Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபறோவில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

Posted: 20 Sep 2015 08:12 PM PDT

r

rஸ்காபறோவில் இன்று இரவு பல்வேறு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரழந்துள்ளதுடன் இரண்டு பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர்.

Midland Avenue மற்றும் Ellesmere வீதிச் சந்திப்பில் இன்று இரவு எட்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும், எத்தனை வாகனங்கள் விபத்தில் சிக்கின என்ற துல்லிய விபரங்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் அவரது பெயர் விபர்ஙகள் எவையும் வெளியிடப்படவில்லை.

r

மேலும் 60 வயது பெண் ஒருவர் உயிராபத்தான நிலையிலும், 50 வயது ஆண் ஒருவர் மோசமான காயங்களுடனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விட மேலும் மூன்று பேர் பாரதூரமற்ற காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைபட்டுப் போயுள்ளன.

The post ஸ்காபறோவில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகா வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்

Posted: 20 Sep 2015 08:09 PM PDT

w

wமிசிசாகாவின் மலிவு சந்தை ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Mavis வீதி மற்றும் Hillcrest Avenue பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூரான ஆயுதம் ஒன்றினால் குத்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.w

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்த்துறையினர், முதற்கட்டமாக மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மூன்று பேரும் தடுப்புக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் ஒருவர் மீது மட்டுமே குற்றறச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post மிசிசாகா வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்கிறது கனடா

Posted: 20 Sep 2015 03:41 PM PDT

u

uஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது.

வெளியுறவு அமைச்சர் றொப் நிக்கல்சன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கனேடிய அரசாங்கத்தின் சார்பில் இது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அறிக்கையானது, இலங்கையில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்ற வன்முறைகள், மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறை தொடர்பான விபரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது என அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இலங்கை விடயத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்கள் நம்பிக்கையைத் தரும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனங்கள் உளமார ஒண்றினைவதற்கும், நீண்ட காலம் நிலைத்து நிற்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அனைத்துலகத்தின் பங்களிப்பு இலங்கைக்கு தேவை என ஐ.நா அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் இராஜதந்திர ரீதியில் ஐ.நா அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு சுயாதீனமான அனைத்துலக செயற்பாடுகள் அவசியம் எனவும் கனேடிய வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐ.நா வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்கிறது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Burlington பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுனர் பலி

Posted: 20 Sep 2015 03:02 PM PDT

y

yBurlingtonஇன் வடபகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Colling வீதியின் வடக்கே, Guelph Lineஇன் தெற்கு நோக்கிய வழித்தடத்தில் இன்று நண்பகல் அளவில் இந்த விபத்து சம்பவித்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியதாகவும், உந்துருளியை செலுத்திச் சென்ற Flamborough பகுதியைச் சேர்ந்த 31 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஹல்ட்டன் பிராந்திய காவல்த்துறையினர், உயிரிழந்தவரின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காரணமாக விபத்து நடைபெற்ற வீதிப் பகுதி ஊடான போக்குவரத்துகள் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தன.

இந்த விபத்து சம்பவிப்பதனை நேரில் கண்டோர் அல்லது மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 905-825-4747, ext. 5065 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post Burlington பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுனர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு சென்ற இருவருக்கு காவல்த்துறை வலைவீச்சு

Posted: 20 Sep 2015 02:47 PM PDT

t

tஸ்காபரோவில் உள்ள துரித உணவகம் ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

மார்க்கம் வீதிக்கு அருகில் கிங்ஸ்டன் வீதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு சற்று பின்னராக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது ஒரு சந்தேக நபர் கத்தி வைத்திருந்ததுடன், துப்பாக்கியையும் வைத்திருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் சிறிய காயங்களுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட ஆண் நபர் ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.t

அதேவேளை இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் அடையாளங்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

கொள்ளையில் ஈடபட்ட இருவரும் தங்கள் முகங்களை மறைத்து மூடியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு சென்ற இருவருக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளின் அகதி தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்க துரித நடவடிக்கை – அரசாங்கம்

Posted: 20 Sep 2015 12:36 PM PDT

fty

ftyசிரியாவை விட்டு வெளியேறிய பெரும் எண்ணிக்கையான அகதிகளின் அகதி தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் துரிதப்படுத்தவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் கனடாவுக்குள் வருவதற்கான அனுமதியை வழங்குவதற்கான முனைப்புக்களை அது மேற்கொள்ளவுள்ளது.

சிரிய அகதிகள் குவிந்துள்ள நாடுகளுக்கு மேலும் பல அதிகாரிகளை அனுப்பி, அகதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் கனடா தீர்மானித்துள்ளது.

அதற்காக கனடாவில் அகதிகளை பொறுப்பெடுப்போர் தொடர்பிலான விவகாரங்களை கையாள தற்போது உள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்குக்கும் கூடுதலான அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.fty

சிரியாவில் இருந்து வெளியேறும் மக்கள், தாம் ஐ.நா அகதிகள் அமைப்பின் நடைமுறைகளின் கீழான அகதிகள் தான் என்பதனை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்பதனை, தற்போதய சிரிய அகதிகள் நிலவரம் நிரூபித்துள்ளதனை கனேடிய அரசாங்கத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் அகதிகளால் முன்வைக்கப்படும் விண்ணப்பங்களை கனேடிய அதிகாரிகள் தமது நடைமுறைகளின் பிரகாரம் ஆய்வு செய்ய வேண்டியது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதையும் கனடிய அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

The post சிரிய அகதிகளின் அகதி தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்க துரித நடவடிக்கை – அரசாங்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள்

Posted: 20 Sep 2015 07:55 AM PDT

fd

fdசிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.

இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.o

100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள்

புரதச்சத்து - 20.9 கிராம்

கொழுப்பு சத்து - 10.5 கிராம்

சாம்பல் சத்து - 1.9 கிராம்

நீர்ச்சத்து - 66.70 கிராம்

மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் விட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.fd

மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மத்தி மீனில் விட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

The post மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரிசி உணவை எப்படி சாப்பிடலாம்? அதில் உள்ள சத்துக்கள் என்ன?

Posted: 20 Sep 2015 07:49 AM PDT

uy

uyஎன்னதான் ஆரோக்கியமானவர்கள் என்றாலும் தினம் 3 வேளைகளும் அரிசி உணவையே எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உதாரணத்துக்கு காலையில் 4 இட்லி சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை 2 இட்லியாகக் குறைத்துக் கொண்டு, மீதி 2 இட்லி அளவுக்கு ஏதேனும் காய்கறி சாலட் அல்லது பழம் சாப்பிடலாம்.

நாம் எல்லோரும் அரிசி சாதத்தை அதிகமாக வைத்துக் கொண்டு, காய்கறிகளைத் தொட்டுக் கொள்ள குறைவாக வைத்து உண்கிறோம்.

இது தவறு. காய்கறிகள் அதிகமாகவும், அரிசி சாதத்தைத் தொட்டுக் கொள்கிற மாதிரியும் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது.

நொறுக்குத்தீனி என்கிற பெயரில் குழந்தைகளுக்குக் கண்ட உணவுகளையும் கொடுப்பதற்குப் பதில், அரிசி மாவில் செய்த புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றைக் கொடுக்கலாம்.

அவல் பாயசம், சிகப்பரிசி புட்டு, கொழுக்கட்டை போன்றவை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கேற்ற சிறந்த உணவுகள் ஆகும்.uy

புழுங்கலரிசி (கைக்குத்தல்)

கார்போஹைட்ரேட் - 77.4 கிராம்

ஆற்றல் - 349 கிலோ கலோரி

புரதம் - 8.5 கிராம்

இருப்புச் சத்து - 2.8 கிராம்

கால்சியம் -10 கிராம்

நார்ச்சத்து - இல்லை

நல்ல கொழுப்பு - இல்லை

பச்சரிசி (கைக்குத்தல்)

கார்போஹைட்ரேட் - 76.7 கிராம்

ஆற்றல் - 346 கிலோ கலோரி

புரதம் - 7.5 கிராம்

இருப்புச் சத்து - 3.2 கிராம்

கால்சியம் - 10 கிராம்

நார்ச்சத்து - இல்லை

நல்ல கொழுப்பு - இல்லை

அவல்

கார்போஹைட்ரேட் - 77.3 கிராம்

ஆற்றல் - 346 கிலோ கலோரி

புரதம் - 6.6 கிராம்

இருப்புச் சத்து - 20 கிராம்

கால்சியம் - 20 கிராம்

நார்ச்சத்து - 0.7 கிராம்

நல்ல கொழுப்பு - 1.2 கிராம்

பொரி

கார்போஹைட்ரேட் - 73.6 கிராம்

ஆற்றல் - 325 கிலோ கலோரி

புரதம் - 7.5 கிராம்

இருப்புச் சத்து - 9.3 கிராம்

கால்சியம் - 23 கிராம்

நார்ச்சத்து - 8 கிராம்

நல்ல கொழுப்பு - 4.3 கிராம்

தினை அரிசி

கார்போஹைட்ரேட் - 60.9 கிராம்

ஆற்றல் - 331 கிலோ கலோரி

புரதம் - 12.3 கிராம்

இருப்புச் சத்து - 2.8 கிராம்

கால்சியம் - 31 கிராம்

நார்ச்சத்து - 7.6 கிராம்

நல்ல கொழுப்பு - 4.7 கிராம்

சாமை அரிசி

கார்போஹைட்ரேட் - 67 கிராம்

ஆற்றல் - 341 கிலோ கலோரி

புரதம் - 17.7 கிராம்

இருப்புச் சத்து - 9.3 கிராம்

கால்சியம் - 17 கிராம்

நார்ச்சத்து - 2.2 கிராம்

நல்ல கொழுப்பு - 1.1 கிராம்

வரகரிசி

கார்போஹைட்ரேட் - 70.4 கிராம்

ஆற்றல் - 341 கிலோ கலோரி

புரதம் - 12.5 கிராம்

இருப்புச் சத்து - 0.8 கிராம்

கால்சியம் - 14 கிராம்

நார்ச்சத்து - இல்லை

நல்ல கொழுப்பு - இல்லை

The post அரிசி உணவை எப்படி சாப்பிடலாம்? அதில் உள்ள சத்துக்கள் என்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™