Tamil Star |
- ஈற்ரோபிக்கோவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து – பாதசாரி பலி
- பாடசாலை பேரூந்து – உந்துருளி மோதி விபத்து
- மிசிசாகா கட்டத் தொகுதியில் பற்றிக்கொண்ட தீ
- வரவு செலவுத் திட்டத்தில் உபரித் தொகையை ஏற்படுத்துதல் என்பதில் மாற்றம் இல்லை – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்
- நடுத்தர வருமானத்தவருக்கான வரிக்குறைப்பே தமது முதலாவது சட்டத் திருத்தம் என்கிறார்
- உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்
- பனிக்காலத்தை நினைக்க வைக்கும் ரொரன்ரோவின் வானிலை சமிக்கைகள்
- இயற்கையின் கொடை “செம்பருத்தி”யின் மருத்துவ பலன்கள்
- கன்னத்தில் அறைந்த மிதிவண்டி ஓட்டுநர் – மோதிவிட்டுச் சென்ற வானம் – காவல்த்துறையினர் வலை வீச்சு
| ஈற்ரோபிக்கோவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து – பாதசாரி பலி Posted: 10 Oct 2015 08:54 PM PDT
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற அந்த விபத்தில் உயிரிழந்த பாதசாரி 20 வயது மதிக்கத் தக்க ஆண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Eglinton அவனியூவிற்க அருகில் Islington அவனியூவின் Deerfoot வீதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
The post ஈற்ரோபிக்கோவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து – பாதசாரி பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாடசாலை பேரூந்து – உந்துருளி மோதி விபத்து Posted: 10 Oct 2015 08:51 PM PDT
Sideவீதி 10 அருகில் Sixth Line பகுதியில் காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுனர் உடனடியாக உலங்குவான்னூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவிருப்பதாக அங்கிருந்த அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். விபத்தை அடுத்து அந்த பகுதி போக்குவரத்திற்க மூடப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. The post பாடசாலை பேரூந்து – உந்துருளி மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா கட்டத் தொகுதியில் பற்றிக்கொண்ட தீ Posted: 10 Oct 2015 07:52 PM PDT
Tomken வீதி மற்றும் Dundas வீதியில் அமைந்த அந்த கட்டடத்தில் அதிகாலை 5 மணியளவில் தீ பற்றிக்கொண்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தீயணைப்புப் படையினரின் தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர், சுமார் 9 மணியளவில் மீண்டும் தீ எரியத் தொடங்கியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ சம்பவம் காரணமாக தீப் பற்றிய இடத்தின் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் அங்கிருந்து முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டிருந்தனர். அத்துடன் இந்த அசம்பாவிதத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எவையும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கட்டத்தின் இரண்டு இடங்களில் ஏற்பட்ட இந்த தீச்சம்பவங்களுக்கு இடையில் தொடர்புள்ளதாக என்பது குறித்து தம்மால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post மிசிசாகா கட்டத் தொகுதியில் பற்றிக்கொண்ட தீ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Oct 2015 11:06 AM PDT
அத்துடன் தமது இந்த திட்டத்தினால் ஏற்கனவே கூறிய வரவு செலவுத் திட்டத்தில் உபரித் தொகையை ஏற்படுத்துதல் என்ற தமது செயற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இது குறித்து பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் விளக்கமளிக்கையில்,ஏனைய கட்சிகளை விடவும் ஒப்பீட்டளவில் அதிக பெறுமானமுள்ள திட்டங்களை பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. வரி அதிகரிப்பினை நிறுத்தும் திட்டதினையும் எமது கட்சி முன்வைத்துள்ளது. எனினும் நாட்டின் வருமானம், அதன் மூலம் ஈடுபடும் வரவு செலவுத்திட்ட உபரித் தொகை எனபவற்றில் மாற்றங்கள் ஏற்படாது. தன்னால் மேற்கொள்ளக் கூடிய சாத்தியப்பட்டுள்ள திட்டங்களையே பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. அதனால் தற்போது அறிவிக்கப்படும்திட்டங்கள் பின்னர் நிறுத்தப்பட மாட்டாது. அத்துடன் குறைந்த அளவு வரி அறவீட்டுடனேயே இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். குறிப்பாக லிபரல் கட்சி முன்வைத்துள்ள திட்டங்களில் இருந்து பழமைவாதக் கட்சி முன்வைத்துள்ள திட்டங்கள் முற்றுமுழுதாக வேறுபட்டது. பழமைவாதக் கட்சியின் திட்டங்களை செயற்படுத்துவதற்கான செலவினை விடவும் லிபரல் கட்சியின் திட்டங்களுக்கான தொகை இருபது சதவீதம் அதிகம் .- என்றா பழமைவாதக் கட்சியின் தலைவரும், கனடியப் பிரதமருமான ஸ்டீபன் ஹார்ப்பர். தற்போதைய கருத்துக் கணிப்புக்கள் புதிய சனநாயகக் கட்சிக்கான ஆதரவு குறைவடைந்து, எதிர்வரும் தேர்தலுக்கான இருமுனைப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். The post வரவு செலவுத் திட்டத்தில் உபரித் தொகையை ஏற்படுத்துதல் என்பதில் மாற்றம் இல்லை – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுத்தர வருமானத்தவருக்கான வரிக்குறைப்பே தமது முதலாவது சட்டத் திருத்தம் என்கிறார் Posted: 10 Oct 2015 10:43 AM PDT
லிபரல் கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுமாக இருந்தால், ஒருசில மாதங்களிலேயே மக்கள் தமது வருமானத்தின் அதிகரிப்பினை கண்கூடாக காண முடியும் எனவும் Justin Trudeau தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு இது குறித்து விளக்கமளிக்கையில்,நடைபெறும் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றில் தனது முதலாவது சட்டதிருத்தமாக நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான வரிக்குறைப்பினை லிபரல் கட்சி அரசாங்கம் முன்வைக்கும். அந்த சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், நடுத்தர வருமானம் பெறும் கனேடியர்கள் உடனடியாகவே தமது மாதாந்த வருமானத்தில் அதிகரிப்பினை காணமுடியும். ஆண்டுக்கு 45,000 இலிருந்து 90,000 வரையில் வருமானம் பெறுவோர் 670 டொலர்கள் வரையில் சேமிக்க முடியும். அத்துடன் இவற்றை விட இன்னமும் பல திட்டங்கள் தயாராக உள்ளன. குறிப்பாக குழந்தைகள் நலத் திட்டமும் தமது அரசாங்கத்தின் திட்டப் படடியலில் முதன்நிலையில் உள்ளது.ஆண்டுக்கு 90,000 வருமானம் பெறும் நான்கு பிள்ளைகளை உடைய குடும்பம் தமது திட்டத்தின் பிரகாரம் சுமார் 2,500 டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும். பழமைவாதக் கட்சியின் திட்டதினை விடவும் அதிக நன்மை பெறும வகையில் தமது இந்த திட்டம் அமையும். - என்றார் லிபரல் கட்சியின் தலைவர் Justin Trudeau. The post நடுத்தர வருமானத்தவருக்கான வரிக்குறைப்பே தமது முதலாவது சட்டத் திருத்தம் என்கிறார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் Posted: 10 Oct 2015 08:44 AM PDT
ஒவ்வொரு சத்தும் ஒவ்வொரு உடல்பாகத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், கீரையில் உள்ள வைட்டமின்கள் கண் சம்மந்தமான நோய்களையும் குணமாக்குகின்றன. மூளை- வால் நட்ஸ் மற்றும் மீன் போன்ற உணவுகள் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள ஒமேகா-3 அமிலம் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. தசைகள்- வாழைப்பழம், முட்டை மற்றும் மீன் உணவுகள் தசைகளை வலுவடையச் செய்கின்றன. மேலும் பால் பொருட்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு சிறந்த உணவாகும். நுரையீரல்- பச்சை காய்கறிகளில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள் நுரையீரலுக்கு அவசியமானது, எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். கண்கள்- மீன், முட்டை, கீரை உணவுகள் கண்களுக்கு வலு சேர்க்கின்றன. இதயம்- ஓட்ஸ், சிட்ரஸ் மற்றும் டார்க் சொக்லேட் போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. The post உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பனிக்காலத்தை நினைக்க வைக்கும் ரொரன்ரோவின் வானிலை சமிக்கைகள் Posted: 10 Oct 2015 08:39 AM PDT
நேற்று இரவு ரொரன்ரோ பெரும்பாகத்தின் வட பிராந்தியங்களில் ஆரம்பநிலை உறைபனி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கனடா சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அறிக்கையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் திணைக்களம் நேற்று மாலை விடுத்திருந்த வானிலை முன்னுரைப்பில்,Newmarket, Georgina, Uxbridge, Beaverton, Northern York மற்றும் Dundasசின் வட பகுதிகளில் நேற்றிரவு உறைபனி ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தது. அத்துடன் இன்று அதிகாலையில் அந்த பகுதிகளில் வெப்பநிலை உறைநிலையினை எட்டக் கூடும் எனவும் அது எதிர்வுகூறியிருந்தது. இவற்றின் காரணமாக உறைபனிக்கு ஒவ்வாத மரங்கள், செடிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு உள்ளே வைத்து பேணுவதற்கான அறிவுறுத்தலையும் கனடா சுற்றுச் சூழல் அமைப்பு பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது. The post பனிக்காலத்தை நினைக்க வைக்கும் ரொரன்ரோவின் வானிலை சமிக்கைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இயற்கையின் கொடை “செம்பருத்தி”யின் மருத்துவ பலன்கள் Posted: 10 Oct 2015 08:35 AM PDT
செம்பருத்தி பூவில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். இந்த பூவின் காய்ந்த மொட்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தல் என்றென்றும் கருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி செம்பருத்தி பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். மேலும் இதன் இலைகளை கொதிக்க வைத்து அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும். The post இயற்கையின் கொடை "செம்பருத்தி"யின் மருத்துவ பலன்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கன்னத்தில் அறைந்த மிதிவண்டி ஓட்டுநர் – மோதிவிட்டுச் சென்ற வானம் – காவல்த்துறையினர் வலை வீச்சு Posted: 10 Oct 2015 08:19 AM PDT
குறித்த வாகனத்தின் அடையாளங்களையும் வெளியிட்டுள்ள அவர்கள், இது தொடர்பில் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஒக்ரோபர் மாதம் 53 வயதுடைய நபர் ஒருவர் College வீதியின் கிழக்குத் தடத்தில் மிதிவண்டி ஓட்டிச் சென்று கொண்டிருந்த வேளையில் அவர் வீதியோரத்தில் நின்ற பாதசாரி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர் அந்த பாதசாரி வாகனம் ஒன்றில் ஏறி குறித்த மிதிவண்டி ஓட்டுனரை பின்தொடர்ந்து அவரை மோதிவிட்டு, சம்பவ இடத்தில் தரிந்து நிற்காது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த வானத்தினதும், அதன் சாரதியினதும் அடையாளங்களை வெளியிட்டு்ள்ள காவல்த்துறையினர், அவர் தொடர்பில் தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த வாகனம் கறுப்பு நிற 2001-2005 BMW ரகத்தைச் சேர்ந்த M3 அல்லது 3 series என்றும், அதன் சாரதி 5 அடி 8 அங்குல உயரமுடைய வெள்ளை இனத்தவர் என்றும், நடுத்தர வாக்கான கட்டுடல் உடையவர் என்றும் விபரித்துள்ளனர். இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-1900 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 416-222-TIPS என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். The post கன்னத்தில் அறைந்த மிதிவண்டி ஓட்டுநர் – மோதிவிட்டுச் சென்ற வானம் – காவல்த்துறையினர் வலை வீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஈற்ரோபிக்கோ பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாதசாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை பேரூந்தும், உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று Beeton பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மிசிசாகாவின் கட்டத் தொகுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலையளவில் இரண்டு வேறுபட்ட இடங்களில் தீ பற்றிக்கொண்டுள்ளது.


உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுஉப்புகள் என அனைத்தும் அவசியமான ஒன்று.
தற்போது ரொரன்ரோவில் நிலவும் வானிலைச் சமிக்கைகள் அங்கு பனிப்பொழிவுக் காலம் ஆரம்பமாவதை அறிவுறுத்துவதாக உள்ளது.
இயற்கையின் கொடையான செம்பருத்தியின் பூக்கள் மற்றும் இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் உடையவை.