Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல்: தேர்தல் அட்டவணை இன்று முடிவு

Posted: 07 Sep 2015 11:37 PM PDT

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமார் முதல்–மந்திரியாக இருக்கிறார். பீகார் சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 29–ந்தேதியுடன் முடிகிறது. அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து புதிய அரசு அமைய

அக்டோபர் 1–ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை வேகம் அதிகரிப்பு

Posted: 07 Sep 2015 11:12 PM PDT

பி.எஸ்.என்.எல். தற்போது குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இணைய தள சேவையை வழங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவை வேகம் அதிகரித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய செல்போன் வாடிக்கையாளர்களையும், தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது.

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா

Posted: 07 Sep 2015 10:58 PM PDT

ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த சித்தூர் மாவட்ட அதிகாரி டி.வி.சந்திரமவுலி கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழா

நிலக்கரி ஊழல்: முன்னாள் மத்திய இணை மந்திரி சந்தோஷ் பக்ரோடியாவுக்கு ஜாமின்

Posted: 07 Sep 2015 10:47 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அனுப்பி இருந்த சம்மனில் இருந்து விலக்கு அளித்து முன்னாள் நிலக்கரித் துறை இணை மந்திரி சந்தோஷ் பக்ரோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. அந்த வகையில்,

கேரளாவில் புலித்தோல் விற்பனை: வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது

Posted: 07 Sep 2015 10:04 PM PDT

தமிழகத்தின் வனப்பகுதிகளையொட்டிய மாவட்டங்களில் இருந்து சிலர் கேரளாவிற்கு வந்து புலித்தோல் உள்ளிட்ட வன விலங்குகளின் உறுப்புகளை விற்பதாக கேரள வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் ஈடுபடும் கும்பலை கண்காணித்து கூண்டோடு பிடிக்க பாலோடு வன

வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூரு என்ஜினீயரால் அரசுக்கு ரூ.6 கோடி நஷ்டம் - கடுமையான சட்டப்பிரிவில் வழக்கு

Posted: 07 Sep 2015 09:52 PM PDT

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த 5–ந் தேதி 'வாட்ஸ்–அப்' மூலம் மிரட்டல் வந்தது. இதே போல் டெல்லி விமான நிலையம் உள்பட 6 சர்வதேச விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை கண்டுபிடித்த தாய்: செல்போனில் குரலை கேட்டதும் ஆனந்த கண்ணீர்

Posted: 07 Sep 2015 09:44 PM PDT

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கவுரிசபட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. (வயது 60). இவருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எஜுந்திரபாய் விது என்பவருக்கும் கடந்த 1979–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மராட்டிய மாநிலத்தில் வசித்தனர். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறந்த பின்பு

தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்க நடிகர் பிரகாஷ் ராஜ் விருப்பம்

Posted: 07 Sep 2015 08:40 PM PDT

நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி கே.டி. ராமாராவ்-ஐ நேரில் சந்தித்து மெஹபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டா ரெட்டி பள்ளி கிராமத்தை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்தார். கே.டி. ராமா ராவ் பஞ்சாயத் ராஜ் இம்மாநிலத்தின் திட்டத்தையும் கவனித்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி செலவிடுகிறோம்: ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பேச்சு

Posted: 07 Sep 2015 08:26 PM PDT

மும்பையில் தேசிய என்ஜினீயரிங் அகாடமி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற என்ஜினீயர்கள் கூட்டத்தில் மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த மாதத்தில் மின்சார ரெயில்களில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.6.23 கோடி வசூல்: மத்திய ரெயில்வே தகவல்

Posted: 07 Sep 2015 08:21 PM PDT

மும்பையில் மின்சார ரெயில்களில் உரிய டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய ரெயில்வே வழித்தடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் முறை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடையாது: ராஜஸ்தான் முதல் மந்திரி திட்டவட்டம்

Posted: 07 Sep 2015 08:17 PM PDT

மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக முதன்முறை தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்படமாட்டாது என ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்துள்ளார்.

புனே திரைப்பட கல்லூரி விவகாரம்: பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 07 Sep 2015 07:58 PM PDT

மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியின் புதிய தலைவராக பா.ஜனதாவை சேர்ந்தவரும், பிரபல டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டிப்ளமோ பாட மதிப்பீடுகளில் முறைகேடு நடந்திருப்பதாக

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 07 Sep 2015 07:55 PM PDT

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பேரழிவு நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், காஷ்மீரில் நேற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்விற்கான எந்த நடவடிக்கையையும் அரசு முறையாக

பெங்களூருவில் பலத்த மழை: சுவர் இடிந்து 5 பேர் சாவு

Posted: 07 Sep 2015 07:48 PM PDT

பெங்களூருவில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பின்னமங்களா, சுல்தான் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பாராளுமன்றத்தில் அமளியை தடுக்கக் கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

Posted: 07 Sep 2015 07:19 PM PDT

பாராளுமன்றத்தில் அமளி ஏற்படுவதை தடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று கோரி 'ஜன்ஷ்ருதி' (மக்கள் குரல்) என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தது.

கேரளாவில் கூட்டுறவு வங்கியில் 21 கிலோ தங்கம்- ரூ.13 லட்சம் கொள்ளை

Posted: 07 Sep 2015 07:13 PM PDT

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் எல்லை பகுதியான குட்லு என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் வங்கி திறந்திருந்தது. 2 பெண் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். நகை அடமானம் வைப்பதற்காக ஒரு பெண்ணும் அந்த வங்கிக்கு வந்திருந்தார்.

சென்னையில் மியான்மர் அகதிகள் சுற்றித் திரிவதாக தகவல்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசு

Posted: 07 Sep 2015 07:04 PM PDT

மியான்மர் நாட்டைச் சேர்ந்த சிறுவர், பெண்கள் உள்பட 57 பேர் தங்களது உடைமைகளுடன் கடந்த 2012-ம் ஆண்டு சென்னைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். முதலில் சென்னை கேளம்பாக்கத்தில் தங்கியிருந்த அவர்களை இடத்தின் உரிமையாளர் வெளியேறும்படி கூறியதால் அங்கிருந்து கடந்த வாரம் அவர்கள் மணலி திருவள்ளுவர் தெருவுக்கு சென்று குடியேறினர்.

பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்து கைதானவரின் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்

Posted: 07 Sep 2015 05:18 PM PDT

பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா?

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்: பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி பதிலடி

Posted: 07 Sep 2015 04:33 PM PDT

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அடாவடி பேச்சுக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் பதிலடி கொடுத்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் பேசும்போது, 1947-ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்யப்பட்டதில் முற்றுப் பெறாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் உள்ளது. இந்திய படைகளால் காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

காஷ்மீரில் போலி என்கவுண்டரில் 3 பேர் சுட்டுக்கொலை: ராணுவத்தினர் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - ராணுவ கோர்ட்டு தீர்ப்பு

Posted: 07 Sep 2015 03:30 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் போலி என்கவுண்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரிகள் உள்பட 6 பேருக்கான ஆயுள் தண்டனையை ராணுவ மேல் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு கூறியது. காஷ்மீர் மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள மச்சில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டு கொன்றதாகவும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்தி வெளியானது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™