மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா
- 26–ந் தேதி உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
- திருப்பதியில் நள்ளிரவில் கருட சேவையில் பங்கேற்ற யானை பக்தர்கள் கூட்டத்தில் மிரண்டு ஓடியது: பாகன் படுகாயம்
- ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர இந்து இளம்பெண் முயற்சி: தேசிய பாதுகாப்பு உளவுத்துறை பகீர் தகவல்
- கண்ணூர் அருகே பெண் குழந்தையை கடத்தியவர் கைது
- பணம் சம்பாதிப்பதை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள்: சமாஜ்வாடி எம்.பி.க்களுக்கு முலாயம்சிங் அறிவுரை
- திருப்பதி பிரம்மோற்சவ விழா: ரூ.2 கோடியே 17 லட்சம் உண்டியல் காணிக்கை
- பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று தங்க தேரோட்டம்
- பெங்களூர்-சான்பிரான்சிஸ்கோ இடையே உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையை இயக்க ஏர் இந்தியா திட்டம்
- இந்தியாவில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் - அதிர்ச்சி தகவல்கள்
- லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து ராம் விலாஸ் பஸ்வானின் மருமகன் நீக்கம்
- சத்தீஸ்கரில் சக்தி வாய்ந்த 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: மாவோயிஸ்டுகளின் சதி முறியடிப்பு
- திருப்பதி பிரம்மோற்சவ 5-வது நாள் விழா: கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
- முடிந்தால் என்னை சிறைக்கு அனுப்புங்கள்: ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சவால்
- ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நாளை மறுநாள் மோடி அமெரிக்கா பயணம்: ஒபாமாவையும் சந்தித்து பேசுகிறார்
- விவசாயிகளுக்கு உதவ தன் உண்டியலைக் கொடுத்த 8 வயது சிறுமி
- குஜராத்தின் வதோதரா நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 68 பேர் பாதிப்பு
- காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று சந்திப்பு
- நாடு முழுவதும் 30 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தனர்: வானொலி உரையில் பிரதமர் மோடி தகவல்
- பன்சாரே கொலை வழக்கு: முதன்மைக் குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது
| ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா Posted: 20 Sep 2015 11:03 PM PDT ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து குழந்தை இறந்த சம்பவம், அதன் பின் வார்டுகளில் பாம்பு புகுந்தது. பெண் நோயாளியை பெருச்சாளி கடித்தது போன்ற சம்பவங்களால் மாநில சுகாதாரதுறை கதிகலங்கி போய் உள்ளது. |
| 26–ந் தேதி உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு Posted: 20 Sep 2015 10:50 PM PDT ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாணவர்களை திரட்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து இருந்தார். குண்டூரில் வருகிற 26–ந் தேதி உண்ணாவிரம் நடக்கிறது. இதற்காக குண்டூர் ஏ.சி.காலேஜ் அருகே உள்ள உல்பா ஹால் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கான ஏற்பாடுகள் கட்சி நிர்வாகிகள் |
| Posted: 20 Sep 2015 10:24 PM PDT திருப்பதி கோவிலில் கருட சேவையில் பங்கேற்ற யானை பக்தர்கள் கூட்டத்துக்குள் மிரண்டு ஓடியது. அதனை அடக்க முயன்ற பாகன் படுகாயம் அடைந்தார். திருப்பதி கோவிலில் நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 8 யானைகளும் பங்கேற்றன. கருட சேவையையொட்டி |
| Posted: 20 Sep 2015 10:11 PM PDT ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் டெல்லியை சேர்ந்த இந்து இளம்பெண் சிரியாவுக்கு செல்லும் முயற்சியை அந்தப் பெண்ணின் தந்தை முறியடித்தது தொடர்பான பகீர் தகவல் தேசிய பாதுகாப்பு உளவுத்துறை மூலம் வெளியாகியுள்ளது. |
| கண்ணூர் அருகே பெண் குழந்தையை கடத்தியவர் கைது Posted: 20 Sep 2015 10:08 PM PDT கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி பாத்திமா. இந்த தம்பதியின் மகள் சோனா (வயது 6). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சோனா திடீரென்று மாயமானார். அவரது தாயார் பாத்திமா மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அருகில் தண்ணீர் பிடித்துவிட்டு வருவதற்குள் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காசர்கோடு போலீசில் புகார் செய்தார். |
| Posted: 20 Sep 2015 10:05 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் 2017–ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை மனதில் கொண்டு ஆளும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இப்போதே மக்களை கவரும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டார். லலித்பூரில் நேற்று அவர் இரு மின்திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பிறகு அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று |
| திருப்பதி பிரம்மோற்சவ விழா: ரூ.2 கோடியே 17 லட்சம் உண்டியல் காணிக்கை Posted: 20 Sep 2015 09:58 PM PDT திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் தொமங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று முன்தினம் பிரம்மோற்சவத்தின் 4–வது நாளில் 70 ஆயிரத்து 519 பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று தங்க தேரோட்டம் Posted: 20 Sep 2015 09:56 PM PDT திருப்பதி ஏழுமலை யானுக்கு புரட்டாசி மாதத்தில் 9 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரத்தில் ஏழுமலையான் புறப்பாடும், வீதிஉலாவும் நடந்து வருகின்றன. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தன |
| பெங்களூர்-சான்பிரான்சிஸ்கோ இடையே உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையை இயக்க ஏர் இந்தியா திட்டம் Posted: 20 Sep 2015 09:51 PM PDT இந்தியாவின் 'கார்டன் சிட்டி' என்றழைக்கப்படும் பெங்களூர் நகரை அமெரிக்காவின் பிரபல தகவல்தொடர்பு தொழில்நுட்ப தொழில் நகரமான சான்பிரான்சிஸ்கோவுடன் இணைக்கும் சுமார் 14 ஆயிரம் தூர இடைநில்லா விமானச் சேவையை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'போயிங் 77-200' ரக விமானம் மூலம் 17 முதல் 18 மணிநேரத்தில் இருமுனைகளையும் இணைக்கும் இந்த வழித்தடம் உலகின் மிக நீண்ட |
| இந்தியாவில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் - அதிர்ச்சி தகவல்கள் Posted: 20 Sep 2015 08:36 PM PDT இந்தியாவில் கடந்த ஆண்டில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நாடெங்கும் கடந்த |
| லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து ராம் விலாஸ் பஸ்வானின் மருமகன் நீக்கம் Posted: 20 Sep 2015 07:41 PM PDT பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் குடும்பா தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என, பஸ்வானின் மருமகன் அனில்குமார் |
| சத்தீஸ்கரில் சக்தி வாய்ந்த 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: மாவோயிஸ்டுகளின் சதி முறியடிப்பு Posted: 20 Sep 2015 07:09 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகான் மாவட்டத்துக்கு உட்பட்ட துர்காட் மலைப்பகுதி வழியாக பெட்மா-கனோரா சாலை செல்கிறது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில், சாலைக்கு அடியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. |
| திருப்பதி பிரம்மோற்சவ 5-வது நாள் விழா: கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா Posted: 20 Sep 2015 07:06 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும் வண்ண வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் விழாக்கோலம் |
| முடிந்தால் என்னை சிறைக்கு அனுப்புங்கள்: ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சவால் Posted: 20 Sep 2015 05:04 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில், சாம்ராட் என்ற சைக்கிள் நிறுவனம் தொடங்குவதற்காக விவசாயிகளிடம் 65 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை உத்தரபிரதேச மாநில தொழில் வளர்ச்சிக்கழகம் செய்தது. ஆனால் அந்த நிலத்தை, ராஜீவ் காந்தி |
| Posted: 20 Sep 2015 03:57 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து, அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக நாளை மறுதினம் (புதன்கிழமை) அவர் அயர்லாந்து செல்கிறார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் என்டா கென்னியுடன் இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்குள்ள இந்தியர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். |
| விவசாயிகளுக்கு உதவ தன் உண்டியலைக் கொடுத்த 8 வயது சிறுமி Posted: 20 Sep 2015 03:41 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஷிகா ஜோஷி என்ற 8 வயது சிறுமி அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசை நேற்று நேரில் சந்தித்து, தான் நீண்ட நாட்களாக சேர்த்து வைத்திருந்த உண்டியலை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக நன்கொடையாக அளித்தார். |
| குஜராத்தின் வதோதரா நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 68 பேர் பாதிப்பு Posted: 20 Sep 2015 03:32 PM PDT நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் அச்சமும் ஒருசேர அதிகரித்து வரும் நிலையில் குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் உள்ள மஞ்சள்பூர் பகுதியில் உள்ள மதுபென் மாலி(62) என்ற மூதாட்டி நேற்று பன்றிக் காய்ச்சலால் பலியாகியுள்ளார். |
| காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று சந்திப்பு Posted: 20 Sep 2015 02:59 PM PDT காஷ்மீரில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாதத்தில் (செப்டம்பர்) மட்டும் இதுவரை 23 முறை பாகிஸ்தான் தனது அத்துமீறலை அரங்கேற்றி உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தியாவும் பதிலடி கொடுத்து வருவதால் இருநாடுகளின் |
| Posted: 20 Sep 2015 02:07 PM PDT பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் 'மான் கி பாத்'(மனதில் இருந்து நேரடியாக) என்ற தலைப்பில் அகில இந்திய வானொலியில் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு தரப்பினரும் கேட்கும் கேள்விகளுக்கும், ஆலோசனைகளுக்கும் பதில் அளிக்கிறார். |
| பன்சாரே கொலை வழக்கு: முதன்மைக் குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது Posted: 20 Sep 2015 01:30 PM PDT மகாராஷ்டிராவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |