Tamil Star |
- Danforth,Donlands பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
- பிரிட்டிஸ் கொலம்பியாவில் விபத்து – உந்துருளி ஓட்டுனர் பலி
- உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒளிப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
- தாய் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் மீது கொலைக் குற்றச்சாட்டு
- அண்மைய கருத்துக் கணிப்பில் சற்று பின்தங்கிய நிலையில் NDP
- காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி!
| Danforth,Donlands பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு Posted: 25 Sep 2015 09:25 PM PDT
உயிரிழந்தவர் ஆண் என்றும், அவருக்கு 30இற்கும் 40இற்கும் இடைப்பட்ட வயது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்றிற்கு சாட்சியாளர் ஒருவா தகவல் கூறுகையில், விபத்தில் உயிரிழந்த நபர் Danforth இல் உள்ள Madinah Masjid பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டிருந்தார் என்றும், பின்னர் அவர் பள்ளிவாசலின் வெளியில் இருந்த இருக்கை ஒன்றில் இருந்து தமது கைபேசியைக் கையாண்டு கொண்டிருந்த போது பின்புறமாக வந்த சிற்றூர்தி ஒன்று அவரை மோதித் தள்ளியதாகவும் விபரித்துள்ளார். இதேவேளை அவரை மோதித் தள்ளிய சிற்றூர்தியின் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார் என்றும், பின்னர் தானாகவே வந்து சரணடைந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post Danforth,Donlands பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஸ் கொலம்பியாவில் விபத்து – உந்துருளி ஓட்டுனர் பலி Posted: 25 Sep 2015 09:06 PM PDT
உயிரிழந்தவர் ஒன்ராறியோ, பிரம்டனைச் சேர்ந்த 61 வயது ஆண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இந்த விபத்து நேர்ந்ததாகவும். உந்துருளி ஓட்டுனர் தமது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததனால் பிக்கப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதாகவும் காவல்த்தறையினர் விபரித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சமயத்தில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்ததாகவும், அதனால் வீதியை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் குறித்த உந்துருளி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் பெயர் விபரங்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை. அதேவேளை விபத்தில் சம்பந்தப்பட்ட பிக்கப் ரக வாகனத்தின் ஓட்டனைரை காவல்த்தறையினர் தடுத்த வைத்துள்ளனர். விபத்துக் குறித்த விசாரணைகளில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். The post பிரிட்டிஸ் கொலம்பியாவில் விபத்து – உந்துருளி ஓட்டுனர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒளிப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன Posted: 25 Sep 2015 08:47 PM PDT
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று குறித்த உணவத்தில் முகமூடி அணிந்து வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இதில் உணவகத்தில் இருந்த ஒரு பெண்ணும், அணும் உயிரிழந்திருந்தனர்.பெண்ணின் இடுப்புப் பகுதியிலும், ஆணின் கழுத்துப் பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் விபரிக்கையில், உணவகத்தினுள் நுளைந்திருந்த முகமூடிக்காரர்கள் குறித்த சோடிகள் அமர்ந்திருந்த மேசையை நோக்கி நேரடியாக நடந்து சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கருவியில் இருந்த ஒளிப்பட ஆதாரங்களை காவல்த்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளனர். அந்த ஆதாரங்களில் சந்தேக நபர்கள் கறுப்பு ஆடை அணிந்திருந்தனர் என்றும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடும் போது கையில் துப்பாக்கி வைத்திருந்தனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பயன்படுத்திய கறுப்பு நிற வாகனம் ஒன்றையும் அந்த ஆதாரத்தில் காணக்கூடியதாக உள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாக குறித்த வாகனத்தை காவல்த்துறையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. The post உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒளிப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாய் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் மீது கொலைக் குற்றச்சாட்டு Posted: 25 Sep 2015 08:37 PM PDT
வடக்கு Oshawa இன் Blackstock பகுதியில் உள்ள அவர்களின் வசிப்பிடத்தில் கத்திக்குத்துக் காயங்களுக்கு ஆளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் இந்த சம்பவம் வியாழக்கிழமை காலையில் இடம்பெற்றிரந்தது. shawaஇல் இருந்து 30 கிலோமீற்றர் வடக்காக உள்ள Blackstock இல் உள்ள Sunrise Drive பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வியாழக்கிழமை காலை 11.14 மணியளவில் தாம் வரவழைக்கப்பட்டிருந்தாக டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துளளனர். அங்கு தாம் சென்றிருந்த போது 57 வயதான பெண் ஒருவர் பலதடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உணர்வற்ற நிலையில் கிடந்ததாகவும் அவர்கள் விபரித்துள்ளனர். உடனடியாகவே அவர் உள்ளூர் மருத்துமனையில் சேர்த்திருந்ததாகவும், எனினும் அவருக்கு ஏற்பட்டிருந்த மோசமான காயங்கள் காரணமாக அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த அந்த பெண் Rita Prendergast என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவரின் பிரேதப் பரிசோதனைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உயிரிழந்த அந்த தாயாரின் மகள் Thomas Prendergast என்பவர் சம்பவ இடத்தில் வைத்தே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது இரண்டாம் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் . விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரை அல்லது குற்றப் புலனாய்வுத் துறையினரை அழைத்து விபரம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். The post தாய் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் மீது கொலைக் குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அண்மைய கருத்துக் கணிப்பில் சற்று பின்தங்கிய நிலையில் NDP Posted: 25 Sep 2015 09:31 AM PDT
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது கடந்த 21ஆம் திகதிக்கும் 23 ஆம் திகதிக்கும் இடையில் Forum Research என்ற அமைப்பினால் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகளை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் பழமைவாதக் கட்சியும், லிபரல் கட்சியும் 31 சதவீத மக்கள் ஆதரவினை பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளில் இருந்தும் மூன்று சதவீதம் குறைவடைந்து 28 சதவீதமான ஆதரவினையே புதிய சனநாயக கட்சி பெற்றுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பழமைவாதக் கட்சி 125 ஆசனங்களையும், லிபரல் கட்சி 107 ஆசனங்களையும், புதிய சனநாயக கட்சி 104 ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளும் எனவும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் மூலம் எதிர்வுகூறப்படுகிறது. இதேவேளை பழமைவாதக் கட்சி அல்பேர்ட்டா, சாஸ்காச்சுவான், மனிட்டோபா ஆகிய மாகாணங்களிலேயே அதிக ஆதரவினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே ஒன்ராறியோ மற்றும் கிழக்கு மாநிலங்கயில் லிபரல் கட்சியும், கியூபெக் மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் புதிய சனநாயக கட்சியும் அதிக மக்கள் ஆதரவினை கொண்டுள்ளதனையும் கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் தலைவர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கான ஆதரவு 31 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. Justin Trudeau விற்கு 48 சதவீதமாகவும், Tom Mulcair ற்கு 46 சதவீதமாகவும் ஆதரவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post அண்மைய கருத்துக் கணிப்பில் சற்று பின்தங்கிய நிலையில் NDP appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி! Posted: 25 Sep 2015 08:14 AM PDT
சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம். இந்த ஆராய்ச்சிக்கு எலியைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் எலிக்கு கொழுப்புமிக்க உணவுகளைக் கொடுத்து வந்ததோடு, காளானும் கொடுக்கப்பட்டது. அப்படி கொடுத்ததில், காளான் எலியின் குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது தெரிய வந்ததோடு, எலியும் குண்டாகாமல் இருந்தது. இதன்மூலம் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது. உடல் பருமன் உலகில் சுமார் 500 மில்லியன் மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர். நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும். The post காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Danforth மற்றும் Donlands பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஸ் கொலம்பியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Adelaide மற்றும் Simcoe வீதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வார இறுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கண்காணிப்பு கருவியில் உள்ள ஒளிப்பட ஆதாரங்களை காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தாய் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 25 வயது மகன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஆதரவு தொடர்பான தற்போதைய நிலைப்பட்டில் புதிய சனநாயக கட்சி (NDP)சற்று பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளான் சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.