Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Queensway பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 20 Oct 2015 05:11 PM PDT

hj

hjQueensway பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியின் வெடியில் ஏற்பட்ட சண்டையை அடுத்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.

Queensway மற்றும் Royal York Boulevard பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றின் வெளிப்புறத்தில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் இந்த துப்பாக்கிச் சூட்டு்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்திருந்த காவல்த்தறையினர் தகவல் வெளியிடுகையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற கூட்டத்தில் இருந்தவர்களிறையே அதிகாலை 2.50 மணியளவில் சண்டை ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

சண்டையின் பின்னரே வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தப்பிச் சென்ற வாகனம் ஒன்றில் இருந்து குறித்த அந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.hj

எனினும் அவருக்கு ஏற்பட்ட காயம் உயிராபத்தான காயமாக இருக்காது என தாம் நம்புவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

சம்பவத்தை அடுத்து Queensway இன் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டு காலை 5.30 மணியளவில் மீண்டும் திறந்துவிடப்பட்டிருந்தது.

The post Queensway பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் கம்பு

Posted: 20 Oct 2015 03:49 PM PDT

o

oசிறுதானிய வகையை சேர்ந்த கம்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலத்தை தருகிறது.

மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.o

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக உட்கொண்டு வந்தால் உடல் வலுவடையும்.

அரிசியை காட்டிலும் கம்பில் நைட்ரஜன் சத்து, மாவு சத்து உள்ளது. உடலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்று புண்களை ஆற்றும்.

அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளும்போது அல்சர் குணமாகிறது, குடல் புண்களை ஆற்றும்.

கம்புவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இதில் கஞ்சி தயாரித்து பருகலாம்.

முத்துபோன்ற தானியமான இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

The post சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் கம்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பதவி விலகினார் ஸ்டீபன் ஹார்ப்பர்

Posted: 20 Oct 2015 10:36 AM PDT

oi

oiநடந்து முடிந்த கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை ஆட்சியில் இருந்துவந்த பழமைவாதக் கட்சி சந்தித்துள்ள தோல்வியினை அடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து பதவி விலகும் முடிவினை ஸ்டீபன் ஹார்ப்பர் மேற்கொண்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பழமைவாதக் கட்சிக்கு தற்போதைக்கு ஒரு இடைக்கால தலைவர் நியமிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டீபன் ஹார்ப்பர் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகுகின்ற போதிலும், தான் போட்டியிட்ட தொகுதியில் அவர் வெற்றிபெற்றுள்ளதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.oi

The post பதவி விலகினார் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றிபெற்றது லிபரல் கட்சி

Posted: 20 Oct 2015 10:33 AM PDT

o

oநடைபெற்று முடிந்த கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் Justin Trudeau தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்துடன வெற்றி பெற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

பெரும்பான்மை அரசாங்கத்தினை அமைப்பதற்கு 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 170 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், 184 ஆசனங்களை கைப்பற்றியுள்ள லிபரல் கட்சி, பெரும்பான்மை ஆட்சியினை அமைக்கவுள்ளது.

இந்த நிலையில், இதுவரை ஆட்சியில் இருந்துவந்த பழமைவாதக் கட்சி 99 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்திலும், புதிய சனநாயக கட்சி 44 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன.

இந்த தேர்தலில் சந்தித்த தோல்வியின் மூலம் ஸடீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சியின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சி இரண்டு தவணைகளின் பின்னர் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் Pierre Trudeauவின் மகனான 43 வயது Justin Trudeau கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

கனேடிய அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஒருவரின் வாரிசு நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று பிரதமராக வருவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி முன்னைய தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்து மூன்றாவது நிலையில் இருந்த கட்சி ஒன்று, நேரடியாக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post வெற்றிபெற்றது லிபரல் கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™