Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் காதலிக்க மறுத்த மாணவியை லாரிக்குள் தள்ளிய வாலிபர்

Posted: 04 Sep 2015 10:28 PM PDT

ஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டம் பிராமண பள்ளியை சேர்ந்தவர் சந்தியா (25). இவர் கம்மம் மாவட்டம் இல்லந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் விடுதியில் தங்கி 3–ம் ஆண்டு படித்து வருகிறார். சந்தியாவை அதே பகுதியை சேர்ந்த சேகர் (28) ஒரு தலையாக காதலித்தார். அடிக்கடி சந்தியாவை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்தார்.

பெற்றோர் பிணத்துடன் 2 நாள் தவித்த 1 வயது குழந்தை: பசியால் அழுது மயங்கியது

Posted: 04 Sep 2015 10:23 PM PDT

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் உப்பர ஹல்லியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35) இவரது மனைவி மீனாட்சி (30). இருவரும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு ஐதராபாத் அருகே உள்ள ஹுக்கட் பள்ளி ஆல்வின் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். மஞ்சுநாத் தனியார் செல்போன் கடையிலும், மீனாட்சி அங்குள்ள வர்த்தக வளாகத்திலும் வேலை பார்த்து வந்தனர்.

பீகார் சட்டசபை தேர்தலை 5 கட்டமாக நடத்த முடிவு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Posted: 04 Sep 2015 09:52 PM PDT

தற்போதைய பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தலை அமைதியாகவும்,

சாகித்ய அகாடமி விருதினை அரசிடமே திருப்பிக் கொடுக்க இந்தி எழுத்தாளர் முடிவு

Posted: 04 Sep 2015 09:45 PM PDT

கன்னட எழுத்தாளர் கல்பர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தனது சாகித்ய அகாடமி விருதினை திருப்பிக் கொடுக்க பிரபல இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் முடிவு செய்துள்ளார். தனது முடிவை பேஸ்புக் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

சபரிமலை மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில போலீசார்: கேரள மந்திரி ரமேஷ் சென்னிதலா தகவல்

Posted: 04 Sep 2015 09:20 PM PDT

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு, நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேரளாவில் வட மாவட்டங்களில் வார்டு சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதத்தில்

திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த வியாபாரி: கர்ப்பத்தை கலைக்க மிரட்டியதால் கைது

Posted: 04 Sep 2015 09:15 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை சந்திப்பில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு மொத்தமாக மெத்தை சப்ளை செய்பவர் நசீர். (வயது 36). இவரது சொந்த ஊர் சாந்தவிளை ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த கடையில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் நசீருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது தனக்கு திருமணம் ஆகவில்லை

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 04 Sep 2015 07:55 PM PDT

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பூஜா லட்சுமி மனு தாக்கல் செய்து உள்ளார். அவரது சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

முலாயம்சிங்குடன் சரத்யாதவ், லாலு பிரசாத் சந்திப்பு: சமரச முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை

Posted: 04 Sep 2015 07:53 PM PDT

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதாவுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் தங்களுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதாலும், மற்ற கட்சிகளுக்கு தங்களை கலந்தாலோசிக்காமலேயே தொகுதி ஒதுக்கீடுகளை அறிவித்ததாலும் சமாஜ்வாடி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் விரைவில் அமல்: அமித் ஷா தகவல்

Posted: 04 Sep 2015 07:49 PM PDT

'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தக்கோரி, முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்தபோது மயங்கி விழுந்த முன்னாள் ராணுவத்தினர் சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த வாரம்

இந்தியாவும் பாகிஸ்தானும் சகோதரர்கள்: சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.

Posted: 04 Sep 2015 03:15 PM PDT

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணந்த 3 நாள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஏற்கனவே, இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள்

2022-ம் ஆண்டுக்குள் 24 மணி நேரமும் மின்வசதி: பிரதமர் மோடி உறுதி

Posted: 04 Sep 2015 01:13 PM PDT

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி மானக்ஷா கலையரங்கில் நேற்று நடந்த மாணவ-மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 800 மாணவ-மாணவிகளும், 60 ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி வரவேற்று பேசினார்.

வால்மீகியின் ராமாயணம் பற்றி எழுதிய இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எம். பஷீருக்கு மிரட்டல்

Posted: 04 Sep 2015 12:47 PM PDT

வால்மீகியின் ராமாயணம் பற்றி எழுதியதற்காக இந்து அடிப்படைவாதிகளிமிருந்து வந்த மிரட்டலை அடுத்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது என கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எம். பஷீர் தெரிவித்துள்ளார்.

புத்த கயா செல்லும் பிரதமர் மோடி

Posted: 04 Sep 2015 09:54 AM PDT

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர்களின் புனித தலமான புத்த கயாவுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் சர்வதேச இந்து புத்த மத மாநாடு நடைபெற்றுள்ள

கரடியில் பிடியில் இந்திய சந்தைகள்: சென்செக்ஸ் 563 புள்ளிகள் சரிவு

Posted: 04 Sep 2015 08:44 AM PDT

வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கரடியில் பிடியில் சிக்கியது. முதலீட்டாளர்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததால் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 562.88 புள்ளிகள் சரிந்து 25,201.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே மிகக் குறைந்த அளவாக 25,119.06 புள்ளிகளுக்கு சரிந்தது. இது, கிட்டத்தட்ட 14 மாதங்களில் மிகக்குறைந்த நிலையாகும்.

சரியான திசையில் செல்கிறது மோடி அரசு: ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

Posted: 04 Sep 2015 07:27 AM PDT

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணந்த 3 நாள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஏற்கனவே, இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்த நிலையில், கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டியது ஒடிசா அரசு

Posted: 04 Sep 2015 06:37 AM PDT

ஒடிசா மாநிலத்தில் ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அளித்த பங்களிப்பிற்கு கவுரவம் அளிக்கும் வகையில் அவர் ஏவுகணை நாயகன் என்றே அழைக்கப்படுகிறார்.

மங்களூர்- சென்னை விரைவு ரெயில் தடம்புரண்ட விபத்து: என்ஜினீயர் சஸ்பெண்ட்

Posted: 04 Sep 2015 06:13 AM PDT

மங்களூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரெயில் நள்ளிரவு 2.30 மணிக்கு கடலூர் விருத்தாசலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் சென்றபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 42-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் பாதையை

பிறந்த குழந்தையின் மூக்கை கடித்த எலி: மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்

Posted: 04 Sep 2015 05:57 AM PDT

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்ட மருத்துவமனையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி செவிலியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவம் நேற்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

கூலித்தொழிலாளியின் மகள் ஐ.இ.எஸ். தேர்வில் சாதனை

Posted: 04 Sep 2015 05:41 AM PDT

கூலித்தொழிலாளியின் மகள், யு.பி.எஸ்.சி. நடத்திய இந்திய பொருளாதார சேவைக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மகாநங்கலா கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்யா குமார் பெகேரா (வயது 50). இவர் பாரதீப்பில் உள்ள ஒரு உரத்தொழிற்சாலையில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் அபராஜிதா

ஜம்மு காஷ்மீர் அரசு தன்னை உளவு பார்ப்பதாக உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு: பிடிபி மறுப்பு

Posted: 04 Sep 2015 05:15 AM PDT

ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி- பாஜக தலைமையிலான அரசு தன்னை உளவு பார்க்கிறது என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:- "ஜம்மு காஷ்மீரில் ஆளும் முப்தி அரசு என்னை உளவு பார்த்து வருகிறது. என்னை பேட்டி எடுத்த ஒரு தேசிய நாளிதழின் நிருபர், எனது வீட்டு கேட்டை தாண்டியதும், சிஐடி போலீசாரால் தடுத்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™