மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மேகாலயாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்: உளவுத்துறை அதிகாரி கடத்தி கொலை
- வெளியாட்களை நம்பாதீர்கள் - திருப்பதிக்கு பெண்கள் தனியாக வரவேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள்
- மார்பிள் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: வசுந்தரா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் புகார்-பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
- தேசியக்கொடியில் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை: உங்களைவிட தேசியக்கொடி உயர்வானது - காங்கிரஸ் கண்டனம்
- போபாலில் நடந்த விழாவில் தெண்டுல்கர் தத்தெடுத்த ஆந்திர கிராமத்திற்கு விருது
- காஷ்மீரைச் சேர்ந்த கவிஞர் உதம்புரிக்கு இலக்கியத்துக்கான தேசிய விருது
- கோவா மாநில அரசை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு
- தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புலனாய்வு துறை அதிகாரி
- மாணவ–மாணவிகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி: கேரள பள்ளியின் அறிவிப்பால் சர்ச்சை
- லாலிபாப் கொடுக்கிறது குஜராத் அரசு - குமுறும் ஹர்திக் படேல்
- ஆக்சிஜன் கட் ஆனதால் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் பரிதாப சாவு
- மது அருந்துவதற்கான வயது குறைக்கப்படலாம்: டெல்லி அரசு
- இந்தியாவிலும் மோசடியா?: வோக்ஸ்வேகனிடம் விளக்கம் கேட்கிறது இந்தியா
- வன்முறை ஏற்படலாம் என்பதால் ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவை முடக்கம்
- கவர்னரிடம் மன்னிப்பு கோரவில்லை, யாரையும் கோரும்படி கேட்கவும் இல்லை - சஞ்சய் தத்
- இந்திய அரசியலின் மோசமான குழந்தை ராகுல்: பா.ஜனதா விமர்சனம்
- உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி: 66 கோடி இந்திய மக்கள் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் வாழ்கிறார்கள்
- கைது வாரண்ட் பிறப்பித்ததால் கோர்ட்டில் ஆஜரான சாத்வி பிராச்சி
- சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் 1952-ம் ஆண்டில் வாழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: புதிய தகவல்
- பிரதமர் மோடியின் ஆன்மிக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது
| மேகாலயாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்: உளவுத்துறை அதிகாரி கடத்தி கொலை Posted: 25 Sep 2015 10:58 PM PDT மேகாலயாவில் உள்ள உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் பிகாஷ்சிங். இளம் அதிகாரியான இவர் மேகாலயாவின் தெற்கு கெரே வனப்பகுதியில் டாடாசுமோ காரில் ரோந்து சென்றார். |
| வெளியாட்களை நம்பாதீர்கள் - திருப்பதிக்கு பெண்கள் தனியாக வரவேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள் Posted: 25 Sep 2015 10:03 PM PDT திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– திருப்பதி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. தேவஸ்தான உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தனர். இதன் பயனாக பக்தர்கள் எந்தவித சிரமும் இன்று |
| Posted: 25 Sep 2015 09:30 PM PDT ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமேஸ்வர்துதி, செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலே ஆகியோர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். |
| Posted: 25 Sep 2015 08:44 PM PDT அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். |
| போபாலில் நடந்த விழாவில் தெண்டுல்கர் தத்தெடுத்த ஆந்திர கிராமத்திற்கு விருது Posted: 25 Sep 2015 04:49 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி மேல் சபை எம்.பி.யும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சச்சின் தெண்டுல்கர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கண்டிகை கிராமத்தை தத்தெடுத்தார். கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி இந்த கிராமத்தில் முன்னேற்ற பணிகள் தொடங்கப்பட்டது. |
| காஷ்மீரைச் சேர்ந்த கவிஞர் உதம்புரிக்கு இலக்கியத்துக்கான தேசிய விருது Posted: 25 Sep 2015 04:11 PM PDT இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான தேசிய விருதிற்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்துறை வித்தகரான டாக்டர் ஜிதேந்திரா உதம்புரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| கோவா மாநில அரசை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு Posted: 25 Sep 2015 03:45 PM PDT மகதாயி நதி கோவா, மராட்டியம் மற்றும் கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்கள் வழியாக ஓடுகிறது. இந்த நதிநீரை பங்கிடுவதில் 3 மாநிலங்கள் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இந்தநிலையில் மகதாயி நதியில் இருந்து கதக், தார்வார் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க கலசா-பண்டூரி குடிநீர் |
| தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புலனாய்வு துறை அதிகாரி Posted: 25 Sep 2015 02:56 PM PDT மத்திய புலனாய்வு துறை அதிகாரியை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மாணவ–மாணவிகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி: கேரள பள்ளியின் அறிவிப்பால் சர்ச்சை Posted: 25 Sep 2015 12:54 PM PDT சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று மாணவிகளுக்கு மட்டும் சில உடை கட்டுபாடுகளை விதித்துள்ள செய்தி அண்மையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது இதேபோல் கேரளாவிலும் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. |
| லாலிபாப் கொடுக்கிறது குஜராத் அரசு - குமுறும் ஹர்திக் படேல் Posted: 25 Sep 2015 11:26 AM PDT ஒன்று எங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் அல்லது இட ஒதுக்கீட்டையே ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் படேல் சமூகத்தினரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டத்தை குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் நேற்று அறிவித்தார். |
| ஆக்சிஜன் கட் ஆனதால் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் பரிதாப சாவு Posted: 25 Sep 2015 08:56 AM PDT பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வென்டிலேட்டரில் ஆக்சிஜன் கட் ஆனதால் 4 நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலருக்கு வென்டிலேட்டர் |
| மது அருந்துவதற்கான வயது குறைக்கப்படலாம்: டெல்லி அரசு Posted: 25 Sep 2015 08:28 AM PDT மது அருந்துவதற்கான வயதை குறைப்பது பற்றி டெல்லி அரசு பரிசிலிக்கும் என டெல்லி அரசின் சுற்றுலா மந்திரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்திய தேசிய உணவகங்கள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் பேசிய சுற்றுலா மந்திரி கபில் மிஸ்ரா பேசும் போது, "தற்போது 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் மது அருந்தலாம் என்ற |
| இந்தியாவிலும் மோசடியா?: வோக்ஸ்வேகனிடம் விளக்கம் கேட்கிறது இந்தியா Posted: 25 Sep 2015 07:28 AM PDT உலகில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமைக்குரிய ஜெர்மன் நிறுவனம் வோக்ஸ்வேகன். இந்நிறுவனத்தின் டீசல் கார்கள் வெளியிடும் புகையில் மாசுக்கட்டுப்பாட்டு அளவை குறைத்துக் காட்டும் மென்பொருள் பொருத்தி மோசடி நடந்திருப்பதை, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கண்டறிந்து செய்தியை வெளியிட்டது. உலகம் முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் டீசல் கார்களின் புகையளவில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதற்காக |
| வன்முறை ஏற்படலாம் என்பதால் ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவை முடக்கம் Posted: 25 Sep 2015 06:48 AM PDT ஜம்மூ-காஷ்மீரில் சமூக விரோத குழுக்கள் பொது மக்கள் மத்தியில் வன்முறையை பரப்பலாம் என்ற காரணத்தால் இன்று காலை முதல் நாளை இரவு வரை இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. ஆனால், சில பிரிவினைவாத குழுக்கள் நீதிமன்ற உத்தரவை |
| கவர்னரிடம் மன்னிப்பு கோரவில்லை, யாரையும் கோரும்படி கேட்கவும் இல்லை - சஞ்சய் தத் Posted: 25 Sep 2015 06:14 AM PDT கவர்னரிடம் மன்னிப்பு கோரவில்லை என்றும் யாரையும் தனக்காக மன்னிப்பு கோரும்படி கேட்கவில்லை என்றும் நடிகர் சஞ்சய் தத் கூறி உள்ளார். மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது |
| இந்திய அரசியலின் மோசமான குழந்தை ராகுல்: பா.ஜனதா விமர்சனம் Posted: 25 Sep 2015 06:03 AM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்திய அரசியலின் மோசமான குழந்தை என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது. பெங்களூரில் இன்று பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்திலும், டெல்லியில் எதிர்க்கட்சி அந்தஸ்திலும் உள்ள காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தியின் |
| Posted: 25 Sep 2015 05:37 AM PDT உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ள நகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. |
| கைது வாரண்ட் பிறப்பித்ததால் கோர்ட்டில் ஆஜரான சாத்வி பிராச்சி Posted: 25 Sep 2015 04:55 AM PDT இறைச்சி வெட்டும் கூடங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களின் ஒருவரான சாத்வி பிராச்சி இன்று கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி ஊடகங்களில் சூடான விவாதங்களை கிளப்பி வரும் சாமியார் சாத்வி பிராச்சி, கடந்த 2011ம் ஆண்டு மே 12ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பதாவத் நகரில், |
| சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் 1952-ம் ஆண்டில் வாழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: புதிய தகவல் Posted: 25 Sep 2015 03:29 AM PDT நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காளம் மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. |
| பிரதமர் மோடியின் ஆன்மிக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது Posted: 25 Sep 2015 01:57 AM PDT பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மிக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக பணியில் ஈடுபட்டு வந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, உடல் நல பாதிப்பு காரணமாக கடந்த 13-ந்தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது விருப்பத்தின்பேரில், நேற்று முன்தினம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |