Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோ West Hill பகுதியில் கத்திக்குத்து: ஒருவருக்கு உயிராபத்தான காயம்

Posted: 12 Sep 2015 08:56 PM PDT

ui

uiஇன்று பிற்பகல் West Hill பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

Galloway வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியில் இன்று பிற்பகல் 3.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் மிகவும் மோசமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கான 55 வயது நபர் உயிராபத்தான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியை இனங்காண்பதற்கு தாம் தொடர்ந்தும் முயன்று வருவதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், சந்தேக நபர் தொடர்பிலான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

The post ரொரன்ரோ West Hill பகுதியில் கத்திக்குத்து: ஒருவருக்கு உயிராபத்தான காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் இடம்பெற்ற துப்பர்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Posted: 12 Sep 2015 08:48 PM PDT

kl

klகடந்த பெப்ரவரி மாதம் மிசிசாகவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இரவு பத்து மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மிசிசாகாவைச் சேர்ந்த 22 வயது நபர் ஜமைக்காவுக்கு தப்பிச் சென்று தற்போது நாட்டுக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் Cindy Crescent இல் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து, வீட்டின் முன் கதவு வழியாக சில துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்திருந்தனர்.kl

சம்பவம் குறித்து தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்த்துறையினர் மே மாதத்தின் இறுதிப் பகுதியில் மிசிசாகாவைச் சேர்ந்த 21 வயது ஆண் ஒருவரை கைது செய்த போதிலும், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னரே குறித்த அந்த சந்தேக நபர் ஜமைக்காவுக்க தப்பிச் சென்றுவிட்ட விடயம் காவல்த்துறையினருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் Michael Wilson எனப்படும் அந்த நபர் நேற்றைய தினம் கனடாவை வந்தடைந்த வேளையில் அவரை கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்

The post மிசிசாகாவில் இடம்பெற்ற துப்பர்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவின் மேற்குபகுதியில் மர்மமான துப்பாக்கிப் பிரயோகம்

Posted: 12 Sep 2015 08:43 PM PDT

j

jரொரன்ரோவின் மேற்கு பகுதியில் நேற்று இரவு மர்மமான முறையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Albion மற்றும் Weston வீதிப் பகுதிகளில் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11.30 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர், Shendale Drive ற்கும் Weston வீதிக்கும் இடைப்பட்ட Albion வீதியின் ஒரு பகுதியை மூடி தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர்.j

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இரண்டு கறுப்பு நிற வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடள் தொடர்புடையதாக எவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கான பதிவுகள் இல்லை எனவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ரொரன்ரோவின் மேற்குபகுதியில் மர்மமான துப்பாக்கிப் பிரயோகம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு அதிகரிப்பது தொடர்பில் கனடா கண்டனம்

Posted: 12 Sep 2015 10:21 AM PDT

ui

uiசிரியாவில் ரஸ்யா தனது இராணுவ வல்லாதிக்கத்தினை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சிரிய மோதல் களங்களில் கனேடிய இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்பதையும் பிரதமர் மீள வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் ஏற்கனவே மிகவும் கொடூரமான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், பஷார் அல் அசாத் தலைமையிலான சிரிய படைகளுக்கு போர்த் தளவாடங்களையும், ஆட்பல உதவிகளையும் அதிகரிப்பது, தற்போதய நிலையினை மேலும் மோசமானதாக மாற்றுவதாகவே அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுமைக்குமான பாதுகாப்பு நிலவரங்களை சிக்கலாக்குவதிலும், பலனற்ற வகையில் மேலும் ஆபத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகளிலுமே ரஷ்யாவும், விலாடிமிர் புட்டினும் ஈடுபட்டுவருவதாகவும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் சாடியுள்ளார்.

ui

சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியங்களில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பன்னாட்டு வான்வெளித் தாக்குதல் நடவடிக்கையில் கனடாவும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் சிரிய வான்பரப்பில் ரஷ்ய விமானங்களும் இந்த வாரத்தில் பறக்க ஆரம்பித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிரிய இராணுவத்துக்கு உதவும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ரஸ்ய துருப்புக்களும் ஈடுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இவ்வாறான கண்டனத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு அதிகரிப்பது தொடர்பில் கனடா கண்டனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளுக்கு உதவும் திட்டங்கள் தொடர்பில் நகரபிதாக்கள் ஆலோசனை

Posted: 12 Sep 2015 10:12 AM PDT

7

7சிரிய நாட்டு அகதிகளுக்கு உதவுவது குறித்த திட்டங்கள் தொடர்பில் கனடாவின் பிரதான மாநகரங்களின் நகரபிதாக்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

உலகில் மிக மோசமான ஒரு மனித அவலம் ஏற்பட்டுள்ள வேளையில், அதற்கு கனேடிய மத்திய அரசாங்கத்தின் கரிசனை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக விமர்சமனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே மாநகர முதல்வர்கள் அது குறித்து விவாதித்துள்ளனர்.

நேற்றைய நாள் இந்த விடயம் தொடர்பில் பிரதான நகரங்களின் நகரபிதாக்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடாத்தியுள்ளதனை, பாரிய நகர முதல்வர்கள் கூட்டமைப்பின் தலைவரான வன்கூவர் நகரபிதா ஜோர்ஜ் ரொபேர்ட்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, கல்கரி நகரபிதா நஹீட் நென்ஷி, மொன்றியல் நகரபிதா டெனிஸ் கோடெயர் உள்ளிட்ட 21 நகரபிதாக்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.

7

தற்போதய நிலையில் அந்தந்த நகரங்கள் அகதிகளை எவ்வாறு குடியேற்றி வருகின்றன என்பது தொடர்பிலும், அகதிகளை கையாளும் மூலோபாயங்கள் தொடர்பிலும் நகர முதல்வர்கள் தங்களுக்கிடையே திட்டங்களை பரிமாறிக் கொண்டதாக வன்கூவர் நகரபிதா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பல்வேறு நகரங்களும் கடந்த வாரத்தில் நரக மன்றங்களில் பொதுமக்கள் கூட்டத்தினை நடாத்தி சிரிய அகதிகள் விவாகரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அகதிகளை உள்வாங்கும் விடயத்தில் ஆதரவு கொடுப்பதற்கும், பிணை நிற்றபதற்கும் பெருமளவான மக்கள் நகர மன்றங்களில் கூடுவதனை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சிரிய அகதிகளுக்கு உதவும் திட்டங்கள் தொடர்பில் நகரபிதாக்கள் ஆலோசனை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

றிச்மண்ட் ஹில் பகுதி பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted: 12 Sep 2015 10:05 AM PDT

y

yறிச்மண்ட் ஹில் பகுதி காட்டோரத்தில் நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

athurst Street மற்றும் Major MacKenzie Drive பகுதியில், McCallum Driveவில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஆறு மணியளவில் குறித்த அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த பெண்ணின் சடலத்தை காணுற்ற ஒருவர் நேற்று மாலை 6.15 அளவில் தமக்கு முறைப்பாடு செய்ததனை அடுத்து தாம் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.y

விசாரணை மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதனால் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட முடியவில்லை என தெரிவித்துள்ள காவல்த்துறையினர், எதிர்வரும் நாட்களில் மீட்கப்பட்ட அந்த சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 26ஆம் திகதி Vaughan பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்னமும் கண்டுபிக்கப்படாத பெண்ணுடைய சடலமாக இது இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

The post றிச்மண்ட் ஹில் பகுதி பெண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேரிக்காயின் பலன்கள்

Posted: 12 Sep 2015 08:33 AM PDT

o9j

o9jநாம் அதிகம் சாப்பிடாத பழங்களும் பல ஆரோக்கிய மகத்துவங்களை தங்களுக்குள் புதைத்திருக்கின்றன. அந்த வகையில், பேரிக்காயிலும் அதிக மருத்துவ நன்மைகள் உண்டு.

பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். 100 கிராம் பேரிக்காயில் 3.1 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், லூட்டின், சிசான்தின் போன்ற சத்துகளும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி 2 போன்ற வைட்டமின்களும் கணிசமாக உள்ளன.

இவை தவிர பி குரூப் வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், போலேட் போன்றவையும் பேரிக்காயில் மிகுதியாக காணப்படுகின்றன.

சரி, பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன?

தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.o9j

ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு பழம் வீதம் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இளந்தாய்மார்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

100 கிராம் பேரிக்காய் துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பேரிக்காயை அப்படியே சாப்பிடுவது அல்லது ஜூஸ் ஆக தயாரித்துச் சாப்பிடுவது அவரவர் விருப்பம்.

ஆனால் எப்படி இருந்தாலும் பேரிக்காயை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்ல பல நன்மைகளை நமக்கு வழங்கும்.

The post பேரிக்காயின் பலன்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுவாச பிரச்னைகளுக்கு தீர்வாகும் யூகலிப்ட்ஸ்

Posted: 12 Sep 2015 08:30 AM PDT

iu

iuமிக உயரமான மரமான யூகலிப்ட்ஸ், சிறந்த நுண்ணுயிர் எதிரியாகும்.

இலைகளும், வேர்களும் மருத்துவ குண நலன்கள் கொண்டவை. நறுமணம் கொண்ட இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் எளிதில் ஆவியாகக் கூடியது.

யூகலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய்காகவும், ரெசினிற்காகவும், மரத்திற்காகவும் பெருமளவு பயிரிடப்படுகிறது.

உலகிலுள்ள மிக உயரமான மரங்களில் இவ்வகை ஒன்று. இதன் இலைகள் விறைப்பாகவும், தோல் போலவும் பல வடிவங்களில் இருக்கும். இதன் மலர்கள் பம்பர வடிவில் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும்.

கப்பல் கட்ட, தரைபோட, கருவிகள் செய்ய இம்மரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பசை போன்ற ரெசின் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிற மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஒப்பனைப் பொருள்கள் செய்வதிலும், சோப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.iu

காயங்களில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் சீழ்வடிதலைக் தடுக்கும். உடலில் வெப்பமுண்டாக்குவதால் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும்.

இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள எண்ணெய் தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து.

மேலும் இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

The post சுவாச பிரச்னைகளுக்கு தீர்வாகும் யூகலிப்ட்ஸ் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™