Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திர புதிய தலைநகர் அடிக்கல் நாட்டு விழா: தலைவர்கள் உள்பட 2½ லட்சம் பேருக்கு அழைப்பு- சந்திரபாபுநாயுடு

Posted: 10 Oct 2015 11:20 PM PDT

ஆந்திர மாநில புதிய தலைநகரான அமராவதி அடிக்கல் நாட்டு விழா வருகிற 22–ந்தேதி நடக்கிறது. குண்டூர் அருகே நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய தலைநகருக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவுக்கான அழைப்பிதழ் தயாராகி விட்டது. மொத்தம் 2½ லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார்.

சித்தூர் அருகே பஸ்சில் செம்மரம் வெட்ட சென்ற 89 பேர் கைது சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்

Posted: 10 Oct 2015 11:06 PM PDT

சித்தூரில் இருந்து கர்நாடக அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் பாக்ராபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், சித்தூர் அடுத்த பாகாலா அருகே உள்ள நேன்றகுண்டா என்ற இடத்தில் சென்றபோது, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல்: இதுவரை 16 கோடி ரூபாய் பறிமுதல்

Posted: 10 Oct 2015 10:54 PM PDT

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, முதல்கட்டமாக நாளை 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. லக்கிசராய், பகல்பூர், முங்கர் உட்பட 10 மாவட்டங்களிலுள்ள இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 54 பெண்கள் உட்பட 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையொட்டி, பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட

5–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டியை பார்த்து கண் கலங்கிய தாய் விஜயலட்சுமி

Posted: 10 Oct 2015 10:49 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். குண்டூர் மாவட்டம் நல்லாபாகி என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய அவரது உண்ணாவிரத போராட்டம் இன்று 5–வது நாளாக நீடிக்கிறது.

ஆந்திராவில் பரவும் பன்றி காய்ச்சல்: 11 பேர் பலி

Posted: 10 Oct 2015 10:29 PM PDT

ஆந்திராவில் மன்னம் காட்டு பகுதியில் மலேரியா, மற்றும் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி

ஜார்கண்டில் 2 போலீசார் சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

Posted: 10 Oct 2015 07:38 PM PDT

ஜார்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள காத்ரிடிக் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உள்ளூர் போலீசாரும் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியில் நேற்று ரோந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்டேன்: பதவி பறிக்கப்பட்ட டெல்லி மந்திரி தகவல்

Posted: 10 Oct 2015 07:14 PM PDT

டெல்லி மாநில சுற்றுச்சூழல் மற்றும் உணவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஆசிம் அகமது கான். இவர் தனது தொகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்காக, அதன் உரிமையாளரிடம் இருந்து ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது குறித்த ஒலி நாடா (ஆடியோ டேப்) உள்ளிட்ட ஆதாரங்கள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது.

சாலைப்பணிக்கு லஞ்சம்: பீகார் முன்னாள் கவர்னரின் மகள் கைது

Posted: 10 Oct 2015 05:08 PM PDT

பீகார் மற்றும் திரிபுரா மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் தேவானந்த கொன்வர். இவரது மகள் நந்திதா கொன்வர். சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், அசாமின் காம்ரப் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிக்கு திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

வனப்பகுதியில் இருந்து வெளியேற விடாமல் காட்டு யானைகளை தடுக்க புதிய திட்டம்

Posted: 10 Oct 2015 04:01 PM PDT

கர்நாடகம்- கேரள மாநில எல்லையில் மேற்குதொடர்ச்சி மலைச்சாரலில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் எப்போதும் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இந்த தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப இங்கு காபி, குருமிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பா.ஜனதா மாநில தலைவர் பதவி வழங்கினால் ஏற்க தயார்: எடியூரப்பா பேட்டி

Posted: 10 Oct 2015 11:02 AM PDT

பா.ஜனதா மாநில தலைவர் பதவி வழங்கினால் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று எடியூரப்பா கூறினார். பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் எடியூரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜனதா மாநில தலைவர் பதவியை எனக்கு வழங்கினால் அதை ஏற்க தயாராக உள்ளேன். இது மட்டுமல்ல, வேறு எந்த பதவி வழங்கினாலும்

பீகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

Posted: 10 Oct 2015 08:58 AM PDT

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 12, 16, 28, நவம்பர் 1, 5-ந்தேதிகளில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி

துருக்கி குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு: இந்திய பிரதமர் மோடி கவலை

Posted: 10 Oct 2015 07:55 AM PDT

அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், 86 பேர் பலியாகி உள்ளனர். 186 பேர் காயமடைந்துள்ளனர். அங்காராவின் வரலாற்றில் நடந்த மோசமான தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு

நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை

Posted: 10 Oct 2015 06:41 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மீரட்டின் டி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு நிதின்

ஏர் அரேபியா விமானத்தில் ரூ.93 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 10 Oct 2015 05:46 AM PDT

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து

விஜய் மல்லையா வீடு-அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை

Posted: 10 Oct 2015 04:46 AM PDT

வங்கியில் 900 கோடி ரூபாய் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின்

ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்

Posted: 10 Oct 2015 04:07 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 3 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு

மேற்கு வங்காளத்தில் அசன்சோல், பிதான்நகர் மாநகராட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி

Posted: 10 Oct 2015 03:22 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் மறுசீரமைக்கப்பட்ட அசன்சோல் மாநகராட்சிக்கு உட்பட்ட 106 வார்டுகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பிதான்நகர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வார்டுகளுக்கு கடந்த அக்டோபர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தல் கருதப்பட்டதால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்,

மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீரில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் பெருமளவு வெற்றி

Posted: 10 Oct 2015 03:22 AM PDT

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உதம்பூர் மாவட்டத்தில் இறைச்சிக்காக 3 பசுக்கள் கொல்லப்பட்டதற்கும், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் அளித்த மாட்டிறைச்சி விருந்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு

சாகித்ய அகாடமி விருதை கேரள எழுத்தாளர் சாரா ஜோசப்பும் திருப்பி அளிக்கிறார்

Posted: 10 Oct 2015 02:58 AM PDT

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் சுதந்திரமின்மை நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள கேரள எழுத்தாளர் சாரா ஜோசப் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் எழுத்தாளர் கல்பர்கி கொலை செய்யப்பட்டது மற்றும் உத்தரபிரதேச தாத்ரியில் கும்பல் ஒன்றால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சாரா ஜோசப்,

காஷ்மீரில் பெட்ரோல் குண்டு வீச்சில் 3 பேர் காயம்

Posted: 10 Oct 2015 01:52 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஜம்மு– ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு உதம்பூர் மாவட்டத்தில் சிலர் லாரியை நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளே பெட்ரோல் குண்டு வீசினர். இதில் டிரைவர், கிளீனர், ஒரு போலீஸ்காரர் ஆகிய 3 பேர் பலத்த தீக்காயம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™