மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் பாக்.–சீன படைகள் தாக்குதல் நடத்தும் எல்லைப்பகுதிக்கு ராஜ்நாத்சிங் பயணம்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரமாக உயர்வு: சம்பள தகுதி வரைமுறை அதிகரிப்பு
- தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
- மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்: செயல்படாத மந்திரிகளை நீக்க முடிவு
- மும்பை உள்பட மராட்டியம் மாநிலம் முழுவதும் திடீர் மழை
- ராஜ்பவன் கதவுகள் தமிழர்களுக்காக திறந்தே இருக்கும்: மராட்டிய மாநில தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கவர்னர் பேச்சு
- கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி, மின்தட்டுப்பாட்டுக்கு மாநில அரசே காரணம்: பாஜக குற்றச்சாட்டு
- ஐ.நா. சபையின் அலுவல் மொழியாக இந்தியை அங்கீகரிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
- போலி விமான டிக்கெட் மூலம் லண்டன் செல்ல முயன்ற 2 பேர் கைது
- ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் வாகித் சேக் விடுதலையை எதிர்த்து அப்பீல்: மராட்டிய அரசு முடிவு
- பள்ளிக்குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்காவிட்டால் நடவடிக்கை: மும்பை ஐகோர்ட்
- தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: இளங்கோவன் பேட்டி
- வைரல் புகைப்படம்: பாதுகாப்பு அதிகாரியின் முதுகில் சவாரி செய்யும் ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சத்தியபிரியாவுக்கு மீண்டும் பணி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ம.பி. கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
- விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை விலக்கு வேண்டாம்: மத்திய அரசுக்கு ராபர்ட் வதேரா கோரிக்கை
- உண்ணாவிரத போராட்டம் நடத்திய 2 புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: ரஷ்ய ஜனாதிபதி புதின் இரங்கல்
- லீ சியன் லூங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
- வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது
| காஷ்மீரில் பாக்.–சீன படைகள் தாக்குதல் நடத்தும் எல்லைப்பகுதிக்கு ராஜ்நாத்சிங் பயணம் Posted: 12 Sep 2015 10:47 PM PDT பாகிஸ்தான் படைகள் அத்துமீறி காஷ்மீரில் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இருநாடுகளிடைடயே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை தணிப்பதற்காக இந்தியா– பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் டெல்லியில் பேச்சு நடத்தினார்கள். இதில் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகள் தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த கூட்டத்தை |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரமாக உயர்வு: சம்பள தகுதி வரைமுறை அதிகரிப்பு Posted: 12 Sep 2015 10:30 PM PDT மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.3,500 போனஸ் வழங்கப்பட்டு வந்தது. அதை ரூ.7 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. போனஸ் பெறுவதற்கு அடிப்படை சம்பளம் தகுதி வரையரை ரூ.10 ஆயிரமாக இருந்தது. அது ரூ.21 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. |
| தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை Posted: 12 Sep 2015 10:30 PM PDT இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன. பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. |
| மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்: செயல்படாத மந்திரிகளை நீக்க முடிவு Posted: 12 Sep 2015 10:24 PM PDT மத்திய மந்திரிசபையில் பிரதமர் தவிர மொத்தம் 64 மந்திரிகள் உள்ளனர். இவர்களில் 26 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 13 பேர் தனி பொறுப்பு மந்திரிகளாகவும், 25 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் இருக்கின்றனர். இவர்களில் சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமிக்க பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்து உள்ளார். இதற்காக அனைத்து மந்திரிகள் நடவடிக்கைகளும் தற்போது ஆய்வு |
| மும்பை உள்பட மராட்டியம் மாநிலம் முழுவதும் திடீர் மழை Posted: 12 Sep 2015 08:57 PM PDT மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் அளவு குறைந்து வருவதால் மாநகராட்சி சார்பில் மும்பையில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம், வணிகவளாகம், ஓட்டல்களுக்கு 50 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 12 Sep 2015 08:49 PM PDT மராட்டிய மாநில தமிழ்ச்சங்கத்தின் 3-ம் ஆண்டு விழா நேற்று மாலை கிங்சர்க்கிளில் உள்ள சண்முகானந்தா கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் எஸ்.அண்ணாமலை தலைமை தாங்கினார். ராகுல் செவாலே எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டார். கவுரவ அழைப்பாளர்களாக தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சஞ்சய் தீனா பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். |
| கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி, மின்தட்டுப்பாட்டுக்கு மாநில அரசே காரணம்: பாஜக குற்றச்சாட்டு Posted: 12 Sep 2015 08:18 PM PDT விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்காகவும், விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் பா.ஜனதாவினர் மாநிலம் முழுவதும் விவசாய யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த விவசாய யாத்திரை நேற்று மங்களூருவில் இருந்து குடகிற்கு வந்தது. குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகருக்கு வந்த விவசாய யாத்திரையை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கு நடந்த விழிப்புணர்வு கூட்டத்தை பா.ஜனதா மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- |
| ஐ.நா. சபையின் அலுவல் மொழியாக இந்தியை அங்கீகரிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம் Posted: 12 Sep 2015 08:14 PM PDT மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் நடைபெற்ற மூன்று நாள் இந்தி மொழி மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், 'இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்ததாக கூறப்படுவது தவறான கருத்தாகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பரந்து வாழும் மக்களை இணைக்கும் பொதுமொழியாக இந்தி விளங்கி வருகின்றது. |
| போலி விமான டிக்கெட் மூலம் லண்டன் செல்ல முயன்ற 2 பேர் கைது Posted: 12 Sep 2015 07:50 PM PDT பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ். இவரின் பேரன் லிஸ்பன் லோபஸ். இவர்கள் லண்டன் செல்ல மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். இதன்பின்னர் விமான நிலையத்தில் வழக்கமான சோதனைகள் அனைத்தும் முடிந்ததும் கோவாவில் இருந்து மும்பை வழியாக லண்டன் செல்லும் விஸ்திரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். |
| Posted: 12 Sep 2015 07:46 PM PDT மும்பை நகரில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி தொடர்ச்சியாக 8 நிமிட இடைவெளியில் 7 மின்சார ரெயில்களில் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. முதல் வகுப்பு பெட்டியை குறிவைத்து அரங்கேறிய இந்த சம்பவத்தில், 188 பேர் பலியானார்கள். 829 பேர் பலத்த காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மும்பை மோக்கா கோர்ட்டில், கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். 12 பேர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபணமானதால், அவர்களை குற்றவாளி என்று அறிவித்தார். |
| பள்ளிக்குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்காவிட்டால் நடவடிக்கை: மும்பை ஐகோர்ட் Posted: 12 Sep 2015 07:22 PM PDT பள்ளிக்குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்காவிட்டால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்து உள்ளது. சமூக ஆர்வலர் சுவாதி பட்டேல் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புத்தகப்பை சுமை அதிகளவில் இருப்பதால் பள்ளிக்குழந்தைகளின் முதுகு, கழுத்து ஆகிய பகுதிகள் பாதிப்படைகின்றன என கூறியிருந்தார். மேலும் இதுகுறித்த டாக்டர்களின் அறிக்கையும் சமர்ப்பித்தார். |
| தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: இளங்கோவன் பேட்டி Posted: 12 Sep 2015 05:20 PM PDT டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பை தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "நான் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோபிநாத், கட்சி |
| வைரல் புகைப்படம்: பாதுகாப்பு அதிகாரியின் முதுகில் சவாரி செய்யும் ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. Posted: 12 Sep 2015 04:13 PM PDT ஒரு சிறிய ஓடையை கடப்பதற்காக தனது பாதுகாப்பு அதிகாரியின் முதுகில் சவாரி செய்யும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. |
| Posted: 12 Sep 2015 03:53 PM PDT திருச்சியில் போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றியவர் ஐ.பி.எஸ். அதிகாரி சத்திய பிரியா. இவர் சூடான் நாட்டில் ஐ.நா. சபையின் அமைதிப்படையில் பணியாற்ற விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றார். அந்தப் பணியில் சேருமாறு அவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் தமிழக |
| ம.பி. கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு Posted: 12 Sep 2015 03:50 PM PDT மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்லவாட் நகர் பஸ் நிலையத்துக்கு அருகே ராஜேந்திர கசாவா என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இவர் பாறைகள் நிறைந்த பகுதியில் கிணறு தோண்டுவதற்காக, வெடிபொருட்கள் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருந்தார். |
| விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை விலக்கு வேண்டாம்: மத்திய அரசுக்கு ராபர்ட் வதேரா கோரிக்கை Posted: 12 Sep 2015 01:06 PM PDT சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்புக்குரிய மிக முக்கிய தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு இந்த சலுகை உண்டு. |
| உண்ணாவிரத போராட்டம் நடத்திய 2 புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி Posted: 12 Sep 2015 01:00 PM PDT மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: ரஷ்ய ஜனாதிபதி புதின் இரங்கல் Posted: 12 Sep 2015 11:44 AM PDT மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ளது பெட்லாவாத் நகரம். இங்குள்ள பஸ் நிலையம் அருகே அகமதாபாத் சாலையில் 3 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இதன் கீழ் பகுதியில் சாப்பாடு ஓட்டல் இயங்கி வந்தது. |
| லீ சியன் லூங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Posted: 12 Sep 2015 10:15 AM PDT சிங்கப்பூர் பாராளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 89 தொகுதிகளில் 83 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். |
| வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது Posted: 12 Sep 2015 08:34 AM PDT வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தெலுங்கானா மாநிலத்தில் கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரியே சிலைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரங்கல் மாவட்டம் பர்லபள்ளியில் புகழ்பெற்ற சென்னகேசவ சுவாமி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |