Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காங்கிரஸுடன் தேர்தல் உறவுக்கு கட்சிகள் தயார்

Posted: 05 Sep 2015 12:39 PM PDT

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உறவு கொள்ள எதிர்க்கட்சிகள் விரும்புவதாக, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

மது விலக்கு கோரும் போராட்டம் தொடரும்

Posted: 05 Sep 2015 12:38 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி பாஜக தொடர்ந்து போராடும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சசிபெருமாள் குடும்பத்தினர் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்

Posted: 05 Sep 2015 12:37 PM PDT

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினர் 2-ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தோல்வி: 91 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்

Posted: 05 Sep 2015 12:37 PM PDT

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தில் உடன்பாடில்லை என்று கூறி 91 படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.

மருத்துவர்கள் அலட்சியத்தால் எய்ம்ஸ் ஊழியரின் மகன் உயிரிழப்பு: விசாரணைக்கு வலியுறுத்தல்

Posted: 05 Sep 2015 12:37 PM PDT

மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியரின் மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவமனையின் இதர ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போலீஸ் காவலில் இலங்கைத் தமிழர் சாவு: நீதித்துறை நடுவர் விசாரணை

Posted: 05 Sep 2015 12:36 PM PDT

சென்னை பள்ளிக்கரணையில் போலீஸ் காவலில் இலங்கைத் தமிழர் இறந்தது குறித்து நீதித்துறை நடுவர் சனிக்கிழமை விசாரணை செய்தார்.

தில்லியில் பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted: 05 Sep 2015 12:36 PM PDT

தெற்கு தில்லியின் மோதிபாக் பகுதியில், இருசக்கர வாகனம் மீது தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்து மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

தில்லியில் போதை மருந்துகள் பறிமுதல்: இருவர் கைது

Posted: 05 Sep 2015 12:35 PM PDT

தில்லியின் மயூர் விஹார் பகுதியில் ஒரு குடோனில் போதை மருந்துகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக பிரமுகருக்கு கொலை மிரட்டல்

Posted: 05 Sep 2015 12:35 PM PDT

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அஜய் அகர்வாலுக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. வழியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதியேற்போம்: தருண் விஜய்

Posted: 05 Sep 2015 12:35 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வழியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் உறுதியேற்போம் என, பாஜக எம்.பி.தருண் விஜய் வலியுறுத்தினார்.

ரசாயனம் ஏற்றிய டிரக்கில் திடீர் தீ: தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயம்

Posted: 05 Sep 2015 12:34 PM PDT

மேற்கு தில்லியில், தீ விபத்துக்குள்ளான டிரக் ஒன்றில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

"அஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோள் செப். 28-இல் விண்ணில் ஏவப்படும்:இந்திய விண்வெளி ஆய்வு மையத் துணை இயக்குநர்

Posted: 05 Sep 2015 12:34 PM PDT

"அஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைக்கோள் வருகிற 28-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது என்றார் இந்திய விண்வெளி ஆய்வு மையத் துணை இயக்குநர் எஸ். பாண்டியன்.

புதுதில்லி

Posted: 05 Sep 2015 12:34 PM PDT

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா

Posted: 05 Sep 2015 12:33 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

"கலாசாரத்தை புரிந்து கொள்ளாமல் தூய்மைப்படுத்த முடியாது'

Posted: 05 Sep 2015 12:33 PM PDT

"கங்கை நதியின் கலாசார, சமூக அம்சங்களைப் புரிந்து கொள்ளாமல், அதனைத் தூய்மைப்படுத்த இயலாது' என்று பிரபல நீர் வள நிபுணரும், மகசேசே விருது பெற்றவருமான ராஜேந்திர சிங் கூறினார்.

100 தொகுதிகளில் பாமக பணிகள் தொடக்கம்

Posted: 05 Sep 2015 12:32 PM PDT

வெற்றி வாய்ப்புள்ள 100 தொகுதிகளைத் தேர்வு செய்து வீடுவீடாகச் செல்லும் பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டோம் என்றார் பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி.

அல்கா லம்பா மீதான தாக்குதல்: வழக்குப் பதிவு செய்ய டிசிடபிள்யூ வலியுறுத்தல்

Posted: 05 Sep 2015 12:32 PM PDT

போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தாக்கப்பட்டது, அவருக்கு எதிராக பாஜக எம்எல்ஏ ஒ.பி.சர்மா தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆகியவை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸியிடம், தில்லி மகளிர் ஆணைய (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக, தமாகாவுடன் பேசுவோம்

Posted: 05 Sep 2015 12:31 PM PDT

மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் தேமுதிக, தமாகாவைச் சேர்க்க அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

விமான நிலையத்தில் 80 கிராம் தங்கம் பறிமுதல்

Posted: 05 Sep 2015 12:31 PM PDT

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை 80 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சொகுசுப் பேருந்து மோதியதில் தம்பதி பலி

Posted: 05 Sep 2015 12:31 PM PDT

சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.

ஆபத்தான இரு டெங்கு வைரஸ்கள்: எய்ம்ஸ் எச்சரிக்கை

Posted: 05 Sep 2015 12:30 PM PDT

நிகழ் பருவ காலத்தில் "டென்-2', "டென்-4' என்ற டெங்கு வைரஸ்கள் தில்லியில் காணப்படுவதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) எச்சரித்துள்ளது.

கல்லெலி வளையும் கவட்டிக் கட்டியும்!

Posted: 05 Sep 2015 12:30 PM PDT

சிறு வயதில் என் தாயுடன் எங்கள் நிலத்திற்குச் செல்வேன். நிலத்திற்கு செல்லும் வழியில் எலி வளைகள் நிறைய இருக்கும். "அவை சாதாரண காட்டெலியின் வளையின் வாய், பள்ளத்தில்

தில்லியில் 8ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தில் 25% குறைகிறது

Posted: 05 Sep 2015 12:30 PM PDT

தில்லி அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

அனுமதி பெறாத செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு சீல்: தில்லியில் "அழைப்பு தடை' அதிகரிக்க வாய்ப்பு

Posted: 05 Sep 2015 12:29 PM PDT

தில்லியில், அனுமதி பெறாத செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு  மாநகராட்சிகள் சீல் வைத்துள்ளதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி அழைப்புகளுக்கு தடை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கொல்லன் அழிசி'யும் லியோ டால்ஸ்டாயும்!

Posted: 05 Sep 2015 12:29 PM PDT

கால எந்திரத்தில் ஏறி, ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நாம் செல்கிறோம். மலையின் அடிவாரத்தில் அவளது குடில். நள்ளிரவுத் தாண்டி நாலு நாழிகை ஓடி விட்டது. குரல் கொடுக்கும் கோட்டான், ஆந்தைகூட தூங்கி விட்டதோ என்னவோ! எங்கும் பேரமைதி.

காவல் ரோந்து வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்!

Posted: 05 Sep 2015 12:29 PM PDT

தில்லி பாலம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பிரசவ வலியால் துடித்த பெண்ணை, காவல் ரோந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தில்லி தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம்

Posted: 05 Sep 2015 12:28 PM PDT

தில்லி தமிழ் சங்கத்தில் "இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது கொண்டாட்டமா?, திண்டாட்டமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பங்கேற்றார்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி: தில்லி, மதுரா கோயில்களில் கோலாகலக் கொண்டாட்டம்!

Posted: 05 Sep 2015 12:27 PM PDT

கிருஷ்ணர் அவதரித்த உத்தர பிரதேசத்தின் மதுரா நகரிலும், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

"ரசிகமணி'யின் இலக்கண ரசனை!

Posted: 05 Sep 2015 12:27 PM PDT

இலக்கியத்தை ரசித்து சுவைபட அன்பர்களுக்கு விளக்கி அவர்களை ஆனந்தம் அடையச் செய்த ரசிகமணி, இலக்கணத்தையும் ரசித்து அனுபவிக்கலாம் என்று நிரூபித்தவர். "அற்புத ரஸம்' என்ற கட்டுரைத் தொகுதியில் இலக்கண ரசனையை அவர் வெளிப்படுத்திய விதத்தைக் காண்போம்:

பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

Posted: 05 Sep 2015 12:27 PM PDT

சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

நெஞ்சிற்கு அணியர்

Posted: 05 Sep 2015 12:26 PM PDT

தலைவனை மணந்து இல்லறம் ஆற்றி வருபவளான தலைவியைத் தோழி சென்று காண்கிறாள். தலைவியின் நலத்தைப் பற்றி உசாவிய தோழி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைவியை நோக்கி, ""தலைவரைக் காணோமே - எங்கு சென்றிருக்கிறார்?'' என்கிறாள்.

தூத்துக்குடியில் 55 செல்லிடப்பேசிகள் திருட்டு

Posted: 05 Sep 2015 12:26 PM PDT

தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து 55 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சொல் தேடல் -24

Posted: 05 Sep 2015 12:25 PM PDT

முன்பெல்லாம் அறைக்கு வெளியே இருப்பவரைப் பெயர் சொல்லியோ கைதட்டியோ கூப்பிட்டனர். இன்று அதற்கும் ஒரு கருவி வந்துவிட்டது. இக்கருவியை அலுவலகங்களில் மேலதிகாரிகள் அறைக்கு வெளியே இருக்கும் பணியாளரை அழைக்கப் பயன்படுத்துகிறார்கள்

சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலய பெருவிழா கொடியேற்றம்

Posted: 05 Sep 2015 12:24 PM PDT

சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலய 154 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உடன்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Posted: 05 Sep 2015 12:23 PM PDT

உடன்குடி பாரதமாதா சேவா சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி புற்று கோயிலில் அஷ்டமி பூஜை

Posted: 05 Sep 2015 12:23 PM PDT

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்று கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

அணை தூர்வாரும் பணிகளில் விதிமீறல்? பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் செய்ய மதிமுக முடிவு

Posted: 05 Sep 2015 12:22 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகளில் விதிமுறைகளை மீறி முறைகேடு நடைபெறுவதாகவும் அது குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்படும் எனவும்  மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் தெரிவித்துள்ளார்.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 05 Sep 2015 12:21 PM PDT

இந்தவாரம் கலாரசிகன்

உத்வேகமுள்ள ஆசிரியர்கள் நாட்டுக்குத் தேவை:பிரணாப் முகர்ஜி

Posted: 05 Sep 2015 12:20 PM PDT

பன்முகத் திறன், கருணை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புகள் நிறைந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க, உத்வேகமுள்ள ஆசிரியர்கள் இந்தியாவுக்குத் தேவை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

ஆறுமுகனேரி கோயிலில் கிருத்திகை வழிபாடு

Posted: 05 Sep 2015 12:19 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் கிருத்திகை வழிபாட்டினை முன்னிட்டு ஸ்ரீசுப்பிரமணியர் பவனி நடைபெற்றது.

வளர்ந்த நாடுகளுக்கு திறமையான தொழிலாளர்களை அனுப்பத் தயார்

Posted: 05 Sep 2015 12:19 PM PDT

வளர்ந்த நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு, இந்தியாவில் இருந்து திறமையான தொழிலாளர்களை அனுப்பி வைத்து உதவத் தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

திருக்கோயில்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

Posted: 05 Sep 2015 12:19 PM PDT

திருக்கோயில்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிலப்பிரச்னையில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் மீது வழக்கு

Posted: 05 Sep 2015 12:18 PM PDT

விளாத்திகுளத்தில் நிலப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டியதில் இருவர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்

Posted: 05 Sep 2015 12:17 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 11 நாள்களில் பல்வேறு ராணுவ நடவடிக்கைளில் பங்கேற்று பயங்கரவாதிகள் 10 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். அவரது சொந்த ஊர், உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் ஆகும்.

காயல்பட்டினத்தில் வீட்டில் திருட்டு

Posted: 05 Sep 2015 12:17 PM PDT

காயல்பட்டினத்தில் வீட்டில் தங்க நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க புதிய கொள்கை

Posted: 05 Sep 2015 12:17 PM PDT

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க புதிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்தார்.

குளத்தூரில் வாகனம் மோதி இறந்த மான்

Posted: 05 Sep 2015 12:16 PM PDT

விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.

திருச்செந்தூர்

Posted: 05 Sep 2015 12:16 PM PDT

சீனப் பட்டாசுகளால் தமிழகத் தொழில் பாதிப்பு:மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

Posted: 05 Sep 2015 12:16 PM PDT

சீனப் பட்டாசுகளால் தமிழக பட்டாசுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நலிவடையும் நிலையிலுள்ள தொழிலை மேம்படுத்தி 5 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை

Posted: 05 Sep 2015 12:15 PM PDT

ஆறுமுகனேரியில் விவசாய கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:தில்லி, பெங்களூரில் பயணிகள் பீதி!

Posted: 05 Sep 2015 12:15 PM PDT

தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து சனிக்கிழமை புறப்பட இருந்த 6 சர்வதேச விமானங்களுக்கு ஒரே நாளில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், இரு நகரங்களிலும் விமானப் பயணிகள் பீதியடைந்தனர்.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 05 Sep 2015 12:15 PM PDT

கோவில்பட்டி கடலைக்காரத் தெரு மற்றும் ஓடைத் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது கழிப்பிடத்தை மீண்டும் அமைக்கக் கோரி முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கேரம் போட்டியில் வென்றோருக்கு பரிசு

Posted: 05 Sep 2015 12:14 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும்: ஐஎம்எஃப் தலைவர்

Posted: 05 Sep 2015 12:14 PM PDT

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவரான கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.

கர்நாடகத்தில் முழு அடைப்பு:எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்

Posted: 05 Sep 2015 12:14 PM PDT

கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 05 Sep 2015 12:14 PM PDT

ஆறுமுகனேரி அருகே கேபிள் வயர் மூலம் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.

உடன்குடியில் பேக்கரி கிட்டங்கியில் தீ

Posted: 05 Sep 2015 12:13 PM PDT

உடன்குடியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பேக்கரி கிட்டங்கியில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மதுரையில் தினமணி நடத்தும் "ஆரோக்கியம்' : இலவச மருத்துவக் கண்காட்சி தொடக்கம்

Posted: 05 Sep 2015 12:13 PM PDT

மதுரையில் தினமணி நாளிதழ் மற்றும் , அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் "ஆரோக்கியம்'-இரண்டு நாள் இலவச மருத்துவக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

மூலச்சலில் அதிமுக கொடியேற்று விழா

Posted: 05 Sep 2015 12:13 PM PDT

மூலச்சல் அருகே அதிமுக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

குமரி மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Posted: 05 Sep 2015 12:12 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

குமரியில் 16 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Posted: 05 Sep 2015 12:11 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குமரி வரலாற்றுக் கூடத்தில் வ.உ.சி. பிறந்தநாள் விழா

Posted: 05 Sep 2015 12:11 PM PDT

கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் வ.உ.சி. பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

குலசேகரம் அருகே பின்னோக்கி ஓடி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

Posted: 05 Sep 2015 12:10 PM PDT

குலசேகரம் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, பின்னோக்கி ஓடியதில் பயணிகள் லேசான காயமடைந்தனர்.

கத்தி பட பிரச்னை:விஜய், முருகதாஸ் உள்பட 7 பேர் அக்.15-இல் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Posted: 05 Sep 2015 12:10 PM PDT

கத்தி திரைப்பட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 7 பேரை அக்டோபர் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 05 Sep 2015 12:10 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மார்த்தாண்டம் அருகே மாநில வாலிபால் போட்டி

Posted: 05 Sep 2015 12:09 PM PDT

மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணக்கோடு பிரண்ட்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு விழாவையொட்டி, மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.

மாணவர்கள் மனதில் லட்சிய விதையை ஆசிரியர்கள் ஊன்ற வேண்டும்:நீதிபதி மகாதேவன்

Posted: 05 Sep 2015 12:09 PM PDT

மாணவர்கள் மனதில் லட்சிய விதையை ஆசிரியர்கள் ஊன்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

திற்பரப்பில் மகளிர் சுயஉதவிக் குழு விற்பனை அங்காடி திறப்பு

Posted: 05 Sep 2015 12:09 PM PDT

திற்பரப்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகளுக்கான விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவாண் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

"மருத்துவர்கள் வாழ்க்கை முழுவதும் மாணவராக இருக்க வேண்டும்'

Posted: 05 Sep 2015 12:08 PM PDT

மருத்துவர்கள் வாழ்க்கை முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருக்க வேண்டும் என தியாகராஜா நிறுவனங்களின் தலைவர் கருமுத்து டி. கண்ணன் கூறினார்.

அனுமதியின்றி மது விற்பனை: 4 பேர் கைது

Posted: 05 Sep 2015 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குழித்துறை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 05 Sep 2015 12:07 PM PDT

குழித்துறை அருகே பெண்ணிடமிருந்து 11 பவுன் தாலிச் சங்கிலியை மர்மநபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.

வக்ர நிவர்த்தி: சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு

Posted: 05 Sep 2015 12:07 PM PDT

ஸ்ரீ சனீஸ்வர பகவான் வக்ர நிவர்த்தியையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனீஸ்வர பகவானை சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மீனவர்கள் படுகொலை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது:வானதி சீனிவாசன்

Posted: 05 Sep 2015 12:07 PM PDT

மோடி பிரதமரான பிறகு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு மீனவர்கூட உயிரிழக்கவில்லை என்றார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.

மகளிர் குழு பொருள்கள் விற்பனை அங்காடி திறப்பு

Posted: 05 Sep 2015 12:07 PM PDT

கோவளம் கடற்கரையில் மகளிர் குழு தயாரிப்புப் பொருள்கள் விற்பனை அங்காடி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் பால இரும்புக் கம்பி விழுந்து கார் சேதம்

Posted: 05 Sep 2015 12:06 PM PDT

சென்னை மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பால இரும்புக் கம்பி விழுந்து கார் கண்ணாடி உடைந்தது.

நாகர்கோவில்

Posted: 05 Sep 2015 12:06 PM PDT

நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழகம், புதுச்சேரி ஆசிரியர்கள்

Posted: 05 Sep 2015 12:06 PM PDT

ஆசிரியர் தினத்தையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சனிக்கிழமை நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் ஆசிரியர்களின் பள்ளி, ஊர்)தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

குமரி மாவட்ட கல்வி பாதுகாப்புக் குழுவினர் சத்தியாகிரகம்

Posted: 05 Sep 2015 12:05 PM PDT

உயர்கல்வியில், உலக வர்த்தக அமைப்புக்கு தந்துள்ள ஒப்பளிப்புகளை  இந்திய அரசு விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி பாதுகாப்புக் குழுவினர் சனிக்கிழமை தக்கலையில் சத்தியாகிரக போராட்டம்  நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல ஆலோசனைக் கூட்டம்

Posted: 05 Sep 2015 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தலைமையில் நடைபெற்றது.

"கங்கையைத் தூய்மைப்படுத்த விரைவில் விரிவான திட்டம்'

Posted: 05 Sep 2015 12:04 PM PDT

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், படித்துறைகளை அழகுபடுத்துவது ஆகியவற்றுக்கு விரிவான திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Posted: 05 Sep 2015 12:04 PM PDT

குலசேகரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் ஆசிரியர் தின விழா

Posted: 05 Sep 2015 12:04 PM PDT

சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உ.பி.யில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Sep 2015 12:04 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் காணாமல்போன 35 வயது மதிக்கத்தக்க மத குரு ஒருவரை போலீஸார் கண்டுபிடித்துத் தரவில்லை என்று கூறி பொதுமக்கள் மதரஸா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டால் ஏரியில் ஆக்கிரமிப்பு: கண்காணிக்க 2 ஆணையர்கள் நியமனம்

Posted: 05 Sep 2015 12:03 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற டால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதி நிலங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க 2 கண்காணிப்பு ஆணையர்களை அந்த மாநில உயர் நீதிமன்றம் நியமித்தது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர விவசாயிகளுக்கு மோடி உதவி வேண்டும்: காங்கிரஸ்

Posted: 05 Sep 2015 12:03 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வலியுறுத்தினார்.

சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம்

Posted: 05 Sep 2015 12:03 PM PDT

படப்பை- புஷ்பகிரி சாலையின் அருகே கொட்டப்படும்  குப்பைகள், இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பாஜக- சமாஜவாதி இடையே ரகசிய உடன்பாடு: காங்கிரஸ் விமர்சனம்

Posted: 05 Sep 2015 12:02 PM PDT

ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பாஜகவும், சமாஜவாதிக் கட்சியும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

திருப்பதியில் "வைபை' சேவை தொடக்கம்

Posted: 05 Sep 2015 12:02 PM PDT

திருப்பதி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5ஜி "வைபை' சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் 6 பேர் கைது

Posted: 05 Sep 2015 12:02 PM PDT

திருப்போரூர், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள போரூர் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வலை விரித்து பறவைகளை பிடித்துக் கொண்டிருந்த 5 பேர் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் தப்பியோட்டம்: 12 போலீஸார் இடைநீக்கம்

Posted: 05 Sep 2015 12:02 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், நகார் மாவட்டத்தின் பர்பத்சார் காவல் நிலையத்திலிருந்து 3 குற்றவாளிகள் தப்பியோடியதையடுத்து, அங்கு பணியாற்றி வந்த காவல் நிலைய அதிகாரி உள்பட 12 போலீஸார் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இளைஞர் கொலை வழக்கு: மைத்துனர் கைது

Posted: 05 Sep 2015 12:02 PM PDT

காஞ்சிபுரம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மைத்துனரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரம்: கடன் தொல்லையால் 37 விவசாயிகள் தற்கொலை

Posted: 05 Sep 2015 12:01 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கடன் தொல்லை காரணமாக 37 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அந்த மாநில விவசாயத் துறை அமைச்சர் பி.புல்லா ராவ் தெரிவித்தார்.

"காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு விரைவில் நிதியுதவி'

Posted: 05 Sep 2015 12:01 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக, மத்திய அரசு விரைவில் நிதியுதவி அளிக்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்தது.

காவலாளிக்கு மது கொடுத்து லாரி கடத்தல்

Posted: 05 Sep 2015 12:01 PM PDT

ஆற்பாக்கத்தில் காவலாளிக்கு மது அளித்து லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் சிறப்புப் பேரவை கூட்டம்: ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

Posted: 05 Sep 2015 12:01 PM PDT

மகாராஷ்டிரத்தில் வறட்சி நிலைமை தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என அந்த மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

Posted: 05 Sep 2015 12:01 PM PDT

தியாகி ஓ.வி.அளகேசன் பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் அளகேசன் கலை, அறிவியல் கல்லூரியில் பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

விலங்குகளின் ஊடுருவலை தடுக்க வனப்பகுதி கிராமங்களில் தடுப்புச் சுவர்

Posted: 05 Sep 2015 12:00 PM PDT

வனவிலங்குகளின் ஊடுருவலை தடுப்பதற்கு காடுகளையொட்டி இருக்கும் கிராமங்களில் 150 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் சனிக்கிழமை அறிவித்தார்.

மனுநீதி முகாம்: ரூ.20.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 05 Sep 2015 12:00 PM PDT

உத்தரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 676 பயனாளிகளுக்கு ரூ.20,66,460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

"நேரு அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் முன் பொது விவாதம் நடத்த வேண்டும்'

Posted: 05 Sep 2015 12:00 PM PDT

தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தைப் புதுப்பிப்பதற்கு முன், அதுதொடர்பாக, பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, நடிகர் கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோர் கோரியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் இரு முறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு:இந்திய ராணுவம் பதிலடி

Posted: 05 Sep 2015 11:59 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் இருமுறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™