மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச் சூடு: ஒரு தீவிரவாதி பலி
- தகாத உறவால் 300 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய ஆட்டோ டிரைவர்: ஆந்திராவில் பரபரப்பு
- மும்பையில் பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளை
- எதிர்ப்பை தெரிவிக்க வன்முறையில் ஈடுபடுவதா?: சிவசேனாவுக்கு அருண்ஜெட்லி கண்டனம்
- ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி நாளை சாமி தரிசனம்
- உலகம் சுற்றும் தேநீர் விற்பனையாளர் - சாத்தியமானது எப்படி? வீடியோ
- நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
- பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலியுறுத்தல்
- மதி கெடுக்கும் குடி: பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயற்சித்த கொடூர தந்தை கைது
- மூன்று நாட்களுக்குப் பிறகு சென்செக்ஸ்-நிப்டி சரிவு
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 3-ம் வாரத்தில் தொடங்க மத்திய அரசு திட்டம்
- பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு
- பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5800 டன் பருப்பு பறிமுதல்
- ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட வங்கி மேனேஜர்
- தலித் குழந்தைகளை உயர்சாதியினர் எரித்துக்கொன்றதால் பதட்டம்: அரியானா முதல்வருடன் ராஜ்நாத் சிங் பேச்சு
- போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறையை எங்களிடம் ஒப்படையுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் போர்க்கொடி
- காஷ்மீர்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பரிதாப பலி
- டெல்லியில் இளம்பெண்ணை கற்பழித்த உபேர் டாக்சி டிரைவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
| காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச் சூடு: ஒரு தீவிரவாதி பலி Posted: 20 Oct 2015 10:44 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படை சார்பில் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| தகாத உறவால் 300 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய ஆட்டோ டிரைவர்: ஆந்திராவில் பரபரப்பு Posted: 20 Oct 2015 10:13 PM PDT ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், 300 பெண்களுக்கு தனது நோயைப் பரப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மால்கஜ்கிரியின் மிர்ஜல்குடா பகுதியில் வசித்து வந்த 31 வயதான அந்த ஆட்டோ டிரைவருக்கு, ஏராளமான பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது. விலைமாதர்களைத் தேடி உறவு கொள்வதையே வழக்கமாகக்கொண்ட இவருக்கு, மூன்று முறை திருமணமாகி உள்ளது. ஆனால், இவரது |
| மும்பையில் பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளை Posted: 20 Oct 2015 08:52 PM PDT மும்பையில் பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள ரெயில் நிலையங்களில் வசூலாகும் டிக்கெட் பணத்தை சேகரித்து வேனில் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று மாலை கலெக்சன் பணத்துடன் கல்யாண்-ஷில் சாலையில் ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பிற்காக சென்றார். |
| எதிர்ப்பை தெரிவிக்க வன்முறையில் ஈடுபடுவதா?: சிவசேனாவுக்கு அருண்ஜெட்லி கண்டனம் Posted: 20 Oct 2015 08:26 PM PDT டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது, கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை, மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தக வெளியீட்டு விழாவை நடத்திய சுதீந்திர குல்கர்னி மீது கறுப்பு மை பூச்சு, மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகம் மீது தாக்குதல் ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர். |
| ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி நாளை சாமி தரிசனம் Posted: 20 Oct 2015 07:20 PM PDT ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி உருவாக்கப்பட உள்ளது. புதிய தலைநகரம் உருவாக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) அமராவதியில் நடைபெற உள்ளது. அதில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இதற்காக அவர், நாளை காலை 9.25 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.55 மணிக்கு விஜயநகரத்தில் |
| உலகம் சுற்றும் தேநீர் விற்பனையாளர் - சாத்தியமானது எப்படி? வீடியோ Posted: 20 Oct 2015 03:47 PM PDT உலகத்தை சுற்றிவருவது என்றால் யாருக்குதான் பிடிக்காது. ஆனால் அது எல்லோராலும் முடிவது இல்லை. இதற்கு பணம் இல்லை, நேரம் இல்லை, வேலை, குடும்பம் என்று பல காரணங்களை சொல்லமுடியும். ஆனால் மேற்குரிய அனைத்து தடைகளும் இருந்தும், கேரளாவை சேர்ந்த |
| நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து Posted: 20 Oct 2015 11:09 AM PDT மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு குறித்து மத்திய அரசு தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தி உள்ளது. முக்கியமாக மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்த கவுடா, ரவிசங்கர் |
| பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 20 Oct 2015 07:28 AM PDT பஞ்சாப் மாநிலத்தின் கோட்கபுராவின் பர்காரி கிராமத்தில் உள்ள குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூல் கடந்த ஜூன் 1-ந் தேதியன்று மர்ம நபர்களால் திருடப்பட்டது. சமீபத்தில் அந்த புனித நூலின் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கிழித்து வீதியில் வீசப்பட்டிருந்தது |
| மதி கெடுக்கும் குடி: பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயற்சித்த கொடூர தந்தை கைது Posted: 20 Oct 2015 04:46 AM PDT குடி போதையால் விபத்துகள், கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் என்று குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெற்ற மகளையே தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ள சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மூன்று நாட்களுக்குப் பிறகு சென்செக்ஸ்-நிப்டி சரிவு Posted: 20 Oct 2015 04:43 AM PDT தொடர்ந்து 3 வர்த்தக தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவை சந்தித்தன. உலகளாவிய சந்தைகளில் இருந்த ஏற்ற இறக்கமான சூழ்நிலைக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மருந்து துறை பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. |
| பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 3-ம் வாரத்தில் தொடங்க மத்திய அரசு திட்டம் Posted: 20 Oct 2015 03:48 AM PDT பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில், லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் பிரச்சனையை கிளப்பி காங்கிரஸ் கட்சி தினமும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. |
| பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு Posted: 20 Oct 2015 03:40 AM PDT பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர், பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். ஜக்தீப் என்ற அந்த ராணுவ வீரர் இன்று சங்ரூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் கூரைமேல் நின்றுகொண்டு சாலையில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் |
| பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5800 டன் பருப்பு பறிமுதல் Posted: 20 Oct 2015 03:36 AM PDT துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை தீபாவளிக்கு முன்னதாகவே ராக்கெட் போல் உயர்ந்து வரும் நிலையில் மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டும் பதுக்கல்காரர்களிடம் இருந்து 5800 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் துவரம் பருப்பின் விலை 200 ரூபாயை தாண்டி உயர்ந்துவரும் நிலையில் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை |
| ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட வங்கி மேனேஜர் Posted: 20 Oct 2015 03:05 AM PDT மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டுக்கடன் தொகையை விடுவிப்பதற்கு இன்று ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊரக வங்கி மேனஜரை லோக் ஆயுக்தா போலீசார் 'கரண்சியும் கையுமாக' கைது செய்தனர். இங்குள்ள கார்கோனா மாவட்டத்தில் உள்ள நர்மதா-மால்வா ஊரக வங்கிக் கிளையில் மேனேஜராக இருப்பவர் பகாரே. அம்மாநில முதல் மந்திரியின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெற்ற ராஜிவ் சவுஹான் என்ற |
| தலித் குழந்தைகளை உயர்சாதியினர் எரித்துக்கொன்றதால் பதட்டம்: அரியானா முதல்வருடன் ராஜ்நாத் சிங் பேச்சு Posted: 20 Oct 2015 02:40 AM PDT அரியானா மாநிலத்தில் 2 தலித் குழந்தைகள் உயர் சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியான சோன்பேட் கிராமத்தில் உள்ள ஜிதேந்தரின் வீட்டில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென பெட்ரோல் வாசனை |
| போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறையை எங்களிடம் ஒப்படையுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் போர்க்கொடி Posted: 20 Oct 2015 01:10 AM PDT டெல்லியில் குற்றங்கள் குறைய, போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். தலைநகர் புதுடெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட |
| காஷ்மீர்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பரிதாப பலி Posted: 19 Oct 2015 11:58 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்தி என்ற பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், தல்சார் என்ற பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வேனில், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் |
| டெல்லியில் இளம்பெண்ணை கற்பழித்த உபேர் டாக்சி டிரைவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு Posted: 19 Oct 2015 11:28 PM PDT டெல்லியில் இளம்பெண்ணை உள்நோக்கத்துடன், கடத்தி, கற்பழித்து, அவரது உயிருக்க ஆபத்து விளைவிக்க முயன்ற உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் குற்றவாளிதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் குர்கான் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். 6-12-2014 அன்று மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று விருந்து |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |