Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


2ஜி வழக்கு: வழக்கறிஞர் வேணுகோபாலை நீக்கிய மத்திய அரசுக்கு 'குட்டு'

Posted:

புதுடில்லி: இந்தியாவையே உலுக்கிய, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க இயக்குனரகம் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை அப்பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீக்கியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இவ்வழக்கு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக, வேணுகோபாலை, மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 'பெஞ்ச்' முன், விசாரணைக்கு ...

'லட்சுமண ரேகையை தாண்டாதீர்': டிவி சேனல்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

Posted:

புதுடில்லி:''யாகூப் மேமன் துாக்கிலிடப்பட்டபோது, சில, 'டிவி' சேனல்கள், தங்களின் வரம்பை மீறி செயல்பட்டுள்ளன. இதனால், அந்த சேனல்களுக்கு எதிராக, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது,'' என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர் கூறினார். டில்லியில், 'சமூக வலைதளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் வரம்பும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர் பேசியதாவது:சமூக வலைதளங்களின் பயன்பாடு, தற்போதைய சமுதாயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுமக்கள், ...

ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு: ஜெ., பெருமிதம்

Posted:

சென்னை:''சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் இலக்கான, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னை வர்த்தக மையத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:இந்த மாநாட்டிற்கு, 15 நாடுகளில் இருந்து, 1,000 பேரும், நம் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, 4,000 பேரும் வந்துள்ளனர். ஆடைகள் மற்றும் தோல் உற்பத்தி, தானியங்கி இயந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி, மிகு திறன் பொறியியல் மின்நுட்ப உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பணிகள், ...

கட்டமைப்பு வேண்டும்; சலுகை தேவை இல்லை!

Posted:

சென்னை:'எங்களுக்கு, சிறந்த தொழிலாளர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் தான் அத்தியாவசியம்; சலுகைகள் எல்லாம் கடைசி கட்டம் தான்' என, அன்னிய முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். 26,000 தொழிற்சாலைகள்சென்னையில், நேற்று துவங்கிய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் நடந்த, 'உலக ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்களின் தலைமையகம்' என்ற கருத்தரங்கில், 'ஹுண்டாய்' நிறுவன இயக்குனர் எஸ்.எச்.ஓஹ், அசோக் லேலண்ட் மேலாண் இயக்குனர் வினோத் தாசரி, பாஷ் நிறுவன மேலாண் இயக்குனர் ஸ்டெபன் பெர்ன்ஸ், விஸ்டியான் ஆட்டோமோட்டிவ் மேலாண் இயக்குனர் யாங் வூ நாம் உட்பட, பல முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ...

கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி

Posted:

சென்னை:கட்டாய, 'ஹெல்மெட்' தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.'இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியவில்லை என்றால், ஆவணங்களை பறிமுதல் செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கழுத்து வலி:
இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன், 14ல், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிம்மு வசந்த் என்பவர் தாக்கல் செய்த மனு: மூச்சு திணறல், கழுத்து வலி, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் ...

ஜி.எஸ்.டி.,க்காக சிறப்பு கூட்டம் இல்லை: மத்திய அரசு முடிவு

Posted:

மத்திய அரசின், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு எனப்படும், ஜி.எஸ்.டி., மசோதாவுக்காக, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்டும் திட்டம், கைவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள, முட்டுக்கட்டையால், வேறு வழியின்றி, மழைக்கால கூட்டத்தொடரை முடித்து வைக்கும்படி, ஜனாதிபதியிடம், மத்திய அரசு, கோரிக்கை வைக்கவுள்ளது.

பலனளிக்காமல்...:
ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கடந்த, மழைக்கால கூட்டத்தொடரின் போது, பார்லிமென்டில், இம்மசோதாவை நிறைவேற்ற, ...

தென் மாவட்டங்களில் தொழில் துவக்க தமிழக அரசு சலுகை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா அறிவிப்பு

Posted:

சென்னை:சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நேற்று கோலாகலமாக துவங்கியது; இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மாநாட்டில் நேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, ''தென் மாவட்டங்களில், தொழில் துவக்க முன்வரும் நிறுவனங்களுக்கு,முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்,'' என அறிவித்தார்.தமிழகத்திற்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய், அன்னிய முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள், ஓராண்டாக நடந்து வந்தன. அறிவித்தபடி, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக ...

தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு: சவுதி அரசு மறுப்பு

Posted:

புதுடில்லி:நேபாளத்தைச் சேர்ந்த தாயையும், மகளையும், பூட்டிய வீட்டுக்குள் வைத்து, மூன்று மாதங்களுக்கும் மேலாக, தங்கள் நாட்டைச் சேர்ந்த துாதரக அதிகாரி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது. டில்லியில் உள்ள சவுதி அரேபிய துாதரகத்தில், உயர் அதிகாரியாக பணிபுரியும் ஒருவரின் வீடு, அரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. இந்த வீட்டில், நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும்தகவல்கள் ...

அழகிரிக்கு எதிராக பேட்டி கொடுக்கலாமா: மதுரை நிர்வாகிகளை கண்டித்த கருணாநிதி

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக கூட்டம் நடத்தியதோடு, அவருக்கு எதிராக பேட்டியளித்த கட்சி நிர்வாகிகளை, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடுமையாக கண்டித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'மக்கள் ஆய்வு மையம்' சார்பில், சமீபத்தில் வெளியிடப்பட்ட, தேர்தல் கருத்து கணிப்பு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் விமர்சனத்தை தெரிவித்தார். இது தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், தன் அதிருப்தியையும், விளக்கத்தையும் அளித்தார்.இந்நிலையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம், தமிழரசி, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™