Tamil Star |
- Stoney Creek பகுதியில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
- Leslievilleஇல் கத்தியால் குத்தப்பட்டவர் மருத்துவமனையில்
- ஒரே இரவில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்
- சிரிய அகதிச் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடாபில் கனடா விளக்கம்
- Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தலில் Patrick Brown வெற்றி
- ஒரு பக்கம் கொழுப்பை கரைக்கிறது…மறுபக்கம் அழகு தருகிறது: தேங்காயின் ரகசியம்
| Stoney Creek பகுதியில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு Posted: 04 Sep 2015 08:51 PM PDT
இன்று வெள்ளிக்கிழமை காலையில் Stoney Creek இற்கு அருகில் உள்ள வயலில் விமானம் விபத்துக்குள்ளானதாக ஹமில்ட்டன் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக Mud வீதி மற்றும் ஆறாவது கிழக்கு வீதிக்கு அருகில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து சம்பவத்ததாகவும் கூறியுள்ளனர். விமானம் ஒன்று வயலில் விபத்துக்குள்ளாகி விழுந்ததாக தமக்கு கிடைத்த அழைப்பை அடுத்து தாம் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சோயா அவரை வயலில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் விழுந்து கிடந்ததை பார்க்க முடிந்தாக காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தாகவும், எனினும் ஏற்பட்ட அந்த சிறியளவான தீயை அங்கு சென்றிருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், விபத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. The post Stoney Creek பகுதியில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Leslievilleஇல் கத்தியால் குத்தப்பட்டவர் மருத்துவமனையில் Posted: 04 Sep 2015 03:09 PM PDT
Queen Street East மற்றும் Logan Avenue பகுதியில் இன்று மாலை 5.20 அளவில் இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்டவர் அடி வயிற்றுப் பகுதியில் மோசமான காயங்களுக்கு உள்ளானதாக ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலக்கம் 924, Queen Street East இல் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உள்ளே வைத்து இந்த நபர் மீது கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையின் 55 பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்ப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட நபரின் உடல்நிலை தேறி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. The post Leslievilleஇல் கத்தியால் குத்தப்பட்டவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரே இரவில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் Posted: 04 Sep 2015 10:41 AM PDT
இன்று அதிகாலை 2 மணியளவில் ரொரன்ரோவின் Malvern பகுதியில் Sheppard Avenue மற்றும் Markham வீதி, இலக்கம் 311 Washburn Wayயில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவரில் இருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் ஸ்காபரோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை மூன்றாமவருக்கு ஏற்பட்ட காயங்கள் மோசமானவையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்த்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். The post ஒரே இரவில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரிய அகதிச் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடாபில் கனடா விளக்கம் Posted: 04 Sep 2015 09:19 AM PDT
குறித்த அந்த சிறுவனின் குடும்பத்திற்கான அகதிக் கோரிக்கை கனடாவிடம் முன்வைக்கப்பட்ட போதிலும், கனேடிய அரசாங்கம் அதனை பரிசீலிக்காத நிலையிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே கனடா தனது தரப்பு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில், சிறுவனின் தந்தையிடம் இருந்து அவ்வாறான அரசியல் தஞ்ச கோரிக்கை எவற்றினையும் தாம் பெற்றுக் கொள்ளவில்லை என கனேடிய அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. அகதித் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் எவையும் குறித்த அந்த சிறுவனின் தந்தையினால் தம்மிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என கனேடிய குடியுரிமை மற்றும் குடிவரவுத் திணைக்களமும் தெரிவித்துள்ளது. குறித்த சிறுவனின் தந்தையின் சகோதரர் ஒருவர் தொடர்பிலேயே விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்ட போதிலும், அந்த விண்ணப்பம் பூரணமாக இல்லை எனவும், அகதித் தஞ்சக் கோரிக்கைக்கான தகுதிநிலைகள் நிரூபிக்கப்படாத நிலையில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. The post சிரிய அகதிச் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடாபில் கனடா விளக்கம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தலில் Patrick Brown வெற்றி Posted: 04 Sep 2015 09:13 AM PDT
ஒன்ராறியோவின் Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தல் நேற்று நடைபெற்றது.< இதில் மாநில முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் Patrick Brown வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது அவர் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் என்ற நிலையைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் Patrick Brown கிடைத்துள்ள அமோகமான வரவேற்பு, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் மாநில அளவில் வெற்றி பெற்று மாகாண அரசினை அமைப்பதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறந்த அவர், கடந்த சில வாரங்களாக சட்டமன்றத்தின் உப நடவடிக்கைகள் சிலவற்றில் மாத்திரம் ஈடுபட்டு வந்தார். முன்னர் Barrie தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Patrick Brown, கடந்த மே மாதம் இடம்பெற்ற கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் வெற்றியீட்டி கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தலில் Patrick Brown வெற்றி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரு பக்கம் கொழுப்பை கரைக்கிறது…மறுபக்கம் அழகு தருகிறது: தேங்காயின் ரகசியம் Posted: 04 Sep 2015 08:09 AM PDT தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் தரும் ஆரோக்கியம்: தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் போது […] The post ஒரு பக்கம் கொழுப்பை கரைக்கிறது…மறுபக்கம் அழகு தருகிறது: தேங்காயின் ரகசியம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Stoney Creek பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை ரொரன்ரோ Leslieville பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காபரோவில் ஒரே இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய அகதிச் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள கருத்துக்களை அடுத்து கனேடிய மத்திய அரசு தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளது.
Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார் மாநில முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் Patrick Brown.