Tamil News | Online Tamil News |
- சிறுதாவூர் சென்றார் முதல்வர் ஜெ.,
- மோடியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்
- மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு: மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
- 'மத்திய அரசு அடிக்கடி குறுக்கீடு செய்கிறது': கெஜ்ரிவால்
- சத்தீஸ்கரின் 24 இணையதளம்: பாக்., விஷமிகளால் முடக்கம்
- கம்யூனிஸ்ட் கட்சியாகிறதா காங்கிரஸ்?
- மக்கள் பிரச்னைகளில் அலட்சியம் : ஜெ., மீது கருணாநிதி குற்றச்சாட்டு
- 'வழக்கறிஞர்களின் சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்': சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு
- வருமான வரி சோதனையில் விஜய், நயன்தாரா, சமந்தா சிக்கினர்: வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் முற்றுகை
- கர்நாடகா முதல்வரை சந்திக்காதது ஏன்? முதல்வர் ஜெ.,வுக்கு விஜயகாந்த் கேள்வி
- நாடு முழுவதும் அமைப்பை விரிவுபடுத்த ஹர்திக் திட்டம்
| சிறுதாவூர் சென்றார் முதல்வர் ஜெ., Posted: சென்னை: முதல்வர் ஜெயலலிதா நேற்று, சிறுதாவூர் சென்றார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை 4:00 மணிக்கு, போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். மாலை 5:00 மணிக்கு, சிறுதாவூர் பங்களாவை சென்றடைந்தார். ஓராண்டுக்கு பின், அவர் சிறுதாவூர் சென்றுள்ளார்.மாமல்லபுரம், பூஞ்சேரி கூட்ரோடு சந்திப்பில், அவரை வரவேற்க அ.தி.மு.க.,வினர் திரண்டிருந்தனர். மாலை 4:55 மணிக்கு, முதல்வர் அந்த பகுதியை கடந்தபோது, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் கோதண்டபாணி, திருப்போரூர் ஒன்றிய தலைவர் கோமதி ரகு, ஆகியோரிடம் மலர்செண்டு பெற்றார்.சிறுதாவூர் ... |
| மோடியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் Posted: புதுடில்லி: ''பிரதமர் மோடியின் அதிவேக செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், உள்நாட்டில் பணிகளை முடுக்கி விட வேண்டும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவிற்கான மிகச் சிறந்த பேச்சாளராக மோடி திகழ்கிறார். அவர், நம்மை விட வேகமாக சென்று கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் முதலீடுகளை திரட்ட, பம்பரமாக சுழல்கிறார். அதனால், மோடியின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை சுலபமாக்க வேண்டும். அப்போது தான், மோடியின் முயற்சியால் விளையும் பயனை ... |
| Posted: மும்பை,: மும்பை புறநகர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு குறித்த வழக்கில், ஐந்து பேருக்கு துாக்கு தண்டனை விதித்து, சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது; மேலும், ஏழு பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2006ல், மும்பை புறநகர் ரயில்களில், 11 நிமிட இடைவெளியில், ஏழு தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன; இதில், 188 அப்பாவி பயணிகள் உயிரிழந்தனர்; 829 பேர் காயமடைந்தனர். மும்பை சிறப்பு கோர்ட்டில், ஒன்பது ஆண்டுகளாக விசாரணை நடந்தது. கடந்த மாதம் 11ல், தீர்ப்பு அளிக்கப்பட்டது. 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். அரசு ... |
| 'மத்திய அரசு அடிக்கடி குறுக்கீடு செய்கிறது': கெஜ்ரிவால் Posted: புதுடில்லி:''மாநில அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் மத்திய அரசு அடிக்கடி குறுக்கீடு செய்கிறது,'' என, மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்டிய, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 47, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| சத்தீஸ்கரின் 24 இணையதளம்: பாக்., விஷமிகளால் முடக்கம் Posted: ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில அரசின் இணையதளங்களை, பாகிஸ்தான் விஷமிகள் முடக்கியுள்ளனர். அந்த இணையதளங்களின் பக்கங்களைஅழித்து, அவற்றில் பாகிஸ்தான் தேசிய கொடியை பதிவிட்டுள்ளனர்.சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான அரசு உள்ளது. அம்மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு, தனித்தனியான இணையதளங்கள் உள்ளன. அவற்றில், 24 துறைகளின் இணையதளங்கள் நேற்று முடக்கப்பட்டிருந்தன.அந்த இணையதளங்களில், துறைகளின் தகவல்கள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அவை அழிக்கப்பட்டு, முகப்பு பக்கங்களில், பாகிஸ்தான் தேசியக் கொடி ... |
| கம்யூனிஸ்ட் கட்சியாகிறதா காங்கிரஸ்? Posted: 'கட்சி நடத்துவதற்கு கையில் பணம் இல்லை; எனவே, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள், குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது, கட்சிக்கு நன்கொடை அளிக்க வேண்டும்' என, காங்., மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.சுதந்திரத்துக்கு பின், மத்தியில் அதிகமான ஆண்டுகள், ஆட்சியில் இருந்த கட்சி, காங்கிரஸ். தவிர, நாடு முழுவதும் பல மாநிலங்களிலும், அக்கட்சியே ஆட்சியில் இருந்தது. இவ்வாறு, மத்தியிலும், மாநிலத்திலும், பல ஆண்டுகளாக அதிகாரமும், செல்வாக்கும், செலுத்தி வந்த அக்கட்சியின் வரலாற்றில், வறுமை எட்டிப்பார்க்க ... |
| மக்கள் பிரச்னைகளில் அலட்சியம் : ஜெ., மீது கருணாநிதி குற்றச்சாட்டு Posted: சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை, 29 நாட்கள் நடந்துள்ளன. மானிய கோரிக்கைகள் மீது, சுதந்திர உணர்வு சிறிதுமில்லாத விவாதங்கள், 18 நாட்கள் பெயரளவில் நடைபெற்று, 'அம்மா' புராணத்தோடு அமைச்சர்கள் பதிலளித்து முடித்து விட்டனர்.ஏற்கனவே, தயாரித்து தரப்பட்ட அறிக்கையை, 110வது விதியின் கீழ் படித்ததும், ஆளுங்கட்சியினர், ஒரு சேர மேஜையை தட்டினர்.ஆளுங்கட்சிக்கு நெருக்கமான சிலர், அந்த அறிக்கையின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பை பாராட்டினர். முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையை, 'ஆஹா, ஓஹோ, கின்னஸ்' என்றும், 'மகாபாரதம் - ராமாயணம்' என்றும், ... |
| Posted: சென்னை: மதுரை மாவட்ட வழக்கறிஞர்களுக்கு எதிரான, அவமதிப்பு வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி தலைமையில் கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்த, ஒரு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்; மற்றொரு நீதிபதி, அதற்கு உடன்படவில்லை.கட்டாய, 'ஹெல்மெட்' உத்தரவை எதிர்த்து, மதுரையில் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்துக்காக, மதுரை மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் தர்மராஜ், செயலர் ஏ.கே.ராமசாமி ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு எடுத்தது. |
| Posted: சென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, 'புலி' படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே நேரத்தில் ஈடுபட்டனர். |
| கர்நாடகா முதல்வரை சந்திக்காதது ஏன்? முதல்வர் ஜெ.,வுக்கு விஜயகாந்த் கேள்வி Posted: மேட்டூர் : ''காவிரி நீர் பெற்று தருவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகா முதல்வரை நேரில் சந்தித்து பேசாதது ஏன்?'' என, மேச்சேரியில் நேற்று இரவு நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.மேட்டூர் தாலுகா, மேச்சேரியில் நேற்று இரவு தே.மு.தி.க., சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது: தமிழகத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக யார் பேசினாலும் தாக்கப்படுகிறார்கள். தமிழக அரசு சாதனையை விளக்குவதற்காக புதிதாக விடப்பட்டுள்ள வாகனங்கள் மிளிர்கிறது. ... |
| நாடு முழுவதும் அமைப்பை விரிவுபடுத்த ஹர்திக் திட்டம் Posted: புதுடில்லி : குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல், தன் அமைப்பை, நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், செல்வாக்கு மிக்க, படேல் சமூகத்தினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தர வலியுறுத்தி, ஹர்திக் படேல், 22, போராட்டம் நடத்தி வருகிறார்.இப்போராட்டத்துக்கு பலத்த ஆதரவு கிடைத்து வருவதால், மாநில அரசுக்கு, பெரும் தலைவலியாக, ஹர்திக் படேல் திகழ்கிறார். தான் நடத்தி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 01,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |