Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Cabbagetown இல் கத்திக்குத்துச் சம்பவம் – இருவர் மருத்துவமனையில்

Posted: 30 Oct 2015 08:52 PM PDT

yu

yuCabbagetown இல் இடம்பெற்ற இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Parliament மற்றும் Winchester வீதிப் பகுதியில் உள்ள கட்டடப்பகுதியில் ( multi-unit Toronto Community Housing Corporation )இன்று இரவு 8 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி்க்குத்துக்கு உள்ளான இருவரில் ஒருவர் ஆண் நபர் என்றும் மற்றையவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.yu

இவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றைய நபர் மோசமான காயங்களுக்கு அளாகியுள்ளதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ள அதேநேரம், ஒருவர் மோசமான காயமடைந்துள்ளதுடன், மற்றைய நபர் சிறிய காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவ இடத்தின் தற்போதைய நிலைமை தொடாபில் தெளிவான தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை என்று அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் காவல்த்துறையினர் இன்னமும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post Cabbagetown இல் கத்திக்குத்துச் சம்பவம் – இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரக்" வாகனத்துடன் கார் மோதி விபத்து – காரின் ஓட்டுநர் பலி

Posted: 30 Oct 2015 08:29 PM PDT

x

xபொருட்களைச் ஏற்றிச் செல்லும் ரக் வாகனம் (transport truck) ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அந்த காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் Pickering அருகில் நெடுஞ்சாலை 401 இல் இந்த விபத்து இடம்பெற்றதாக ஒன்ராறியோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Brock வீதிக்கு அருகில் நெடுஞ்சாலை 401 இன் கிழக்கு நோக்கிய தடத்தின் வலதுபக்கத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரண்டு ரக் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும். அவற்றில் ஒரு ரக்வாகனத்தின் பின்புறப்பக்கமாக இந்த கார் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.x

அந்த காரைச் செலுத்திச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும்,தவிர வேறு எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் கார் ஓட்டுனர் எதற்காக தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார் என்பது தொடாபில் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு்ள்ளன.
அதேவேளை உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இன்னம் வெளியிடப்படவில்லை.

The post ரக்" வாகனத்துடன் கார் மோதி விபத்து – காரின் ஓட்டுநர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Woburn பகுதியில் வாகனம் மோதி 12 வயது சிறுவன் படுகாயம்

Posted: 30 Oct 2015 04:37 PM PDT

ll

llWoburn பகுதியில் இன்று வெள்ளிக்கிறமை பிற்பகல் வாகனம் ஒன்று 12 வயது சிறுவனை மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறுவன் மோசமான காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது.

Scarborough Golf Club வீதி மற்றும் Lawrence அவனியூப் பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அந்த சிறுவன் தனியாக வீதியைக் கடக்க முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவனை மோதிய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் எனினும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ll

சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்காக குறிப்பிட்ட மணித்தியாளங்ளிற்கு அந்த வீதி ஊடான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காயமடைந்த சிறுவனின் தற்போதைய நிலைமை தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.எனினும், சிறுவன் பாடசாலையில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

The post Woburn பகுதியில் வாகனம் மோதி 12 வயது சிறுவன் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Haldimand County பகுதியில் வீடு தீக்கிரை – இருவர் பலி

Posted: 30 Oct 2015 04:30 PM PDT

i

iஇன்று காலை Haldimand County பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையானதில் இரண்டுபேர் உயிரிழந்ள்ளனர்.

South Cayuga இன் லேக்ஷோர் வீதியில் இன்று காலை 9.15 அளவில் இந்த சம்பவம் இடம்றெ்றதகாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, தீ வடுமுழுவதும் சுழ்ந்து அனைத்தும் தீக்கிரையாகும் நிலையில் இருந்ததாகவும், சில மணி நேர போராட்டத்தின் பின்னரே தீப் பரவலை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் கூறப்படுகிறது.i

தீக்கிரையான வீட்டினுள் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது அங்கிருந்து இருவரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தீப்பரவல் சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்ற விபரங்களையோ, உயிரிழந்தவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்களையோ காவல்த்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை.

The post Haldimand County பகுதியில் வீடு தீக்கிரை – இருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜஸ்டின் ரூடோவுடன் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

Posted: 30 Oct 2015 09:30 AM PDT

sraeli_Prime_Minister_Benjamin_Netanyahu_-_10302015

sraeli_Prime_Minister_Benjamin_Netanyahu_-_10302015இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள ஜஸ்டின் ரூடோவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், இரு நாட்டு நட்புகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பையும் வெளியிட்டு உரையாடியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த உரையாடல் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய கனடாவுக்கான இஸ்ரேலியத் தூதுவர், இந்த உரையாடலின் மூலம் யூத நாடு கனடாவுக்கான தனது ஆதரவினை மீள் உறுதிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், கனடாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு தொடரந்தும் பலமான நிலையிலேயே காணப்படும் என்பதனை இஸ்ரேல் பிரதமர் வலியுறுததியுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.sraeli_Prime_Minister_Benjamin_Netanyahu_-_10302015

தேர்தல் பரப்புரை ஆரம்பமான காலம் முதலே இஸ்ரேலுக்கான தனது ஆதரவு நிலைப்பாட்டில் ஜஸ்டின் ரூடோ நிலையான கருத்தினையே வெளிப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள கனடாவுக்கான இஸ்ரேல் தூதர், இஸ்ரேலுக்கு அனைத்துவித பங்களிப்பினையும் வழங்குவதாக ஜஸ்டின் ரூடோவும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான முன்னைய அரசு மத்தியகிழக்கு விடயத்தில் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டினை கடைப்பிடித்ததாக பல்வேறு சர்ச்சைகளும் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், இஸ்ரேலுக்கும் கனடாவின் புதிய பிரதமருக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஜஸ்டின் ரூடோவுடன் இஸ்ரேல் பிரதமர் பேச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து

Posted: 30 Oct 2015 08:49 AM PDT

16_Cattle_Die_After_Truck_Over_Turns_In_Alberta_-_10302015

16_Cattle_Die_After_Truck_Over_Turns_In_Alberta_-_10302015அல்பேர்ட்டாவின் தென்மேற்கே அமைந்துள்ள கிராமம் ஒன்றில் மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாடுகள் உயிரிழந்துள்ளன.

Nobleford என்ற அந்த கிராமத்தில் பெருமளவு போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலை 23 இன் சந்திப்பு ஒன்றில் இந்த விபத்து நேர்ந்ததாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதிக்கு விபத்தில் ஏற்பட்ட காயம் பாரதூரமானதாக இல்லை என்கின்ற போதிலும், அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றிருந்த 11 மாடுகள் விபத்து நேர்ந்த இடத்திலேயே பலியானதாகவும், 5 மாடுகள் மிருக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பலியானதாகவும் கூறப்படுகிறது.16_Cattle_Die_After_Truck_Over_Turns_In_Alberta_-_10302015

விபத்து இடம்பெற்ற வேளையில் அந்த பகுதியில் வானிலையும் சிறந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும்,விபத்துக்கு மதுபோதையோ, போதைப் பொருட்களோ காரணம் இல்லை என்பதையும் காவல்த்றையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இந்த விபத்துக் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™