மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்திரா காந்தியின் தியாகத்தை மறக்க முடியாது: பிரதமர் மோடி உருக்கம்
- கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை மக்கள் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
- ஆந்திராவை முதல் மாநிலமாக்கும் முயற்சியில் இருந்து ஓய மாட்டேன்: சந்திரபாபு நாயுடு சபதம்
- இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாள்: உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி
- காஷ்மீர் எல்லை பகுதியில் இந்தியா 400 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது: பாகிஸ்தான் தூதர்
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 31-வது நினைவு தினம்: துணை ஜனாதிபதி, மன்மோகன் சிங், சோனியா, ராகுல் அஞ்சலி
- வகுப்புவாத கருத்துகள்: நிதிஷ் குமார், லாலு, ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
- சென்னை, திருச்சி, மதுரை உள்பட நாடு முழுவதும் அதிரடி சோதனை: ரூ.2 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
- தலைநகர் அவலம்: இந்தியா-ஆப்பிரிக்கா மாநாட்டால் போக்குவரத்து நெரிசல் - பஸ், ஆட்டோவில் பிறந்த குழந்தைகள்
- மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு
- மத ரீதியாக இட ஒதுக்கீடு தேவை என்று கூறியதை மறுக்க முடியுமா?: நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி சவால்
- சத்தீஷ்கரில் பயணிகள் பஸ் உள்பட 29 வாகனங்களுக்கு தீவைப்பு: நக்சலைட்டுகள் அட்டூழியம்
- பீகார் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட பா.ஜனதா விளம்பரங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை
- கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல்
- பா.ஜ.க.,வினரை கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை
- சிவசேனாவின் கோரமுகம்: ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்பு கம்பியால் தாக்கி கருப்பு மை வீசிய கொடூரம்
- தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்: தடயவியல் அறிக்கை தாக்கல்
- விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
- எகிப்து சிறைகளில் வாடும் 2 இந்தியர்கள் விரைவில் விடுதலை
- ஐந்தாவது நாளாக சரிந்தது சந்தை: சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி
| இந்திரா காந்தியின் தியாகத்தை மறக்க முடியாது: பிரதமர் மோடி உருக்கம் Posted: 30 Oct 2015 11:19 PM PDT முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்திவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. |
| கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை மக்கள் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: 30 Oct 2015 10:29 PM PDT நாடு முன்னேற்றப் பாதையில் நடைபயின்று வளர்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை மக்கள் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாளையொட்டி தலைநகர் டெல்லியில் ஒருமைப்பாட்டுக்கான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி |
| ஆந்திராவை முதல் மாநிலமாக்கும் முயற்சியில் இருந்து ஓய மாட்டேன்: சந்திரபாபு நாயுடு சபதம் Posted: 30 Oct 2015 09:52 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நெல்லூர் மாவட்டத்தில் கண்டலேறு நீர்ப்பாசன திட்டத்துக்கு நேற்று அடிக்கல்நாட்டினார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:– தொழில் தொடங்குவதற்கு அனுகூலமான மாநிலமாக குஜராத்துக்கு அடுத்து 2–வது இடத்தில் ஆந்திரா உள்ளது. |
| Posted: 30 Oct 2015 08:59 PM PDT 'இந்தியாவின் இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவரது உருவப்படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். |
| காஷ்மீர் எல்லை பகுதியில் இந்தியா 400 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது: பாகிஸ்தான் தூதர் Posted: 30 Oct 2015 08:32 PM PDT ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா 400 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறினார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| Posted: 30 Oct 2015 08:22 PM PDT மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி |
| வகுப்புவாத கருத்துகள்: நிதிஷ் குமார், லாலு, ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் Posted: 30 Oct 2015 08:03 PM PDT பீகார் தேர்தல் பிரசாரத்தில் வகுப்புவாத கருத்துகளை வெளியிட்டு வரும் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்தது. |
| சென்னை, திருச்சி, மதுரை உள்பட நாடு முழுவதும் அதிரடி சோதனை: ரூ.2 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல் Posted: 30 Oct 2015 07:36 PM PDT நமது நாட்டில் சீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வர்த்தக துறையின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் லைசென்சு பெற்றுத்தான் பட்டாசுகளை இறக்குமதி செய்ய முடியும். |
| Posted: 30 Oct 2015 05:50 PM PDT இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் மூலமாக இந்தியாவுக்கு எவ்வளவு முதலீடு கிடைத்தது என்பது பற்றி, பிறகு பொறுமையாக விவாதித்து கொள்ளலாம். அதே மாநாட்டால் 2 இந்தியப் பெண்கள் பொது இடத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்த அவலத்தைப் பற்றி மட்டும் இப்போது பேசலாம். |
| மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு Posted: 30 Oct 2015 05:04 PM PDT மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மும்பை, தாதர் சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வசித்து வருகிறார். இவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் உறவினரும் ஆவார். இந்த நிலையில் ராஜ்தாக்கரே வீட்டிற்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென வருகை தந்தார். |
| மத ரீதியாக இட ஒதுக்கீடு தேவை என்று கூறியதை மறுக்க முடியுமா?: நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி சவால் Posted: 30 Oct 2015 04:50 PM PDT பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கோபால்கஞ்ச் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசினார். அப்போது, நிதிஷ்குமார் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி பாராளுமன்றத்தில் பேசிய உரையின் நகலை காண்பித்து அவருக்கு சவால் விடுத்தார். |
| சத்தீஷ்கரில் பயணிகள் பஸ் உள்பட 29 வாகனங்களுக்கு தீவைப்பு: நக்சலைட்டுகள் அட்டூழியம் Posted: 30 Oct 2015 04:34 PM PDT சத்தீஷ்கார் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் சார்கோன் என்ற இடத்தில் உள்ள இரும்பு சுரங்கத்தில் நேற்று காலை ஆயுதங்களுடன் புகுந்த நக்சலைட்டுகள் அங்கிருந்த ஊழியர்களை வெளியேறுமாறு மிரட்டினர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 18 லாரிகள் மற்றும் சுரங்க எந்திரங்களுக்கு தீ வைத்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இங்கு தொடங்கப்பட்ட சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நக்சலைட்டுகள் அதை மூடக்கோரி ஏற்கனவே ஏப்ரல் மாதம் சுரங்க பொது மேலாளர் உள்பட 6 பேரை கடத்தி சென்று பின்னர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| பீகார் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட பா.ஜனதா விளம்பரங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை Posted: 30 Oct 2015 04:16 PM PDT பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா சார்பில் இந்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட 2 விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. ஒரு விளம்பரத்தில், தலித்களுக்கான இட ஒதுக்கீட்டை பறிப்பதன் மூலம், அவர்களின் சாப்பாட்டுத் தட்டை நிதிஷ் குமார்-லாலு கூட்டணி பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. |
| கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் Posted: 30 Oct 2015 03:15 PM PDT மத்தியில் ஆளும் பா.ஜ.க-சிவசேனா இடையிலான கூட்டணியில் நாளுக்குநாள் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து அராஜகப் போக்குடன் செயல்பட்டால், அக்கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார். மும்பை உள்ளாட்சித் தேர்தலில், தனித் தனியாக போட்டியிடுவது என பாஜகவும், சிவசேனையும் முடிவு செய்ததையடுத்து, இரு கட்சிகளிடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ளது. |
| பா.ஜ.க.,வினரை கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை Posted: 30 Oct 2015 12:01 PM PDT பா.ஜ.க.,வினரை மோடி கட்டுப்படுத்தாவிட்டால் உள்நாட்டு மற்றும் சர்வதேச நம்பகத்தன்மையை இழந்துவிடும் அபாயம் இருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனமான மூடிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பன்னாட்டு நிறுவனமான மூடிஸ் அனலைடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு கூட நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.,வுக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க உறுப்பினர்களின் கருத்துகளை மோடி கண்டு கொள்வது இல்லை. |
| சிவசேனாவின் கோரமுகம்: ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்பு கம்பியால் தாக்கி கருப்பு மை வீசிய கொடூரம் Posted: 30 Oct 2015 10:57 AM PDT குல்கர்னியின் மீது மை வீசியதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவின் குரலாக தங்களை வரித்துக் கொண்ட சிவசேனைகள் பொதுமக்கள் முன்பாகவே ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்புக்கம்பியால் தாக்கி மை பூசியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட், சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளை |
| தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்: தடயவியல் அறிக்கை தாக்கல் Posted: 30 Oct 2015 09:02 AM PDT அரியானாவில் தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், தடயவியல் அறிக்கை புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே 20-ம் தேதி அதிகாலை தலித் குடும்பத்தை சேர்ந்த ஒரு வீட்டில் பெட்ரோலை ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தது. இதில் இரண்டரை வயது ஆண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தை உடல் கருகி இறந்தனர். அந்த குழந்தைகளின் |
| விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் Posted: 30 Oct 2015 06:10 AM PDT விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க வழிகாணக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்து. ஆனால், மத்திய அரசு |
| எகிப்து சிறைகளில் வாடும் 2 இந்தியர்கள் விரைவில் விடுதலை Posted: 30 Oct 2015 05:18 AM PDT எகிப்து நாட்டில் உள்ள சிறைச்சாலையில் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்து வரும் இரண்டு இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நீண்டகாலம் சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை பரஸ்பரம் |
| ஐந்தாவது நாளாக சரிந்தது சந்தை: சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 30 Oct 2015 05:07 AM PDT முன்னணி நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு வருவாய் எதிர்பார்த்த அளவை விட மிகவும் குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 5-வது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |