Tamil Star |
- Woodbridge பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் கைது
- Uxbridge இன் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்ததை பலி, மகன் மருத்துவமனையில்
- Ashbridges Bay பூங்காவில் கத்திக் குத்து – இருவர் படுகாயம்
- ரொரன்ரோ நகர மத்தியபகுதி உயர்மாடி குடியிருப்பில் தீ விபத்து
- சிரிய அகதிகள் விவகாரம்: பிரதமருடனும் NDP தலைவருடனும் விவாதிக்க லிபரல் கட்சித் தலைவர் ஆர்வம்
- மீண்டும் ஆட்சியை கைப்பறினால் நூதனசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: பழமைவாதக் கட்சி
- சில வகையான மாத்திரைகளை உணவுடன் சேர்த்து உள்ளெடுப்பது ஏன்?
- இதய நோயாளிகளுக்கு ஏற்ற பார்லி
| Woodbridge பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் கைது Posted: 07 Sep 2015 08:52 PM PDT
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அதிகாலை 1.48 மணிக்கு Clarence வீதி மற்றும் Forest Fountain Drive பகுதிக்கு இடையில் உள்ள Rutherford வீதிப்பகுதிக்கு தாம் வரவழைக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தாம் அங்கு சென்றிருந்த போது நபர் ஒருவா கத்திக்குத்துக் காயங்களுடன் அவதியுற்றுக்கொண்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறிய அவசர மருத்துவப் பிரிவினர், குறித்த நபருக்கு உயிராபத்தான காயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர், குறித்த இடத்தில் ஏற்பட்ட தகராறின்போதே கத்திக்குத்து இடம்பெற்றதாக கூறியுள்ளனர். கத்திக்குத்தை அடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடியிருந்தார் என்றும், பின்னர் அவரைப் பின்தொடர்ந்து காவல்த்துறையினர் கைது செய்தனர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. The post Woodbridge பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Uxbridge இன் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்ததை பலி, மகன் மருத்துவமனையில் Posted: 07 Sep 2015 08:20 PM PDT
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், அவர்கள் பயணம் செய்த கார் உருண்டு பள்ளத்தினுள் விழுந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவு 11.45 மணியளவில் கார் ஒன்று உருண்டு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,தாம் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததாக டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். Regional Road 8 இல் குறித்த வாகனம் தனது வேகக்கட்டுப்பாடை இழந்தமையால் வாகனம் வீதியின் தெற்கு பக்கத்தில் இருந்த பள்ளத்தினுள் நுளைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அது குறிப்பிட்ட தடவைகள் உருண்டுள்ளன என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தை அடுத்து 53 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், காயமடைந்த 23 வயது மகனை அருகில் இருந்து உள்ளுர் மருத்துவமனையில் அரச மருத்தவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து அவசர உலங்கு வான்னூர்தி மூலம் ரொரன்ரோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அந்த 23 வயது நபர் உயிராபத்தான நிலையிலேயே இருப்பதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர். The post Uxbridge இன் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்ததை பலி, மகன் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Ashbridges Bay பூங்காவில் கத்திக் குத்து – இருவர் படுகாயம் Posted: 07 Sep 2015 03:56 PM PDT
Lakeshore Boulevard மற்றும் Coxwell Avenue பகுதியில், east-end park இல் இன்று மாலை ஆறு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றததனை ரொரன்ரோ காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கத்திக் குத்துக்கு இலக்கான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தீவிரத் தன்மை தொடர்பிலான விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்த்துறையினர், சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-5500 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு ரொரன்ரோ காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post Ashbridges Bay பூங்காவில் கத்திக் குத்து – இருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ நகர மத்தியபகுதி உயர்மாடி குடியிருப்பில் தீ விபத்து Posted: 07 Sep 2015 03:53 PM PDT
Yonge Street மற்றும் Eglinton Avenue வில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் 39ஆவது மாடியில் இன்று இரவு 8.30 அளவில் இந்த தீப் பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ தீயணைப்பு படை வீரர்கள் ஒன்பது மணியளவில் தீப் பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 12 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 45 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தீப் பரவல் சம்பவத்தில் எவரும் காயமடைந்தமை தொடர்பிலான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். The post ரொரன்ரோ நகர மத்தியபகுதி உயர்மாடி குடியிருப்பில் தீ விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரிய அகதிகள் விவகாரம்: பிரதமருடனும் NDP தலைவருடனும் விவாதிக்க லிபரல் கட்சித் தலைவர் ஆர்வம் Posted: 07 Sep 2015 08:24 AM PDT
தேர்தலுக்கு முன்னதாகவே அகதிகள் விடயத்தில் கனடாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இந்த தலைவர்களுடன் தான் விவாதிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அகதிகள் விவகாரத்தில் கனடா எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பிலும், அவர்களை கனடாவுக்கு அழைத்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பில் விவாதிப்பதற்காக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கும் Tom Mulcair ற்கும் தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இவ்வாறான ஒரு விவாதத்திற்கு புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடமிருந்து எதிர்வரும் நாட்களில் பதில் வரும் என எதிர்பார்த்திருப்பதாகவும் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
எனினும் சிரிய நாட்டு அகதிகள் விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சித் தலைவரைத் தவிர்த்து பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் கலந்துரையாடுவதற்கே புதிய சனநாயக கட்சி ஆர்வம் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தில் செயல்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய அதிகாரம் மிக்கவராக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் காணப்படும் நிலையில், அவரை சந்திப்பதே தமது கட்சித் தலைவர் Tom Mulcair இன் இலக்காக உள்ளது என புதிய சனநாயக கட்சியின் மூத்த பரப்புரை ஆலோசகர் Brad Lavigne தெரிவித்துள்ளார். The post சிரிய அகதிகள் விவகாரம்: பிரதமருடனும் NDP தலைவருடனும் விவாதிக்க லிபரல் கட்சித் தலைவர் ஆர்வம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீண்டும் ஆட்சியை கைப்பறினால் நூதனசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: பழமைவாதக் கட்சி Posted: 07 Sep 2015 08:19 AM PDT
அருங்காட்சியகங்களுக்காக தனியார் துறையால் எவ்வளவு பணம் சேகரிக்கப் படுகிறதோ, அதே அளவு பணத்தினை மத்திய அரசாங்கமும் வழங்கத் தயாராக உள்ளதாக பழமைவாதக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாட்டின் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம் போன்றே இந்த திட்டமும் இருக்கும் எனவும், இதன் மூலம் வருடத்துக்கு சுமார் 15 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் செலவு செய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழமைவாதக் கட்சியின் இவ்வாறான அறிப்பினை நிராகரித்துள்ள புதிய சனநாயக கட்சி, ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி வரலாற்றினை மாற்றி எழுத முனைவதாக சாடியுள்ளது. The post மீண்டும் ஆட்சியை கைப்பறினால் நூதனசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: பழமைவாதக் கட்சி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சில வகையான மாத்திரைகளை உணவுடன் சேர்த்து உள்ளெடுப்பது ஏன்? Posted: 07 Sep 2015 08:09 AM PDT
எனினும் நம்மில் பலர் இதற்கான காரணத்தினை அறியாமலேயே மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றோம். நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் சில நேரடியாகவே உடல் இழையங்களால் அகத்துறுஞ்சப்பட்டு செயற்பட ஆரம்பிக்கின்றன. ஆனால் மற்றும் சில மாத்திரைகள் செரிமான பாதையின்(Digestive Tract) ஊடாக பயணம் செய்வதன் மூலமே படிப் படியாக பயன்தரக்கூடியதாக இருக்கின்றன. இவ்வாறு செரிமான பாதையின் ஊடாக மாத்திரைகள் பயணம் செய்வதற்காகவும், வலிமை மிக்க மாத்திரைகள் நேரடியாக குடல் பகுதிகளை தாக்குதன் மூலம் குடற்புண்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே அவ்வாறான மாத்திரைகள் உணவுடன் பயன்படுத்தப்படுகின்றன. The post சில வகையான மாத்திரைகளை உணவுடன் சேர்த்து உள்ளெடுப்பது ஏன்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 Sep 2015 08:05 AM PDT
தமிழில் வாற்கோதுமை என்று அழைக்கப்பட்டாலும் இது கோதுமை வகையை சார்ந்ததல்ல. இன்றும் பல்வேறு இடங்களில் நோயுற்றவர்களுக்கு ஏற்ற உணவாக பார்லி கஞ்சி விளங்குகிறது. உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பார்லி கஞ்சியை குடித்துவந்தால் உடலில் இருந்து தேவையற்ற நீர் வெளியேறி எடை குறையும். இதேபோல் சிறுநீர் தாராளமாகப் பிரியவும் இது உதவும். குடலில் உண்ண புண்களையும் ஆற்றும் ஆற்றல் உடையது பார்லி. கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய எக்லாம்சியா பிரச்னைக்கு பார்லி சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் புரதத்தின் அளவு அதிகமாகி கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை பார்லி நிவர்த்தி செய்கிறது. முக்கியமாக இது இதய நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவாகும். இதில் உள்ள ப்ரோபியானிக் என்னும் அமிலம் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் பார்லியில் உள்ள பீட்டா க்ளூக்கோன், பித்த நீருடன் சேர்ந்து கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. எனவே இதய நோயாளிகள் அரிசி உணவுகளுக்கு பதில் பார்லியை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். The post இதய நோயாளிகளுக்கு ஏற்ற பார்லி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Woodbridge பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Uxbridge இன் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 53 வயது நபர் உயிரிழந்து விட்டதாகவும், அவரின் 23 வயது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை Ashbridges Bay பூங்கா பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு ரொரன்ரோவின் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர்மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்படட தீப் பரவல் சம்பவத்தினை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
சிரிய நாட்டு அகதிகள் விவகாரம் தொடர்பில் கனடாவின் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் புதிய சனநாயக கட்சித் தலைவர் Tom Mulcair ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாக லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அருங்காட்சியகங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க போவதாக ஆளும் பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் மாத்திரை வழங்கும்போது உணவுக்கு முன்னர், உணவுக்கு பின்னர் எனும் நிபந்தனைகளை முன்வைப்பது வழக்கமாகும்.
பல்வேறு சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அற்புத தானிய வகைதான் பார்லியாகும்.