Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சகாயத்திற்கு மீண்டும் மிரட்டல்: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Posted:

மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேடுகளை விசாரிக் கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்த, 20வது கட்ட விசாரணையில் சகாயம் ஈடுபட்டுள்ளார். அவரது குழு, இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மதுரை போலீஸ் நுண்ணறிவு பிரிவை போனில் தொடர்பு கொண்ட நபர், 'கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, சகாயம் தயாரிக்கும் அறிக்கையை அழித்து விடுவோம்; அவரையும் அழித்து விடுவோம்; அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேலுார் ...

2,000 புதிய பஸ்கள் இயக்கத்திற்கு வருவது எப்போது?

Posted:

புதிதாக, 7,153 பஸ்களுக்கு, அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், 5,094 பஸ்கள் மட்டுமே இயக்கத்திற்கு வந்துள்ளன; மீதமுள்ள, 2,059 பஸ்கள், இயக்கத்திற்கு வருவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், போக்குவரத்து கழகங்கள் சார்பில், இயக்கப்பட்ட பஸ்களில் பெரும்பாலானவை மோசமான நிலையில் இருந்தன. அதனால், 2011 - 12 பட்ஜெட்டில், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.ஓராண்டுக்குள், அந்த புதிய பஸ்கள் இயக்கத்திற்கு வராத நிலையில், 2012 - 13 பட்ஜெட்டில், 548 கோடி ரூபாய் செலவில், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற, அடுத்த அறிவிப்பு ...

தொழில்களுக்கு துறைமுக நிலங்கள் ஒதுக்கீடு :கூடுதல் வருவாய் திரட்ட மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி:நாட்டின் முக்கியமான, 12 துறைமுகங்கள் வசமுள்ள, மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தை முழுவதுமாக பயன்படுத்தி, துறைமுக நிர்வாகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வகை செய்ய, புதிய கொள்கையை மத்திய அரசு பின்பற்ற உள்ளது. அதன்படி, துறைமுகங்கள் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வசம், துறைமுகங்களின் அருகே உள்ள நிலங்கள், நீண்டகால அடிப்படையில் ஒப்படைக்கப்படும்; இதன்மூலம் கிடைக்கும் வருவாய், துறைமுகங்களின் வருவாயை பெருக்க உதவும்.

ரயில்வே துறை வசமுள்ள இடங்களில், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள இடத்தை, வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கி, கூடுதல் ...

40 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? காங்கிரசுக்கு மோடி கேள்வி

Posted:

பரிதாபாத்: ''முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும், சிலர், வி.ஆர்.எஸ்., எனப்படும், தானாக முன்வந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என, பீதியை கிளப்பி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் பொருந்தும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். மேலும், பீதிகளை கிளப்பி விடும் காங்கிரஸ், முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கைகளை, 40 ஆண்டு களுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது என கூறினார்டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கமாக, அரியானாவின், ...

ஐ.எஸ்., இயக்கத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு பிரசாரம்

Posted:

திருவனந்தபுரம்: ஐ.எஸ்., மற்றும் அல் - குவைதா பயங்கரவாத இயக்கங்களில், முஸ்லிம் இளைஞர்கள் சேராமல் தடுக்க, கேரளாவை சேர்ந்த, முஸ்லிம் அமைப்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றி வந்த, கேரளாவை சேர்ந்த இரு இளைஞர்கள், சமூக வலைதளங்களில், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தனர். இதையடுத்து, அவர்களை பிடித்த அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அதைத் தொடர்ந்து, கேரள மாநில போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த, 'கேரள நத்வதுல் முஜாகிதீன்' என்ற முஸ்லிம் அமைப்பு, ...

'அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்'

Posted:

சென்னை: 'காவிரி பிரச்னையில், தமிழக சட்டசபையின் அனைத்து கட்சி தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதா அழைத்து சென்று, பிரதமர் மோடிக்கு அழுத்தம் தர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு இன்னும் திறந்து விட வேண்டிய, 27.5 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு, பிரதமர் அறிவுரை வழங்கக்கோரி, முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல கடிதம் எழுதியுள்ளார்.கர்நாடக அரசிடம், நம் விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீரை தாருங்கள் என கேட்காமல், எதற்கெடுத்தாலும் ...

மக்களின் காதில் பூ சுற்றாதீங்க: அரசுக்கு விஜயகாந்த் அறிவுரை

Posted:

சென்னை : 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வரப்போவதாக, சுய தம்பட்டம் அடிக்கின்றனர்; இனியும், தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்ற முடியாது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அவரது நேற்றைய அறிக்கை:மத்திய புள்ளியில் துறையின், 2014 அறிக்கைப்படி, பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. தமிழகம் கடைசி இடத்திற்கு சென்றது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சுயநல நோக்கோடும், சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, 9, 10ம் ...

தொண்டு நிறுவனங்களிடம் 'அம்மா' உணவகங்கள்?

Posted:

மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள, 'அம்மா' உணவகங்களை, தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தலாமா என, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.ஏழை, எளியோர் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், முதன் முதலாக, சென்னையின், 19 இடங்களில், அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. பின், இந்த உணவகங்களின் எண்ணிக்கை, 252 ஆக அதிகரிக்கப்பட்டது. மக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.காலையில், ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு பொங்கல்; மதிய நேரத்தில், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், ...

வரி ஏய்ப்போர் பற்றி போட்டுக் கொடுத்தால் ரூ.15 லட்சம் பரிசு: கறுப்பு பண பதுக்கலை தடுக்க வருமான வரித்துறை அதிரடி

Posted:

புதுடில்லி:'வரி ஏய்ப்போர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும்' என, வருமானவரித் துறை அறிவித்து உள்ளது. கறுப்பு பண பதுக்கலை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள், 'டிபாசிட்' செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்க, பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரி செலுத்தாமல் ஏய்ப்போருக்கு எதிராக, சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பற்றிய தகவல் தெரிவிப்போரை ஊக்கப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டு ...

இந்தியா - பாக்., இடையே 9ம் தேதி பேச்சுவார்த்தை

Posted:

புதுடில்லி : இந்தியா - பாக்., நாடுகளைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், வரும், 9ல், பேச்சு நடத்தவுள்ளனர்.இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனாலும், பாக்., ராணுவத்தினர், இந்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது, அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.சமீபகாலமாக, பாக்., ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதனால், எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை, வரும், 9ல், துவங்குகிறது. இதில், எல்லையில் நடக்கும் ...

'ஏர் இந்தியா'வில் 800 பேர் நியமனம்

Posted:

புதுடில்லி:நஷ்டத்தில் இயங்கி வரும், அரசு நிறுவனமான, 'ஏர் இந்தியா' கூடுதலாக 800 ஊழியர்களை நியமித்து வருவதால், ஊதிய செலவு, மேலும் 100 கோடி ரூபாய் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.தனியார் விமான சேவை துறையினர் அளித்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஏர் இந்தியா நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. தொடர்ந்து இயங்க முடியாமல் திணறிய அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 2014 - 15ம் நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனம், 5,547 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. 2011 - 12ம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™