Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


3 பெண்களை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைப்பு

Posted: 05 Oct 2015 09:12 PM PDT

p

pஒட்டாவாவின் மேற்கு பகுதி கிராமம் ஒன்றில் தனது முன்னைய காதலிகளான மூன்று பெண்களை கொலை செய்தார் என்ற குற்ற்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

36 வயதான Anastasia Kuzyk, 48 வயதான Nathalie Warmerdam மற்றும் 66 வயதான Carol Culleton ஆகிய மூன்று பெண்களையும் கொலை செய்ததான முதல்தர கொலைக் குற்றச்சாட்டு 57 வயதான Basil Borutski என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அந்த மூன்று பெண்களின் உடல்களும் சில மணிநேர வித்தியாசத்தில் வெவ்வேறு இடங்களில் கடந்த மாதம் 23ஆம் திகதி மீட்கப்பட்டன.

சம்பவத்தினை அடுத்து Wilno எனப்படும் அந்த கிராமத்தினை சுற்றிவளைத்து தீவிர தேடுதல்களை மேற்கொண்ட காவல்த்துறையினர், சந்தேக நபரை சிலமணி நேரங்களுள் கண்டுபிடித்தனர்.p

The post 3 பெண்களை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Whitby சாலை விபத்து – 4ஆவது நபராக 10 வயது சிறுவன் பலி

Posted: 05 Oct 2015 07:46 PM PDT

g

gகடந்த வெள்ளிக்கிழமை இரவு நெடுஞ்சாலை 401இன் Whitby பகுதியில் சுமார் 20 வானங்கள் மோதிக்கெர்ணட மிக மோசமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக் அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ தினமே 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமுற்று சிகிச்சை பெற்றுவந்த 10 வயது சிறுவன் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 12 வயது சிறுவன் ஒருவரின் தம்பியாரே தற்போது உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

g

3 கனரக பாரவூர்திகள் மற்றும் 17 வானகங்கள் என 20 வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 12 வயது சிறுவன், ஒரு ஆண், ஒரு பெண் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான 10 வயது சிறுவன் தற்போது உயிரிழந்துள்ள நிலையில், இந்த சிறுவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அந்த சிறுவனின் தாயாரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

The post Whitby சாலை விபத்து – 4ஆவது நபராக 10 வயது சிறுவன் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொள்ளையிடப்பட்டு, அடித்து, வாகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட டாக்சி சாரதி

Posted: 05 Oct 2015 07:42 PM PDT

o

oமில்ட்டன் பகுதியில் வாடகை வண்டி சாரதி ஒருவர் இனந்தெரியாத நபரால் கொள்ளையிடப்பட்டதோடு மட்டுமல்லாது கடுமையாக தாக்கப்பட்டு, அவரது வாகனத்திலிருந்தே வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியளவில், Derry வீதி மற்றும் Bronte Street பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வாடகை வாகன சாரதியிடம் கொள்ளையிட்ட இனந்தெரியாத நபர் ஒருவர், சாரதியை மோசமாக தாக்கி அவரை வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு வாகனத்தினை கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் வெள்ளிக்கிழமை மாலை குறித்த அந்த வாடகை வாகனம் மிசிசாகா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹில்ட்டன் பிராந்திய காவல்த்துறையினர், இன்றைய தினம் குறித்த அந்த சந்தேக நபருக்கு எதிராக கைது ஆணையை பிறப்பித்துள்ளனர்.o

நியூ பிறவுன்ஸவிக்கைச் சேர்ந்த 22 வயதான Michael Zachary Condren என சந்தேக நபரின் அடையாளத்தினை வெளியிட்டுள்ள அதிகாரிகள், அவர் மீது கொள்ளை, வாகனத்தினை அபாயகரமாக கையாண்டமை, வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஐந்து அடி 11 அங்குல உயரமும், 175 இறாத்தல் எடையும், மண்ணிற கண்களும், தோள் வரை நீளமான தலைமுடியும் கொண்ட நபர் எனவும், அவரது வலது மணிக்கட்டில் "mind over matter" எனவும், கழுத்தினைச் சுற்றி "MZCH 1983" எனவும் பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Milton, Oakville மற்றும் New Brunswick பகுதிகளில் நடமாடியதாக நம்ப்பபடும் அந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை 905-825-4747 ext. 2450 என்ற இலக்கத்தில் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை 1-800-222-8477 (TIPS) என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கொள்ளையிடப்பட்டு, அடித்து, வாகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட டாக்சி சாரதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Trans-Pacific உடன்பாட்டினை பின்பற்றப் போவதில்லை

Posted: 05 Oct 2015 07:37 PM PDT

r

rபொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் Trans-Pacific உடன்பாட்டினை பின்பற்றப் போவதில்லை - Tom Mulcair

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பெதுத் தேர்தலில் வெற்றிபெற்று தமது கட்சி ஆட்சி அமைக்குமாக இருந்தால், Trans-Pacific என்ற இரகசிய வர்த்தக உடன்பாடடினை பின்பற்றப் போவதில்லை என புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair மேலும் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ஒன்ராறியோ தொகுதிகளில் தீவிரமான பரப்புரைகளை Tom Mulcair நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்திருந்தார்.

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் பழமைவதக் கட்சி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட Tom Mulcair,Trans-Pacific உடன்படிக்கை தொடர்பில் பழமை வாதக் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியவற்றை விமர்சித்துள்ளார்.r

ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி குறித்த இந்த வர்த்தக உடன்படிக்கையை மிகைப்படுத்தி பரப்புரை செய்துவரும் நிலையில், அதனை எதிர்க்க திராணியற்ற நிலையில் லிபரல் கட்சியும் அதன் தலைவர் Justin Trudeauவும் காணப்படுவதாக Tom Mulcair சாடியுள்ளார்.

ஸ்டீபன் ஹார்ப்பர் இரகசியமாக மேற்கொண்டுவரும் Trans-Pacific உடன்பாட்டினை வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு லிபரல் கட்சி தள்ளப்பட்டுள்ள நிலையில், புதிய சனநாயக கட்சி மட்டுமே அது தொடர்பில் துணிந்து கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும அவர் தெரிவித்துள்ளார்.

Trans-Pacific பங்காளித்துவ வர்த்தக உடன்பாடு தொடர்பில் அதற்கு சரிக்கு சமமாக பழமைவாதக் கட்சியுடன் மோதுவதற்கான முதுகெலும்பு உள்ள கட்சியாக புதிய சனநாயக கட்சி மட்டுமே உள்ளது என அந்த கட்சியின் தலைவரும் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

The post Trans-Pacific உடன்பாட்டினை பின்பற்றப் போவதில்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியம் தரும் 6 பழச்சாறுகள்!

Posted: 05 Oct 2015 04:23 PM PDT

m,m

m,mபழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே.

அதுபோன்று பழச்சாறுகளும் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

தர்பூசணிப்பழச் சாறு

கோடையின் தாக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.j

ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.

ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.h

திராட்சை சாறு

திராட்சை சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

திராட்சை சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.,mm

ஆரஞ்சுச் சாறு

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும்.

திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும்.

ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.m,m

எலுமிச்சைச் சாறு

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.

எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.

ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும்.

வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.m,yu

தக்காளிச் சாறு

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.yh

The post ஆரோக்கியம் தரும் 6 பழச்சாறுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாடுகளில் தடுத்து வைத்திருக்கும் கனேடியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் காத்திரமான நடவடிக்கை தேவை

Posted: 05 Oct 2015 12:19 PM PDT

Mohamed_Fahmy_-1005

Mohamed_Fahmy_-1005கனேடியத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், வரபோகும் அரசாங்கம் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கனடாவின் ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி(Mohamed Fahmy) வலியுறுததியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளுக்குமான கோரிக்கையாக அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி(Mohamed Fahmy) அல்ஜசீரா ஊடகத்தில் பணிபுரிந்த வேளையில் அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மூவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு எகிப்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் இரண்டு வருடங்களாக எகிப்திய சிறைகளில் இருந்த ஃபஹ்மி(Mohamed Fahmy), அண்மையிலேயே அந்த நாட்டு அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே வரபோகும் அரசாங்கம் தம்மைப் போன்று வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியாளர்கள் தொடர்பில் உரிய காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.Mohamed_Fahmy_-1005

அதேவேளை இந்த விவகாரத்தை அரசியல் படுத்த தாம் விரும்பவில்லை என்றும் மொஹமட் ஃபஹ்மி(Mohamed Fahmy) தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் தேசிய அளவில் விழிப்பூட்ட வேண்டும் என்பதை தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தான் விவாதங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த விவாதங்களில் வெளிநாடுகளில் ஊடகவியலாளர்கள் தடுத்து வைத்திருக்கும் இவ்வாறான விவகாரங்களை கனேடிய அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதை அறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இதுபோன்ற அவசர நிலைமை ஏற்படும் சந்தர்ப்பத்தில் கனேடியர்களை பாதுகாக்கும் வகையில் கனடாவின் வெளியுறவுகொள்கைகள் எவ்வாறு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தன்னுடைய கைது விவகாரத்தினை ஒரு உதாரணமாக பயன்படுத்தப்பட முடியும் எனவும் மொஹமட் ஃபஹ்மி(Mohamed Fahmy) மேலும் தெரிவித்துள்ளார்.

The post வெளிநாடுகளில் தடுத்து வைத்திருக்கும் கனேடியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் காத்திரமான நடவடிக்கை தேவை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டவுன்ரவுன் பகுதியில் பிரதான நீர் வினியோக குழாயில் வெடிப்பு – போக்குவரத்து பாதிப்பு

Posted: 05 Oct 2015 08:10 AM PDT

Water_main_break_-_10052015

Water_main_break_-_10052015ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் பிரதான நீர் வினியோக குழாய் உடைப்பெடுத்தமையால் அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

King street ற்கும் Wellington street ற்கும் இடைப்பட்ட Yonge Streetஇன் ஒரு பகுதியேபோக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.15 அளவில் பிரதான நீர் வினியோக குழாய் வெடிப்பெடுத்ததாகவும், வெளியேறிய நீர் இன்று அதிகாலை வரையிலும் பெருக்கெடுத்து ஓடுவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பணியாளர்களின் முயற்சியினால் 3.15 மணியளவில் நீர் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது.Water_main_break_-_10052015

நீர் வெளியேறியமையால் வீதிகள் பெருமளவு சேதமடைந்துள்ளமையால் அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டு உள்ளதுடன், அந்த வீதிகள் போக்குவரத்துக்காக செப்பனிடப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

King Street West இலிருந்து Wellington Street வரையிலான இரண்டு திசைகள் நோக்கிய வழித்தடங்களும் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதுடன், குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்துகளை தவிர்க்குமாறு காவல்த்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

The post டவுன்ரவுன் பகுதியில் பிரதான நீர் வினியோக குழாயில் வெடிப்பு – போக்குவரத்து பாதிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™