Tamil Star |
- ஆட்கடத்தல்,கொள்ளைச் சம்பவங்களின் தொடர்பில் சந்தேக நபருக்கு வலை வீச்சு
- மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் – சந்தேக நபருக்க காவல்த்துறை வலைவீச்சு
- ஈற்ரோபிக்கோ விபத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலி
- கியூபெக்கின் வட பிராந்தியத்தில் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்து
- Patrick Brown ற்கு எதிராக புதிய சனநாயக கட்சி முறைப்பாடு
- பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- வயதானவர்களுக்கான உணவுப்பட்டியல்
| ஆட்கடத்தல்,கொள்ளைச் சம்பவங்களின் தொடர்பில் சந்தேக நபருக்கு வலை வீச்சு Posted: 03 Sep 2015 09:32 PM PDT
நபர் ஒருவரை கடத்திச் சென்று அவரைத் தாக்கி அந்த பிரதேச வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு வற்புறுத்திய சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றொருவருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் விபரம் வெளியிடுகையில் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 1மணியளவில் தமது வீட்டின் கதவு தட்டப்பட்டதாகவும், அப்போது ஒரு பெண்ணும் அவருடன் இன்னும் ஒரு ஆண் நபரும் நின்றுகொண்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் திடீரென வீட்டினுள் உட்புகுந்து தமது கைப்பை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாகவும், பின்னர் தம்மை அடித்து துன்புறுத்தி வீட்டில் இருந்து கடத்திச் சென்று வங்கி ஒன்றில் இருந்து பணத்தை எடுக்க வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே நபரைக் கடத்தில் துன்புறுத்தி கொள்ளையிட முயன்ற அந்த சந்தேக நபர்களில் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்த்துறையினர், மற்றொருவரைத் தேடி வருகின்றனர். The post ஆட்கடத்தல்,கொள்ளைச் சம்பவங்களின் தொடர்பில் சந்தேக நபருக்கு வலை வீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் – சந்தேக நபருக்க காவல்த்துறை வலைவீச்சு Posted: 03 Sep 2015 08:41 PM PDT
Etobicoke பகுதியில் வைத்தே குறித்த வாகனம் காவல்த்துறையினரின் வாகனத்தை மோதியதாகக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு Albion வீதியின் Islington Avenue பகுதியில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் விபரித்துள்ளனர். இந்த நிலையிலேயே குறித்த வாகனத்தை தேடி வருவதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அதனைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர். காவல்த்துறையினரின் வாகத்தை மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய அந்த வாகனம் AD62391 என்ற இலங்கம் கொண்ட வெள்ளைநிற பிக்கப் ரக வாகனம் என்றும் காவல்த்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். அதேவேளை இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. The post மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் – சந்தேக நபருக்க காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈற்ரோபிக்கோ விபத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலி Posted: 03 Sep 2015 03:42 PM PDT
மக்கள் விறுவிறுப்பாக இயங்கும் ஈற்ரோபிக்கோ சந்திப்புப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Lakeshore Boulevard மற்றும் Park Lawn வீதி என்பவற்றின் சந்திப்புப் பகுதியில் இன்று காலை 8 மணிக்கு சற்று முன்னராக குறித்த மூதாட்டியை வாகனம் மோதித் தள்ளியதாகவும் கூறப்பட்டுள்ளது. 70 வயதான அவர் Park Lawn வீதியின் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்கு பக்கத்திற்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே அவரை வாகனம் மோதித்தள்ளியதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தை அடுத்து குறித்த வீதிப் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் காலை 11.30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மூதாட்டியை மோதித் தள்ளிய வாகத்தை 25 வயது சாரதி ஒருவர் செலுத்தி வந்தாகவும் கூறப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். The post ஈற்ரோபிக்கோ விபத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கியூபெக்கின் வட பிராந்தியத்தில் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்து Posted: 03 Sep 2015 11:28 AM PDT
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ள கியூபெக் மாநில காவல்த்துறையினர், ஏனைய மூவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று நம்புவதாக மாநில காவல்த்துறையின் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். கியூபெக்கின் Sept-Iles பகுதியில் இருந்து வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், உடனடியாகவே சம்பவ இடத்துக்கு மீட்ப படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலங்குவானூர்தி வீழ்ந்த இடம் பாதைகள் அற்ற அடர்ந்த காட்டுப் பகுதி என்பதனால், உலங்குவானூர்தி மூலமாகவே சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினரும் மருத்துவ குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குளான பெல் 206 ரக உலங்குவானூர்தியில் நான்கு பயணிகளும், ஒரு விமானியும் சென்றுள்ளதாகவும், உலங்குவானூர்தி தனியாருக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். The post கியூபெக்கின் வட பிராந்தியத்தில் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Patrick Brown ற்கு எதிராக புதிய சனநாயக கட்சி முறைப்பாடு Posted: 03 Sep 2015 11:20 AM PDT
ஒன்ராறியோ Simcoe North தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் தேர்தலில் போட்டியிடவுள்ள பழமைவாதக் கட்சித் தலைவர் Patrick Brown தேர்தல் பரப்புரை நோக்கத்திற்காக வெளியிட்டுள்ள ஊடக விளம்பரம் ஒன்று அரசியல் விளம்பர விதிமுறைகளை மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது நேற்று வெளியான Orillia Packet and Times பத்திரிகையின் A2 பக்கதில் அரைப் பக்கத்திற்கு பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த அந்த விளம்பரம் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக புதிய சனநாயக கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தய நாளில் இவ்வாறன அரசியல் சார்வு விளம்பரம்பங்களை வெளியிட ஒன்ராறியோவின் தேர்தல் நிதிச் சட்டம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தேர்தல் விதிமீறல் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் புதிய சனநாயக கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். The post Patrick Brown ற்கு எதிராக புதிய சனநாயக கட்சி முறைப்பாடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Posted: 03 Sep 2015 08:30 AM PDT
பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன. மருத்துவ பயன்கள் தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள். சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். பேரிக்காய் ஜீஸ் பேரிக்காயை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் மிக்ஸில் பேரிக்காய், தேவைக்கேற்ப ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பால் சேர்க்க விருப்பம் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவ பயன்கள் வாத நோய் போன்றவற்றை சரிசெய்யும். இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்த பானமாகும். The post பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயதானவர்களுக்கான உணவுப்பட்டியல் Posted: 03 Sep 2015 08:26 AM PDT
1.ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும். 2.சர்க்கரை நோய் இருப்பவர்கள், கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்கு வகைகளைத் தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். 3.உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சாத்துக்குடி, ஆரஞ்சு நல்லது. உப்பைக் குறைத்து, பொட்டாஷியம் சால்ட் வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், சிறுநீரகம் பழுதானவர்கள் பயன்படுத்தக் கூடாது. 4.எலும்புகள் வலுவிழந்து போகும் என்பதால், கண்டிப்பாக பால், தயிர் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். 5.உலர் பழங்கள், கொட்டைகள் பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம். 6.தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில் சிறிது சேர்க்கலாம். ஆனால், சூடுபடுத்தக் கூடாது. The post வயதானவர்களுக்கான உணவுப்பட்டியல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஆட்கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் காவல்த்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு சந்தேக நபருக்கு கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்த்துறையினரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் ஒன்றை தேடிவரும் ரெரன்ரோ காவல்த்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஈற்ரோபிக்கோ பகுதியில் ரக் ரக வாகனம் ஒன்று மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவசர மருத்தவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ள அசம்பாவிதம் ஒன்று கியூபெக்கின் வட பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.


நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

வயதானவர்கள் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.