Tamil News | Online Tamil News |
- முறைகேடு செய்யவில்லை: மன்மோகன்
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை
- பயங்கரவாதத்திற்கு இந்தியா ஆதரவாம்: ஐ.நா.,வில் பாகிஸ்தான் அபாண்டம்
- சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இந்தியா காரணமில்லை: பாதிப்பை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தயார்
- ஜெ., அலைபேசி எண் என்ன ஸ்டாலின் கேள்வி
- 'போர்க்குற்ற விசாரணை சந்தேகத்துக்கு இடமளிக்கும்'
- ஐ.நா., தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது: ஜெயலலிதா ஆதங்கம்
- மீண்டும் மின் தடை அமல்படுத்தப்படுமா?
- தமிழகத்தில் 'முத்ரா' வங்கி மூலம் ரூ.2,500 கோடி கடன்: சிறு தொழில்கள் விரைவில் புத்துயிர் பெறும்
- மாயாவதியிடம் சி.பி.ஐ., விசாரணை
| முறைகேடு செய்யவில்லை: மன்மோகன் Posted: புதுடில்லி:'பிர்லா நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கத்தை கொடுக்க வேண்டும் என, யாரையும் நான் வற்புறுத்தவில்லை. இந்த விஷயத்தில், பிர்லா நிறுவனத்திற்கு நான் எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை; எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கவில்லை' என, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், சி.பி.ஐ.,க்கு தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை Posted: 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும், பொதுமக்களை அடித்து, துன்புறுத்தி வருவதை காட்டும், 'வீடியோ' காட்சிகள், உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றன' என, இந்தியா தெரிவித்து உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அருகில் உள்ள, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள், பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, அந்த பகுதி மக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.இதை, ரகசியமாக படம் பிடித்த சிலர், இணையதளங்களில் ... |
| பயங்கரவாதத்திற்கு இந்தியா ஆதரவாம்: ஐ.நா.,வில் பாகிஸ்தான் அபாண்டம் Posted: நியூயார்க்,:'பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை, இந்தியா துாண்டி விடுகிறது' என, பாக்., பிரதிநிதி, மலிஹா லோதி, ஐ.நா.,வில் தெரிவித்து உள்ளார். ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார்.அப்போது, அவர் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான, 4 அம்ச திட்டங்களை பரிந்துரைத்தார். அவற்றை நிராகரித்த, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'பயங்கர வாதத்தை பாகிஸ்தான் கைவிட்டாலே போதும்; பேச்சு நடத்தி அமைதிக்கு தீர்வு காணலாம்' என, தெரிவித்தார்.இதையடுத்து, 'பதில் அளிக்கும் உரிமை' என்ற விதியை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதி நிதி மலிஹா ... |
| சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இந்தியா காரணமில்லை: பாதிப்பை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தயார் Posted: குந்தி: ''உலகின் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு இந்தியா எந்த விதத்திலும் காரணமாக இருந்தது இல்லை என்பதை, 125 கோடி இந்திய மக்களின் சார்பாக, உலக நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதில் இந்தியா தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில், விரைவில், உலகின் காலநிலை மாறுபாடு குறித்த, சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. அதில், சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதன் மூலம், காலநிலை மாறுபாட்டை சரி செய்யலாம் என, உலக நாடுகள் விவாதிக்க உள்ளன.குறிப்பாக, வளர்ந்த ... |
| ஜெ., அலைபேசி எண் என்ன ஸ்டாலின் கேள்வி Posted: திருச்சி: ''மக்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்து வருகிறேன்; ஆனால், தமிழக முதல்வர் சிறுதாவூரில் ஓய்வு எடுத்து வருகிறார்,'' என, ஸ்டாலின் பேசினார்.'நமக்கு நாமே' என்ற பெயரில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளில் நேற்று பயணம் செய்தார்.அதில், ஸ்டாலின் பேசியதாவது:நான்கரை ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அ.தி.மு.க., ஆட்சி, இப்போது கோமா நிலைக்கு சென்றுள்ளது.மக்கள் பிரச்னை குறித்து, நான் ஆய்வு ... |
| 'போர்க்குற்ற விசாரணை சந்தேகத்துக்கு இடமளிக்கும்' Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், நிறைவேறி இருக்கும் தீர்மானம் அதிர்ச்சி அளிக்கிறது. அதில், 'போர்க்குற்ற விசாரணையை, இலங்கை அரசு நடத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டிருப்பது, குற்றம் சாட்டப்பட்டவரிடமே, குற்ற விசாரணை அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு சமம். நீதி விசாரணையை, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளை கொண்டு நடத்தினாலும், அவர்கள், இலங்கை அரசின் நேரடி பார்வையில், இலங்கையில் இருந்து கொண்டு விசாரணை நடத்தினாலும், அதன் முடிவு சந்தேகத்துக்கு இடம் ... |
| ஐ.நா., தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது: ஜெயலலிதா ஆதங்கம் Posted: சென்னை,:'ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைக் குழு கூட்டத் தில், இலங்கையில் இணக்கம் மேம்படுத்துதல், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமை ஆகியவை குறித்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது. இலங்கையில், உள்நாட்டுப் போர் நடந்தபோது, போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, இனப் ... |
| மீண்டும் மின் தடை அமல்படுத்தப்படுமா? Posted: தொழிற்சாலைகளுக்கு, உச்சநேர மின் தடை தளர்வு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதால், மீண்டும் மின் தடை அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், வீடு, தொழிற்சாலைகளுக்கு மின் தடை அமல்படுத்தப்பட்டது.சதவீத கணக்குதொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு, உச்ச மின் தேவை உள்ள மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, 90 சதவீதம்; மற்ற நேரங்களில், 40 சதவீதம் மின் தடை அமல்படுத்தப்பட்டது.வல்லூர், மேட்டூர், வடசென்னை, கூடங்குளம் ஆகிய புதிய மின் நிலையங்கள் மூலம், 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைத்தது. ... |
| தமிழகத்தில் 'முத்ரா' வங்கி மூலம் ரூ.2,500 கோடி கடன்: சிறு தொழில்கள் விரைவில் புத்துயிர் பெறும் Posted: தமிழகத்தில் 'முத்ரா' வங்கி மூலம் ரூ.2,500 கோடி கடன்: சிறு தொழில்கள் விரைவில் புத்துயிர் பெறும்'முத்ரா' வங்கி மூலம் தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு, 2,493 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில், சிறு தொழில்களுக்கு புத்துயிர் ஏற்பட்டு உள்ளது.சிறு தொழில்களுக்கு, வங்கிக் கடன் கிடைப்பதில்லை; நாட்டில் உள்ள, 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. வங்கிக்கடன் கிடைக்காததால், தனியார் நிதி நிறுவனங்களை, ... |
| மாயாவதியிடம் சி.பி.ஐ., விசாரணை Posted: புதுடில்லி,: உ.பி.,யில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியிடம், சி.பி.ஐ., நேற்று விசாரணை நடத்தியது. உ.பி.,யில், 2007 - 2012ம் ஆண்டுகளில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த, மாயாவதி முதல்வராக பதவி வகித்தார்.அப்போது, என்.ஆர்.எச்.எம்., எனப்படும், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., 74 முதல் தகவல்அறிக்கைகள், 48 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மாயாவதிக்கு எதிராக, புதிய ஆதாரம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 03,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |