Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் காட்டில் பணமழை:விலை மேலும் குறையாததால் நுகர்வோர் விரக்தி

Posted:

மும்பை:கடந்த ஓர் ஆண்டில், கச்சா எண்ணெய் விலை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்த போதிலும், அதன் பயன், பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள், பெரிய அளவில், லாபமடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலை குறையாததால், பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவில், பாறைகளில் பொதிந்திருக்கும், 'ஷேல் காஸ்' எடுக்கப்பட்டு, அதிலிருந்து, பெட்ரோலிய பொருள் தயாரிக்கும் தொழில் நுட்பம் தீவிரப்படுத்தப்பட்டது.அதே சமயம், கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள வளைகுடா நாடுகள், தம் ...

விஜயகாந்துடன் சு.சாமி சந்திப்பு:சூடு பிடிக்கும் கூட்டணி பேரம்

Posted:

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, நேற்று சந்தித்துப் பேசினார். இது, தமிழக அரசியலில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. இருவரின் சந்திப்பு மூலம் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேரம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு வந்த, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து, அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, இருவரும் விவாதித்த விஷயங்கள் பற்றி, தே.மு.தி.க., ...

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரிக்கை ஏற்பு: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு சலுகை

Posted:

முன்னாள் ராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையான, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுள்ளது. இதன்மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை, அரசுக்கு கூடுதலாக செலவாகும்.ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென, முன்னாள் ராணுவ வீரர்கள், 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். சில மாதங்களாக இந்த போராட்டம் தீவிரமானது. டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில், 82 நாட்களுக்கும் மேலாக, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டு ...

சட்டம் - ஒழுங்கு மோசம்'தமிழகம் நம்பர் - 1': ஸ்டாலின் ஆவேசம்

Posted:

திருப்பூர் : ''சட்டம் - ஒழுங்கு மோசமான மாநிலங்களில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், மாதப்பூரில், 'முடியட்டும், விடியட்டும்' என்ற தலைப்பில், தி.மு.க., மண்டல மாநாடு நேற்று நடந்தது.இதில், ஸ்டாலின் பேசியதாவது:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது; அதன் தல வரலாறு, தற்போதைய நிலைக்கு பொருந்தியுள்ளது. முதலை வாயில் சிக்கிய பாலகனை, சுந்தரமூர்த்தி நாயனார் மீட்டார் என்பது, கோவில் வரலாறு.

தமிழகம் தத்தளிப்பு:
அதுபோல், அ.தி.மு.க., எனும் முதலை வாயில் சிக்கி, தத்தளித்துக் ...

தொடரும் மின் பற்றாக்குறை: அதிகாரிகள் கவலை

Posted:

அடுத்த வாரம், சென்னையில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ள நிலையில், தொடர் மின் பற்றாக்குறை ஏற்படுவது, அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 2008ல் அமல்படுத்தப்பட்ட மின்தடை, வல்லுார், வட சென்னை, மேட்டூர், கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து, அதிக மின்சாரம் கிடைத்ததால், கடந்த ஆண்டு ரத்தானது.இந்நிலையில், இம்மாதம், 1ம் தேதி - 570 மெகாவாட்; 3ம் தேதி - 850; 4ம் தேதி - 960 மெகாவாட் என, படிப்படியாக மின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், தொழில் முதலீடுகளை ஈர்க்க, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும், ...

'மத மோதலுக்கு சித்தாந்த திணிப்பே காரணம்': பிரதமர் மோடி பேச்சு

Posted:

புத்த கயா : ''மத ரீதியான மோதல்களுக்கு சித்தாந்த திணிப்பே காரணம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பீகாரில், புத்த கயாவில் உள்ள மகா புத்தர் கோவிலில், இந்து - புத்த மத மாநாடு நடந்தது. இதில், மோடி பேசியதாவது:டில்லியில், இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்து - புத்த மத மாநாட்டில், இரு மதங்களுக்கு இடையிலான மோதலை தவிர்த்து, அவற்றின் தத்துவங்கள், தொன்மை சிறப்புகள் ஆகியவற்றை, ஆசியாவை தாண்டி எடுத்துச் செல்வது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, பொருளாதாரத்திலும் கலாசார நிகழ்வுகளிலும், ஆசியா வேகமாக வளர்ந்து வரும் சூழலில் நடந்துள்ள அசாதாரணமான ...

காங்கிரஸ் தலைவராக ராகுல் தயக்கம்

Posted:

புதுடில்லி: தலைவராக பதவி ஏற்றுக் கொண்டால், அனைத்து தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என, ராகுல் அஞ்சுகிறார் என்கிறது காங்., வட்டாரம். காங்கிரஸ் கட்சியின் தலைவராக, விரைவில் ராகுல் பொறுப்பேற்றுக் கொள்வார் என, காங்., தொண்டர்கள் ஆவலாக உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாகவே, ராகுல் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவெடுக்க திங்களன்று காங்., காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது.ஆனால், ராகுல் தலைவராவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்போது வேண்டாம், இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும் ...

2 'காஸ்' சிலிண்டர்கள் வாங்க எண்ணெய் நிறுவனங்கள் நிர்பந்தம்: மண்ணெண்ணெய் மானியத்தை குறைக்க அரசு திட்டம்

Posted:

இரண்டு சிலிண்டர்கள் வாங்க வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ப்பந்தம் செய்வதால், ரேஷன் கடைகளில், மண்ணெண்ணெய் வினியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.55 கோடி சமையல், 'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், 50 லட்சம் பேர், ஒரு சிலிண்டர் வைத்துள்ளனர்.

வெளிச்சந்தை :
பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, இரண்டு முதல் ...

காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted:

சென்னை : 'காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

மாதாந்திர அடிப்படை:
காவிரி நடுவர் மன்றம், 2007 பிப்., 5ம் தேதி வெளியிட்ட இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு குறிப்பிட்ட காலத்தில், தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விடுவதில்லை. கர்நாடக மாநிலம், ஆற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. எனவே, கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஒவ்வொரு ...

வரிசை கட்டி நிற்கும் முதல்வர் வேட்பாளர்கள்: பா.ஜ., திணறல்

Posted:

பீகார் தேர்தலில், சொந்த கட்சி பிரபலங்களில் துவங்கி, கூட்டணிக் கட்சி நண்பர்கள் வரை, ஏராளமானோர், முதல்வர் வேட்பாளர்களாக துடிக்கின்றனர். இதனால், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், பா.ஜ., தலைமை சிக்கித் தவிக்கிறது.

வழக்கம்:
இதன் பின்னணி குறித்து, டில்லியில் நேற்று, பா.ஜ.,வின் தகவலறிந்த வட்டாரங்கள்கூறியதாவது:நரேந்திர மோடி பிரதமரான பின் நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, முதல்வர்கள் ...

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

Posted:

முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால (1973-2015) கோரிக்கையான 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.இதன் 42 ஆண்டு கால பின்னணி:*கடந்த 1973ல் 3வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் இந்திரா, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' முறையை ரத்து செய்தார். இதே ஆண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ராணுவத்தினர் கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான ஓய்வூதியம் 70ல் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.* 1986ல் நான்காவது சம்பள கமிஷன் ரணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்தது* 1991ல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™