Tamil News | Online Tamil News |
- இந்தியாவில் மனசாட்சியற்ற மருத்துவர்கள்: பகீர் 'ரிப்போர்ட்'
- யாரும் ஏமாற வேண்டாம்: உஷார்படுத்துகிறார் விஜயகாந்த்
- 'ஸ்டாலினை வேதனைப்படுத்துகின்றனர்': கருணாநிதி
- மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வல்லுனர்கள் பாடம்: ஆசிரியர் தின விழாவில் பிரதமர் மோடி யோசனை
- 'ரம்மி' விளையாடினால் கறுப்பு பண சட்டம் பாயும்
- எம்.எல்.ஏ.,க்களுக்கு100 சொகுசு கார்கள்
- விருத்தாசலம் அருகே சென்னை - மங்களூரு விரைவு ரயில் உருண்டது: 16 ரயில்களின் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதி
- 'ஆரோக்கிய இந்தியா' உருவாக்க கோவையில் சச்சின் வலியுறுத்தல்
- ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற 13 இந்திய இளைஞர்கள்
- நக்சல்களின் 'பஞ்சாயத்து' சத்தீஸ்கரில் அதிகரிப்பு
| இந்தியாவில் மனசாட்சியற்ற மருத்துவர்கள்: பகீர் 'ரிப்போர்ட்' Posted: லண்டன்: 'இந்தியாவில், பல மருத்துவர்கள் மனசாட்சியை அடகு வைத்து விட்டு, நோயாளிகளிடம் பணம் பறிக்கின்றனர்' என, உலகப் புகழ் பெற்ற, பி.எம்.ஜே., மருத்துவ இதழ், வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி மற்றும் பயிற்சி மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வெளியாகி உள்ள அந்த ஆய்வறிக்கையின் விவரம்:பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலீடு செய்வோருக்கு, லாபம் தான் குறிக்கோள். அதனால், அத்தகைய தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை வசூலிக்க ... |
| யாரும் ஏமாற வேண்டாம்: உஷார்படுத்துகிறார் விஜயகாந்த் Posted: ''தேர்தலை மனதில் வைத்தே, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்; யாரும் ஏமாற வேண்டாம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், ஏழை, எளிய நெசவாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், ம் இரவு நடந்தது.இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்படும், எந்தத் திட்டங்களும் நடைமுறைக்கு வருவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை; எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ... |
| 'ஸ்டாலினை வேதனைப்படுத்துகின்றனர்': கருணாநிதி Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், நேற்றைய அறிக்கை:தேர்தல் கருத்து கணிப்பு எடுத்தவர்கள், முதல்வர் பதவி தி.மு.க.,வுக்கு கிடைக்குமா, அ.தி.மு.க.,வுக்கு கிடைக்குமா, தே.மு.தி.க.,வுக்கு கிடைக்குமா என, கணக்கெடுத்து அறிவிப்பது தான் முறை.யார் முதல்வர் என, அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா பெயரை வெளியிட்டு விட்டு, தி.மு.க., என, குறிப்பிடுவதற்கு பதிலாக, கருணாநிதிக்கு எத்தனை பேர் ஆதரவு; ஸ்டாலினுக்கு எத்தனை பேர் ஆதரவு என, அவர்களே, ஒரே கட்சியில், இரண்டு பெயரை குறிப்பிட்டு, எதற்காக பிரச்னையை உண்டாக்குகிற வகையில், கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.அ.தி.மு.க.,வில், ... |
| மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வல்லுனர்கள் பாடம்: ஆசிரியர் தின விழாவில் பிரதமர் மோடி யோசனை Posted: புதுடில்லி: ''டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், வாரத்தில் ஒரு மணி நேரமாவது, மாணவர்களுக்கு பாடம் எடுத்து, தங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.இன்று, ஆசிரியர் தினம். நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்ததால், அவர் நினைவைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி, 'ஆசிரியர் தின'மாக கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி ... |
| 'ரம்மி' விளையாடினால் கறுப்பு பண சட்டம் பாயும் Posted: புதுடில்லி: வெளிநாட்டு வலைதளங்கள் நடத்தும், 'ரம்மி, போக்கர்' போன்ற, 'ஆன் - லைன்' விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் லாபத்தை யும், கறுப்பு பணம் சட்டத்தின் கீழ், கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என, மத்திய நேரடி வரிகள் வாரிய மான சி.டி.பி.டி., தெரிவித்துள்ளது. |
| எம்.எல்.ஏ.,க்களுக்கு100 சொகுசு கார்கள் Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்த, 11 கோடி ரூபாய் மதிப்பில், 100 புதிய சொகுசு கார்களை, மாநில அரசு வாங்குகிறது. ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, முதல்வர் முப்தி முகமது சயீது, கவனித்து வரும், உள்துறை அமைச்சகம், எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்துவதற்காக, 100, மகேந்திரா ஸ்கார்பியோ கார்களை வாங்க, 'ஆர்டர்' தந்துள்ளது. தலா, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இக்கார்களின் மொத்த விலை, 11 கோடி ரூபாய்.ஜம்மு - காஷ்மீரில், கடந்த ஆண்டு, வரலாறு காணாத வகையில் பெய்த, பயங்கர மழை, வெள்ளத்தில், 300 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் ... |
| Posted: விருத்தாசலம்: சென்னையிலிருந்து, மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாசலம் அருகே தடம்புரண்டு, உருண்டு விபத்துக்கு உள்ளானதில், பெண்கள் உட்பட, 42 பேர் காயமடைந்தனர்; அதிர்ஷ்டவசமாக, உயிர்பலி எதுவும் இல்லை. அதேநேரத்தில், இந்த விபத்தால், 16 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16859), எழும்பூரிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டது. 24 பெட்டிகளுடன் கூடிய ரயிலை, ஓட்டுனர் குல்லு ஓட்டினார்; 'கார்டாக' ரங்காச்சாரி பணியில் இருந்தார்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - பூவனூர் ரயில் ... |
| 'ஆரோக்கிய இந்தியா' உருவாக்க கோவையில் சச்சின் வலியுறுத்தல் Posted: கோவை : கோவையில், ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற, கிரிக்கெட் வீரர் சச்சின், ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் பேசினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி, ஊக்குவித்தார்.ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் மூலம், கடந்த மாதம் நடந்த வாலிபால், த்ரோபால் போட்டிகளில், 640 கிராமங்களை சேர்ந்த, 7,680 வீரர்கள் பங்கேற்றனர். இதில், வாலிபால், த்ரோபால் இறுதிப் போட்டிகள், நேற்று, கோவை கொடிசியாவில் நடந்தன.போட்டியை துவக்கி வைப்பதற்காக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ... |
| ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற 13 இந்திய இளைஞர்கள் Posted: புதுடில்லி: மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற, 13 இந்திய முஸ்லிம் இளைஞர்களை, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் போலீசார் சிறைபிடித்து உள்ளனர். இந்த இளைஞர்களில் இருவர், சமீபத்தில் கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.அபுபக்கர் அல் பாக்தாதி என்ற பயங்கரவாதியை தலைவனாக கொண்ட, ஐ.எஸ்., அமைப்பின் கொடூர செயல்களால் ஈர்க்கப்பட்ட இந்திய இளைஞர்கள், 17 பேர், ஏற்கனவே அந்த பயங்கர வாத அமைப்பில் சேர்ந்து உள்ளனர்.இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின், துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் ... |
| நக்சல்களின் 'பஞ்சாயத்து' சத்தீஸ்கரில் அதிகரிப்பு Posted: ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில், மீண்டும் நக்சல் தீவிரவாதிகளின், 'கட்ட பஞ்சாயத்து' அதிகரித்துள்ளது. 'ஜன் அதாலத்' என்ற பெயரில், கிராமங்களில் கூட்டம் போட்டு, போலீசுக்கு உளவு சொல்பவர்கள் என கூறி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கரில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, பெரும்பாலான மாவட்டங்கள், நக்சல் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, நக்சல் தீவிரவாதம், இப்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.நக்சல் பாதிப்பு அதிகமுள்ள, சுக்மா, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 05,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |