Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு: பரூக்அப்துல்லா மீது ரூ.113 கோடி ஊழல் வழக்கு

Posted: 03 Sep 2015 11:19 PM PDT

காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ரூ. 113 கோடி ஊழல் தொடர்பாக பரூக் அப்துல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காஷ்மீர் முன்னாள் முதல் – மந்திரி பரூக்அப்துல்லா. இவர் காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த 2012–ம் ஆண்டு பதவி வகித்தார். அப்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான பல கோடி நிதி முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

மின்சார கம்பியில் உரசியதால் தீ விபத்து: கண்டெய்னர் லாரியில் 44 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

Posted: 03 Sep 2015 11:18 PM PDT

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமிற்கு 44 மோட்டார் சைக்கிளை ஏற்றிக் ண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. கண்டெய்னர் லாரி பாலக்காடு மாவட்டம் யாக்கரை பாலம் என்ற இடத்தில் செல்லும் போது சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்கம்பியில் உரசியது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார்: அரசுக்கு விரைவில் திட்ட அறிக்கை

Posted: 03 Sep 2015 11:06 PM PDT

திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினந்தோறும் இங்கு 50 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை காலங்களிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டும்.

இந்திராணி–சஞ்சீவ் கன்னா செல்போனில் உரையாடல்: வெளிநாட்டில் நடந்த ஷீனா கொலை சதி திட்டம்

Posted: 03 Sep 2015 10:50 PM PDT

மும்பை இளம்பெண் ஷீனா கொலை வழக்கில் தாய் இந்திராணி, வளர்ப்பு தந்தை சஞ்சீவ் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 திருமணங்கள் செய்த டி.வி. அதிபரான இந்திராணி தனது முதல் கணவரின் மகள் ஷீனாவை கொலை செய்தது ஏன் என்பது பற்றி பல

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் புதிய கியாஸ் இணைப்பு 15 நிமிடத்தில் கிடைக்கும்: பெங்களூரில் அமலுக்கு வந்தது

Posted: 03 Sep 2015 09:57 PM PDT

தற்போது சமையல் கியாஸ் புதிய இணைப்பு தேவைப்படுவோர் பல்வேறு தஸ்தாவேஜூகள் இணைத்து எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சியின் டெபாசிட் செலுத்தி விட்டு இணைப்புக்காக காத்திருக்க வேண்டும். புதிய கியாஸ்

பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு திருப்பதி லட்டு விலையை உயர்த்த முடிவு

Posted: 03 Sep 2015 09:44 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும்

ஆ.ராசா, கேரள கவர்னர் சதாசிவம் உள்பட 31 வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு வாபஸ்: மத்திய உள்துறை நடவடிக்கை

Posted: 03 Sep 2015 09:39 PM PDT

2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் தற்போது கேரளாவில் கவர்னராக உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த மாநில பாதுகாப்பு வழங்கப்படுவதால்

மும்பை ரிசர்வ் வங்கி வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன

Posted: 03 Sep 2015 09:24 PM PDT

இந்தியாவின் நிதித்தலைமையகமாக திகழும் மும்பை நகரில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பந்த்ரா பகுதியில் உள்ள குர்லா காம்ப்ளெக்சில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தை நோக்கி எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு

கருப்பு பண விவகாரம்: அக்.7-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 03 Sep 2015 08:41 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மூத்த வக்கீலான ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் பா.ஜனதா கட்சி

குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்த தமிழக அரசு ஒப்புதல்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Posted: 03 Sep 2015 08:12 PM PDT

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

ஜெய்ப்பூரில் சென்னை ரெயிலின் என்ஜின் தடம் புரண்டது - பயணிகள் காயமின்றி தப்பினர்

Posted: 03 Sep 2015 07:12 PM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சந்திப்பு ரெயில் நிலைய பகுதியில் நேற்று சென்னை-ஜெய்ப்பூர் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்துக்குள் ரெயில் நுழையும் போது, அதன் என்ஜினில் உள்ள 2 சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டது. இதனால்

கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி உதவி

Posted: 03 Sep 2015 07:06 PM PDT

புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு, மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி

ஒரு நாள் ஆசிரியர் - டெல்லி மாணவர்களுக்கு இன்று பாடம் எடுக்கும் ஜனாதிபதி

Posted: 03 Sep 2015 04:10 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை கொண்டாடும் விதமாக இந்திய ஜனாதிபதி ஒரு நாள் மட்டும் ஆசிரியராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

போலீசை குழப்பும் இந்திராணி: மகளை கொன்றது நான்தான் என மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 03 Sep 2015 01:58 PM PDT

'ஸ்டார் இந்தியா' தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 43). இவர் '9 எக்ஸ் மீடியா' என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர்.

இந்தியா-அமீரகம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 03 Sep 2015 01:12 PM PDT

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான 11-வது தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் அமீரக

ராஜஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

Posted: 03 Sep 2015 12:31 PM PDT

ராஜஸ்தானின் பல பகுதிகளில் வியாழன் இரவு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. வானிலை துறை தெரிவித்துள்ள தகவல் படி, 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ராஜஸ்தானி சிகார் அருகே இரவு 11.28 மணிக்கு தாக்கியதாக

நீங்கள் மனது வைத்தால் ஆசிட் தாக்குதலை தடுக்க முடியும்: விழிப்புணர்வு வீடியோ

Posted: 03 Sep 2015 10:09 AM PDT

ஆசிட் வீச்சால் உடல் கருகி அலறும் ஒரு பெண்ணின் அழுகுரல் இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இப்போது கூட கேட்கக் கூடும், காரணம், இப்போதும் டெல்லியில், பிரபல குளிர்பான நிறுவனத்தின் ஒன்றரை லிட்டர் பாட்டிலை விட, முக்கால் லிட்டர் ஆசிட் பாட்டிலின் விலை

அதிர்ச்சியூட்டும் சிசிடிவி பதிவுகள்: சக மாணவனின் சாவுக்குக் காரணமான சிறுவன் கைது

Posted: 03 Sep 2015 08:31 AM PDT

பார்ப்பதற்கு எல்லா பள்ளிகளிலும் உள்ள மைதானத்தைப் போல் தான் இருக்கிறது அந்த மைதானமும். அங்கு 2 மாணவர்கள் சண்டையிடுகிறார்கள். அதுவும் கூட பள்ளிக் காலங்களில் சகஜம்தான். ஆனால், நேற்று ஐதராபாத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது மிகவும் குரூரமானது. உணவு இடைவேளையின் போது, மைதானத்தில் ஏதோ ஒரு சின்ன விஷயத்திற்காக சண்டை போடத் தொடங்கிய அந்த 2 சிறுவர்களும் மிக ஆவேசமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நடந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

குப்பை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் குத்துச்சண்டை வீரர்: கைதூக்கி விடுமா அரசு?

Posted: 03 Sep 2015 08:19 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், குத்துச்சண்டை வீரர் ஒருவர், வேறு வேலை கிடைக்காத நிலையில், குப்பை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கான்பூரைச் சேர்ந்த கமால் குமார் வால்மீகி என்ற இந்த குத்துச்சண்டை வீரர், 1990-களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இவர், மேற்கொண்டு குத்துச்சண்டை போட்டிகள் மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள முடியாத நிலையில், வேறு வேலையும் கிடைக்காததால் தற்போது குப்பை சேகரிக்கும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

மூன்று நாள் சரிவுக்குபின் நிமிர்ந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்வு

Posted: 03 Sep 2015 06:15 AM PDT

சீன பொருளாதார மந்த நிலை மற்றும் உலக பொருளாதாரத்தில் அதன் தாக்கம் காரணமாக கடந்த மூன்று தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த மூன்று நாட்களிலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 900க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து, நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 25,453.56 புள்ளிகளில் நிலைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™