Tamil News | Online Tamil News |
- ஏவுகணை பரவல் தடுப்பு குழுவில் இந்தியாவை சேர்க்க இத்தாலி எதிர்ப்பு
- பீகார் தேர்தலில் குற்ற பின்னணியுடைய 99 பேர் போட்டி: முதலிடத்தில் பா.ஜ.,
- வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்
- விஷ்ணுபிரியா காதலர் வழக்கறிஞரா; குருக்களா? குழப்பத்தில் போலீசார்
- மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும்: ஸ்டாலின் பேச்சு; மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
- தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்
- 110ல் 181 அறிவிப்புகள்: ஜெ., 'கின்னஸ்' சாதனை
- கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா
- போக்குவரத்து கழகங்கள், மின் வாரியத்தால் அரசுக்கு ரூ.13,000 கோடி நஷ்டம்: மோசமான நிதி மேலாண்மை என ஆடிட்டர் ஜெனரல் புகார்
- இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது கறுப்பு பண முதலைகளுக்கு கெடு
| ஏவுகணை பரவல் தடுப்பு குழுவில் இந்தியாவை சேர்க்க இத்தாலி எதிர்ப்பு Posted: புதுடில்லி,: ஏவுகணை பரவலை தடுக்கும், எம்.டி.சி.ஆர்., குழுவில், இந்தியாவை சேர்க்க விடாமல், இத்தாலி நாடு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. |
| பீகார் தேர்தலில் குற்ற பின்னணியுடைய 99 பேர் போட்டி: முதலிடத்தில் பா.ஜ., Posted: பாட்னா : பீகார் சட்டசபை தேர்தலில், குற்றப் பின்னணி உடைய, 99 பேர், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த பட்டியலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 47 பேர் இடம் பிடித்துள்ளனர். ஐக்கிய ஜனதா தளம்பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது; இங்கு அடுத்த மாதம், 12ல் துவங்கி, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு, இரண்டு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில், 99 பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் ... |
| வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும் Posted: மும்பை: ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, தொழில் துறையினரும், மத்திய ... |
| விஷ்ணுபிரியா காதலர் வழக்கறிஞரா; குருக்களா? குழப்பத்தில் போலீசார் Posted: டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணம், வழக்கறிஞரா அல்லது குருக்களா என தெரியாமல், சி.பி.சி.ஐ.டி., போலீசார் குழப்பத்தில் தவிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, கடந்த, 18ல், முகாம் அலுவலக மாடி அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கு விசாரணை குறித்து, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் கூறியதாவது:கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, விஷ்ணுபிரியாவிடம், நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமார் கடுமையாக பேசியதாக கூறப்பட்டது. ஆனால், அது மட்டுமே, அவரது தற்கொலைக்கு காரணம் அல்ல. திருப்பத்துாரில் பயிற்சி டி.எஸ்.பி.,யாக, ... |
| மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும்: ஸ்டாலின் பேச்சு; மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு Posted: திருப்புத்துார்: "மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. இனி எந்த கட்சியும், அரசியல்வாதிகளும் மக்களை தேடி வந்தாக வேண்டும்," என, சிவகங்கை மாவட்ட 'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தானிப்பட்டியில் எழுத்தாளர் தென்னரசு நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். திருப்புத்துார் உழவர் சந்தைக்கு சென்றவரிடம் மணமேல்பட்டி விவசாயி சிவகாமி, "ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும்," என்றார்.திருப்புத்துார் செந்தாமணி மகாலில் காலை 11:15 மணிக்கு மகளிர் குழுவினரை ... |
| தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன் Posted: சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சக்கரபாணி: காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்: காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் ... |
| 110ல் 181 அறிவிப்புகள்: ஜெ., 'கின்னஸ்' சாதனை Posted: சென்னை:சட்டசபை கூட்டத்தொடர், நேற்று நிறைவு பெற்றது. நான்கு ஆண்டுகளில், நடந்த சட்டசபை கூட்டத்தொடர்களில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, 181 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சபாநாயகர் தனபால் கூறியதாவது:பதினான்காவது சட்டசபையின், 10வது கூட்டத் தொடரின் முதல் கூட்டம், பிப்ரவரி, 17ல் துவங்கி, 23 வரை நடந்தது. இரண்டாவது கூட்டம், மார்ச், 23 - ஏப்., 1 வரை; மூன்றாவது கூட்டம், ஆக., 24 - செப்., 29 வரை நடந்துள்ளது.கவர்னர் உரை உட்பட, 29 நாட்கள் சட்டசபை கூடியது. மொத்தம், 157 மணி நேரம், 21 நிமிடம் விவாதம் நடந்துள்ளது. சபையில், அதிக அளவில், 24 வினாக்களுக்கு பதில் அளித்து, நெடுஞ்சாலைத் ... |
| கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா Posted: நதிநீர் இணைப்பு என்பது, வெறும் கோஷமாக நிலவும் நிலையில், அதை செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளது, ஆந்திர மாநில அரசு. இந்தியாவிலேயே முதன்முறையாக, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை சத்தமில்லாமல் இணைத்து, கோதாவரி ஆற்றில் இருந்து, கடலில் கலக்கும் தண்ணீரில், 80 டி.எம்.சி., நீரை பெறும் திட்டத்தை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளது, ஆந்திர மாநிலம்.ஆந்திராவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று கோதாவரி. மகாராஷ்டிராவில் உருவாகி, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா வழியாக, 1,465 கி.மீ., பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் ... |
| Posted: 'தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், 2013 - 14ம் நிதியாண்டில், அரசுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, மோசமான நிதி மேலாண்மையே காரணம்' என, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்து உள்ளார்.தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பாக, ஆடிட்டர் ஜெனரல் என அழைக்கப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 2014 மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 64 செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களும்; 13 செயல்படாத ... |
| இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது கறுப்பு பண முதலைகளுக்கு கெடு Posted: புதுடில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை தெரிவிக்க, கறுப்புப் பண முதலைகளுக்கு, மத்திய அரசு வழங்கியிருந்த காலக்கெடு, இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் சில வங்கிகளில், இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு, 90 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. கறுப்புப் பண முதலைகள், தாங்களாகவே முன்வந்து, தங்களின் வெளிநாட்டு சொத்து, பணம் போன்ற விவரங்களை தெரிவித்தால், 60 சதவீத வரி விதிக்கப்படும். மாறாக, அந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 30,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |