Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.,வில் பணிகள் ஆரம்பம்: தொகுதிக்கு 3 பேர் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

Posted:

சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை, அ.தி.மு.க., மேலிடம் துவக்கி உள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக, ஒரு தொகுதிக்கு, மூன்று பேரை பரிந்துரைக்கும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதற்கு முன், நிலுவையில் உள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல், இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. மாவட்ட செயலர்கள் தவிர்த்து, மற்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ள தால், அ.தி.மு.க., வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஓட்டுச்சாவடிக்கு...:
இதுகுறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, ...

இந்தியா போருக்கு வந்தால்... பாக்., தளபதி கொக்கரிப்பு

Posted:

இஸ்லாமாபாத்: ''இந்தியா போருக்கு வந்தால், தாங்க முடியாத பேரிழப்பை சந்திக்க நேரிடும்,'' என, பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த, 1965ல் நடைபெற்ற, இந்தியா - பாக்., போரின், 50ம் ஆண்டு விழா, ராவல்பிண்டியில் உள்ள, ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், ராணுவ வீரர்கள் மத்தியில், ரஹீல் ஷரிப் பேசியதாவது:

பெருத்த இழப்பு:
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க, பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது; எதிரி, தப்பு கணக்கு போட்டு போரில் குதித்தால், தாங்க முடியாத விலையை ...

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்

Posted:

தமிழகத்தில் முதன்முறையாக, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் நாளை துவங்குகிறது.'தமிழகத்தில் தொழில் துவங்கும்படி, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க, சென்னையில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்' என, 2013ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக, தமிழக அரசு சார்பில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, பல குழுக்களும் அமைக்கப்பட்டன.தொழில் துறை அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வரும்படி அழைப்பு விடுத்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகள் ...

வெளியான செய்திகளில் மன்மோகனை மோடி முந்தினார்: வெளிநாட்டு பத்திரிகைகளில் ஏராள கட்டுரைகள்

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்து, வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்திகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வெளியான செய்திகளை விட அதிகமாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.'டூரிஸ்ட் பிரதமர்' என, பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் வசைபாடுகின்றன. அதிகமாக அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பதற்காக அவரை அவ்விதம் சாடுகின்றன, அந்த கட்சிகள்.மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டே ஆகியுள்ள நிலையில், அமெரிக்கா, சீனா, கனடா, வளைகுடா நாடுகள் என, ...

அரசியல்வாதிகளுக்கு மதிப்பும், மரியாதையும் தந்தே ஆக வேண்டும்: கெஜ்ரிவால் 'அந்தர்பல்டி'

Posted:

டில்லி முதல்வராக இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவால், ஒருகாலத்தில், அரசியல்வாதிகளை 'அயோக்கியர்கள்' என்றும், 'திருடர்கள்' என்றும், மேடைகள் தோறும் முழங்கியவர். தற்போது அவரே, அரசியல்வாதிகளுக்கு மதிப்பும், மரியாதையும் தந்தே ஆக வேண்டுமென, மாநில அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையாக திட்டினார்:
கெஜ்ரிவால், அரசியலுக்கு வருவதற்கு முன், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து, ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது, மேடைகள் தோறும், அரசியல்வாதிகளை கடுமையாக திட்டித் தீர்த்தார். எந்த ஒரு ...

'ரூ.4 லட்சம் கோடி கடனில் தமிழகம்': விஜயகாந்த்

Posted:

சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பதவி ஏற்ற போது, அரசின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; தற்போது, 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அரசு போக்குவரத்து துறையிலும், மின் வாரியத்திலும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அதிகமாக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடனில், தமிழகம் சிக்கி தவிக்கிறது.இப்படி, தமிழகத்தின் கடன் சுமை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போனாலும், அரசின், 'டாஸ்மாக்'கிற்கு, 'மிடாஸ்' மது ஆலையிலிருந்து ...

அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை: அரசு ஆதரிக்க கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:உலகப் புகழ் பெற்ற, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், மூன்று கோடி மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு, இரண்டு இருக்கைகள் உள்ளன; 15 லட்சம் மக்கள் பேசக்கூடிய, 'செல்டிக்' மொழிக்கும் இருக்கைகள் உள்ளன. அதேபோல, 'ஹீப்ரு, சமஸ்கிருதம்' உட்பட, பல மொழிகளுக்கும், இருக்கைகள் இருக்கின்றன.ஆனால், எட்டு கோடி மக்கள் பேசும் செம்மொழியான தமிழ் மொழிக்கு, அங்கே இருக்கை இல்லை. தற்போது, தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் இறங்கி, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளனர்.அதேபோல, உ.பி., ...

முடங்கியுள்ள விமான நிலையங்கள் செயல்படுமா?

Posted:

'நாடு முழுவதும் செயல்படாமல் உள்ள சிறு விமான நிலையங்களை அப்படியே வீணாக வைத்திருக்காமல், குறைந்த கட்டண விமான போக்கு வரத்திற்காக பயன்படுத்தவும், விமானங்களை நிறுத்தி வைக்கவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

உள்கட்டமைப்பு:
நாடு முழுவதும், சிறியதும், பெரியதுமாக, 33 விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இந்த விமான நிலையங்களில், விமானங்கள் இறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும், லாபமின்மை, பயணிகள் வரத்து குறைவு போன்ற பல காரணங்களால் ...

ரூ.7 கோடி கட்டடம் வாங்க மாணவியரிடம் வசூல் வேட்டை?

Posted:

சேலம்: சேலத்தில், 7 கோடி ரூபாய் கட்டடத்தை வாங்க, தலா, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, மாணவியரை, தனியார் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.சேலம், ராமகிருஷ்ணா சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல், பிளஸ்2 வரை, 3,800 மாணவியர் வரை, படிக்கின்றனர். உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளிக்கு அருகிலேயே, 7 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கட்டடத்தை வாங்க, பள்ளி நிர்வாகம் விரும்புகிறது. இதற்காக, அனைத்து மாணவியரின் பெற்றோரையும் வரவழைத்து, பள்ளி முதல்வர் நோரா ...

எங்கிருந்தாலும் அழிப்போம் என்றவர் திடீர் 'பல்டி'

Posted:

புதுடில்லி: 'இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தாக்கி அழிப்போம்' என, மத்திய இணைஅமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார். அதற்கு பாகிஸ்தான் அளித்துள்ள பதிலில், 'இதுபோன்று பேசுவது பொறுப்பற்ற செயல்' என தெரிவித்து உள்ளது.தனியார், 'டிவி' ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அமைச்சர் ரத்தோர் கூறியதாவது:மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் ஆகியோர், தங்களை இந்தியா வால் ஒன்றும் செய்ய முடியாது என, நினைத்துக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™