Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜம்மு–காஷ்மீரில் கார் கவிழ்ந்து 7 பேர் பலி

Posted: 13 Sep 2015 11:44 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்தவார் மாவட்டம் குவாப்கர் பகுதியில் இருந்து சேர்கல் கிராமத்துக்கு கார் ஒன்று சென்றது. கார்கே என்ற பகுதியில் சென்ற போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு

மந்திரி, எம்.எல்.ஏ. பெயரில் திருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை: 4 பேர் கைது

Posted: 13 Sep 2015 10:12 PM PDT

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி. இவர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பினார். வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற இடைத்தரகர்களை அணுகினார். அவருக்கு சித்தூர் மாவட்டம் பாகாலா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனஸ் பிரச்சினையில் உடன்பாடு: உம்மன்சாண்டி தகவல்

Posted: 13 Sep 2015 09:33 PM PDT

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போனஸ் உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் முதல்–மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான

பீகார் சட்டசபை தேர்தல்: 10 பொது கூட்டங்களில் ராகுல்காந்தி பேசுகிறார்

Posted: 13 Sep 2015 09:23 PM PDT

பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 12–ந்தேதி முதல் நவம்பர் 5–ந்தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்து

சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 16 விவசாய தொழிலாளிகள் பரிதாப பலி

Posted: 13 Sep 2015 08:31 PM PDT

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 16 விவசாயக் கூலி தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர். மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 35 விவசாயக் கூலி

அப்துல்கலாம் சாலையில் வசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வெங்கையா நாயுடு பெருமிதம்

Posted: 13 Sep 2015 08:22 PM PDT

ஐதராபாத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:- டெல்லியில் எனது வீடு அவுரங்கசீப் சாலையில் இருந்தது. எனது வீட்டின்

90 பேரின் மரணத்திற்கு காரணமான ராஜேந்திர கசவா பற்றி துப்பு கொடுத்தால் பரிசு: ம.பி. அரசு

Posted: 13 Sep 2015 05:07 PM PDT

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ளது பெட்லாவாத் நகரம். இங்குள்ள பஸ் நிலையம் அருகே அகமதாபாத் சாலையில் 3 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இதில் ஓட்டல் இயங்கிவந்தது. நேற்று முன் தினம் அங்கு சமையலுக்கு பயன்படுத்திய கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்பட்டது. இதில் ஓட்டல்

மும்பையில் உள்ள லிங்கன் பங்களா ரூ.750 கோடிக்கு விலை போனது: மருந்து நிறுவன அதிபர் வாங்கினார்

Posted: 13 Sep 2015 04:34 PM PDT

மும்பை பிரிச்கேண்டி பகுதியில் வான்கனேர் மகாராஜரின் பராம்பரியமிக்க பங்களா வீடு உள்ளது. இது கடந்த 1957-ம் ஆண்டு அமெரிக்க தூதரகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் அந்த தூதரகத்துக்கே பங்களா விற்பனை செய்யப்பட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

Posted: 13 Sep 2015 04:05 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992-ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில் நடத்துனராக வேலை பார்த்தார். அப்போது அவர் தான் வேலை பார்த்த பஸ்சில் 25 பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, டிக்கெட் கொடுக்கவில்லை. அந்த பணத்தை தானே எடுத்துக் கொண்டார். ஆனால் சோதனை ஆய்வாள

பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி

Posted: 13 Sep 2015 03:17 PM PDT

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வேட்பு மனுதாக்கல் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய

புதிய அதிர்ச்சி தகவல்: 90 பேரை பலி கொண்ட விபத்திற்கு காரணம் கியாஸ் சிலிண்டர் இல்லை

Posted: 13 Sep 2015 02:49 PM PDT

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ளது பெட்லாவாத் நகரம். இங்குள்ள பஸ் நிலையம் அருகே அகமதாபாத் சாலையில் 3 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இதன் கீழ் பகுதியில் சாப்பாடு ஓட்டல் இயங்கி வந்தது.

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் கண்காணிப்பு கோபுரத்தை தகர்த்த இந்திய வீரர்கள்

Posted: 13 Sep 2015 02:45 PM PDT

இந்தியா-சீனா இடையே 4 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில், 38 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வேகமாக பரவும் டெங்கு: டெல்லி சுகாதார மந்திரி அவசர ஆலோசனை

Posted: 13 Sep 2015 12:45 PM PDT

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது பற்றி டெல்லி சுகாதார மந்திரி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் தெற்கு டெல்லியில் லாடோசரை பகுதியில் 7 வயது சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தான். இந்த துக்கம் தாங்காமல் சிறுவனின் பெற்றோர் லட்சுமிசந்திரா– பபிதா தம்பதியர் 4–வது

துணை ராணுவப்படைக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Posted: 13 Sep 2015 12:16 PM PDT

சமீபத்தில், சத்தீஸ்கார் மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், துணை ராணுவப்படையினர் ஆளில்லாத விமானங்களை பறக்க விட்டு படம் பிடித்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதை மத்திய உளவுப்பிரிவினர் கண்டுபிடித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர்.

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பலி

Posted: 13 Sep 2015 10:31 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இன்று

ராதேமா பற்றிய நேரலை விவாத நிகழ்ச்சியில் வன்முறை; சாமியாரை அறைந்த பெண் ஜோதிடர்: வீடியோ

Posted: 13 Sep 2015 09:23 AM PDT

கையில் சூலாயுதம், லிப்ஸ்டிக், ஜிகு ஜிகு உடைகள் அணிந்து கொண்டு ஆசிர்வாதம் செய்வது... அரை குறை ஆடைகளுடன் பேஸ்புக்கில் போஸ் கொடுப்பது என கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பெண் சாமியார் ராதே மா. இவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ். மேலும் பிரபல டி.வி. நடிகை டோலி

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் 3 நாள் பயணம் தள்ளிவைப்பு

Posted: 13 Sep 2015 08:39 AM PDT

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளவிருந்த 3 நாட்கள் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், மற்றும் சீன எல்லையையொட்டி அமைந்துள்ள சம்பா மற்றும்

ஏமனில் தவிக்கும் 70 இந்திய மாலுமிகள்: மீட்கும் பணியில் வெளியுறவுத் துறை தீவிரம்

Posted: 13 Sep 2015 07:41 AM PDT

உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருக்கும் ஏமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் 70 இந்திய மாலுமிகளை மீட்கும் பணியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகே

ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்: பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 12 பேர் கைது

Posted: 13 Sep 2015 07:13 AM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களிடம் மர்ம நபர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் பட்டப்பகலில் சுட்டுக்கொலை

Posted: 13 Sep 2015 06:35 AM PDT

பாலியல் பலாத்கார சம்பவங்களின் தாயகமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™