Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மது ஒழிப்புத் தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு வைகோ கண்டனம்

Posted:

மதுவுக்கு எதிராகப் போராடிய தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி அவுரங்க சீப் சாலை இன்று முதல் அப்துல் கலாம் சாலையாகிறது

Posted:

டெல்லியில் உள்ள அவுரங்க சீப் சாலை இன்று முதல் அப்துல் கலாம் என்கிற பெயரில் அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Read more ...

மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு! (முழுமையான விபரங்கள் இணைப்பு)

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கின்றது. 


Read more ...

ஜம்மு காஷ்மீரை தீவிரவாத அச்சுறுத்தல் அடிப்படையில் ஆராய ஆலோசனை:

Posted:

ஜம்மு காஷ்மீரை தீவிரவாத அச்சுறுத்தல் அடிப்படையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது RSS அமைப்பு.


Read more ...

சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

Posted:

வருகிற 9 மற்றும் 10ம் திகதி சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.


Read more ...

கங்கை நதியைத் தூய்மைப் படுத்த அமிர்தானந்த மயி நூறு கோடி ரூபாய் நிதியுதவி

Posted:

கங்கை நதியைத் தூய்மைப் படுத்த அமிர்தானந்த மயி நூறு கோடி ரூபாய் நிதியுதவி செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சு.க.வின் ஒத்துழைப்பும் அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பின்றி தீர்வினைக் காண முடியாது என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

அமைச்சரவை அதிகரிப்பிற்கு பாராளுமன்றம் அனுமதி!

Posted:

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிப்பது தொடர்பிலான பிரேரணைக்கு பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. 


Read more ...

பத்தில் ஒரு படம்தான் வெற்றி அடைகிறது:தாணு

Posted:

தற்போது வெளியாகும் படங்களில் பத்தில் ஒரு படம்தான் வெற்றி அடைகிறது என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.


Read more ...

சர்வதேச அளவின் மொத்த நிலப்பரப்பில் தீவிரவாதிகளே அதிக ஆக்கிரமிப்பு:மோடி

Posted:

சர்வதேச அளவின் மொத்த நிலப்பரப்பில் தீவிரவாதிகளே அதிக அளவு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

நீங்கள் தனிநபராக ஆபத்தை எதிர்கொண்டால் தானாகவே போலிசுக்கு விரைந்து தகவல் அளிக்கும் மாபைல் App அறிமுகம்

Posted:

Safe Trek என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ள மாபைல் App ஆனது தனி நபராக நீங்கள் எங்கேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் உங்களது இடத்தை உடனே விரைந்து தானாகவே போலிசுக்குத் தெரியப் படுத்தும் வசதியைக் கொண்டதாக இருக்கின்றது.


Read more ...

Expo 2015 - Milano

Posted:

இத்தாலியின் மிலானே நகரில் மே 1ந் திகதி முதல் ஒக்டோபர் 31ந் திகதி வரை நடைபெறும் Expo -2015 ன் காட்சிப் பதிவுகள்.


Read more ...

ஜனதா பரிவார் கூட்டணியில் இருந்து விலகியது ராஷ்ட்ரிய ஜனதா தளம்

Posted:

பீகாரில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஜனதா பரிவார் கூட்டணியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி விலகியது.


Read more ...

இந்திய ரயில்வே துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு எட்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி

Posted:

இந்திய ரயில்வே துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு எட்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ஜெய சின்ஹா கூறியுள்ளார்.


Read more ...

உணவுக்கு வந்தனை சொல்லி...!

Posted:

அன்னியொன்காசெயோ (annyeonghaseyo) என்றால் கொரிய மொழியில் வணக்கம் என வரிசையில் நின்ற பார்வையாளர்களுக்கு மொழி விளக்கம் சொல்லி வரவேற்றார் ஒரு (தென்)கொரியர்.


Read more ...

மாஸ்கோ விமான நிலையத்தில் தீ பரவியதால் பயணிகள் வெளியேற்றம்!:50 விமானங்கள் தாமதம்

Posted:

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமான டொமோடேடொவோ இல் இன்று வியாழக்கிழமை காலை 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ கிடுகிடுவெனப் பரவியதில் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப் பட்டதுடன் குறைந்த பட்சம் 50 விமானங்களது பயணம் தாமதமாகியும் உள்ளது.


Read more ...

பருப்பு விலையைக் குறைக்கும் வகையில் பருப்பு இறக்குமதிக்கு வரிவிலக்கு

Posted:

பருப்பு விலையைக் குறைக்கும் வகையில் பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

சீன இராணுவத்தில் 3 இலட்சம் வீரர்கள் ஆட்குறைப்பு!:அதிபர் ஜீ ஜின்பிங் அறிவிப்பு

Posted:

உலகத்தில் மிக வலிமையான இராணுவக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள நாடுகளில் முன்னணியிலுள்ள சீனா கடந்த சில வருடங்களாக பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பட்ஜெட்டில் இராணுவத்துக்காக அதிகளவு நிதியினை ஒதுக்கி வந்தது.


Read more ...

திமுக அதிமுகவுடன் கட்டாயம் கூட்டணி இல்லை:வைகோ

Posted:

திமுக மற்றும் அதிமுகவுடன் கட்டாயம் கூட்டணி இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Read more ...

பாகிஸ்தான் பொறுமையை இந்தியா பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது:நவாஸ்

Posted:

பாகிஸ்தான் அமைதியை விரும்பி பொறுமையாக இருப்பதை இந்தியா பாகிஸ்தானின் பலவீனம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்று நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


Read more ...

தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்!

Posted:

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கும், அதன் பிரதிபலிப்புக்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய தரைக் கடலில் படகு விபத்தில் பலியான கைக் குழந்தையின் உலகை அதிர வைக்கும் புகைப்படம்!

Posted:

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் தப்பி ஐரோப்பாவுக்கு அகதியாக இடம்பெயர முயன்ற போது படகு விபத்தில் சிக்கி கடலில் மூச்சுத் திணறிப் பலியான ஒரு கைக் குழந்தை துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கி இருந்த நிலையில் உயிரிழந்த அக்குழந்தையின் சடலத்தை துருக்கி எல்லைக் காவற் படை வீரர் ஒருவர் கையில் ஏந்திச் செல்லும் புகைப்படம் ஒன்று அண்மையில் இணையத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் கொடுமையை உலகுக்கு உணர்த்திய நிர்வாண சிறுமியின் ஒரு புகைப்படம், ஆப்பிரிக்காவின் வறுமையை தோலுரித்துக் காட்டிய ஒரு புகைப் படம் போன்று உயிரிழந்த இக்குழந்தையின் புகைப் படமும் உலகளவில் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்துள்ளது. தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகி விட்ட உலகளாவிய அகதிகளின் பிரச்சினையை வலியை உணர வைக்கும் இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகாவது புகலிடம் தேடி வரும் அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்த்து வரும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா என்ற கேள்வியும் வலுப்பெற்றுள்ளது. இதேவேளை இப்புகைப்படம் வெளியான பின் உலகளாவிய ரீதியில் மத்திய தரைக் கடலில் அதிகம் இறந்து வரும் அகதிக் குழந்தைகளது துயரத்தை ஒழிப்பது குறித்த விவாதம் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் மத்தியில் சூடு பிடித்துள்ளது.

முக்கியமாக இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமெரூனுக்கு மத்திய தரைக் கடலில் இடம்பெயரும் அகதிகள் தொடர்பிலான கொள்கை நிலைப்பாடு தொடர்பில் முக்கிய முடிவு எடுப்பதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 4250 அகதிகள் மத்திய தரைக் கடலைக் கடந்து கிறீஸுக்குள் நுழைந்ததுடன் ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும் கிறீஸ் குறித்த அகதிகள் தொடர்பில் முடிவெடுக்கத் திண்டாடி வருகின்றது. மேலும் அண்மையில் ஹங்கேரி வழியாக ஒரு சரக்கு லாரியில் மறைந்தபடி ஆஸ்திரியாவுக்குள் நுழைய முயன்ற 71 அகதிகள் அந்த லாரிக்குள் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியலைகள் ஓய்வதற்கு முன்பாகவே சமீபத்தில் கினியாவில் இருந்து ஸ்பெயினுக்கு கார் எஞ்சின் பின்னால் பதுங்கிப் படுத்த படி வந்த இளைஞர் ஒருவர் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

மறுபுறம் இன்று வியாழக்கிழமை மலேசியக் கடற்கரைப் பகுதியில் இந்தோனேசியாவில் இருந்து சட்ட விரோதமாக மரப் படகில் வந்த அகதிகளது பாரம் தாங்காமல் அப்படகு கடலில் கவிழ்ந்ததில் 13 பெண்கள் உட்பட 14 பேர் நீரில் மூழ்கிப் பலியானதாகவும் அண்மைய செய்தி ஒன்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Read more ...

17 வருடங்களில் கூகுளின் வளர்ச்சி - வீடியோ

Posted:

17 வருடங்களில் கூகுளின் வளர்ச்சி - வீடியோ


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™