Posted: 24 Oct 2015 07:01 AM PDT

ராயபுரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் சாந்தகுமார் தனது குடும்பத்தினருடன் திமுகவில் இணைந்தார்.

வேதாரண்யம் அருகே வி.கே.சிங் மீது காவல் நிலையத்தில் புகார்

Posted: 24 Oct 2015 06:50 AM PDT

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் மீது வழக்கு

காதலிக்க மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை: இளைஞர் கைது

Posted: 24 Oct 2015 06:48 AM PDT

விழுப்புரம் அருகே தன்னை காதலிக்க வேண்டும் என இளைஞர் மிரட்டியதால், மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் காயம்

Posted: 24 Oct 2015 06:46 AM PDT

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.

இலவசங்களை வாரி வழங்கி மக்களை வாக்கு வங்கியாகவே வைத்துள்ளது அரசுகள்: ஆர்.சி.பால்கனகராஜ்

Posted: 24 Oct 2015 06:44 AM PDT

கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இலவசங்களை வாரி வழங்கி மக்களை வாக்கு வங்கியாகவே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்போராட்டம் நடத்தப்படும்: சித்தராமையா

Posted: 24 Oct 2015 06:42 AM PDT

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பாலியல் புகார்: ஆசாராம் பாபு வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்

Posted: 24 Oct 2015 05:55 AM PDT

ஆசாராம் பாபுக்கு எதிரான சாட்சிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. 

போர் விமானங்களில் பெண்களை ஈடுபடுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Posted: 24 Oct 2015 05:36 AM PDT

இந்திய போர் விமானங்களில் பெண்களை பணியில் அமர்த்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆழிதேர் வெள்ளோட்டத்தையொட்டி திருவாரூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

Posted: 24 Oct 2015 05:21 AM PDT

திருவாரூரில் நாளை (அக்.26) நடைபெறவுள்ள ஆழித்தேர் வெள்ளோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்

Posted: 24 Oct 2015 05:17 AM PDT

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அமராவதி பகுதி பல்லவர் ஆட்சி காலத்தில் தலைநகராகத் திகழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

மூளைப் புற்றுநோய் பாதித்த சிறுவனுக்காக அக்டோபரில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நகரம்

Posted: 24 Oct 2015 04:57 AM PDT

கனடாவின் ஆண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த செயின்ட் ஜார்ஜ் நகர மக்கள், புற்றுநோய் பாதித்த சிறுவனுக்காக இன்றே கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

மந்திரவாதியை சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார்: சர்ச்சையை கிளப்பிய விடியோ

Posted: 24 Oct 2015 04:32 AM PDT

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மந்திரவாதி ஒருவரை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்திருப்பதும், மந்திரவாதி, நிதிஷை

மெக்சிகோவை மிரட்டுகிறது பாட்ரீசியா புயல்

Posted: 24 Oct 2015 04:09 AM PDT

இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் பாட்ரீசியா புயல் மெக்சிகோவை எந்த நேரத்திலும் தாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக அரசைக்குறை கூற திமுகவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted: 24 Oct 2015 04:03 AM PDT

அதிமுக அரசைக்குறை கூறுவதற்கு திமுகவுக்கு எந்தவிதத்தகுதியும் கிடையாது என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

தகவல்கள்...

Posted: 24 Oct 2015 04:00 AM PDT

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி ஒரு முறை விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் பாதுகாப்பு பெல்டை அணியவில்லை

சென்னைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உளவுத் துறை எச்சரிக்கை

Posted: 24 Oct 2015 03:58 AM PDT

சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருவூலம் சென்னை மெட்ரோ!

Posted: 24 Oct 2015 03:53 AM PDT

சென்னை நகருக்கு 2015இல் இரண்டு பெருமைகள்! சென்னை பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்தியாவின் 50,000வது இரயில் பெட்டி தயாராகியது!

குறள் பாட்டு

Posted: 24 Oct 2015 03:31 AM PDT

நாட்டுக்கு எதிர்பாரத செலவுகள் ஏற்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்

பொன்மொழிகள்

Posted: 24 Oct 2015 03:29 AM PDT

எல்லா மனிதரிடத்திலும் இறைவன் இருக்கிறான்! ஆனால் இறைவனிடம் எல்லா மனிதர்களும் இல்லை!

முத்துக் கதை: உழைப்பே  உயர்வு!

Posted: 24 Oct 2015 03:27 AM PDT

ஒரு முறை நபிகள் நாயகத்திடம் இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டான். அண்ணலார் அவனை  ஏறிட்டுப் பார்த்தார். அவனோ நல்ல உடல் கட்டோடு திகழ்ந்தான்.

கதைப்பாடல்: நூல் காக்க!

Posted: 24 Oct 2015 03:17 AM PDT

படிப்பது சுகம் என நினைப்பார் -அவரைத் தடுத்து நிறுத்த முடியாது;

கதைப்பாடல்: கலைமகள் விழா!

Posted: 24 Oct 2015 03:15 AM PDT

உழைப்புக்கும் உய்வுக்கும் உயர்வினுக்கு

கதைப்பாடல்: நான் யார்?

Posted: 24 Oct 2015 03:12 AM PDT

கண்ணால் காண முடியாது! கையால் பிடிக்க முடியாது!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™