Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியைப் போல் பெங்களூரில் கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் கற்பழிப்பு

Posted: 05 Oct 2015 10:37 PM PDT

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை டிரைவர்–கிளீனர் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி கற்பழித்தது. இதில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் தற்போது பெங்களூரில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட

பிரதமர் நரேந்திர மோடி 22–ந்தேதி திருப்பதி வருகிறார்

Posted: 05 Oct 2015 10:28 PM PDT

ஆந்திரா மாநிலத்துக்கான புதிய தலைநகர் 'அமராவதி' குண்டூர் அருகே அமைக்கப்பட உள்ளது. புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 22–ந்தேதி நடக்கிறது. குண்டூர் மாவட்டம் தூளூர் மண்டலம் உத்தண்டராயபாளையத்தில் 22–ந்தேதி மதியம் 12.45 மணிக்கு அடிக்கல் நாடடு விழா நடைபெறுகிறது. முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில்

விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி: வாரணாசியில் கலவரம்- ஊரடங்கு உத்தரவு

Posted: 05 Oct 2015 10:23 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த மாதம் 22–ந்தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்பட்டன. அப்போது சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து வாரணாசியில் சாமியார்களும், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று கண்டன பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருவனந்தபுரம் அருகே ரூ.1½ கோடி சந்தன சிலைகளை பதுக்கிய சிற்பி கைது

Posted: 05 Oct 2015 10:07 PM PDT

திருவனந்தபுரம் அருகே முட்டத்தறை என்ற இடத்தில் சந்தன மர சிற்ப கூடம் நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவரது சிற்ப கூடத்தில் சட்டவிரோதமாக ஏராளமான சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருப்பதியில் பலத்த மழை: மலைப்பாதையில் நிலச்சரிவு - 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு

Posted: 05 Oct 2015 09:54 PM PDT

திருப்பதி கோவில் மலைப்பாதையில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய பெரிய பாறை கள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்திமிக்க கோவிலாகும்.

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

Posted: 05 Oct 2015 09:51 PM PDT

ஹஜ் யாத்திரையின் நிறைவுக்கட்டமாக சவுதி அரேபியா நாட்டிலுள்ள மினா நகரில் கடந்த மாதம் சாத்தான் மீது கல் எறியும் சம்பிரதாயத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தனது 'டுவிட்டர்' பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள

பெரியாறு அணை பாதுகாப்புக்கு கூடுதல் கேரள போலீசார் நியமனம்

Posted: 05 Oct 2015 09:20 PM PDT

பெரியாறு அணையில், ஒரு எஸ்.ஐ. தலைமையில் 22 கேரள போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 5 போலீசாருக்கு தமிழக அரசு சம்பளம் கொடுக்கிறது. கூடுதலாக இன்ஸ்பெக்டர்கள் ரெஜி, ஓமனகுட்டன், முகமது நஷீர்

பில்லி, சூனியம் தடுப்பு சட்டத்தை ராதேமா மீறியதற்கான ஆதாரம் இல்லை

Posted: 05 Oct 2015 08:36 PM PDT

மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பில்லி, சூனியம் தடுப்பு சட்டத்தை பெண் சாமியார் ராதேமா மீறியதற்கான ஆதாரம் இல்லை என்று மும்பை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதேமா, ஆபாச நடவடிக்கையில்

தெலுங்கானா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு

Posted: 05 Oct 2015 08:20 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு விவசாயிகளுக்கான கடன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

அண்ணனைவிட தம்பி ஒரு வயது மூத்தவரா?: சர்ச்சை மன்னர் லல்லு குடும்பத்தில் குழப்பம்

Posted: 05 Oct 2015 08:13 PM PDT

அரசியல் வட்டாரத்தில் 'லொள்ளுத்தனமான' கருத்துகளை உதிர்ப்பதிலும், அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவதிலும் வல்லவராக அறியப்பட்டவர், பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ். இவரது குடும்பத்தில் உள்ளவர்களும் தற்போது லொள்ளுவில் லல்லுவை மிஞ்சியுள்ளனர்.

மேகதாது விவகாரம்: கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்

Posted: 05 Oct 2015 07:51 PM PDT

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-

தாத்ரி படுகொலை போன்ற சம்பவங்களை சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாது, கடும் நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசு

Posted: 05 Oct 2015 05:12 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், தாத்ரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியால், முகமது அக்லாக் என்பவர் கடந்த திங்கட்கிழமை 200 பேர் அடங்கிய கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அக்லாக்கின் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறையில் இந்திராணிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? தீவிர விசாரணையில் போலீஸ்

Posted: 05 Oct 2015 04:16 PM PDT

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் துப்பு துலங்கியது.

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு: மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை

Posted: 05 Oct 2015 03:50 PM PDT

தற்போது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. இதேபோல் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தாங்களாகவே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்கின்றன.

வெளிநாடுகளில் பதுக்கல்: இந்தியர்கள் ஒப்புக்கொண்ட கருப்பு பணம் ரூ.4,147 கோடி

Posted: 05 Oct 2015 02:28 PM PDT

இந்தியர்கள் பலர் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தாங்களாகவே ஒப்புக்கொண்டால் அந்த தொகைக்கு 60 சதவீதம் வரி மட்டும் விதிக்கப்படும், நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவித்தது. இந்த

20 வருடங்களுக்கு முன் திருட்டுபோன பழமையான துர்கா சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு: ஜெர்மனி பிரதமர் வழங்கினார்

Posted: 05 Oct 2015 01:01 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகிஷாசுரமர்தினி அவதாரத்தில் உள்ள துர்கா சிலை 1990-ம் ஆண்டுகளில் திருட்டுபோனது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை தேடிவந்தனர்.

அரசு விளம்பரங்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

Posted: 05 Oct 2015 12:55 PM PDT

பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே 13-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு விளம்பரங்களில் அரசியல்வாதிகளின் படங்களை வெளியிட தடை

வாரணாசியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல்: வாகனங்கள் தீக்கரை - ஊரடங்கு உத்தரவு அமல்

Posted: 05 Oct 2015 10:49 AM PDT

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணாசியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கும் மற்றும் சிலைகளை கங்கையில் கரைப்பதற்கு தடை விதித்ததை கண்டித்து இன்று போராட்டம் நடைபெற்றது.

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: லாரி ஸ்டிரைக் வாபஸ்

Posted: 05 Oct 2015 09:07 AM PDT

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 1-ம் தேதி முதல் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

4 வயது சிறுவனின் வயிற்றில் இறந்துபோன கரு: டாக்டர்கள் அகற்றினர்

Posted: 05 Oct 2015 08:46 AM PDT

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுவனின் வயிற்றில், உயிர்த்துடிப்பற்ற குழந்தையின் கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™