Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


12இல் தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 07 Sep 2015 12:56 PM PDT

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இம் மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

கட்டடம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி சாத்தான்குளத்தில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 07 Sep 2015 12:55 PM PDT

சாத்தான்குளம் நீதிமன்றக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை முதல் 2 நாள்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உடன்குடி அனல்மின் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 07 Sep 2015 12:55 PM PDT

உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

"இயந்திர நெல் நடவுக்கு மானியம் பெறலாம்'

Posted: 07 Sep 2015 12:54 PM PDT

திருச்செந்தூர் வட்டார விவசாயிகள், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்தால் அரசு மானியம் பெறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆறுமுகனேரி பள்ளியில் கலைத்திறன் போட்டி

Posted: 07 Sep 2015 12:54 PM PDT

ஆறுமுகனேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான கிட்ஸ் பெஸ்ட் எனும் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.

வேப்பங்காடு பள்ளியில் இருபெரும் விழா

Posted: 07 Sep 2015 12:53 PM PDT

உடன்குடி அருகேயுள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் நினைவு பள்ளியில் 23ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றன.

ஆறாம்பண்னை பள்ளியில் ஆசிரியர் தின விழா

Posted: 07 Sep 2015 12:52 PM PDT

ஆறாம்பண்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருநெல்வேலி ஒலிவா பவுன்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

கோவில்பட்டி கல்லூரியில் இன்று தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

Posted: 07 Sep 2015 12:51 PM PDT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறும் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு செவ்வாய்க்கிழமை (செப். 8) தொடங்குகிறது.

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை விழா

Posted: 07 Sep 2015 12:51 PM PDT

எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் ஆவணி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: ஆதித் தமிழர் பேரவையினர் கைது

Posted: 07 Sep 2015 12:50 PM PDT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் கோயிலில் கோகுலாஷ்டமி பூஜை

Posted: 07 Sep 2015 12:49 PM PDT

சாத்தான்குளம் செல்வவிநாயகர் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ. 1.50 கோடியில் புதிய அறுவை அரங்குகள்

Posted: 07 Sep 2015 12:49 PM PDT

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் சீமாங் அறுவை அரங்கம், 24 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்புப் பிரிவு, ரூ. 30 லட்சத்தில் 4 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு ஆகியன கட்டப்பட்டுள்ளன.

அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 07 Sep 2015 12:48 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அதிமுக வாக்குச்சாவடி வாக்கு சேகரிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

Posted: 07 Sep 2015 12:48 PM PDT

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே மீனவரைத் தாக்கிய 5 பேர் கைது

Posted: 07 Sep 2015 12:46 PM PDT

விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரத்தில் மீனவரை கடத்திச் சென்று ஆயுதங்களால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இச் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் 19 குடிசைப் பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படும்: ஆட்சியர்

Posted: 07 Sep 2015 12:45 PM PDT

தூத்துக்குடி நகரில் 19 குடிசைப் பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்தார்.

கடலையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Posted: 07 Sep 2015 12:44 PM PDT

கடலையூரில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

மதுவுக்கு எதிராக தமாகா கையெழுத்து இயக்கம்

Posted: 07 Sep 2015 12:44 PM PDT

மதுவில்லா தமிழகம் அமைய வேண்டி தமாகாவினர் ஞாயிற்றுக்கிழமை ஆத்தூரில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

டாஸ்மாக் கடையில் திருட்டு

Posted: 07 Sep 2015 12:43 PM PDT

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Sep 2015 12:43 PM PDT

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்

Posted: 07 Sep 2015 12:42 PM PDT

குளத்தூர் பகுதியில் சிப்காட்: எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

Posted: 07 Sep 2015 12:42 PM PDT

குளத்தூர் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அனைவருக்கும் எழுத்தறிவு - எப்போது சாத்தியம்?

Posted: 07 Sep 2015 12:38 PM PDT

உலக அளவில் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. உலகமே கணினிமயமாகிவிட்டது.

மரண தண்டனையும் பயங்கரவாதமும்

Posted: 07 Sep 2015 12:37 PM PDT

பயங்கரவாதம், தேசத் துரோகம் ஆகியவை தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு அதிக அளவு தண்டனையான மரண தண்டனை தேவையில்லை என்று

துப்புரவுப் பணியாளர் நலச் சங்க கூட்டம்

Posted: 07 Sep 2015 12:35 PM PDT

குமரி மாவட்ட பேரூராட்சிகளின் துப்புரவுப் பணியாளர் நலச் சங்க கூட்டம், அதன் தலைவர் மு.சுடலை தலைமையில் தக்கலையில் நடைபெற்றது.  

ஐரோப்பாவில் அகதிகள்!

Posted: 07 Sep 2015 12:35 PM PDT

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவுக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

குமரியில் சாரல் மழை நீடிப்பு

Posted: 07 Sep 2015 12:34 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

12 இல் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி: ஆட்சியர்

Posted: 07 Sep 2015 12:34 PM PDT

மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 12 ஆம் தேதி அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

குலசேகரம் அருகே வீட்டின் மீது மரம் விழுந்து தொழிலாளி காயம்

Posted: 07 Sep 2015 12:31 PM PDT

குலசேகரம் அருகே திங்கள்கிழமை வீட்டின் மீது மரம் விழுந்தில் தொழிலாளி பலத்த காயமுற்றார்.

பத்மநாபபுரம் தொகுதியில் ஆம் ஆத்மி பிரசாரம்

Posted: 07 Sep 2015 12:30 PM PDT

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் பிரசாரப் பயணம் செய்து துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை விநியோகம் செய்தனர்.

திருவிதாங்கோடு கல்லூரியில் தொலைக்காட்சி படம் திரையிடல்

Posted: 07 Sep 2015 12:30 PM PDT

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி காட்சி ஊடகத் துறையின் சார்பில், இயக்குநர் தாமிராவின் இயக்கத்தில் உருவான "மெஹர்' என்னும் தொலைக்காட்சித் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில் 308 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 07 Sep 2015 12:29 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 308 புள்ளிகள் சரிவடைந்து சென்செக்ஸ் 25,000 நிலைக்கும் குறைவாக முடிவுற்றது.

திற்பரப்பு பேரூராட்சியில் வீணாகும் குடிநீர்

Posted: 07 Sep 2015 12:29 PM PDT

திற்பரப்பு பேரூராட்சியில் குடிநீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இரு வாரங்களாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் கூட்டுச் செயல்பாடு: ரிலையன்ஸ் குழுமத்துடன் தோஹா வங்கி ஒப்பந்தம்

Posted: 07 Sep 2015 12:28 PM PDT

அரபு வளைகுடா நாடுகளில் கூட்டாகச் செயல்பாடுகள் தொடங்குவது குறித்து அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன்

ரீத்தாபுரத்தில் நாளை மனுநீதி முகாம்

Posted: 07 Sep 2015 12:28 PM PDT

குமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சி இரும்புலி அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (செப்.9) நடைபெறுகிறது.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்த தொகையில் 5 சதவீத சரிவு

Posted: 07 Sep 2015 12:28 PM PDT

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்த தொகையில் ஆகஸ்ட் மாதம் 5 சதவீத சரிவு ஏற்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அருமனை அரசுப் பள்ளியில் இருபெரும் விழா

Posted: 07 Sep 2015 12:28 PM PDT

அருமனை அரசுப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

"இ-வர்த்தக வாடிக்கையாளர் நலனுக்கு தனிச் சட்டம் தேவை'

Posted: 07 Sep 2015 12:27 PM PDT

இணையதளம் வழியாக வர்த்தகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் விதமாகத் தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று

ஏதென்ஸில் 2,500 அகதிகள் வருகை

Posted: 07 Sep 2015 12:27 PM PDT

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸýக்கு திங்கள்கிழமை 2,500 அகதிகள் வந்ததாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டு மாடி தோட்டங்களில் பூச்சி மருத்து தெளிக்காமல் காய்கனி சாகுபடி சாத்தியம்!: கைகொடுக்கிறது கதம்பைத்தூள்

Posted: 07 Sep 2015 12:26 PM PDT

கதம்பைத்தூள் உரத்தைப் பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்காமல் வீட்டு மாடித் தோட்டங்களில் காய்கனிகள் சாகுபடி செய்யலாம் என மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் என். தமிழ்குமார் தெரிவித்துள்ளார்.

சிரியா அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம்

Posted: 07 Sep 2015 12:26 PM PDT

சிரியா அகதிகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் அளிக்கும் என்று பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

கிள்ளியூரில் ரூ.1.5 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

Posted: 07 Sep 2015 12:25 PM PDT

கிள்ளியூரில் ரூ. 1. 5 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

குர்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏராளமான துருக்கி வீரர்கள் சாவு

Posted: 07 Sep 2015 12:25 PM PDT

துருக்கியில் குர்து கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஏராளமான துருக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக

ஈரான்: பேருந்து கவிழ்ந்து 11 இராக்கியர்கள் பலி

Posted: 07 Sep 2015 12:24 PM PDT

ஈரானில் புனிதப் பயணம் மேற்கொண்ட இராக்கியப் பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

பிரேசில் சாலை விபத்து: 15 பேர் பலி

Posted: 07 Sep 2015 12:23 PM PDT

இதையடுத்து பாராடி நகரை நோக்கி அதிக அளவில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

வங்கதேச தேசிய மதமாக இஸ்லாம்: ஆட்சேப மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted: 07 Sep 2015 12:23 PM PDT

வங்கதேசத்தின் தேசிய மதமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில்

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் சாவு

Posted: 07 Sep 2015 12:22 PM PDT

முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தான் நிகழ்த்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ரவிபுதூர் கடை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு

Posted: 07 Sep 2015 12:22 PM PDT

குமரி மாவட்டம் ரவிபுதூர் கடை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு நடந்துள்ளது.

18 வயதுக்கு உள்பட்டோருக்கான காமன்வெல்த்: முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம்

Posted: 07 Sep 2015 12:21 PM PDT

18 வயதுக்கு உள்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் 2 இந்திய வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.

களியக்காவிளை அருகே ஒப்பந்ததாரரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Posted: 07 Sep 2015 12:21 PM PDT

களியக்காவிளை அருகே ஊராட்சி ஒப்பந்ததாரரை தாக்கியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

ராஜபாளையத்தில் மாறுபட்ட விதிகளுடன் வட்ட கபடிப் போட்டி

Posted: 07 Sep 2015 12:20 PM PDT

தற்போது நடைபெற்று வரும் கபடி போட்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதிகளை உடைய வட்ட கபடிப் போட்டி

நாகர்கோவில்

Posted: 07 Sep 2015 12:20 PM PDT

சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

Posted: 07 Sep 2015 12:20 PM PDT

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் திங்கள்கிழமை வழங்கினார்.

சிறுமியை சித்திரவதை செய்ததாக கிரிக்கெட் வீரர் மீது புகார்

Posted: 07 Sep 2015 12:20 PM PDT

தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை சித்திரவதை செய்த புகாரில் வங்கதேச கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹுசைன் கைதாகும் சூழலில் உள்ளார்.

ஐரோப்பிய கால்பந்துப் போட்டி: ஐஸ்லேண்ட், செக் குடியரசு அணிகள் தகுதி

Posted: 07 Sep 2015 12:19 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு ஐஸ்லேண்ட், செக் குடியரசு அணிகள் தகுதி பெற்றன.

பள்ளி மாணவி தற்கொலை

Posted: 07 Sep 2015 12:18 PM PDT

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted: 07 Sep 2015 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.

சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்கள்

Posted: 07 Sep 2015 12:18 PM PDT

சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

யு.எஸ். ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்

Posted: 07 Sep 2015 12:16 PM PDT

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதவுள்ளனர்.

ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதில் இந்தியா பின்தங்கியுள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 07 Sep 2015 12:12 PM PDT

உலக அளவில் வளரும் நாடுகளில், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவதில் இந்தியா பின்தங்கி உள்ளது;

தாய்லாந்து குண்டு வெடிப்பு: 2 இந்தியர்களிடம் விசாரணை

Posted: 07 Sep 2015 12:12 PM PDT

தாய்லாந்து நாட்டின் புகழ்மிக்க ஹிந்துக் கோயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக 2 இந்தியர்களை அந்நாட்டு

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

Posted: 07 Sep 2015 12:11 PM PDT

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக சென்னை நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை

ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு

Posted: 07 Sep 2015 12:11 PM PDT

ஆரணியை அடுத்த பனையூரில் ரூ.38.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சேதமடைந்த சாலையைச் சீரமைக்க கோரிக்கை

Posted: 07 Sep 2015 12:11 PM PDT

வந்தவாசி அருகே சேதமடைந்துள்ள காரம்- தென்எலப்பாக்கம் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Sep 2015 12:11 PM PDT

சலவைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலையில் சலவைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் இணையச் சேவையின் வேகம் அக்.1 முதல் அதிகரிக்கிறது

Posted: 07 Sep 2015 12:11 PM PDT

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல், குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையச் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு

கல்விச் சான்றிதழ்களில் திருத்தம்: ஒருவர் கைது

Posted: 07 Sep 2015 12:10 PM PDT

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதிகளில் கல்விச் சான்றிதழ்களில் திருத்தங்கள் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறைதீர் கூட்டத்தில் 689 மனுக்கள்

Posted: 07 Sep 2015 12:10 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 689 மனுக்கள் வரப்பெற்றன.

நல்லாசிரியர் விருது அளிப்பு

Posted: 07 Sep 2015 12:10 PM PDT

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஒன்றியம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சி.பரிதா ரெகானா நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

காஷ்மீரில் முழு அடைப்பு: வெள்ளப் பாதிப்புகள் சீர்செய்யப்படவில்லை எனப் புகார்

Posted: 07 Sep 2015 12:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீரில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது.

"ரசாயனப் பூச்சு விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம்'

Posted: 07 Sep 2015 12:10 PM PDT

ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, அதுபோன்ற சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Sep 2015 12:09 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனியிடம் மனு கொடுத்தனர்.

கோட்டைமேடு கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

Posted: 07 Sep 2015 12:09 PM PDT

செங்கம் நகர் இராஜாஜி தெரு, எம்ஜிஆர் நகரில் உள்ள ஸ்ரீ கோட்டைமேடு மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

2ஜி முறைகேடு: பொதுக் கணக்குக் குழு அறிக்கை குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்

Posted: 07 Sep 2015 12:09 PM PDT

2-ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான பொதுக் கணக்குக் குழுவின் இறுதி அறிக்கையை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது

அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 07 Sep 2015 12:08 PM PDT

 திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர்களைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் ஆளுமைத் திட்ட விருதுக்கு செப்.11 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 07 Sep 2015 12:08 PM PDT

மாநில அளவிலான மின் ஆளுமைத் திட்ட விருதுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வருகிற 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னம்பட்டில் நாளை மனுநீதி முகாம்

Posted: 07 Sep 2015 12:08 PM PDT

செய்யாறை அடுத்த தென்னம்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (செப்.9) நடைபெறுகிறது.

கொலையானது ஷீனா போராதான்: தடயவியல் ஆய்வில் உறுதி; இந்திராணிக்கு செப்.21 வரை நீதிமன்றக் காவல்

Posted: 07 Sep 2015 12:08 PM PDT

மகாராஷ்டிரத்தின் ராய்கட் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், ஷீனா போராவுடையதுதான் என்பது

சமையலர் பணி: நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

Posted: 07 Sep 2015 12:08 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் மணல் குவாரிகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 07 Sep 2015 12:07 PM PDT

பாலாற்றை பாதுகாக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

காஷ்மீர்: பயங்கரவாதிகளின் முகாம் அழிப்பு

Posted: 07 Sep 2015 12:07 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் அமைத்திருந்த முகாம், பாதுகாப்புப் படையினரால்

அன்னை தெரசா நினைவு தினம்

Posted: 07 Sep 2015 12:07 PM PDT

அன்னை தெரசாவின் நினைவு தினம் ஆம்பூர் ஏ-கஸ்பா ஆக்ஸ்போர்டு பள்ளியில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.

போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் திறப்பு

Posted: 07 Sep 2015 12:06 PM PDT

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மணிப்பூரில் அமைதி திரும்புகிறது

Posted: 07 Sep 2015 12:06 PM PDT

மணிப்பூரில் மூண்ட கலவரத்தினால் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவிய நிலையில், அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில்

தொடரும் யானைகள் அட்டகாசம்

Posted: 07 Sep 2015 12:06 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் அட்டகாசம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவும் தொடர்ந்தது. நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் காப்புக் காட்டுப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி

அஸ்ஸாம் வெள்ளம்: பலி 41-ஆக உயர்வு

Posted: 07 Sep 2015 12:06 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி, ஞாயிற்றுக்கிழமை மேலும் 5 பேர் பலியாகினர்.

ரூ.1 லட்சம் நன்கொடை அளித்த பணி நிறைவு பெற்ற வி.ஏ.ஓ.

Posted: 07 Sep 2015 12:06 PM PDT

அன்பு இல்லம், கோயில், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ரூ.1 லட்சத்தை நன்கொடையாக பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) வழங்கினார்.

அமைச்சரவைக் குறிப்புகளை முன்கூட்டியே செயலாளருக்கு அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Posted: 07 Sep 2015 12:05 PM PDT

மத்திய அமைச்சரவை வரைவுக் குறிப்புகளை, அமைச்சரவைச் செயலாளருக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் என்று

குடிநீர் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Sep 2015 12:05 PM PDT

குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெருங்களத்தூர் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரயில்வேயில் தமிழ் தெரியாத ஊழியர்களை நியமிப்பதா?

Posted: 07 Sep 2015 12:05 PM PDT

ரயில்வே துறையில் தமிழ் தெரியாத ஊழியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் தேவை

Posted: 07 Sep 2015 12:05 PM PDT

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

பிகார் தேர்தல்: 6 இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி

Posted: 07 Sep 2015 12:05 PM PDT

பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதென 6 இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

சத்துவாச்சாரியில் மேம்பாலம் கட்டக் கோரிக்கை

Posted: 07 Sep 2015 12:04 PM PDT

சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் செங்குட்டுவனிடம் "டி-கார்ஸ்' தொண்டு நிறுவனம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

லாடவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு கட்டடம் திறப்பு

Posted: 07 Sep 2015 12:04 PM PDT

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட லாடவரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மகப்பேறு கட்டடம் திறக்கப்பட்டது.

2ஜி வழக்கு: இறுதி வாதம் செப். 10-க்கு ஒத்திவைப்பு  

Posted: 07 Sep 2015 12:04 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதத்தை வரும் 10-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெள்ளிக் கவசம் நன்கொடை

Posted: 07 Sep 2015 12:04 PM PDT

குடியாத்தம் சந்தப்பேட்டை ஸ்ரீசீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயில் மஹா சம்ப்ரோஷணத்தின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, மூலவருக்கு வெள்ளிக் கவசங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன.

3 அரசு உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்

Posted: 07 Sep 2015 12:03 PM PDT

ஆசனாம்பட்டு, அகரம், பெரியாங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, மாதனூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொலையான நிலையில் சடலம் மீட்பு

Posted: 07 Sep 2015 12:03 PM PDT

வேலூர் அருகே நெல்வாயில் தலைநசுங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

உதம்பூர் தாக்குதல்: பயங்கரவாதியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி

Posted: 07 Sep 2015 12:03 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சௌகத் அகமது பட்டிடம்

எல்லையில் மீண்டும் அத்துமீறல்: பாகிஸ்தான் குண்டுவீச்சில் கிராமவாசி பலி; 4 பேர் காயம்

Posted: 07 Sep 2015 12:02 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்தியக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™