Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கந்தர் அலங்காரம் பாடல் 6

Posted: 04 Sep 2015 01:04 PM PDT

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. ... 6 பெரிய அடர்ந்த வனமாகிய உலகம் கவர்ச்சிகரமான பல விசயங்களை தன்னகத்தே வைத்துள்ளது . அனுபவிக்க அனுபவிக்க குறையாத இன்பங்களை வாரி வாரி வழங்குகிறது . ஆனால் அதில் ரெம்ப ரெம்ப சாதாரணமான தினையை காவல் காக்கிராளாம் இந்த வள்ளி . உலகம் நாளுக்கு நாள் எவ்வளவோ ...

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Posted: 04 Sep 2015 01:03 PM PDT

பாடல் 20 ... கோழிக்கொடியன் கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. பாடல் 22 ... மொய் தார் அணி மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. பாடல் 23 ... தெய்வத் திருமலை தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 04 Sep 2015 12:24 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது.

Posted: 04 Sep 2015 12:15 PM PDT

புதுடில்லி: 'பிபா' கால்பந்து ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 147வது இடத்துக்கு முன்னேறியது. கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி, 173வது இடத்தில் இருந்து 147வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் நடந்த, 2018 உலக கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுக்கான 'ரவுண்டு–1' போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் (2–0) வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியை ...

7-வது ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி

Posted: 04 Sep 2015 12:12 PM PDT

சவால் மிக்க ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக ஆடி எதிரணிகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் இளம் மிட்பீல்டரான லில்லிமா மின்ஸ் தெரிவித்துள்ளார். 7-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி சீனாவின் சாங்ஜவ் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி சீனா வந்துள்ளது. அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் சீனா, மலேசியா, சிங்கப்பூர், வட ...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Posted: 04 Sep 2015 12:10 PM PDT

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) நிஷிகோரி (ஜப்பான்), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டேவிட் பெரர் (ஸ்பெயின்), போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஜோகோவிச் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தோற்று இருந்தார். இதனால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல இயலும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 04 Sep 2015 11:56 AM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

எபோலா - செய்தித் தொகுப்புகள்

Posted: 04 Sep 2015 11:55 AM PDT

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ...

வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு

Posted: 04 Sep 2015 11:48 AM PDT

வீட்டின் முகப்பில் ஒரு நித்தியமல்லி கொடி வளர்ந்து இருந்தது.சில குருவிகள் அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன் அக்குருவிக் கூடு சிதைந்து கீழே கிடந்தது.அருகில் ஒரு குருவி குஞ்சு.அதை கையில் எடுத்து வைத்து ஒரு வீடியோ கிளிப் எடுத்தேன். குருவி குஞ்சை காணாமல் மற்ற குருவிகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தன.குருவி குஞ்சு ஓரளவு பறக்கும் நிலையில் இருந்தது. அந்த சிதைந்த குருவிக் கூட்டை மீண்டும் எடுத்து நித்திய மல்லி கொடியில் வைத்து குருவிக் குஞ்சை அதில் அமர வைத்தேன்.மற்ற குருவிகள் வந்து ...

அழகியும் அன்பான அரக்கணும்!

Posted: 04 Sep 2015 11:36 AM PDT

வெகுகாலத்துக்கு முன் சிறிய நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந் தனர். பெரிய பணக்காரனாக வாழ்ந்த அவன், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏழை யாகி விட்டான். தான் சகல வசதிகளோடு வாழ்ந்த பெரிய மாளிகையை விற்று விட்டு, நகரத்துக்கு வடக்கே, ஒரு சிறிய வீட்டைக் கட்டி, அதில் தன் மூன்று குழந்தைகளோடு குடியேறினான். பணக்காரனின் மூன்று பெண் குழந்தை களின் முதல் இரண்டு பெண் குழந்தைகள், எப்போதும் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பர். அவர்கள் தன் தந்தை யிடம் தங்களுக்கு ...

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Posted: 04 Sep 2015 11:26 AM PDT

'பாண்டியநாடு' படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் 'பாயும்பலி'. மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஷால் – இது தான் கதைக்களம். பல காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதையும், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகளுடன் கூடிய கமர்சியல் சினிமா தான் என்றாலும், வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் ...

சிறுகதை: மனக்கணக்கு

Posted: 04 Sep 2015 11:23 AM PDT

கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த என் மனைவி, "" அவர் வீட்டில் இல்லங்க வெளியே போயிருக்கார்" என்றாள். ""அவர் எப்போ வருவார்?" என்று கேட்டேன். என் குரலைக் கேட்டு என்னை உற்றுப் பார்த்த மனைவி அதிர்ந்தே போனாள். "" என்னங்க இது?" என்றாள் அதிர்ச்சியுடன். அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். இதுவரை நரைத்த மீசை. நரைத்த தலைமுடியுடன் இருந்த நான் கருத்த மீசையுடன், கருத்த தலைமுடியுடன் வந்த நின்றதைக் கண்டதுமே அதிர்ந்தே போனாள். "" என்னங்க இது திடீரென்று? போகும்போது கூட இதைப் பற்றிச் சொல்லவே இல்லையே?" சொல்லியிருந்தால் ...

சிறுகதை: இதெல்லாம் இதற்குத் தானா?

Posted: 04 Sep 2015 11:19 AM PDT

இவாஞ்சலின் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோதுதான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது. கீரைக்காரம்மாளுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் இந்த மரணம் பெரிய இழப்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு நிஜத்தில் இது பெரும் விடுதலைதான். கீரைக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு ஆரம்பத்தில் அதிகம் நெருக்கம் இல்லை. கீரைக்காரம்மாளின் பெண்ணால்தான் அந்த நெருக்கம் பின்னால் ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, கீரைக்காரம்மாளின் ...

சந்நியாசி நண்டு

Posted: 04 Sep 2015 11:18 AM PDT

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள். இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது.. "பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் ...

வியாழன் கிரகத்தில் மனிதன்?

Posted: 04 Sep 2015 11:13 AM PDT

பூமியின் இயற்கை வளங்களை விழுங்கி ஏப்பம் விட்ட மனிதனின் பார்வை இப்போது பூமியைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் மீது திரும்பி இருக்கிறது. உலகில் பூமியைப் போலவே வாழத் தகுதியான கிரகங்கள் ஏதாவது இருக்கிறதா எனத் தன் அறிவியல் மூளையால் ஆராயத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அதில் குறிப்பிடத்தக்க இலக்குகளை அடையவும் தவறவில்லை. தற்போது சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களைச் சுற்றும் குளிர்ச்சியான சந்திரன்களில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். ரோமானியக் ...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Posted: 04 Sep 2015 11:08 AM PDT

சமுதாய சிற்பிகளான ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

Posted: 04 Sep 2015 10:33 AM PDT

வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது. ஆசிரியர் தின வரலாறு ----------------------------------- உலகம் ...

கிருஷ்ணரைப் பற்றி 50 குறிப்புகள்

Posted: 04 Sep 2015 09:56 AM PDT

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். 4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா ...

ஆசிரியர் தினம் .

Posted: 04 Sep 2015 09:46 AM PDT

ஏணிக்கு ஆயுத பூஜை என்றாவது செய்தோமா ? ஏணிபோல் இருந்து நம்மை ஏற்றிவிட்ட ஆசிரியரை ஏணியின் உருவத்தில் இனியாவது காண்போம் !   உன்னுடைய உயர்வைக் கண்டு உடன்பிறப்புகள் , நண்பர்கள் பொறாமைப் படலாம் - ஆனால் உண்மையிலேயே அகமகிழ்வது ஆசிரியர் மட்டுமே !   பிரம்புகளால் அழகிய அறைகலன்களை மட்டுமல்ல சிறந்த குடிமகன்களையும் உருவாக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டுபவர்  ஆசிரியர்தாம் ! தாரமும் குருவும் தலைவிதிப் படியே ! -என்பர் உன் தலைவிதி நன்றானால் அப்துல் கலாம் போன்றவர்கள் உனக்கு ஆசிரியராய் ...

அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்!

Posted: 04 Sep 2015 09:32 AM PDT

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசு பள்ளி சுவரை இடித்து, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியினர் மேடை அமைப்பது சமூக ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாடுவதற்கும், நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கவும் மாபெரும் பொதுக்கூட்டம், தஞ்சாவூரில் நாளை (5ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இதை தஞ்சை ...

கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...

Posted: 04 Sep 2015 09:26 AM PDT

ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள் அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் வரும் இந்த பண்டிகை சகல சம்பத்துகளையும் அருள்வதாகும். இந்நாளை ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா தகி அண்டி என பல பெயர்களில் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏறத்தாழ 5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி தேய்பிறை திதியில், ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. ...

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 04 Sep 2015 09:11 AM PDT

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! உலகமே சுற்றினாலும் ஈடு இணை இல்லை பிறந்த மண் ! உண்பது பச்சைப்புல் தருவது வெள்ளைப்பால் விசித்திர மாடுகள் ! வரைந்து முடித்தான் சாலையில் கடவுள் ஓவியம் வந்தது மழை ! இறந்த பின்னும் விடவில்லை பதவி ஆசை அரசியல்வாதிக்கு சிவலோகப் பதவி ! உணர்க பட்டுப்பூச்சிகளின் மரணத்தால் வந்தது பட்டுச்சேலை ! அறியவில்லை தன் வீ ட்டுத் திருட்டு குறி சொல்லும் கோடாங்கி ! வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன் மூட நம்பிக்கை ! பலருக்கு சம்பவம் சிலருக்கு ...

உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

Posted: 04 Sep 2015 09:02 AM PDT

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த ...

பெண்களின் இதயத்தை வெல்லும் நகைச்சுவை மருந்து: உளவியல் ஆய்வாளர்கள் தகவல்

Posted: 04 Sep 2015 09:00 AM PDT

தேன் சொட்டும் ஆசை வார்த்தைகளை மறந்து விடுங்கள்! ஒரு பெண்ணை எப்படி சிரிக்க வைக்கலாம் என்பதை சிந்தித்தால் அந்தப் பெண் உங்கள் வசம். இதனைக் கூறுவது அமெரிக்க உளவியல் நிபுணர்கள். இது ஏதோ சாதாரண ஆய்வல்ல, Evolutionary Psychology (பரிணாம உளவியல்) என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகும் அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை நடத்தியவர்கள் கான்சாஸ் பல்கலைக் கழகத்தின் தகவல் தொடர்பு புலப்படுத்த ஆய்வுத் துறையினர் (Communication Studies) ஆவர். இது ஒருவேளை அமெரிக்க ...

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Posted: 04 Sep 2015 07:35 AM PDT

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்' என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி

மாற்றி யோசி

Posted: 04 Sep 2015 07:20 AM PDT

மாற்றி யோசி – இது மனதுக்கான தாரக மந்திரம் எந்த ஒரு தோல்விக்கும், பிரச்னைக்கும் மனம் சுருங்கி விடாமல் மாற்றி யோசித்தால் மனம் லேசாகும். தெளிவு பிறக்கும்..! – —————————————— – ஆம்புலன்ஸ் ஒலி கேட்டதும் ஐயோ பாவம் -என்று கூறாமல் ஆண்டவா! ஆபத்திலுள்ளவரை காப்பாற்று' என பிரார்த்திக்கலாமே..! – ————————————————– – பணம் திருட்டுப் போய் விட்டால், அப்பாடா! பணம் போனால் போகுது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லையே என்று ஆறுதல் அடையலாமே..! – ———————————————– – எடுத்த காரியம் சரியாக அமையாவிட்டால், அட! இன்னும் ...

புளியோதரைக் க்யூ என நினைத்து நிற்க,, அது,விபூதி கொடுக்கிற க்யூவாம்...!!

Posted: 04 Sep 2015 06:29 AM PDT

நுனிப் புல் திண்போமா ?

Posted: 04 Sep 2015 05:34 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

வண்ணத்திரை தரும் சினிமா செய்திகள்...!

Posted: 04 Sep 2015 05:23 AM PDT


-

-

Post Office - பொன்மகன் சேமிப்பு திட்டம் பற்றிய தகவல் தேவை...?

Posted: 04 Sep 2015 03:19 AM PDT

Post office - பொன்மகன் சேமிப்பு திட்டம் பற்றிய தகவல் தேவை...?

பரங்கிக்காய் பச்சடி

Posted: 04 Sep 2015 03:09 AM PDT


-
நன்றி- மங்கையர் மலர்

அவியல் மற்றும் காளான் - சமையல் குறிப்புகள்

Posted: 04 Sep 2015 03:03 AM PDT

சாலையோரம்

Posted: 04 Sep 2015 02:21 AM PDT

சாலை நடந்து செல்வதற்க்கும் கடந்து செல்வதற்க்கும் மட்டும் அல்ல!! தலை சாய்த்து கொள்வதற்க்கு வீடு இல்லாதவர்களுக்கு தாய் வீடு!! உயிர் கொடுத்து உழைத்தும் தன் தலைசாய்க்க இடம் இல்லாமல் தார் சாலை போடுபவன் குற்றமா? உழைத்த பணத்தை சாராயம் எனும் சாக்கடையில் விழுந்து எழுபவன் குற்றமா? உழைத்தவனுக்கு கொடுக்காமல் ஊரை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா? யார் குற்றம்?? சாலையில் தலை வைப்பவன் தமிழ் சமூகத்தின் அவலம்!! வந்தாரை வாழவைக்கும் பூமி இது!! இருப்பொழுது இருப்பவனுக்கே ...

கைலாசநாதர் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 04 Sep 2015 12:50 AM PDT

தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™